ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில்
ஒருவராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், தொழிற்சங்க தலைவராகவும்
, சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய தோழர் உ.ரா. வரதராசனின்
துணைவியார் சரஸ்வதி அவர்கள் மறைந்தார்.
ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில
பொருளாளராகவும் மகளிர் சட்ட உதவி குழுவின்
அமைப்பாளராகவும், சென்னை மாவட்ட நிர்வாகியாகவும் இருந்து செயலாற்றியவர்.
சென்னையில் தோழர் மைதிலி சிவராமன்
அவர்களுடன் இணைந்து மாதர் சங்கத்தை உருவாக்குவதில் முன்னணி பங்கு வகித்தார். சென்னையில்
மகளிர் சட்ட உதவி மையம் பிரபலம் அடைவதற்கு தோழர் சரஸ்வதியின் பங்கு மகத்தானது.
சாதாரண மக்களிடமும் பெண்களிடமும்
நெருக்கமாக பழகக் கூடியவர். சென்னையில் குடிசை பகுதிகளில் இருந்து வந்த மாத சங்கத்
தோழர்களை அரவணைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார். தோழர் சரளா, சாந்தி, தோழர் தேவி ,சூழல் புனல் கரை மாரியம்மாள், மோகனசுந்தரி, ராதை, அம்சா போன்ற தோழர்களின் கள செயல்பாட்டிற்கு உறுதுணையாக
இருந்தார்.
சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில்
அண்ணா நகர் டிபி சத்திரத்தில் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஒரு
உள்ளூர் வேட்பாளரை போன்று அன்றாடப் பணிகளில் ஈடுபட்டார். சென்னை மாநகராட்சி தேர்தலில்
அப்போது நடைபெற்ற மோசடி பிரசித்தி பெற்றது. வன்முறை தாண்டவமாடியது.வாக்குப் பெட்டிகளை
கைப்பற்றி அவர்களே வேட்பாளர்களுக்கு எண்ணிக்கை அறிவித்தார்கள். சென்னை மாநகராட்சி தேர்தலில்
77 வட்டங்களுக்கு
மறு தேர்தல் அப்போது நடைபெற்றது. அதில் ஒன்று டிபி சத்திரம். மறு தேர்தலில் பணிகள்
செய்து மூன்றாவது இடம் கிடைத்தது. வன்முறை செய்பவர்களை எங்களுடன் நின்று சரஸ்வதி அவர்களும் எதிர்கொண்டார்கள்.
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக