வே.
மீனாட்சிசுந்தரம்
முகநூல்
பக்கம்
பாக்ஸர் முகம்மதுஅலியின் வாழ்க்கையை அற்புதமாக சித்தரித்து
தோழர் பாக்கியம் தந்துள்ளார். அதோடு பிரபுக்கள் காலத்தில் அடிமைகளை மோதவைத்து ரசிக்கும்
கொடூரமான விளையாட்டு எப்படி மாறியது என்பதை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார் ஒடுக்கப்பட்ட
மக்களின் தற்காப்பு கலைகளையும விரிவாக விளக்குகிறார்.
விளையாட்டிற்கும் தத்துவ அடிப்படை அவசியம். மானுடம்
ஸ்போர்ட்சால் பயனுற வேண்டுமானால் மார்க்சிசம் வழிகாட்டவேண்டு மென்பதை நிறைவாக நிரூபிக்கிறார்.
விளையாட்டை ரசிப்பவர்களிடையே
நிலவும் வெறித்தனம் மறைந்து விளையாடுபவரின் திறனை ரசிக்க பக்குவப்பட மார்க்சிச பார்வையை
பெற வேண்டும் என்பதை இப்புத்தகத்தை வாசிப்போர்
உணர்வர்.
குத்துச்சண்டை என்பது உலகின்
மிகவும் வளர்ந்த விளையாட்டாகும் குத்துச்சண்டை
என்பது எதிராளி மீது குத்துக்களை வீசுவதை விட நிறைய அறிவியல் தத்துவ அடிப்படை மற்றும்
அரசியலை உள்ளடக்கியது.
முதலாளித்துவ உலகில் ஆண்டுதோறும்
பில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்குகிற விளையாட்டு சோசலிச நாடுகளில் சமத்துவ அரசியலை உலகளவில் பரப்ப உதவும் விளையாட்டாக
கருதப்படுகிறது.
இப்புத்தகம் அதற்கான காரணங்களை
தெள்ளு தமிழில் பேசுகிறது பாக்ஸிங்கில் குத்துக்களுக்கு அறிவியல் அடிப்படை உண்டு என்பதை விளக்குகிறார்
இந்த புத்தகம் நிற வெறிக்கெதிரான போராட்ட முனையாக பாக்சிங் இருந்த
தையும் வெள்ளை நிற ஆணவத்திற்க கருப்பு பாக்ஸர்கள்
கொடுத்த குத்துக்களையும் அழகாகவே பதிவு செய்துள்ளது.
இன வெறியர்களான முசோலினி, ஹிட்லர் நாடுகளின் பாக்ஸர்களை
அமெரிக்க கருப்பு பாக்ஸர்களே தோற்கடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்ததால் பரவலாக இருந்த அமெரிக்க நிற வெறி இப்பொழுது சுரண்டும் வர்க்கத்தின்
தொத்து நோயாக சுருங்கிவிட்டது.
இப் புத்தகம் பாக்சிங்கை முகம்மது
அலி கருப்புநிற மக்களின் விடுதலைக்காக மட்டும் அரசியல் கருவியாக்கவில்லை சமத்துவத்தை, தனிநபரின் ஒத்துழைக்கும்
பண்பை யாவரும் கேளிர் என்ற பார்வையை பண்பாக்க பாக்சிங் குத்துக் களையும் கவிதை வரிகளையும்
இணைக்கும் அற்புதத்தை விளக்குகிறது.
முகம்மது அலியின் அரசியல்பேசும் துள்ளல்பாடல்கள் கொண்ட இரண்டு ஆல்பங்கள் கிராமி அவார்டு பெற்றன.
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”
என்ற குறளுக்கு இலக்கனமாக பாக்சிங்கில்
திகழ்கிறார்.
அதே வேளையில் நிறவெறிக்கெதிராக, ஆதிக்க மனப்பாங்கிற்
கெதிராக , ஏகாதிபத்திய
யுத்த வெறிக் கெதிராக, சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதமாகிவிட்ட கிறுத்துவ மதத்தின் போலித்தனத்தை காட்டிட,
பாக்சிங்கை அவர் பயன்படுத்திய விதம் அவர் பாக்ஸர் என்பதைவிட மக்கள் ஜனநாயக
போராளியாகவே நம் முன் நிற்கிறார்.
இப்புத்தகம் வாசிப்போரின் மனதை
மேம்படுத்துகிறது அறிவை விசாலப்படுத்த தூண்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக