Pages

வியாழன், மார்ச் 12, 2026

மார்க்சிச நோக்கில் மதங்களும், சீன அணுபவங்களும்


வே.மீனாட்சிசுந்தரம்

 

தோழர் பாக்கியமெழுதிய ”சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகம், திரும்ப, திரும்ப படிக்கவேண்டிய புத்தக பட்டியலில் வைக்க வேண்டிய ஒன்றாகும்,.ஏன்?

இந்த புத்தகத்தின் துவக்கத்தில் “ சீன கம்யூனிஸ்ட் கட்சி  மதம்: மார்க்சிய நோக்கும், அமுலாக்கமும்” என்ற பகுதியை வாசிக்கிற ஒவ்வொரு முறையும் ஆதி மானுடத்தின் கற்பனைத் திறனையும்  கடவுள் கோட்பாடுகளின் விசித்திரங்களையும் மேலும், மேலும் அறிய ஆர்வம் பிறக்கிறது. 

ஒரு கட்டத்தில் மக்களுக்கு ஏக்க பெருமூச்சாகவும், அடிமை புத்தியை (பக்தி உணர்வை) மக்களுக்கு புகட்ட மன்னர்களுக்கு உளவியல் ஆயுதமாகவும்  இருந்த மதம் ,முதலாளித்துவ கட்டத்திலே உழைக்காமலே சொத்துகுவிக்கும் முறையை புனிதமாக கருதவைக்கும் பண்பாட்டை புகுத்தியது, சோசலிச கட்டத்தில் உழைக்காமல் சமூக உழைப்பு சக்தி உருவாக்குபவகளை சொந்தமாக்க முயலும் திருட்டு பண்பாட்டிற்கு  எப்படி அடக்குமுறை சட்டமில்லாமலே முடிவு கட்டப்படுகிறது என்பதை இப்புத்தகம் கச்சிதமாக பதிவு செய்கிறது.

            கடவுள் கோட்பாடுகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம், ஜெருசிலேத்தில் பிறந்த யூத,கிருத்துவ .இஸ்லாமி மார்க்கங்கள் இந்தியாவில் பிறந்த பவுத்தம் இந்த நான்கு மட்டுமே உலகளவில் பரவின. . இவைகள் சீனாவில் பரவியது பற்றியும் சீன மண்ணில் உதித்த 4 மார்க்கங்கள் பற்றியும்    “சீனப்பண்புகளும், மதமும்” என்ற தலைப்பில் உள்ளவைகள்  பிற மத கோட்பாடுகளுக்கும் சீன மார்க்கங்களுக்கும் உள்ளவேறுபாட்டை காட்டுகிறது.  சீனக் கடவுள்களுக்கென கோவில்கள்  கிடையாது. வந்தேறிய மதங்களே  தொழுகை இடங்கள் கட்டின. வந்தேறிய மதங்கள் கட்டிய தொழுகை இடங்களை  கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சி எப்படி பேணிவருகிறது என்பதை வாசிக்கிற பொழுது   தொழுகை இடங்கள் அந்நியமென்று இடிக்கிற பண்பு இந்தியாவைத் தவிற வேறு எங்குமில்லை என்ற உண்மை நம் மனச்சாட்சியை உறுத்துகிறது   வரலாற்று தடையங்களாக அரசே பேணுவது  வர்த்தக நோக்கில் இவைகளை பயன்படுத்தும் முயற்சிக்கு நல்ல தடையாகும்.

1949ல் சீன புரட்சிக்குப் பிறகு மதங்கள் பற்றிய பார்வை மார்க்சிச- லெனினிச பார்வையோடு உருவாக்கப்படுகிறது..  மதங்களின் பழமை பண்பாடு, சம்பிரதாயம் பழக்க வழக்கமென 4 அம்சங்களில்  காலத்திற்கு ஒவ்வாதவைகளையும் பேண வேண்டிய மரபுகனையும் தீர்மாணித்து ஒரு கலாசார புரட்சிக்கு இளம் தலைமுறையினரை கட்சி தயார் செய்து மகத்தான வெற்றி பெற்றதை கடைசி பகுதி விளக்குகிறது. ஒரு சமூகத்தில் சுயலமும், பொதுநலமும் முரன்படாமல் இருக்க வேண்டுமானால் தனி மானுடத்தின் ஒத்துழைக்கும் பண்பாடு பேணப்படவேண்டும்,அதற்கு கலாசார புரட்சி அவசியம் என்பதை சீன அணுபவம் உணர்த்துகிறது

இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன்,  காலத்திற்பேற்ப மாற மறுக்கும் தெய்வங்களை சோம்பேறியாக கருதும் இந்து மார்க்கங்கள் ஒரு அறிவியல் பார்வை கொண்ட கலாசார புரட்சி மூலமே பிற மதங்களைப்போல்  தன்னை சீர்திருத்திக் கொள்ளும், அதற்கு அவசியமான இளம் கம்யூனிஸ்ட் படைய திரட்ட இப்புத்தகம் கையேடாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?

அ.பாக்கியம் இந்தக் கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும் . நானும் பல இடங்களில் செல்கிற பொழுது இந்த கேள்வ...