Pages

புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 17, 2025

புத்தகம் வெளியீடு

 

*புத்தகம் வெளியீடு:*



காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், சென்னைக் கோட்டம் இரண்டின்  மாநாட்டில்...

*"நானே மகத்தானவன்"*

என்கிற நான் எழுதிய புத்தகத்தை வெளியீடு செய்தமைக்குநன்றிகள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் *G.ஆனந்த்* அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றினார். இந்நிகழ்வில், சங்கத்தின் தலைவர் *K.மனோகரன்,* பொதுச்செயலாளர் *R.சர்வமங்களா* ஆகியோர் உடனிருந்தனர்!

*50 புத்தகம், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது!*

சனி, நவம்பர் 30, 2024

மண்டைக்காட்டு அம்மன் வரலாறும் வர்ணாசிரம ஆக்கிரமிப்பும்

 அ.பாக்கியம்.


. கீகீ.. கூகூ.. என ஓயாது இரைந்து கொண்டிருந்தன பறவைகள். கீழ்வானம் வெலுத்துடிச்சோ நேரமும் ஆயிடுச்சோ என்று கிழக்கே ஏறெடுத்துப் பார்த்தவாறு பனை மரங்களை நோக்கி வேகமாக நடை போட்டான் கட்டேறி. வெயில் வருவதற்குள்  அஞ்சாறு மரம் ஏறி பதநி இறக்குனாத்தான் சில நாட்கள் வருமானத்துக்கு ஓடும். 

சரசரவென சத்தம் கேட்டது. அரவமோ என துணுக்குற்றான் கட்டேறி. அரவம் என்றாலும் தூக்கி வீசும் துணிச்சல் உள்ளவன் தான். ஒரு வேளை சக பனையேறும் தொழிலாளியாகவும் இருக்கக்கூடும். 


ரெண்டு மரம் ஏறி இறங்கி இரண்டு பானைகளை நிரப்பி விட்டான். கட்டேறி அடுத்த மரத்தில் ஏறி நிற்கும்போது அந்த சத்தம் கேட்டது. தாழி பானைக்குள் கலகலவென பதநி குடிக்கும் சத்தமும் பானை உருளும் சத்தமும். 


வா.. வா.. பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபட்டியா என்று முணுமுணுத்த படி கையில் இருந்த கூறிய அரிவாளை பானைகள் மறுபுறம் மறைத்த செடி புதர்களின் மீது குறி தவறாமல் வீசினான் கட்டேறி. இருள் சூழ்ந்த நேரத்தில் கண்ணுக்கு ஏதும் தெரியவில்லை. அரிவால் எதிலோ பாயும் சத்தம் கேட்டது. "அம்மே". என்ற பிஞ்சு குறளின் அலறலும் கேட்டது விரைந்து ஓடினான்.. அங்கே அவன் கண்ட காட்சியில் நெஞ்சே வெடித்து வெளிவரும் போல் ஆகிவிட்டது 

நாயோ நரியோ ஆடோ மாடோ என நினைத்த இடத்தில் அவன் செல்வமகள் தலையில் அரிவாள் பாய்ந்து ரத்தம் பீறிட்டு பாய்ந்தது. 

அடிவயிறு கலங்க மண்டையைக் காட்டுமா, மண்டைய காட்டமா, என அலறினான் கட்டேறி.

ஆனால் ரத்தம் பாய்ந்ததில் உயிரிழந்த பொன்னம்மைக்கு அவன் குரல் கேட்கவில்லை....

புத்தகத்தின் முதல் பக்கம் இப்படித்தான் துவங்குகிறது 

மண்டைக்காட்டு அம்மனின் வரலாற்றை திரிபுகளில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளார்.. குமரி மாவட்டத்தில் இருந்த நாட்டார் தெய்வங்களை எப்படி பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குள் இழுப்பதற்கு வகுப்பு சக்திகள் செயல்பட்டார்கள் என்பதையும் இந்த வரலாற்றுடன் இணைத்தே தெரிவித்துள்ளார். 


மண்டைக்காடு அம்மனுக்கு அனைத்து விதமான அசைவ உணவுகளும் படைக்கப்பட்டன. ஆடு, கோழி, வாத்து, மீன் அனைத்தும் படைக்கப்பட்ட பட்டியலை காரணத்தோடு எழுதியுள்ளார் 

பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய மீனவ மக்களும், அதற்கு அடுத்த குடியிருக்க கூடிய இந்து மக்களும், கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலிருந்து வரக்கூடிய கேரள மக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு வந்த பல நிகழ்வுகளை கண் முன்னிறுத்துகிறார்.

அதைவிட குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பத்து நாட்கள் நடைபெறும் அம்மன் கோவில் கொடை திருவிழா எப்படி நடைபெறுகிறது என்பதையும், ஒவ்வொரு நாள் நடைபெறும் பூஜைகளைப் பற்றியும், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டிற்கு வருவதும், பத்து நாட்கள் பண ஓலை குடிசை போட்டு தங்குவதையும், திருவிழா காலங்களில் சாலையோரங்களில் இருக்கக்கூடிய கடைகளும், கடைகளில் இருக்கக்கூடிய விற்பனைப் பொருட்களைப் பற்றியும், குழந்தைகளுக்கான ஜவ்வு மிட்டாய் ஆரம்பித்து ஆட்டம் பாட்டம் வரை அவர் எழுதியிருப்பது சிறு குழந்தைகளாக இருந்த பொழுது விழாக்களில் கலந்து கொண்ட நினைவுகளை உசுப்பி விடுகிறது.

மண்டைக்காட்டில் ஆர் எஸ் எஸ் காரர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் அதைச் சுற்றி நடந்த திட்டமிடல்களும் ஏற்பட்ட மோதல்களும் பற்றியும் துல்லியமாக நிகழ்வுகளை எடுத்துரைக்கிறார். தோழர் முருகேசன் மண்டைக்காடு அம்மனின் பக்தனாக சிறுவயதில் இருந்ததும், பக்கத்து கிராமம் அவருடைய வாழ்விடம் என்பதாலும் அனைத்தையும் கண் முன் காட்சிப்படுத்துகிறார். 

கலவரத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட அமைதி குழுவில் குன்றக்குடி அடிகளார் , மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஹேமச்சந்திரன், மணி போன்றவர்கள் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளையும் துல்லியமாக குறிப்பிட்டுள்ளார். 

அன்றைய அதிமுக அரசு விசாரணை கமிஷன் அமைத்ததும், வேணுகோபால் தலைமையிலான விசாரணை அறிக்கையில் ஆர்எஸ்எஸ் இன் திட்டமிட்ட செயல்களை அம்பலப்படுத்தியதையும் எழுதியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர் எஸ் எஸ் எவ்வாறு பொய் பிரச்சாரங்களை கட்டமைத்தார்கள் என்பதையும் கச்சிதமாக அம்பலப்படுத்தி உள்ளார். 

தோழர் முருகேசன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக துவங்கி அதன் மாவட்ட செயலாளர் ஆக பல ஆண்டு காலமும், மாவட்ட தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மூன்று முறை பணி புரிந்திருக்கிறார். 

தோழர் முருகேசனம் , தோழர் தோழர்.செல்லசுவாமி இருவரும் மாவட்ட தலைவர் செயலாளராக இருந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாலிபர் சங்கம் எழுச்சி பெற்ற காலமாக இருந்தது. குறும்பனை போராட்டம், கடற்கரை கிராமங்களில் வாலிபர் சங்க விரிவாக்கம், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வாலிபர் சங்கத்தின் செயல்பாடு, உள்ளூர் மக்களின் கோரிக்கைகளுக்கான இயக்கம் என்று தொடர்ந்து போராட்டங்கள் என போராட்ட அலை வீசிக்கொண்டு இருந்தது, வாலிபர் சங்கத்தின் போராட்டங்களிலும் மாவட்ட மாநாடுகளிலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். மாநிலத் தலைவர் என்ற முறையில் அடிக்கடி குமரி மாவட்டத்திற்கு சென்று கிராமங்கள்தோறும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அரசியல் விழிப்புணர்வு மிக்க மாவட்டமாக அந்த மாவட்டம் இருந்தது என்பதை அப்போது நேரடியாக களத்தில் இருந்த பொழுது என்னால் கண்டுகொள்ள முடிந்தது. 

தோழர். என். முருகேசன் ஒரு எழுத்தாளர் இல்லை என்றாலும் களப்போராளியாக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். எனவே, தான் இருந்த பகுதியில் நடைபெற்ற இந்த வகுப்புவாத தாக்குதலை அவருக்குரிய அனுபவத்தோடு பகிர்ந்துள்ளார். 


இந்தப் புத்தகத்தை இந்த ஆண்டு வெளியிடுவதற்காக முயற்சி செய்த பொழுது இந்துத்துவாவாதிகள் காவல்துறையில் புகார் கொடுத்து வெளியிடக் கூடாது என்று தடுத்தனர். காவல்துறை புத்தகத்தின் நகலை கேட்டது அது காவல்துறை இல்லை என்று மறுத்து விட்டனர். தொடர்ந்து புத்தகத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் செய்த பொழுதெல்லாம் இந்துத்துவாவாதிகள் அதை தடுத்து பிரச்சாரம் செய்தார்கள். இறுதியாக இந்த நூல் மார்த்தாண்டத்தில் இந்துத்துவவாதிகளின் பெரும் எதிர்பிரச்சாரத்துடன் நடந்தது. இதனால் வெளியீட்டு அன்றே ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி முடிந்தது என்றால் அந்த பெருமை இந்துத்துவா வினரையே சேரும். 

பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்துச் செய்தி. சாகித்திய அகடமி விருது பெற்ற பொன்னிலன் அவர்களின் அணிந்துரையுடன் புத்தகம் வெளிவந்துள்ளது. 

வாங்கி வாசிக்கப்பட வேண்டியது. 

புத்தகம் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய 

அலைபேசி எண் 9443791070

விலை ரூ 50/

புதன், நவம்பர் 22, 2023

வேலை நாள் என்றால் என்ன?

 தொழிற்சங்கவாதிகள் மட்டும் இல்லாமல் ஐடி துறை, இதழியல் துறை, பயோடெக்னாலஜி என இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவாகியுள்ள எந்த துறைகளில் எல்லாம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்களோ அவர்களெல்லாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கையேடு இந்த புத்தகம். 

எழுத்தாளர் அ.பாக்கியம் அவர்கள் எழுதியுள்ள வேலை நாள் எனும் புத்தகம். அவர் எழுதிய புத்தகங்களிலேயே சிறந்த ஒன்று என கூறலாம்.

வேலை நாள் என்றால் என்ன?


இந்த கேள்விக்கு பொதுவாக எத்தனை நாட்கள் ஒரு வாரத்தில் வேலை செய்கிறோம் என்று நாம் பதில் கூறுவோம் .ஐடி தொழிலாளி என்றால் திங்கள் முதல் வெள்ளி வரை என்றோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ,என்றால் அவர்கள்  வேலை செய்ய கூடிய நாட்களை குறிப்பிடுவார்கள்.. தூய்மை காவலர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் எங்களுக்கெல்லாம் நாளும் கிழமையும் கூலியும் கிடையாது கூப்பிட்டவுடன் ஓட வேண்டும் என்று கூறுவார்கள்.

இங்கு வேலை நாள் என்பது வேலை நேரம் தான். இந்த வேலை நேரம் தான் ஒரு தொழிலாளியின் வாழ்வையும் முதலாளியின் மூலதன  குவிப்பிற்கும் பாதை போட்டு தருகிறது .

இதை முறையாக கையாளும் போது தொழிலாளிக்கு பாதிப்புகளை பெருமளவு நம்மால் குறைக்க முடியும் அதுவே கையாலும் சக்தி முதலாளியிடம் செல்லும்போது தொழிலாளி வர்க்கத்தையே நாசம் செய்து விடுகிறது.

இந்த வேலை நாளுக்குள் தான் வேலை முறையும் வேலை செய்யக்கூடிய சூழலின் ஆரோக்கியம் என அனைத்தும் அடங்கி இருக்கிறது.

பொதுவாகவே சுரண்டலை புரிந்து கொள்ள இந்த வேலை நேரத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனவே மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுத்துக்களையும் மூலதனத்தையும் நாடுகிறோம்.

உலக தத்துவவாதிகள் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று பேசிக் கொண்டிருந்தபோது உலகம் எப்படி பட்டதாக மாற வேண்டும் என்று எழுதிய மார்க்ஸ் தனது மூலதனத்தில்  முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய இந்த வேலை நாளையும் (நேரத்தை) உபரி மதிப்பையும்  மிகத் தெளிவாக பகுப்பாய்வு செய்து இந்த உலகின் கண் முன்னே கொடுத்துள்ளார்.

இயல்பில் அந்தப் புத்தகத்தை நேரடியாக புரிந்து கொள்வது மிக கடினமான ஒன்றுதான் அதற்கு கூட்டு வாசிப்பு அவசியம். அதற்கு முன்னதாக சில புத்தகங்களை நம் வாசித்து சில அடிப்படைகளை புரிந்து கொண்டு அதன் பிறகு முழுதனத்திற்குள் செல்வது எளிமையாக இருக்கும்.

ஆனால் புதிதாக சில அடிப்படைகள் தெரிந்து கொண்டவர்கள் தொழிலாளர்களை இந்த முதலாளிகள் எப்படி சுரண்டு கொழுத்து போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், தொழிலாளர்கள் மீதான சுரண்டல் அதற்கு எதிரான போராட்டங்கள் வேலை நேரம் குறைப்பின் வரலாறு சட்ட பாதுகாப்புக்கான முதல் அடி இப்படியெல்லாம் சட்டங்கள் பரிணமித்து வந்தன இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களுக்கு நீர்ந்துள்ள கதி என்ன? நவீன தாராளமயம் மற்றும் இன்றைய சூழலிலா இந்தியா என வரிசையாக புரிந்து கொள்ள எழுத்தாளர் அ.பாக்கியம் அவர்களின் இந்த வேலை நாள் புத்தகம் நன்றாக கை கொடுக்கிறது.

எட்டு மணி நேர வேலை குறித்தான வரலாற்றை அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் வேலை நாளுக்கு பின்னே உள்ள வரலாற்றை வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் நாம் புரிந்து கொள்வதற்கான புத்தகங்கள் மிக மிக குறைவுதான். இந்தக் குறையை எழுத்தாளர் அ.பாக்கியம் அவர்களின் இந்த புத்தகம் நிவர்த்தி செய்யும் இடத்தில் இருக்கும் என்று நம்புகிறோம்.

ஏனென்றால் இந்த வேலை நாள் குறித்த வரலாற்றில் குழந்தை தொழிலாளர்கள் மீதான  மனசாட்சியே இல்லாத கொடூரமான சுரண்டல் நிலை துவங்கி, வேலை நேரத்திற்கான உரிமை கேட்ட போராட்டங்களின் வரலாறு, தொழிலாளர் உரிமைக்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட வரலாற்று தகவல்கள் இந்திய முதலாளிகள் பிரிட்டிஷ் முதலாளிகள் உடைய எவ்வாறு கொடூரமாக இருந்தார்கள் என அனைத்தையும் எளிமையாகவும் வேகமாகவும் வாசித்துக் கொள்ளக்கூடிய 150 பக்கத்தில் கொடுத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.

 இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கு முதல் அத்தியாயம் மிக அவசியமான ஒன்று. நீங்கள் அடுத்தடுத்த அத்தியாயம் செல்லும் போது முதல் அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் ஒரு பார்வை பார்க்கும் வகையில் இருக்கும். இது வரவேற்க தகுந்தது.

