நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு
எதிராக
நாம் களமாட பல அனுபவங்களை
நிச்சயமாக இந்த நூல் தருகிறது...
ஏஜி.கண்ணன்
தோழர்.AB அவர்களுக்கு வணக்கம்...
நானே மகத்தானவன் என்ற புத்தகம்
தோழர்.கோபால் நேற்று முன்தினம் கொடுத்தார்...
வாங்கும் போது குத்து சண்டை வீரர்
பற்றி புத்தகம்.. அது பற்றி தான் இருக்கும் என்று நினைத்தேன்..
அணிந்துரை வழங்கிய புலவர் வீரமணி
அவர்களும் தமிழக குத்து சண்டை உலகிற்கு அரிய பங்களிப்பு செய்யும் நூல் என்று குறிப்பிட்டார்..
அதே சிந்தனை உடன் படிக்க துவங்கினேன்..
14 வயது சிறுவன் எம்மேட்டில்
படுகொலை, இறுதி ஊர்வலம்,வழக்கு,
தீர்ப்பு விவரங்கள்...
நகர பேருந்தில் நிற வெறி செயல்,ரோச பார்க்ஸ் கைது,அலபாமா நகர கருப்பு இன மக்கள்-381 நாள்,40,000 மக்கள் பேருந்து புறகணிப்பு போராட்டம் உணர்வு பூர்வமாக படிக்க தூண்டியது..
காசியஸ் கிளே முகமது அலி யாக
மாறும் வரலாறு, வியட்நாம் போரில் ஈடுபட மாட்டேன் என்று அறிவிப்பு..சிறை தண்டனை குத்து சண்டை
போட்டியில் பங்கேற்க தடை.. பதக்கங்கள் பறிப்பு..
மேல் முறையீடு..
நிற வெறி எதிராக தொடர் எதிர்ப்பு
நடவடிக்கைகள்... ஏராளமான செய்திகள்...
அதிலும் குறிப்பாக அமெரிக்க கம்யூனிஸ்ட்
கட்சியின் மகத்தான தலையீடூகள்,
போராட்டங்கள், வழக்குகள் தண்டனை...
கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சி...மலைக்க வைக்கிறது...
தெளிவான உரை நடை.. சோர்வின்றி
கோர்வையாக படிக்க தூண்டியது... பக்கங்கள் வேகமாக கடந்தது...
ஆனால் இதற்கான தங்களின் உழைப்பு
நிச்சயமாக அதிகம்... கோர்வையாக ஆண்டுகள் பெயர்கள் சம்பவங்கள் வந்தது சிறப்பு...
தங்களின் கடுமையான உழைப்பு வீண்
போகவில்லை.. சிறந்த நூல்..நிற வெறி,இன வெறி மத வெறி சக்திகளுக்கு எதிராக நாம் களமாட பல அனுபவங்களை நிச்சயமாக இந்த
நூல் தருகிறது... குறிப்பாக இளம் தோழர்கள் இடம் சேர வேண்டிய புத்தகம்... மிகவும் மகிழ்ச்சி
தோழர்...
தோழமையுடன்..
ஏஜி.கண்ணன்
திருவள்ளூர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக