Pages

குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 13, 2016

மோடியின் மேக்-இன்-இந்தியா இவர்களால்..


  
இந்தியாவில் தற்போது 6 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். சட்டங்ளின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குழந்தை தொழிளாளர் எண்ணிக்கை குறையவில்லை. 

   2011-ம் ஆண்டு கணக்கின்படி மொத்த உழைப்பாளர்களில் 11.8 சதவீதம் 5 முதல் 19 வயதுரையிலான குழந்தைதொழிளாலர்கள். 
தற்போது 1.3கோடி 5முதல் 14 வயது வரை உள்ளவர்கள். 3.2கோடி 15 முதல் 19 வயதுவரை உள்ளவர்கள். 

  நோபல் பரிசுபெற்ற கைலாஷ் சத்தியார்த்தி குறைத்து மதிப்பிட்டாலும் ஆறுகோடி குழந்தை உழைப்பாளிகள் உள்ளனர் என்கிறார். பெரும்பாலான குழந்தைகள் விவசாயம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் சுரண்டப்படுகின்றனர்.

  உற்பத்தி சார்ந்த குடிசைத்தொழில் 15.4 சதவீதம். விவசாயதொழிலாளர்கள்  15.4 சதவீதம் உற்பத்திதுறையில் 10.8, விவசாயத்தில் 10.7, ஓட்டல் மற்றும் உணவக விடுதிகளில் 10.5, கட்டுமான துறையில் 9.9, சுரங்கம்  மற்றும் கல்குவாரிகளில் 8.3, வணிகவளாகங்களில் 8.1 சதவிகிதம்      பணியமர்த்ப்ப டுகின்றனர்.


   தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தக்கூடாது என 1986ம் ஆண்டே சட்டம் வந்தாலும் நிலைமையில் மாற்றம் இல்லை.

     


 

திங்கள், அக்டோபர் 26, 2015

செல்பி பிரதமரும் பெண்குழந்தைகளும்


@ பாஜக ஆட்சியில் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை. பல்முனைதாக்குதலில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரிதுள்ளது.
2014- ம் ஆண்டு கணக்குபடி

@  குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகமாகி உள்ளது. 2014-ல் பாலியல் தாக்குத்லுக்கு உள்ளானபெண்களில் 39 சதவிகிதம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

@    6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 547 
6 முதல் 12 வயதுக்கு உட்பட்வர்கள் 1491.
 12முதல்16 வயதுக்கு உட்பட்வர்கள் 5635.
16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 6862.

@18 வயதுக்கு உட்பட் பெண்களை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் மாநிலத்தில் பாஜக ஆளும் மத்திய பிரதேசம் (2328) முதலிடத்திலும், மகாராஷ்டிரம் 1647 ம், உத்திரபிரதேசம் 1507 ம், டெல்லி 924-ம், ராஜஸ்தான் 797-ம், சத்தீஷ்கர் 797-ம் என முன்னிலையில் உள்ளது.

@ மோடி பெண் குழந்தைகளுடன் செல்பி எடுக்கிறார்.ஆனால் பாஜகவின் 4 மாநிலத்திலும் பெண் குழந்தைகள் வேட்டையாடப்படுகின்றனர்.

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...