குழந்தை தொழிலாளர் மீதான சுண்டல் குறித்து வரலாற்றுத் தகவல்களை படிக்கும்போது எந்த ஒரு மனிதனுக்கும் நெஞ்சம் குமுறி விடும். சிமினியை சுத்தம் செய்வதற்கு நான்கு வயது குழந்தைகளை பயன்படுத்திய கொடுமை இந்த முதலாளித்துவத்தின் அகோரத்தை கண்முன்னே காட்டுகிறது. தமிழ்நாட்டின் கீழ் தஞ்சையில் எப்படி நம் குழந்தைகள் மாடுகளை மேய்க்கவும் பண்ணை அடிமையாகவும் இருந்தாரோ அதுபோன்ற உலகம் முழுவதும் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் நில உடமை சமுதாயத்தில் நிலவியுள்ளது.

for link :

வேலை நாள் - புத்தக அறிமுகம் - Tamil Marx

tamilmarx.org/2023/11/20/%E0…

Bakkiam  

#article

#tamilmarx #workers #labourer

வெள்ளி, நவம்பர் 27, 2020

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல்-3

 

     இந்தியாவில் நகர்மய அவதாரங்கள்                                                          அ.பாக்கியம்


                     முதல் பதிப்பு ஜனவரி 2018

              வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          1980ம் ஆண்டுகள் வரை திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டன. திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படை நோக்கமே சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும். பின்தங்கிய பிரதேசங்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்ச்சியை ஏற்படுத்துவது, மக்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது என்பதுதான் திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையாக இருந்தது. இவை முழுமையாக அமலாக்கப்பட்டதா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், சந்தை இந்த திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு உட்பட்டதாக இருந்தது. நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை இலக்காக கொண்டிருந்தது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தோட்டம் மேலோங்கி இருந்ததால் ஓரளவு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

          1990ம் ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தார். உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்றபடி தீவிர சீர்திருத்தங்களை அமலாக்கினார். 1990ம் ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக இருந்தது. இக்காலத்தில் தீவிர நகர்மயமாக்கல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தியது. 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002- 2007) மொத்த  உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதமாக உயர்ந்தது. இதே போன்று 11வது ஐந்தாடு திட்டத்தில் (2007 2012) மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக உயர்ந்தது. இக்காலத்தில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் பெருநகரங்களின் பங்கு 62 சதவீதமாக இருந்தது. நகரத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். நகர்மயம்தான் மத்திய அரசின் திட்டத்தில் முக்கிய இலக்காக மாறியது. 2005 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி  ஜவஹர்லால் நேரு தேசிய  நகர்புற புனரமைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டிற்குள்  இந்த திட்டத்தை நிறைவேற்றிட கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின்முன்னுரையில் நகரங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் விசை (நபேநேள டிக நஉடிடிஅஉ பசடிறவா) என்று குறிப்பிடப்பட்டது. இந்த நகர்மய திட்டத்தை வேகப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாக அடைந்திட வேண்டுமென்று இலக்கை நிர்ணயித்தார்கள். இந்த நகர்மய திட்டத்திற்கு ஏற்ற வகையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தை (2012-2017) உருவாக் கினார்கள். இத்திட்டத்தில் நகர்மய விரிவாக்கம் மற்றும் அதன் தேவைகளை சவாலாக எதிர்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று வரையறை செய்தனர்.

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு- ஓர் அலசல்-2

 

          சீர்திருத்தமா? மாற்றமா?         

அ.பாக்கியம்

முதல் பதிப்பு ஜனவரி 2018

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          நாம் வாழும் சமூகம் வர்க்க பேதங்கள் நிறைந்த  சமூகமாகும். உழைப்பாளி மக்களிடம் இருக்கிற இந்த வர்க்க வேறுபாடுகளை பயன்படுத்தி கொண்டு பெருமுதலாளி வர்க்கம் சுரண்டல் அமைப்பை தீவிரப்படுத்திக் கொள்கிறது. பொருளாதார சுரண்டலை பாதுகாப்பதற்கு சமூக ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி கொள்கிறது. முதலாளி என்ற முறையில் அவர் மூலதனத்தின் அவதாரமே. அவரது ஆன்மா மூலதனத்தின் ஆன்மாவே என்று காரல் மார்க்ஸ் தனது மூலதன நூலில் சுரண்டப்படும் ஒரு தொழிலாளியின் நிலையிலிருந்து இந்த கருத்தை முன்வைப்பார். முதலாளித்துவம் நெருக்கடிகளை சந்திக்கிறபோதும், தனது லாப வேட்டை சுருங்குகிற போதும் புதிய புதிய முறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்யும். தொழில்களை நவீனமயமாக்குவது, குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை தேடுவது, சட்டப் பாதுகாப்பற்ற தொழிலாளர் கூட்டம், கட்டுப்பாடற்ற சந்தை, நிலம் என அனைத்து வகையிலும் இந்த முயற்சிகள் இருக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

          தற்போது மூலதனத்தை சுதந்திரமாக கொண்டு செல்வதற்கும், தொழில் ஆரம்பிப்பதற்கும் குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை பெறுவதற்கும் நிலம், நீர், மின்சாரம், சந்தை, போக்குவரத்து என அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் அமைத்துக் கொண்டு குறைவான முதலீடு, அதிகமான லாபம் என்ற கொள்கைக்கு ஏற்ற இடமாக பெருநகரங்களை உருவாக்குகின்றனர். இதற்காக உலக வங்கி உட்பட சர்வதேச நிதி மூலதன அமைப்புகள் கட்டமைப்பு - சீரமைப்பு (ளவசரஉவரசயட யனதரளவஅநவே) என்ற திட்டத்தை உருவாக்கி 98 நாடுகள் மீது திணித்து அமலாக்கின. இதன் அடிப்படை நோக்கமே தேசிய அரசுகளின் பலத்தை குறைத்து, நிதி மூலதனத்தின் மீது அதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, பெரும் நகரங்களை சர்வதேச மூலதனத்துடன் இணைப்பதாகும். சேமநல அரசு (றுநடகயசந ளுவயவந) என்பதை தகர்த்து, பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வணிக இழப்புகளை அரசு ஈடுகட்டுவதாகவும், அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசு முழுமையாக உதவி செய்யக்கூடிய வகையிலும் அரசின் தன்மைகளை மாற்றியமைத்தனர்.

          இதன் விளைவு மூலதன ஈர்ப்பை பெறுவதற்கு பெரு நகரங்களிடையே போட்டிகள் உருவாக்கப்பட்டன. நகரங்கள் மூலதன குவியல்களின் மையமாக (சுநபஅநள டிக யஉஉரஅரடயவடி) மாறியது. இந்த மாற்றங்கள் பற்றி பொருளாதார அறிஞர் டேவிட் ஹார்வி 1989-லும் 2005லும் தனது ஆய்வின் அடிப்படையில் கீழ்கண்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளார். நவீன தாராளமயம் மூலதன திரட்சி, சுதந்திர சந்தை உருவாக்கதிற்கு வழிவகுத்தது. நிதி சந்தையின் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்கியது. இதனால் உலகின் பல பகுதிகளில் பொருளதார கட்டமைப்பில் சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களால் நிதி மூலதன நடமாட்டத்தில் தேசிய அரசுகளின் கட்டுப்பாடு குறைந்தது. நகரங்கள் சர்வதேச மூலதனத்துடன் இணைக்கப்பட்டன. மூலதனத்தை ஈர்க்கும் போட்டிக்கு நகரங்கள் தள்ளப்பட்டன. குறைந்த செலவு அதிக லாபம் என்ற முறையில் மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிந்தது என்று விவரித்துள்ளார். இந்த பின்னணியில்தான் நிலம், மின்சாரம், தண்ணீர், வரிச்சலுகைகள் என அனைத்தும் பெருநகரங்களில் மையப்பகுதிகளில் அதன் சுற்றுவட்டாரத்திலும் அரசுகளால் வாரிவழங்கப்பட்டன. நகரங்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தேவை ஆளும் வர்க்கத்திற்கும், நவீன தாராளமயக் கொள்கைக்கும் அவசியமாக இருந்தது. இதற்கு அவர்கள் நகர்மய சீர்திருத்தம் (ரசயெ சநகடிசஅள) என்று பெயரிட்டார்கள். உண்மையில் அது சீர்திருத்தம் அல்ல நகர்மய மாற்றம் (ரசயெ உயபேந). அதுதான் நடைபெறுகிறது. அதாவது தங்களது லாபவேட்டைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதாகும்.

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல் 1

 


அ.பாக்கியம் 

                               முதல் பதிப்பு ஜனவரி 2018

                               வெளியீடு : பாரதி புத்தகாலயம்

    வன்முறை பற்றிய நமது பொது புத்தியின் புரிதல் மேலோட்டமானது. தனி நபர் கொலைகள், கூட்டு வன்முறை, கலவரங்கள், தீவைப்பு, பொருட்சேதம், உயிர்சேதம் என வன்முறையின் விளைவுகளிலிருந்து மட்டும் வன்முறை பற்றிய கருத்துக்கள் கட்டமைக்கப்பபட்டுள்ளது. ஒரு வர்க்க சமூகத்தின் பொருளியல் உற்பத்தியின் அடிப்படையிலிருந்து சட்டங்களும், ஒழுக்க நியதிகளும் உருவாக்கப்படுகின்றன. வன்முறை பற்றிய பார்வைகளும் இதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இதுநாள் வரை பெண்கள் மீதான வன்முறை ஆணாதிக்கப் பார்வையிலிருந்து நியாயப்படுத்தப்பட்டது. சாதிய, மதவெறி கட்டமைப்பில் இன்றும்கூட பெண்கள் மீதான வன்முறை எழுதப்படாத சட்டமாக நியாயப்படுத்தப்படுகிறது. எனினும் நவீன காலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் வன்முறை என்ற பார்வை மேலோங்கியுள்ளது. இந்த வகையில் வன்முறை பற்றிய பொது புத்தி கூர்மையடைந்து வருகிறது. வன்முறை பற்றிய விசாலமான பார்வையும், அதுகுறித்த விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

வன்முறையின் பல வடிவங்களை பற்றிய ஆய்வுகளை பல சர்வதேச அமைப்புகள் வரையறை செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆள் பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி ஒரு நபருக்கோ அல்லது மற்றொரு நபருக்கோ, ஒரு குழுவிற்கோ, ஒரு சமூகத்திற்கோ காயம், மரணம், பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்படுத்துதல் மற்றும் பயமுறுத்தல், இருத்தலுக்கெதிரான அச்சுறுத்தல் வன்முறையாகும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 133 நாடுகளில் வன்முறைகளை பற்றி ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில் வன்முறை பற்றிய விரிவான விவரங்கள் உள்ளன. இவற்றில் தனிநபர் வன்முறை, கூட்டு வன்முறை, சுய வன்முறை (தற்கொலை) என வன்முறையின் பல வடிவங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அதிகாரத்தை பயன்படுத்திய (ரளந டிக யீடிறநச) வன்முறைதான் உலகில் அதிகமாகவும், பரவலாகவும் நடைபெற்று வருகிறது என்ற விவரங்களும் வெளிப்பட்டுள்ளன.

          யுத்தம், எல்லை விரிவாக்கம், ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான அடக்குமுறை, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவது, அடிப்படை உரிமைகளை மீறுவது என இந்த அதிகார வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. நவீன தாராளமய கொள்கைகள் உலகின் நியதிகளாக மாற்றப்படுகிற இக்காலத்தில் குடியிருப்புகளை அகற்றுவதில் அதிகார வன்முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இவை பரவலாக நடைபெறுகிறது. அமெரிக்காவில் எல்லை விரிவாக்கத்திற்காக செவ்வந்தியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அதிகாரத்தை பயன்படுத்திய வன்முறை ஆகும். அதுமட்டுமல்ல, வளர்ச்சி என்ற பெயரிலும், நாகரீக மனிதர்களுக்கும், நாகரீகமற்றவர்களுக்குமான யுத்தம் என்ற கருத்தை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறை ஆகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு இந்த அதிகார வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இந்த அதிகார வன்முறையின் ஊடாகத்தான் இந்தியாவில் நகர்மயமாக்கலின் விளைவுகளை காணவேண்டியுள்ளது. நகர்மய விரிவாக்கத்தில் குடிசைபகுதி மக்கள், நகர்புற ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஆவணமற்ற குடியிருப்புவாசிகள் ஈவிரக்கமற்ற முறையில் நகரைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்த வன்முறை, "வளர்ச்சி" என்ற முகமூடி அணிந்து நடத்தப்படுவதால் நமது பொது புத்தியில் இது வன்முறையல்ல என்ற கருத்து வலுவாக பதியப்படுகிறது.

    வளர்ச்சி என்பது அவசியமானது ; தவிர்க்க முடியாததும்கூட. அந்த வளர்ச்சி யாருக்கானது? என்பதுதான் முக்கியமான கேள்வி. நகர்மயமாக்கல் சகாப்தத்தில் இடப்பெயர்வும், வெளியேற்றமும் பெருமளவில் நடைபெறுவதை வளர்ச்சியின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நகர்மயமாக்கல் என்பது அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்துவதும் நகர்புற மக்களின் சுகாதார வாழ்விட வசதிகளை மேம்படுத்துவதுமாகும். ஆனால், நவீன தாராளமய கொள்கைகளில் நகர்புறத்தில் குடியிருக்கிற 30 சதத்திற்கு மேற்பட்ட நகர்புற ஏழைகள் மற்றும் வருமானம் குறைவான தொழிலாளர்கள், நடுத்தர பகுதியினர் என 60 சதத்திற்கு மேல் உள்ளவர்களை புறக்கணித்துவிட்டு, புறநகருக்கு விரட்டிவிட்டு வளர்ச்சி என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? வசதி படைத்த ஒரு சிறு பகுதியினரின் வாழ்க்கைக்கு ஏற்ற முறையிலும் பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகள் குறைந்த கூலிக்கு சுரண்டல் களத்தை உருவாக்குவதற்கு ஏற்ற வகையிலும் நகர்மயம் மாற்றியமைக்கப்படுகிறது. மேற்கண்ட மாற்றங்களை சென்னை நகரில் பட்டவர்த்தனமாக பார்க்க முடியும்.

ஞாயிறு, ஜனவரி 14, 2018

வளர்ச்சியின் பெயரால் வன்முறை ............... புத்தகத்தைப் பற்றி...........




வசந்தகோகிலன்


     சட்டம்,நீதி, நிர்வாகம், அதிகாரம் எல்லாம் எளியவர்க ளைத்தான் ஏறி மிதிக்கும்; பணம் படைத்த வர்க ளிடம் பல்லிளித்து சேவகம் புரியும். இது நடைமுறை எதார்த்தம். காலம்தோறும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏழை, எளியவர்கள் மீது அதிகார வன்முறை பிரயோகிக்கப்ப டுகிறது. அவர்கள் காலம் காலமாக குடியிருந்த வாழ்விடங்களில் இருந்து, வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து வீசி எறிவதைப் போல் தொலை தூரத்திற்கு தூக்கி எறியப்படுகிறார்கள். குடிசைப் பகுதி மக்களை அப்புறப்படுத்துவது என்பது ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் குஷியான விஷயமாகி விட்டது. இந்த அதிகார வன்முறை எல்லாம் வளர்ச்சியின் பெயரால் நடைபெறுகிறது.

       ஏழைகளின் படிப்பு, வேலை, தொழில் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. அத்துடன் பழக்கமான சூழலும் பறிக்கப்படுகிறது. இதைவிட படுபாதகமான செயல் வேறு ஏதுமில்லை. சூழல் என்பது அவர்களின் உணர்வோடு சம்பந்தப்பட்டது. அந்த உணர்வில் அமிலத்தை வீசுகின்றனர் ஆட்சியாளர்கள். குச்சு வீட்டில் இருந்து மச்சு வீட்டிற்கு மாற்றும் நடவடிக்கையா இது? சத்தியமாக இல்லை. மச்சு வீடு என்று ஏமாற்றும் நடவடிக்கை. குச்சு வீட்டில் இருந்தபோது கிடைத்த வாழ்வாதாரத்தை பறித்து அதைவிட மோசமான வாழ்விடத்துக்கு சென்னை மக்கள் நகர்த்தப்படுகிறார்கள். அகற்றப்படும் மக்களுக்கு சில ஆயிரங்கள் நஷ்டஈடு தரலாம். அந்த நஷ்டஈடும், நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப்பு வைத்த கதைதான். இந்த நஷ்டஈடு, காலம் காலமாக அவன் வசித்த சூழலை விட்டுப் பிரியும் மன வேதனைக்கு மருந்தாகுமா? அவர்களுடைய சென்டிமென்ட் முன்பு இவையெல்லாம் செல்லாக் காசுகள் அல்லவா?

    தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் குடிசைப்பகுதி மக்களை சென்னையின் பூர்வகுடிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த பூர்வகுடிமக்களின் குடியிருப்பு உரிமை பறிப்பை அலசுகிறது இந்த நூல். இதற்காக சிஏஜி அறிக்கை உள்பட பல்வேறு ஆதாரங்கள் இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. குடிசைப் பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதின் பின்னணி, வளர்ச்சி என்பது உண்மையா? உண்மையென்றால் அது யாருக்கான வளர்ச்சி? உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் யார்? ஏரிகளை ஆக்கிரமித்து கல்லூரிகள், வணிக வளாகங்கள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல்.

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆகிவிட்டால் ஒப்பப்பர் ஆகி விடுவார் என்ற எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது வளர்ச்சியின் பெயரால் வன்முறை என்ற இந்த நூல்.

ஆசிரியரை பற்றி
        நூலாசிரியர் அ.பாக்கியம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர். குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து, குடிசை பகுதி மக்களின் பிரச்சனைகள், சூழலியல், கார்பரேட் மருத்துவ களவாணித்தனம், காவிய அரசியலின் கயமத்தனம் என பல களங்களில் கட்டுரைகள் எழுதி உள்ளார். வேலைதேடி, உலக இளைஞர் எழுச்சியும்-இயக்கமும், உணவுநெருக்கடி:வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல், கழக ஆட்சிகால் களவாடப்பட்ட பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலம், முகமது அலி ஒரு கருப்பின போராளி,பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல், உள்பட சில நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாத மேடைகளில் வெற்றுக்கூச்சல்கள், காட்டுக் கத்தல்களுக்கு இடையே அமைதியாக ஆணித்தரமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கருத்துக்களை முன்வைப்பவர்.
bakkiamblogspot.com                                         bakkiam1960@gmail.com

செவ்வாய், மே 31, 2011

7. நாங்கள் வலிமையானவர்கள்.


       எந்தவொரு சமூக அரசியல் மாற்றங்களுக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கும் இணைஞர்களின் ஆயுதம் தாங்கிய எழுச்சியும், தனிநபர் சாகசங்களும் முன்தேவையாக அமைந்திருக்கிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.சமுதாயத்தில் புதிய பொருளாதார அரசியல் வளர்ச்சிப்போக்குகள் உருவாகிறபோது புதியவிதமான பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.அவற்றிற்கான மாற்று மார்க்கம் உடனடியாக தெரியாதபோது  இதுபோன்ற ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் மற்றும் சாகசங்கள் மூலமாக தீர்வுக்கான தேடல் நடைபெறுகின்றது. இதற்கு ருஷ்யநாட்டு இளைஞர் இயக்க செயல்பாடுகள்  சிறந்த உதாரணமாகும். இக்காலத்தில் (1815-1890) செயல்பட்ட இளைஞர் அமைப்புகளில் இளம் ருஷ்யர்கள் பங்கேற்ற  அமைப்புகள் பலபோக்குகள் அதனுள் இருந்தாலும்  சிறந்த, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாகவும் திகழ்ந்தது.
          பத்தொன்பதாம்  நுற்றாண்டின் மிகப்பெரிய நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் ருஷ்யா இருந்தது.அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவும் சட்டம், சட்டமன்றம் எதுவுமற்ற சார் மன்னனிடமே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நாடாக ருஷ்யா திகழ்ந்தது.6-ல் 5பங்கு மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டிருன்தனர்.

   உற்பத்தி திறன்மிகவும் குறைவாக உள்ள விவசாயத்தில் அதிகம் விவசாயிகள் ஈடுபட்டிருந்ததாக லெனின் பிற்காலத்தில் ஆய்வு செய்து எழுதினார்.  1833-ல் 43 சதவீத மக்கள் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 1859-ல் 66 சதவீதமாக உயர்ந்தது. 1861-ம் ஆண்டு பண்ணைஅடிமைத்தனம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு ருஷ்யாவில் இயந்திர ஆலைமுதலாளித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது.

               1865-ம் ஆண்டுக்கும் 1890-ம் ஆண்டுக்கம் இடையில் உள்ள 25 ஆண்டுகளில் பெரிய ஆலைகளிலும் இரயிவேக்களிலும் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.7 லட்சத்திலிருந்து 14.3லட்சமாக உயர்ந்தது.அடுததசில வருடங்களில் இது 27 லட்சமாக உயர்ந்தது.ஆலைமுதலாளித்துவத்தின் விளைவாக 1870-ம் ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.1875-ல் ஒடேஸ்ஸா நகரத்திலும் 1878-ல்பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் தொழிற்சங்கம் உருவாகியது.1881 முதல் 1886-வரை 5 ஆண்டுகளில் 48-க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.

                        இதே காலத்தில் சார் அரசு அதன தேவைகளை முன்னிறுத்தி அதிகார வர்க்க எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியது.          மறுபுறத்தில் புதிய சூழலுக்கான நிர்வாகிகளின் தேவைகளுக்காக உயர்கல்வி    விவாக்கம் வேகமாக நடந்தது. ருஷ்யாவின் 5 பல்கலை கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்தது.இம்மாணவர்களில் பெரும்பகுதி நடுத்தர, மற்றும் கீழ்மட்ட மக்கள் பிரிவிலிருந்து வந்தனர். பாரம்பரிய உயர்வர்க்கமும் அதன் தலைமையும் இக்காலத்தில் குறைய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
                        இந்த பின்னனியில்தான் இளைஞர் கலகங்களும் எழுச்சிகளும், அப்புகளும் உருவாகின.1825-ம் ஆண்டு சார் மன்னன் முதலாம் நிக்கோலசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் இருந்த இளம் அதிகாரிகள் குழு பெரும் கலகத்தில் ஈடுபட்டது.அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து இளம் வீரர்கள் கலகத்தில் இறங்கியது மன்னனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.போராட்டம் கடுமையாக அடக்கப்பட்டு ஐந்து இளம் இராணுவ அதிகாரிகளின் தலை கொய்யப்பட்டது.இவர்களை டிசம்பரிஸ்டுகள் என்று அழைப்பார்கள்.

                        டிசம்படிரிஸ்டுகளின் தாக்கம் அடுத்தடுத்த ருஷ்ய சமுகத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்தது.இன்றளவும் டிசம்பரிஸ்டுகள் பற்றி நினைவுகூறல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1830-1860-ம் ஆண்டுகளில் ருஷ்ய சமூகத்தில் தத்துவார்த்த கருத்து மோதல்கள் தீவிரமடைந்தன. 1848-ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கை இந்த மோதலுக்கு புதிய வழித்தடத்தை திறந்து விட்டது. 

                 பல எழுத்தாளர்கள் சோசலிசத்தை பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தனர். பண்ணை அடிமைகள் விடுதலைசெய்வது, அரசின் அதிகாரத்தை குறைப்பது, பத்திரிக்கை சுதந்திரத்தை அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இக்கருத்துக்களின் ஊடாக சமூக அவலங்களை எதிர்த்து இளைஞர்களின் அணிதிரட்சி நடைபெற்றது.

சனி, ஏப்ரல் 30, 2011

6 கடிதமே பிரகடனமாய்


        புறச்சூழல் பொருத்தமாக இருந்தால் ஒரு சிறு தீப்பொறியும் காட்டுத்தீபோல் மள மள என பற்றிக் கொள்ளும் என்பதற்கு இளம் இத்தாலி சிறந்த உதாரணம்.போராட்ட சூழலில் ஒரு கடிதம் ஏற்கப்படாதபோது அதுவே போர் பறையாய் போராட்டத்தையே கொழுந்துவிட்டு எரிய செய்யும் என்பதற்கு மாசினியின் கடிதம் ஒரு உதாரணமாகும். 1931-ல் சார்டினிய அரசின் புதிய அரசராக சார்லஸ் ஆல்பர்ட் என்பவர் பதவியேற்றார்.  இவர் கார்போரிய இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இவ்வியக்கத்தில் இவருடன் கலந்துகொண்ட மாசினி அவருக்கு ஒரு கடிதம் எழுதினான். 

               அக்கடிதத்தில் ஒன்றுபட்ட இத்தாலி உருவாக்குவது பற்றி அதை எப்படி அடைய முடியும் என்பது பற்றியும் அதற்கான திட்டத்தினையும் முன்வைத்திருந்தான். அந்த மன்னனோ இக்கடிதத்தை அலட்சியப்படுத்தினான்.பதிலும் இல்லை,பரிசீலனையும் இல்லை. இதனால் இளம் இத்தாலிய அமைப்பினர் அக்கடிதத்தை பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும்  விநியோகம் செய்தனர். தேசப்பற்றின் உணர்ச்சி பிழம்பாய் எழுதப்பட்ட அக்கடிதம் இளைஞர்களையும், பொதுமக்களையும் சாரை,சாரையாக அணிதிரட்டியது. அரசனுக்கோ இந்தக் கடிதம் அச்சத்தை ஏற்படுத்தியது, ஆத்திரமூட்டியது.

              மாசினி பிரான்சிலிருந்ததனால் அவனை கைதுசெய்யக்கோரி நிர்பந்தம் செலுத்தினான். ஆனால் பிரான்சு அரசோ மாசினியை கைது செய்யாமல் மீண்டும் ஸ்விட்சர்லாந்திற்கு நாடுகடத்தியது. இக்கடிதத்தை விநியோகம் செய்த இளைஞர்கள் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்கடிதமே இளம் இத்தாலியின் கொள்கை பிரகடனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர் எழுச்சிகள்
      கைதுகளும், நாடுகடத்தலும், தண்டனைகளும் இளைஞர்களின் எழுச்சிக்கு தடைபோட முடியவில்லை. எழுச்சிகள் தொடர்ந்தது மட்டுமல்ல பரவியும் சென்றது. 1833-ம் ஆண்டு அலெக்சான்டரியா, டூரின், ஜெனோவா, சாம்பிரி ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தாங்கி கலகம் செய்தனர். அரசு படைக்கும், இளைஞர்களுக்கும் வீதியில் கடும் மோதல் ஏற்பட்டது.

          அரசு அடக்குமுறையின் உச்சகட்டத்திற்கே சென்றது.இந்த எழுச்சியில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டது. மாசினி தலைமறைவாக இருந்தாலும் அவருக்கும் மரணதண்டனை என அறிவிக்கப்பட்டது. இந்த எழுச்சி தோல்வியில் முடிந்தாலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களின் பார்வை இத்தாலியை நோக்கி திரும்பியது.

      இளம் இத்தாலி அமைப்பின் இளைஞர்கள்  தோல்வி கண்டு துவளவில்லை. 1834-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி ஸ்விட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற இளைஞர்கள் அங்கே ஒன்று கூடினர். அங்கிருந்து பியன்மன்ட் நகர் மீது பெரும் தாக்குதல் தொடுத்தனர். மறுபுறத்தில் இளம் இத்தாலிய சங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு கரிபால்டி ஜெனோவா நகரை தாக்கினான்.  

                இதனால் கோபமடைந்த சுவிட்சர்லாந்து அரசு 1834-ம் ஆண்டு மே மாதம் மாசினியை நாடுகடத்தியது. போராட்டமும் நசுக்கப்பட்டது. பாரிசுக்கு தப்பிச்சென்ற மாசினியை சார்டினிய அரசின் நிர்பந்தத்தால் அவ்வரசு கைது செய்து சிறையிர் அடைத்தது.மேற்கண்ட இரு எழுச்சிகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலால் இளம் இத்தாலிய அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்தது.நான்காண்டுகால இடைவெளிக்கு பின்னர் 1838-ம் ஆண்டு லண்டனில் ஒன்றுகூடி இளம் இத்தாலியை மீண்டும் புதுப்பித்தனர்.
 
             இந்த புனரமைப்பு புதிய தாக்குதலுக்கு புத்துயிர்ரூட்டியது.1841-முதல் 1845 வரை சிசிலி, அப்ரூசி, டஸ்கன், லம்போர்டி, வெனீசியா, ரோமக்னா ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் தொடர் எழுச்சிகளை ஏற்படுத்தினர். மேலும் சில நகரங்களில் இளம் இத்தாலியுடன் தொடர்பு ஏற்படுத்தியிருந்த சில இளைஞர் குழுக்கள் அரசிற்கெதிராக கலகம் செய்தனர்.  

            பிரௌன் பிரான்ஸ்கோ என்ற இளம் இத்தாலியன் சிசிலியில் 1848-முதல் 1856-வரை தீரமிகு போராட்டங்களை நடத்தி தனது 36-வது வயதில் மரணமடைந்தான். இவன் 1848-ல் பிரெஞ்சு படைகளை எதிர்த்து பாலிமோர் பகுதிகளை விடுதலைசெய்ததில் முக்கிய பங்காற்றினான். இவனது தீர செயல்கண்டு இராணுவத்தில் சேர்ந்திட அரசு கொடுத்த அழைப்பை நிராகரித்து இளம் இத்தாலிய அமைப்பில் இணைந்து செயல்பட்டான். 

   பிரெஞ்சு படைகள் மீண்டும் பாலிமோரை கைபற்றியபோது பிரெஞ்சு படைகளையும், உள்ளூர் அரசையும் எதிர்த்து 1850-முதல் இளைஞர்களை அணிதிரட்டி புரட்சி செய்தான். இதனால் 1853-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 1856-ல் அவன் விடுதலையானபோது சிறைவாழ்க்கை அவனது விடுதலைவேட்கையும் கனவுகளும் மேலும் உரமேறி உறுதிபட்டிருந்தது.எனவேதான் விடுதலையானவுடன் இளைஞர்களையும் விவசாயிகளையும் திரட்டி அரசுக்கெதிரான தாக்குதலை முன்னிலும் தீவிரமாகத் தொடுத்து

   1856 டிசம்பர் 20-ல் யுத்தக்களத்தில் வீரமரணம் அடைந்தான். அவனின்  வரலாற்றை அரசு மறைக்க முயன்றது. ஆனால் 1860-ல் கரிபால்டி சிசிலியை கைபற்றியவுடன் இவனது உடலை தோண்டி எடுத்து சொந்த மண்ணில் அடக்கம் செய்து, நினைவு ஸ்தூபியை உருவாக்கினான்.
  இதேபோன்று பாண்டிரா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட 33 வயது நிரம்பிய அட்டிலோ , 25 வயது நிரம்பிய எமிலோ இருவரும் இளம் இத்தாலிய அமைப்பின் உதவியால் நேப்பில்ஸ் நகர கப்பற்படை மீது தாக்குதலை நடத்தினர். அந்நகரத்தின் சிறைக்கைதிகளையும் விடுதலை செய்தனர்.

       அரசு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 8 இணைஞர்கள் இறந்தனர். 1844-ல் அட்டிலோ, எமிலோ மற்றும் ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட்டு ஜீலை 23-ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றொரு இளைஞன் கார்லோ பிசாகானே, இவன் 39வது வயதில் யுத்த களத்தில் இறந்தான். 

  நெபபோலியனின் படையிலிருந்த இவன் இளம் இத்தாலியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு 1847-ல் இவ்வமைப்பில் இணைந்தான். மாசினி உருவாக்கிய மிலான் நகர எழுச்சிக்கு தலைமையேற்று பெரும் தாக்குதலை நடத்தி கைதிகளை விடுவித்தான். இவன் புருதோனின் அராஜகவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான்.  துப்பாக்கி முனை ஆயிரம் புத்தகங்களைவிட அதிக பிரகாசமானது என்றும் , செயல்கள் மட்டுமே சிறந்த கருத்துப்பிரச்சாரம் என்றும் பேசினான். 1853-ல் ஏற்படுத்திய மிலான் எழுச்சி பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகியது. பல பிரதேசங்களில் இளம் இத்தாலி அமைப்பு வேட்டையாடப்பட்டு, பெரும் பின்னடைவை சந்தித்தது.

    இளம் இத்தாலியில் குறிப்பிடவேண்டிய மற்றொருவர் ஜோசப் வெர்டி இவர் தனதுசேர்ந்திசை மற்றும் மேடை நாடகத்தின் மூலமாக இளம் இத்தாலிய கருத்துக்களை பிரச்சாரம் செய்து இளைஞர்களை திரட்டினார்.  மறுபுறத்தில் கரிபால்டி இளம் இத்தாலி பலவீனப்பட்டிருந்தாலும் அவர் தனியாக படையமைத்து இத்தாலியின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தார்.

   1870-ம் ஆண்டு சிசிலி எழுச்சியின்போது மாசினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.உடல்நிலை பாதிப்பால் அதே ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாசினி 1872-ல் பைசா நகரில் மரணமடைந்தார். அவரது சொந்த ஊரான ஜெனோவாவில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்றனர்.

    1872-ல் இளம் இத்தாலியின் கனவான ஒன்றுபட்ட இத்தாலி உருவாகியது. ஆனால் அவர்கள் கருதிய சுதந்திர குடியரசு உருவாகவில்லை. காரணம் பிற்போக்கு அரசுக்கு எதிராகவும் , ஆஸ்திரிய, பிரெஞ்சு அரசுக்கெதிராகவும் பிரபலமான எழுச்சிகள் மூலம் மட்டுமே ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிவிடலாம் என்று மாசினி நம்பினார்.

    சுதந்திர குடியரசிற்கு இதுமட்டும் சாத்தியமல்ல. செயல்கள், எழுச்சிகள், துப்பாக்கிகள் மூலமாக தானாக கருத்துக்கள் பரவிவிடுமென நம்பினர். இதே கருத்துக்கள் 1920ம் ஆண்டுகளுக்கு பிந்தைய இந்திய இளைஞர் அமைப்புகளிலும் காணக்கிடந்தது. இளம் இத்தாலி என்ற இளைஞர் அமைப்பு ஒன்றுபட்ட இத்தாலிக்கு அடித்தளமிட்டது. பல தியாகங்களை செய்தது. 

    இவ்வமைப்பின் தாக்கத்தால் 1840-களில் இளம் ஸ்விட்சர்லாந்து , இளம் ஜெர்மனி, இளம் பிரான்சு, இளம் அயர்லாந்து என பல அமைப்புகள் உருவாகி இளம் ஐரோப்பா என்ற அமைப்பாக வடிவமெடுத்தது. இவ்வமைப்பின் தாக்கம் பிற்காலத்தில் இளம் துருக்கியர் அமைப்பு உருவாகிட தூண்டுகோலாக அமைந்தது. இளம் இத்தாலி என்ற அமைப்பின் வேர்களும் , விழுதுகளும் ஐரோப்பாவையும் கடந்து துளிர்க்கஆரம்பித்தது.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

5.செயலே சிறந்த பிரச்சாரம்


        1833-ம் ஆண்டு ஆஸ்திரிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இளம்இத்தாலியிலஉறுப்பினரானகண்டுபிடிக்கப்பட்டால்உடனடியாகமரணதண்டனை நிறைவேற்றப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த அளவிற்கு இளம் இத்தாலியின் செயல்பாடு ஆஸ்திரிய நாட்டு ஆட்சிபீடத்தை ஆட்டம்காண செய்தது. இந்த அமைப்பின் செயல்பாடு இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இளம் இத்தாலி என்ற இவ்வமைப்பு உருவாகிய காலத்தில் ஐரோப்பாவை போர்களும்போராட்டங்களும்கலகங்களும்தான்ஆட்சிசெய்துகொண்டிருந்தன. 

    அப்போது இத்தாலி பிரான்சிடமும், ஆஸ்திரியாவிடமும் பலகூறுகளாக  பிளவுபட்டுக்கிடந்தது. 1831-ம் ஆண்டு மார்செயில் என்ற இடத்தில் இளம் இத்தாலி என்ற அமைப்பை ஜோசப்மாசினி (ழுரளளநயீந அயண) என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் ஆரம்பித்தான். மாசினி  ஒரு இளைஞன்  மட்டுமல்ல கவிஞன்,எழுத்தாளன்,எழுச்சிமிகுபேச்சாளன்,அமைப்பாளன்,களம்கண்டபடைநடத்தும் தளபதி என பன்முகத்தன்மை கொண்டவன். 

    1821-முதல் கார்போரி என்ற ரகசிய இயக்கத்துடன் இணைந்து இத்தாலி விடுதலைக்காக போராடினான். அவ்வியக்கத்தில் இருந்தபோது 1830-ல் அவன் கைது செய்யப்பட்டு கடற்கரையின் தனிமை சிறையில்  அடைக்கப்பட்டான். பரந்த வானமும் விரிந்த கடலும் , இரவும்,பகலும் மட்டுமே அவனுடன் உறவாடின. அவனது மூளையோ எதிர்கால இத்தாலியை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இனி கார்போரி இயக்கத்தினை நம்பி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தான் மாசினி. இத்தாலிய இளைஞர்களின் உள்ள குமுறல்களுக்கு உருவம் கொடுக்க நினைத்தான். 

   ஆறு மாதம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு குக்கிராமத்தில்தா வாழவேண்டும் என்று அரசு கட்டளையிட்டதஇத்தாலியின் உருவாக்கத்திற்கும் எதிர்கால கனவிற்கும்  இக்கிராம வாழ்க்கை உதவாது என முடிவிற்கு வந்தான்.வேறுஎங்கும் குடியிருக்க கூடாது என்ற அரசின் எதேச்சதிகார உத்திரவால்  ஸ்விட்சர்லாந்து நாட்டில் குடியேறினான் 

          மாசினியின்  வாழ்விடத்திற்கு வேலி அமைக்கலாம் ஆனால் சிந்தனைக்கும் விடுதலை வேட்கைக்கும் வேலியிட முடியுமா?அந்த நாட்டிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராடிக்கொண்டிருந்தனர். இதற்கு மாசினி உதவி செய்ததால் அங்கிருந்து வெளிறேவேண்டும் என்று உத்தரவிட்டது ஸ்விட்சர்லாந்து அரசு.நாடுகடத்தப்பட்ட அவன் பிரான்சின் மார்செயில் சென்று குடிபுகுந்து அங்குள்ள இத்தாலி இளைஞர்களை திரட்டித்தான் இளம் இத்தாலி என்ற அமைப்பை உருவாக்கி களத்தில் இறக்கினான். 

    1848-ம் ஆண்டு மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிடும்வரை ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டவனாக இளைஞர்களை ஆகர்ஷிக்கக்கூடியவனாக மாசினியும், அவனது இளம்இத்தாலி என்ற இளைஞர் அமைப்பும் இருந்தது. குறிப்பாக அன்றைய நடுத்தரவர்க்க சிந்தனை ஓட்டத்தின் பிரதிநிதியாக மாசினியும் அவனது இளம் இத்தாலி என்ற அமைப்பும் இருந்தன.
   ஒன்றுபட்ட இத்தாலி, அதுவும்  சுதந்திர குடியராக இருக்க வேண்டும் என்பவையே இளம் இத்தாலியின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட இத்தாலி ஒரு புவியியல் மாயை என்று அன்றைய ஆஸ்திரிய அமைச்சர் மெட்டர்னிச் ஏளனம் செய்தான் ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது. இளம் இத்தாலியர்கள் அதை உருவாக்கி காட்டுவார்கள் என்று பதிலடி கொடுத்தான் மாசினி. 

    1833-ம் ஆண்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் இளம்இத்தாலிய அமைப்பு உருவாகி போராட்டக்களத்தில் குதித்தது. அப்போது அச்சங்கத்தில் 60000-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். மாசினியின் கவித்துவம் மிக்க எழுத்தும் , உணர்ச்சிபொங்கும் பேச்சும் எழுச்சியூட்டும் செயலும் எண்ணற்ற இளைஞர்களை ஈர்த்தது. 

ஓ.. இளைஞர்களே,  
 மலைகளுக்குச் செல்லுங்கள்   
ஆலைகளுக்கும் ,
 வயல்வெளிகளுக்கும் 
செல்லுங்கள்   
அவர்களுடன் உணவருந்துங்கள்,  
அவர்களது உரிமைகளைப்பற்றி பேசுங்கள்   
அவர்கள் மீதான, எல்லையற்ற 
அடக்குமுறைகளை 
உணரவையுங்கள். 

என்று இளைஞர்களை ஈர்க்கும் முழக்கங்களை எழுப்பினார். தியாகிகளின் குருதி  நீராய் பெருகி  பெருக்கெடுக்கும்போது,  கருத்துக்கள்,  துரிதமாய் வளர்கிறதுஎன தியாகத்தின் அவசியத்தையும், அதன் வலிமையையும் வலியுறுத்தினார்.

 ஓ.. மக்களே,  
 எழுச்சிகளுக்கு இளைஞர்களை
 தலைமையேற்க செய்யுங்கள்,   
அவர்களது உள்ளங்களில் 
உறைந்து கிடக்கும் சக்தியை
நீங்கள் அறியவில்லை,   
இளைஞர்களின் குரலுக்கு 
மக்களிடையே  மந்திர சக்தி   போன்ற மதிப்பிருக்கிறது

என்று அவன் விடுத்த அறைகூவல் இத்தாலி இளைஞர்களை களத்தில் இறக்கியது.மக்கள் செவிமடுத்தனர்.மன்னன் செய்வதறியாது திகைத்தான். 

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

4.வார்ட் பர்க் (wartburg) எழுச்சி


                          ஜெர்மனியில் வார்ட் பர்க் (wartburg)என்ற கோட்டை போன்ற பெரும் கட்டிடத்தில் ஆண்டுதோறும் புதுமையை வரவேற்கும் விழா நடைபெறும் . இந்த கட்டிடத்தில் தங்கியிருந்துதான் மார்டின் லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார் எனவே இக்கட்டிடம் அன்றையஜெர்மானிய தேசீயத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

                          1817-ம் ஆண்டு நடைபெற்ற இந்த புதுமைகளை வரவேற்கும் வார்ட்பர்க் விழாவில் ஏராளமான மாணவர்கள் அணிதிரண்டனர்.உணர்ச்சி பிழம்பாக ஒன்றிணைந்த  அம்மாணவர்களிடையே எழுச்சி பொங்கும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் உத்வேகமுற்ற மாணவர்கள் நெப்போலியனின் சட்டத்தையும், ஹேலரின் (ழயடடநச) மீட்டமைப்பு என்ற நூலையும் கோட்சூபூ என்ற கவிஞன் எழுதிய ஜெர்மானிய வரலாறு என்ற நுலையும் தீயிட்டு கொளுத்தினர்.

                          இச்சம்பவம் ஜெர்மனி முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரஞ்புரட்சியின்போது நடைபெற்ற  ஜேகோபியன் அராஜகத்துடன் ஒப்பிட்டு அந்நாட்டு அரசுமாணவர்களையும் இளைஞர்களையும் வேட்டையாட துவங்கியது. அந்நாட்டு அரசு மாணவர்கள் அமைப்பின் மீதும், இளைஞர்களின் ரகசிய குழுக்கள் மீதும் தனது பிடியை இறுக்கியது. பல்கலைகழக வகுப்பறையிலேயே அரசின் ஒற்றர்கள் உட்கார்ந்தனர். ஆசிரியர்களிடம் பாடப்புத்தக பட்டியலையும், மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களையும்,குடியிருப்பு விபரங்களையும் அரசுக்கு அளித்திடவேண்டுமென உத்தரவு போட்டது. 

                     இந்த எழுச்சிகளினிடையே 1819-ம் ஆண்டு அரசு ஆதரவு கவிஞன் கோட்சூபூ என்பவரை காரல்சான்ட் என்ற மாணவன் படுகொலை செய்தான். இதனால் கோபமடைந்த அரசு அனைத்து மாணவர் அமைப்புகளையும் தடைசெய்து சட்டவிரோதம் என்று அறிவித்தது. காரல்சான்ட் (karl sand) கைது செய்யப்பட்டு ஓராண்டு விசாரிக்கப்பட்டான்.

                விசாரணையின்போது எனது விருப்பத்தையும்,எனது புனிதத்தையும்எனது உறுதியையும்அவன் நசுக்கினான். சுத்தமான துய்மையான, சுதந்திரமான இளைஞர் உலகை ஊழல்நிறைந்த அரசு சீரழிக்கிறது. எனவே நான்  இந்த காரியத்தை செய்தேன் நான் சாவதாக இருந்தால் மெச்சத்தகுந்த, உயரிய காரணத்திற்காகத்தான் சாவேன். விரைவான வெற்றி இளமையில் மரணம் என்பதே என் விருப்பம் என்றான். விசாரணைக்கு பிறகு 1820-ம் ஆண்டு பொது இடத்தில் அவனது தலை துண்டிக்கப்பட்டது. அமைப்பு  ரீதியான இயக்கத்தின் முதல் தியாகி காரல்சான்ட் ஆவான்.
                              காரல்சான்ட் தலை துண்டிக்கப்பட்டாலும் இளைஞர் இயக்கம் புதிய துடிப்புடன் எழுந்தது . ஜெர்மனியின் மற்றொரு பல்கலைகழகமான ஜிசன் பல்கலைகழகத்திலிருந்து காரல் ஃபாலன் (kari fallen) என்ற மாணவன் இவ்வியக்கத்திற்கு தலைமையேற்றான். எந்த வழியிலாவது நாம் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்றால் நாம் நிபந்தனையற்ற குழக்களாக மாறவேண்டும் என்றான். பொதுநலத்திற்காக வாழ்வது மட்டுமல்ல சாவதும் பொதுநலத்திற்காகவே  இருக்கவேண்டும் என்று அறைகூவி அழைத்தான். 

                இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தலைவனாக வலம் வந்தான். ஜெர்மனி அரசு கைது செய்ய முயற்சித்தபோது சுவிஸ்நாட்டிற்கு தப்பித்து சென்றான்.அங்கும் அரசின் அடக்குமுறையால் 1821-ல்  அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டான். இந்த மாணவர் சங்கம் 1848-ம் ஆண்டுவரை செயலூக்கத்துடன் தொடர்ச்சியாக பல்வேறு நடைவடிக்கைகளில் ஈடுபட்டது. இதே காலத்தில் அர்மேனிய மாணவர்சங்கம் என்ற கிருஸ்துவ பழமைவாத மாணவர் அமைப்பும் ஜெர்மானிய பல்கலைகழங்களில் பரவலாக செயல்பட்டது.

                          1830-ம் ஆண்டுகளில் இளம் ஜெர்மானியர்கள் என்ற பெயரில் இலக்கியம், பத்திரிகை சுதந்திரம், அறிவுத்துறை ஆகியவற்றில் இளைஞர்கள் தீவிரமாக செயல்பட்டனர். 1770-முதல் 1831 வரை வாழ்ந்த ஹெகல் என்ற தத்துவஞானியை பின்பற்றியவர்கள் இளம் ஹெகலியவாதிகள் என்றழைக்கப்பட்டனர். ஹெகல் இயக்கவியலை விரிவாக்கம் செய்தார். 

                     இது இயக்கவியல் பொருள்முதல்வாதம் தோன்ற அடிப்படையாக அமைந்தது. 22 வயது நிரம்பிய காரல்மார்க்ஸ் உட்பட பலர் இளம் ஹெகலியவாதிகளாக அக்காலத்தில் செயல்பட்டனர். சிலர் ஹெகலின் இயக்கவியல் குறைபாடுகளை முன்னிறுத்தி ஜெர்மனியில் முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளை நிலைநிறுத்த மதத்துடன் இயக்கவியலை பொருத்த முயற்சித்தனர்.

      மார்க்சும், எங்கெல்சும் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினர். மார்க்ஸ் 26வது வயதில் புனித குடும்பம் என்ற நூலையும் , 27வது வயதில் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலையும் எழுதி தனது கருத்துக்களை நிறுவினார். 38 பகுதிகளாக பிரிந்து கிடந்த ஜெர்மனியில் இளைஞர்கள் ஜெர்மனியின் ஒன்றுமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் கலகம் செய்தார்கள். இயக்கங்களாகவும் பரிணமித்தார்கள், எழுச்சியும் பெற்றார்கள்.

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...