Pages

வியாழன், மார்ச் 12, 2026

தலாய் லாமா ஒரு நிலப்பிரபு

 

நேர்காணல் : பீட்டர் துரைராஜ்

காக்கைச் சிறகினிவே பிப்ரவரி 2026


அ.பாக்கியம்

வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை, நானே மகத்தானவன் போன்ற நூல்களை எழுதியுள்ள அ.பாக்கியம், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். சீனா பற்றி, tamilmarx.org என்ற இணையதளத்தில், 52 வாரங்கள், ஒரு தொடரை எழுதி முடித்துள்ளார். 'சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடும்' என்ற நூல் வெளிவர உள்ளது. சீனாவின் பல பரிமாணங்களை அதில் தொகுத்துள்ளார். பேரரசு காலத்தில் சீனா, அந்நியப் படை எடுப்புகள், திபெத் வரலாறு, தொழில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பில் சீனாவின் சாதனை போன்ற பலவற்றை நம்மிடம் பேசினார். எந்தக் குறிப்புகளும் இன்றி, மடை திறந்த வெள்ளம் போல அவர் பேசியதை இந்த நேர்காணலில் பீட்டர் துரைராஜ் பதிவு செய்துள்ளார்.

கே:  சீனா பற்றி எழுதவேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது?

ப : இந்தியா - சீனா ஒப்பீடு என்பது. தற்போதைய காலக்கட்டத்தில் அவசியமான ஒன்று. சீனாவில் சேரிகளே இல்லை என்ற ஒரு செய்தியை இணையத்தில் படித்தேன். இதனைத் தொடர்ந்து சீனாவில் ரியல் எஸ்டேட் பிரச்சினை, வீட்டு வசதி போன்றவைகள் குறித்து ஓரிரு கட்டுரைகள் எழுதினேன். அதைப் படித்த tamilmarx.org இணையத்தின் ஆசிரியர், சீனா பற்றி, ஒரு தொடரை எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக எழுத வேண்டி நேரிட்டது.

கே: சீனா பற்றிய விவரங்களை மிக விரிவாக எழுதி இருக்கிறீர்களே! இதற்கான விவரங்கள் எப்படி கிடைத்தன?

ப: மாவோ, கலாச்சார புரட்சி, சன் யாட் சென், நெடும் பயணம் என சீனாவின் நவீன வரலாறை ஏற்கெனவே படித்து இருக்கிறேன். 1971ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செயலாளராக ஹென்றி Aஸ்ஸிங்கர் இருந்த காலத்தில் சீனாவோடு அமெரிக்க உறவுகள் மேம்பட்டது. ஹென்றி கிஸ்ஸிங்கர் பலநாடுகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர். ஆனால் சீனாவின்

 

சந்தை மற்றும் அரசியல் ரீதியாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டார். அவர் எழுதிய 'சீனாவைப் பற்றி' (On China) என்ற புத்தகத்தைப் படிக்கத் துவங்கி அடுத்தடுத்த புத்தகங்களை நோக்கி நகர்ந்தேன். சீனாவின் பண்டைய வரலாறை சுவாரசியமாக விவரித்து இருப்பார்.

சீனாவின் மீது எந்த நாடுகளும் போர் தொடுத்ததில்லை. அதே போல சீனாவும் மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்ததில்லை. சீனா தனித்தே செயல்பட்ட நாடு. எனவே தமது தேவையைத் தாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய தேவை சீனாவிற்கு ஏற்பட்டது. இதனால் சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு. இவையெல்லாம் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தபின்பு, சீனாவின் பண்டைய வரலாறை படிக்க ஆரம்பித்தேன். எழுத்து, பட்டு, நீர் இறைக்கும் இயந்திரம், வெடி மருந்து எனப் பல கண்டுபிடிப்புகளுக்குத் தாயாக சீனா இரு இருந்திருக்கிறது. அதன்பிறகு தொடரை எழுதிவிடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. உடனடியாக எழுத ஒப்புக்கொண்டு விட்டேன்.

கே : சீனாவை நீங்கள் எப்படிடபார்க்கிறீர்கள்?

கிரேக்க நாகரிகம் எனப் பழம்பெரும் சுமேரிய நாகரிகம் எகிப்து நாகரிகம், நாகரிகங்களோடு மஞ்சள் நதி நாகரிகம் இருந்திருக்கிறது. சீனாவிடம் பெரிய கப்பல்கள் இருந்திருக்கின்றன. மற்ற நாடுகளுக்கு சீனா பொருட்களை விற்று அல்லது நன்கொடையாகக் கொடுத்து உறவைப் பேணியுள்ளது. அதன் தொடர்ச்சிதான் இன்றும் அங்கு நிலவுகிறது. அங்கு மத மோதல் இல்லை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நிலவுகிறது. சீனாவில் 58 தேசிய இனங்கள் உள்ளன. அதில் 90% மக்கள் ஹான் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். மற்ற 55 க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைச் சார்ந்த 10 % மக்கள் உள்ளன. சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை மதிப்பது என்பது அவர்களின் ஒரு திட்டமாக உள்ளது. எனவே அங்கு மக்களிடையே மோதல் இல்லை மாவோ நெடும்பயணம் சென்றபோது பல்வேறு இன மக்களைச் சந்தித்து, நம்பிக்கையூட்டி அவர்களை உள்ளடக்கியே வெற்றி பெற்று இருக்கிறார். 99 % நாடுகள் அமைதியாகவே இணைந்தன.சிறு தேசிய இனங்கள், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை சீனா கவனத்துடன் மதிக்கிறது. சீனா பெரிய நாடு, அதன் எல்லைக்கோட்டில் இந்தியா, நேபாளம், தாய்லாந்து, பர்மா, வட கொரியா, மங்கோலியா, வியத்நாம் போன்ற 14 நாடுகள் உள்ளன. எனவே புவிசார், அரசியலில் சீனா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடு.

கே: சீனாவின் வறுமை ஒழிப்புத் திட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

:பொருளாதார வளர்ச்சி ஏற்படும்போது ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பது தவிர்க்க இயலாது என்று மற்ற நாடுகள் சொல்லி வருகின்றன. இது பொய் என்பதை சீனா நிரூபித்து உள்ளது. சீனா வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும், திறப்புக் கொள்கையை (Open door policy) கடைபிடித்ததும் மக்கள் நகரங்களை நோக்கி வந்தார்கள். எனவே நகரம் - கிராமம் இடைவெளி ஏற்பட்டது. 1986 இல், வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கி, பத்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு அதனை ஆய்வு செய்து 1994 முதல் 2000 வரை ஒரு திட்டம், அதற்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு நடந்தது. பிறகு 2011 - 2020இல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.

உணவு, உடை, மருத்துவம், கல்வி, இருப்பிடம்,அனைத்தும் இருக்க வேண்டும். 2011 ல் ஒரு வேலைவாய்ப்பு, இணைய வசதி என நபருக்கு 2300 யுவான் மாதம் கிடைத்தால் வறுமைக்கோட்டிற்கு மேலானவர் என வரையறை செய்தனர். (ஒரு யுவான் என்பது 13 ரூபாய்க்குச் சமம் வறுமைக் கோட்டிற்கான அளவீட்டை வசதிகளுக்கு ஏற்ப, அவ்வப்போது உயர்த்துகின்றனர். வறுமை ஒழிப்பிற்கான அளவுகோல்களை அந்தந்த மட்டங்களில் உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் சீனாவில் வறுமை இல்லைஎன்பதை ஐநா அவை அங்கீகரித்துள்ளது

கே: திபேத் பிரச்சினையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: உலகத்தின் கூரை என்று சொல்லப்படும் திபெத் சீனாவில் ஜீசாங் தன்னாட்சி பிரதேசம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. சுமார் 15,000 அடி உயரத்தில் இருக்கிறது. 20க்கும் மேற்பட்ட ஆறுகள் இங்கிருந்து உற்பத்தி ஆகின்றன. பத்து நாடுகளுக்கு மேல் 100 கோடி மக்களுக்கு நீராதாரம் இங்கிருந்துதான் கிடைக்கிறது. திபெத்தை ஆசியாவின்நீ கோபுரம் என்று அழைப்பார்கள். எனவே புவிசார் அரசியலில் திபெத் முக்கிய இடமாக ககுதப்படுகிறது. இடம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அங்கு இயற்கை, கனிம, நீர் வளங்களும் உள்ளன. இந்தியாவில் பாயும் பிரம்மபுத்ரா நதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. எனவே நீர்மின்சாரம் அதி அளவில் உற்பத்தி ஆகிறது; இதனால் கரிமத்தினால் ஏற்படும் மாசு தடுக்கப்படுகிறது. செமிகண்டக்டர் உருவாக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் இங்கு கிடைக்கிறது. திபெத்தில் இருந்து ஷாங்காய் வரை நெடுஞ்சாலை போட்டுள்ளனர். பயணிக்கும் போது உயிர்வாயு (oxygen), இரயில் வண்டியில் இருக்கும்.

கே: தலாய் லாமா இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து இருக்கிறாரே?

ப : தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல; அவர் ஒரு நிலப்பிரபு. தலாய்லாம் இருந்தது ஒரு அரண்மனையில்தான் அங்கு 10,000 உடைகள் இருந்தன. அவள் குடும்பத்திற்கு பார்லி, பால் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் ஓராண்டுக்கு 12 கிடைத்தது. அங்குள்ள மக்களில் 95% பண்ணை அடிமைகள் அங்குள்ளமடாலயங்களிலும், நிலப் பிரபுகளிடமும் எந்த உரிமைகளும் இன்றி வேலை செய்தவர்கள். அரண்மனையில் இருந்த பொருட்களை, புரட்சிக்குப் பிறகு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்கள். அதில் அடிமைகளுக்கு தண்டனை வழங்கிய விநோதமான ஆயுதங்களும் இருந்தன. புரட்சி நேரத்தில், 1950 களில், 17 அம்ச திட்டம் போட்டு, பேசி திபேத்தை இணைத்தார்கள். அங்குள்ள மக்கள் போன் என்று சொல்லும் பூர்வீக மதத்தை கடைபிடித்தனர்.திபெத்திய பெளத்தம் இதர பௌத்தப் பிரிவுகளிலிருந்து வேறுபட்டது. மதம் சார்ந்த விஷயம் என்பதால் அரசாங்கமும் தொடர்ந்து நிதானமாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பொழுது அங்குள்ள மக்கள் நன்றாக உள்ளனர்.

திபேத்தின் எல்லைகளாக நேபாளம், பூடான், இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன. எனவே திபேத்தில் அரசியல் செய்வதன் மூலம் சீனாவிற்கு நெருக்கடி தரலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதனால்தான், தலாய் லாமாவிற்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஆண்டுதோறும் 1,80,000 டாலர் கொடுத்தது. இந்த வெளிநாட்டு நன்கொடை பற்றி இந்தியாவும் கேட்கவில்லை. உலகில் பௌத்த மதத்தை கடைபிடிக்கும் இலங்கை, மியான்மர் மங்கோலியா போன்ற நாடுகள் கூட தலாய்லாமாபற்றிக் கவலைப் படுவதில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் திபேத் விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் இல்லை. அங்கிருந்து வெளியேறிய திபெத்தியர்கள் அங்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் தலாய்லாமா. ஒரு ஆன்மீக தலைவர் என்ற முறையில் நேரு அனுமதி அளித்தார். அதற்கு அடுத்து மைசூருக்கு அருகே உள்ள பைலே குப்பை என்ற இடத்தில் சுமார் 15,000 ஏக்கரில் தலாய்லாமா உடன் வெளியேறியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு சில பிரிவுகளும் மோதல்களும் உண்டு, இவர்களையும் சீன எதிர்ப்புச் சக்திகள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

திபேத் சீனாவின் ஒரு பகுதி என்பதை அதிகாரப்பூர்வமாக பெரும்பாலான நாடுகள் மறுக்கவில்லை. 1230ஆம் ஆண்டுகள் யுவான் திபேத் சீன ஆட்சியின்கீழ் இருந்து வருகிறது வம்ச ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து 1622ஆம் ஆண்டு ஐந்தாவது தலாய்லாமாவிற்கு அப்போதைய அரசர் சிறப்புப் பட்டத்தையும் வழங்கி உள்ளூர் அரசு தலைவராகவும் அனுமதித்தார். பதின்மூன்றாவது தலாய்லாமா (1878 - 993) காலகட்டத்தில் சீனாவில் மஞ்சு வம்சம் பலவினமடைந்த பொழுது தன்னை தனி அரசராக அறிவித்துக் கொண்டார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு சன்னியாட்சன் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு தலாய்லாமாவின் அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டு சீனாவுடன் இணைக்கப்பட்டது. உள்ளூர் அரசாங்கத் தலைவர் தலாய் லாமா என்ற பதவி மட்டும் தொடர்ந்தது. பிரபலமான வரலாற்று ஆசிரியர் எழுத்தாளர் திபேத்திற்கு 1959ஆம் ஆண்டு பயணித்த அண்ணா லூயிஸ் ஸ்ட்ராங் தனது புத்தகத்தில் (when serf stood up in Tibet) எழுதியுள்ளார்.

1954 நேரு சீனாவிற்ச்கு சென்று வந்த பிறகு பஞ்சசீலக் கொள்கையிலும் சரி, 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி சீனாவிற்குச் சென்றது. 2003ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் சீனாவிற்குச் சென்று திபேத் சீனாவின் பகுதி என்பதை எழுத்துப் பூர்வமாகக் கையெழுத்துப் போட்ட நிகழ்வும் நடந்துள்ளது. 'திபேத் : தாலய் லாமா முதல் ஜி ஷின் பிங் வரை' என்ற வரவிருக்கிற எனது நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.

கே : சீனாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப : சோவியத் ஒன்றியம் போல, மற்ற நாடுகளின் விவகாரங்களில், சீனா நேரடியாகத் தலையிடுவதில்லை. வெற்றி வெற்றி என்ற அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்து, அதன் மூலமாக நல்லெண்ணத்தைப் பெற நினைக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளோடு வர்த்தக உறவு நன்றாக வைத்துள்ளனர். ஈராக் நாட்டிற்கு பள்ளி, மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இதனால் சீன எதிர்ப்புக் குறையும் என்று நினைக்கின்றனர். இப்போது சீனாவில் சீ ஜிங்பிங் தலைவராக இருக்கிறார். இந்தியா-

 

குவைத்- ஐரோப்பா வழியாக, 150 நாடுகளை இணைக்கும் நெடிய சாலை (Belt and Road போட்டு வருகின்றனர். டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி அதற்கு விடுக்கும் வரியைத் தயக்கமின்றி எதிர்க்கின்றனர். ஆதரவு அளிக்கிறது.

கே: சீனாவின் தொழில் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப:சீனாவில் போடப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்கிறார்கள். உலகின் முக்கியமான 10 துறைமுகங்களில், ஏழு சீனாவில் உள்ளன. தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் முதல் இடத்தில் உள்ளனர். அடுக்குமுறை விவசாயம் என்பதன் மூலம் ஒரே இடத்தில் பல அடுக்குகளில், சூரியஒளி மூலம் விவசாயம் நடக்கிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சம்பளம் தருகிறார்கள். அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையில் சீனா செல்கிறார்கள். போடப்படும் திட்டங்களின் அமலாக்கத்தை கவனிக்க 56 இலட்சம் மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. போராட்டங்கள் நடத்தவும் அனுமதி உண்டு.

கே : அரசியல்வாதியான உங்களுக்கு, குத்துச்சண்டை வீரன் முகமது அலியைப் பற்றி எழுத வேண்டும் ஏன் தோன்றியது?

ப: நான் சிறுவயதில் கால்பந்து, கைப்பந்து விளையாடி இருக்கிறேன். 1982ஆம் ஆண்டு முதல் தவறாது, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பார்த்து வருகிறேன். குத்துச்சண்டை வீரன் முகது அலி இறந்தவுடன், Jacobin.com என்ற இதழில் முகமது அலியின் மறைக்கப்பட்ட வரலாறு என்ற கட்டுரையை வாசித்தேன். வெள்ளை இன வெறிக்கு எதிராகக் குத்துச்சண்டையை முகமது அலி பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் விளைவாகத்தான் 'நாளே மகத்தானவன்' நூலை எழுதினேன். இந்த நூலுக்கு நிறைய விமர்சனக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. பாராட்டப்பட்டு வருகிறது.

கட்டுரையாளர்: எழுத்தாளர்

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?

அ.பாக்கியம் இந்தக் கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும் . நானும் பல இடங்களில் செல்கிற பொழுது இந்த கேள்வ...