அ. பாக்கியம்
ஈரானுக்கு
எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெற்றி பெறுகிறார்கள் என்று
கூறுகின்றவர்களின் கவனத்திற்கு..... ஈரான் சரணடைய போகிறது என்று டிரம்ப்
பேசுகிறார்..... உண்மை என்ன?
ஆட்சி
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று
உள்நாட்டில் தலையிட்டார்கள். காமனியின் ஜனநாயக விரோத அடக்குமுறைகள் இருந்தாலும்
யுத்தத்தை எதிர்க்க மக்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.
காமனியை
மாற்றி விடுவோம் என்றார்கள் புதிய காமணி ஈரானின் கொடியை உயர்த்தி
பிடித்திருக்கிறார். காமினி படுகொலையால் மக்கள் ஒன்றுபட்டு இருப்பதாக தரவுகள்
தெரிவிக்கிறது.
ஈரானின்
அணுசக்தி திட்டத்தை அழித்து விடுவோம் என்றார்கள். அழிக்க முடியவில்லை.
மலைகளுக்கு
அடியில் நிலத்தடி தளங்களில் இருந்த ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கைப்பற்ற வேண்டும் என்று சக்தி
வாய்ந்த கமாண்டோக்களை இறக்கினார்கள் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை.
ஈரானின்
பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தை அடியோடு அழித்து விடுவோம் என்று இறங்கினார்கள்.
அதுவும் நடக்கவில்லை. அழித்து விட்டோம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்த
பிரச்சாரம் மிகைப்படுத்தப்பட்டது என்று இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய வட்டாரங்களை
ஒப்புக் கொண்டார்கள்.
பாரசீக
வளைகுடாவில் இருக்கக்கூடிய அமெரிக்காவின் இராணுவ தளங்களை ஈரான் தாக்குவதற்கு அஞ்சி
நடுங்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஈரான் அவற்றை தாக்கி மிகப்பெரும்
சேதத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல அமெரிக்காவின் வான் பாதுகாப்பு பூச்சாண்டியாக
மாறிவிட்டது.
இந்த
யுத்தத்தில் அமெரிக்கா தனது ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை யாரும் தாக்க முடியாது
பாதுகாத்து வந்த ரேடார் அமைப்புகளை ஈரானின் தாக்குதலால் இழந்து விட்டது.
உலகப்
பொருளாதாரத்தை வீழ்த்தக்கூடிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஈரானால் ஏற்படுத்த
முடிந்துள்ளது.
இந்த
யுத்தத்தின் மூலம் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா விதித்த எரிசக்தி தடைகள்
நொறுக்கப்பட்டது. ரஷ்யா ஒரு நாளைக்கு 150 மில்லியன் டாலர் வரை கூடுதல் எண்ணெய் வருவாயை பெறுகிறது.
ஹார்மோஸ்
நீரினையில் ரஷ்யா மற்றும் சீனாவின் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களையும் தடை
செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.
அமெரிக்காவும்
இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக தேவையற்ற யுத்தத்தில் தங்களை இழுத்து விட்டதாக அரபு
நாடுகள் கோபமடைந்துள்ளன.
ஈரான்
என்பது இஸ்ரேலிய கோழைத்தனத்தால் அழிக்கப்பட்ட பாலஸ்தீனம் அல்ல, இஸ்ரேலால் தொடர்ந்து
தாக்குதலுக்கு உள்ளாகும் லெபனான் அல்ல, அமெரிக்க இஸ்ரேல்
மற்றும் துருக்கிய ஆக்கிரமிப்பால் சிதைக்கப்பட்ட சிரியா அல்ல லிபியாவும் அல்ல,
ஈராக்கும் அல்ல ஏன் நொடிப்பொழுதில் மடக்கி போட்ட வெனிசுலாவும் அல்ல,
ஈரான் என்பது உடைக்க கடினமான ஒரு நாடு என்பதை நிரூபித்து வருகிறது.
ஈரான் , ஸ்பெயின் ஜெர்மனி இத்தாலி ஆகிய நாடுகளின
நிலப்பரப்புக்கு சமமான அளவைக் கொண்டது. ஒன்பது கோடி மக்கள் தொகை இருக்கிறார்கள். 60 லட்சம் பாலஸ்தீன மக்களை தாக்குவது போல் ஈரானை தாக்கி விட முடியாது. 40 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா விதித்த தடைகள் இருந்த போதிலும் மேற்கத்திய
நாடுகளின் ஒத்துழைப்புடன் ஈரான் தன்னை பலப்படுத்திக் கொண்டது. தன் மீது தாக்குதல்
நடத்தினால் பழிவாங்குவதற்கான திறனையும் வளர்த்துள்ளது.
ஈரான்
ஒரு பண்டைய நாகரிகம் நிறைந்தது. அதன் மரபுகளை பற்றி பெருமைப்படும் ஒரு நாடு. அது
ஒருபோதும் காலனியாக இருக்கவில்லை இருப்பினும் சில காலகட்டங்களில் வெளிநாட்டு
சக்திகளால் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவால் அரை காலனி உறவுகளுக்கு
உட்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் மீது ஈரானின் கடைசி படையெடுப்பு 18 ஆம் நூற்றாண்டில்
தான் நடந்தது. இப்போதும் ஈரானியர்கள் யாரையும் தாக்கவில்லை அவ்வாறு செய்வதற்கு
தயாராகவும் இல்லை. அவர்கள் பேச்சு வார்த்தையின் மூலமாக அமெரிக்காவுடன் தீர்வு காண
முயன்ற போது முதுகில் குத்தப்பட்டனர்.
அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக