"நானே மகத்தானவன்" 🥊
தோழர் அ. பாக்கியத்திற்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் .
மெனக்கெடல் என்று சொல்லுவார்கள்
- நிறைய விஷயங்களை தேடி தேடி மெனக்கிட்டு நல்ல முயற்சியை மேற்கொண்டு இந்த புதையலை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றிகள்.
ஆரம்பமே அமர்க்களம் .
நானே மகத்தானவன்- மட்டுமல்ல தனித்துவமான பன்முகம் கொண்ட உயர்ந்த களப்போராளி
குத்துச்சண்டையின் நிகரற்ற மாவீரன். நிறவெறிக்கு எதிராக ஆங்காரமாக குரல் எழுப்பியவன்
முகமது அலி.
அமெரிக்காவின் முதல் குடிமக்களான
செவ்விந்தியர்களை அழித்து ஒழித்திடவும். தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் கருப்பின மக்களை
அடிமைகளாக்கி மிருகங்களிலும் கீழாக நடத்திய அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய
வீரன் அவன்.
வீர வியட்நாம் மக்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து- எந்த விளைவுகள் ஏற்பட்ட போதிலும், குத்துச்சண்டை விளையாட்டிற்கு தடை போட்ட போதிலும் போர்வெறிக்கு அடிபணிய மாட்டேன்
என்று சமர்ப்புரிந்த மாவீரன் அவன்.
பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தான பயணங்களிலும் அரசியல் பினைக்கைதிகளை மீட்டெடுப்பது எளிய மக்களுக்கு மருத்துவ உதவி நிதி
அளிப்பது என பல நல்ல காரியங்களை செய்த கருணை நிறைந்தவன்.
கியூபா மக்களுக்கு எதிராக பொருளாதார
தடை விதித்த போதும் அமெரிக்காவுக்கு எதிராக கியூபா மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பொருளாதார
உதவிகளை செய்த மகத்தானவன்.
நிறவெறி அமெரிக்காவில் இன்றும்
தலை விரித்தாடும் சூழ்நிலையில் பல்வேறு படுபாதக கொடுமைகள் நடந்தன 1955 ஆம் ஆண்டு வாக்கில் எம்மெட் என்ற
14 வயது கருப்பின சிறுவன் கரோலின் என்ற 21 வயது வெள்ளை நிற பெண்ணுடன் பேசுகிறான் இருவரும் சிரித்து பேசி அரட்டை அடிப்பதை
பொறுக்க முடியாத நிறவெறியர்கள் அந்த சிறுவனின் வீட்டுக்குள் புகுந்து அடித்து சித்திரவதை செய்து துப்பாக்கியில் சுட்டு
ஆற்றில் வீசி விட்டார்கள்.
சிறுவனின் தாய் அந்த கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து
தொடர்ந்து போராடுகிறாள். விசாரணை முடிவில் அந்த கொடூர குற்றவாளி குற்றமற்றவன் என்று
நீதிமன்றம் அநீதியாக அறிவிக்கிறது. மக்கள் தொடர்ந்து கொந்தளித்து போராடுகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டில் அவன்
உடல் சிதைக்கப்பட்ட இடத்திலும் மற்ற எட்டு இடங்களிலும் நினைவுச்சின்னம் உருவாக்கினார்கள். வெள்ளை நிற வெறியர்கள்
அந்த நினைவுச் சின்னங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதற்கு எதிராக கருப்பின மக்கள்
மீண்டும் நினைவுச் சின்னத்தை எழுப்பினார்கள் அவர்கள் மீண்டும் உடைத்தார்கள் மீண்டும்
மீண்டும் நினைவுச் சின்னங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள்.
இறுதியில் 230 கிலோ எடை இரும்பை கொண்டு நினைவு சின்னத்தை
பலமாக உருவாக்கினார்கள். இது ஒரு நினைவுச் சின்னத்தின் அடையாளம் மட்டுமல்ல நிறவெறியர்களுக்கு
எதிராக கருப்பின மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தினார்கள்
இந்த நிகழ்வு நமக்கு பல நினைவுகளையும் கதைகளையும் உணர்த்தும் அடையாள சின்னமாகும்.
குத்துச்சண்டையில் பல சாம்பியன்களையும்
மண்டியிட வைத்தவன். போர்வெறிக்கு காரணமான அமெரிக்க ஏகாதிபத்திய வெறியையும் மண்டியிட வைத்தவன்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட்
இடதுசாரிகள் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக எந்த அபாயகரமான காரியங்களையும் சூழ்ச்சிகளையும்
செய்யும் அத்தகைய அமெரிக்க நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு
எதிராக - எத்தகைய வன்மங்கள் சூழ்ச்சிகள் தடைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வீர நடை போடுகிறது. இந்த வரலாற்றை
சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
"நானே மகத்தானவன்"
என்ற நூல் மூலம் ஒவ்வொரு மனிதனும் நாம் செய்ய
வேண்டிய கடமைகள் மூலமாக நாமும் மகத்தானவர்களாக
மாற முடியும் என்கிற மனநிலையை ஏற்படுத்துகிறது.
எழுத்தாளரின் எழுத்துக்கள் முகமது
அலியுடன் நாமும் சேர்ந்து பயணித்த உணர்வை அளிக்கிறது. உங்களின் எழுத்துக்களின் பயணம்
மீண்டும் மீண்டும் பயணப்பட வேண்டும்.
உங்கள் எழுத்துக்களையும் தாண்டி
சிறந்த மனிதாபிமானமிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஊழியன் என்பதை நானும் நிறைய நண்பர்களும்
தோழர்களும் அறிவார்கள்.
அனைவரும்
வாங்கி படித்து அறிய வேண்டிய பொக்கிஷத்தின் அனுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும்
என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
13.09.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக