கடந்த வாரம் தோழர் Bakkiam அவர்களை நாமக்கல் கட்சி அலுவலகத்தில்
சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.
தோழர் பழகுவதற்கு இனிமையானவர்
வேறு என்ன கம்யூனிஸ்ட்களின் பண்புகளை குறித்து சொல்லவா வேண்டும்.
உரையாடலூடனான தோழரின் வார்த்தைகள்
இளைஞர்களை அரசியல் படுத்த வேண்டும்,
வாசிக்க வைக்க வேண்டும் என்ற கனவுகளை தாங்கியே இருந்தன.
முகமது அலியின் வாழ்க்கையை சமூக
நடவடிக்கைகளை குறித்தான புத்தகம் மேலும் தோழர் பாக்கியம் அவர்கள் முகமது அலியின் வாழ்க்கை
வரலாற்றை எழுதாமல் உலக வரலாற்றில் இருந்து முகமது அலியின் வாழ்க்கையை எழுதிவுள்ளார்.
ஒரு இடதுசாரி தன்னுடைய படைப்புக்கு
எப்படி இதுபோன்ற தலைப்பை தேர்வு செய்தார் என்று கூட சிலர் கேட்ககூடும்.
தலைப்பு தோழரின் சிந்தனையில்
உதித்தது அல்ல
ஆயிரம் ஆண்டுகளாக நிறத்தை வைத்து
சுரண்டப்பட்ட மக்களின்
எல்லாவற்றிலும் புறக்கணிப்பை
மட்டுமே பார்த்த சமூகத்தின்
கேவலமானவன் அசிங்கமானவர்கள் பலவீனமானவர்கள்
என்பவர் களின் பிரதிநிதியாக
வெள்ளை நிறவெறியர்களுக்கு பாக்ஸிங்
ரிங்யில் தனது 'பஞ்ச்'சால் பதில் சொல்லி கர்ஜித்த அலியின் வார்த்தைகளே
#நானே_மகத்தானவன்
முகமது அலி அமெரிக்க போர் கைதிகளை
மீட்டு வருவது போன்ற அதீத செயல்பாடாக உடையவராக
தன்னை எளிதில் வெல்ல முடியாது
என்ற அதீத தன்னம்பிக்கை என அனைத்தும் தானாக உருவானது அல்ல ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் ஓராயிரம் ஆண்டு கோபம் தான் அலியின்
செயல்பாடு
தன்னுடைய வாழ்க்கை புகழ் எதை
இழந்தாலும் கருப்பின மக்களின் விடுதலையில் சமரசம் செய்துகொள்ளாத விளையாட்டு வீரன்
வெள்ளை நிறவெறி எதிர்பாளராக மட்டுமே
அறிமுகமான முகமது அலியை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக கட்டமைப்பது தான்
புத்தகத்தின் ரகசியம்.
கேசியஸ் கிளே முகமது அலியாக பரிணாமம்
அடைந்தது. முகமது அலியின் சோவியத்,
சீனா, இந்தியா, சோசலிச கியூபா
பயணம் ஆகியவை ஆசிரியரின் தேடலை வாசகர்களுக்கு கடத்துக்கிறது.
நிற வெறிக்கு எதிராக அமெரிக்க
கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளை குறிப்பாக வெள்ளை நிறைவெறிக்கு எதிராக கறுப்பின மக்களை
மட்டும் ஒருங்கிணைக்காமல் வெள்ளைநிற மக்களையும் களத்தில் போராட வைத்தது தான் கம்யூனிஸ்ட்களின்
வரலாறு என்ற பதிவு.இந்தியாவில் சாதிய சுரண்டல்களுக்கு எதிராக அனைத்து சாதியினரையும்
ஒருங்கிணைத்து போராடுகின்ற இந்திய கம்யூனிஸ்ட்கள்
செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடியும்.
புத்தகத்தில் அமெரிக்காவில் நிறவெறிக்கு
எதிரான போராட்டத்திற்கு களம் அமைத்தது கம்யூனிஸ்ட்கள் என்று படித்த பொழுது இந்தியாவில் இயங்ககூடிய தலித் மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு
எதிராக போராட கூடிய இயக்கங்ளுக்கு களத்தை தயார் செய்தது கம்யூனிஸ்ட்கள் தான்
" என்பதை பொருத்திப் பார்க்க முடிந்தது
இறுதியாக, தோழன் #மரடோனா மூலம்
" Football " பிடித்த விளையாட்டாக மாறியது அந்த பட்டியலில் குத்து சண்டையும் இணைந்தது தோழன்
#முகமது_அலியால் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக