‘
டேவிட் ஹார்வியின் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்று. நான் வளர்ச்சியின் பெயரால் வன்முறை என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அடிக்கடி இந்த புத்தகம் பற்றிய தகவல்களை பார்த்தேன். பல காரணங்களினால் புத்தகத்தை வாங்கி படிக்க இயலவில்லை. ஆனால் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் அடி மனதில் இருந்தது. தற்பொழுது இந்த புத்தகத்தை தமிழில் சிந்தன் புக்ஸ் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தோழர் கே பாலச்சந்தர் இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
நேற்று புத்தகம் கிடைத்தவுடன் 18 பக்கம் வரை மொழிபெயர்ப்பாளர் குறிப்புரையை படித்து முடித்தேன்.
கிளர்ச்சிகர நகரங்களின் புத்தகத்திற்கு தேவையான வகையில் சென்னை நகரில் ஏற்பட்ட மாற்றங்களை தனது சொந்த அனுபவங்களின் மூலமாகவும் அவர் பங்குபெற்ற அல்லது முன்னெடுத்த பல இயக்கங்கள் தொடர்பாகவும் விரிவான முறையில் எழுதி இருக்கிறார். புத்தகத்தின் உள்ளே செல்வதற்கு முன் இப்படிப்பட்ட குறிப்பு என்பது மிகவும் அவசியமானது. அதுதான் புத்தகத்தை வாசகனின் வாழ்நிலையோடு இணைக்க கூடியதாக இருக்கும். மொழிபெயர்த்த பெரும்பணி பாராட்டக்கூடிய அதே நேரத்தில் எழுதி இருக்கக்கூடிய குறிப்புரையும் மதிப்பு மிக்கது.தொடர்ந்து புத்தகத்தை படிக்க வேண்டும்
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக