தொழிற்சங்கம் வைத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். வேலை நிறுத்தம் செய்தால் தொழில் அழிந்து விடும் என்று கடந்த ஒரு மாத காலமாக samsung அடிமைகள் பிரச்சாரம் செய்தார்கள்? இந்தப் பிரச்சாரம் பொய் என்பதை ஹிந்து பத்திரிகையின்(23.10.24) தரவுகள் வெளிப்படுத்தி உள்ளது.
அதிக தொழில்மயமான மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு மகாராஷ்டிரா குஜராத் ஆகிய மாநிலங்களில் வேலை நிறுத்தம் என்பது பொதுவாக காணப்படுவது. அங்கெல்லாம் தொழிற்சாலைகள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. தொழிலாளர் எண்ணிக்கையும் அதிகமாயி கொண்டு தான் இருக்கிறது.
2008 -2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் தமிழ்நாடு 26 சதவீதம் ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் தொழிற்சாலைகளில் 16 சதவீதம் தொழிற்சாலைகளையும் அதற்கு ஏற்ற வகையில் தொழிலாளர்களின் கொண்ட முதல் மாநிலமாகவும் இருக்கிறது.
இதே காலத்தில் வேலை நிறுத்தத்தில் 17 சதவீதம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சாம்சங் அடிமைகள் ஏன் தொழிற்சங்கம் இல்லாமல் வேலை நிறுத்தம் இல்லாமல் ஆட்சி செய்ய முடியவில்லை என்பதற்கு பதில் சொல்வார்களா?
நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகளில் 24 சதவீதம் இழப்புகள் ஏற்பட்டு குஜராத் முதலிடத்தில் வகிக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்வது அவசியம்.
உலகில் 50 நாடுகளில் தொழிற்சங்க அடர்த்தியை, அதாவது தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதில் உறுப்பினராக இருக்கிற தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் இந்தியா 20 சதவீதத்தில் உள்ளது. சீனாவில் இது 44. 2 சதவீதமாக அதே மக்கள் தொகை, அதே அளவு தொழிலாளர்களை, அதிகமாக இளம் தொழிலாளர்களை இந்தியா வைத்திருந்த போதிலும், தொழிற்சங்க அடர்த்தியில் சரி பாதி தான் உள்ளது. சீனாவில் தொழிற்சங்கம் இருப்பதினால், வேலை நிறுத்தம் நடப்பதினால் தொழில் வளரவில்லையா?
உலகின் உற்பத்தி துறையில் முதல் இடத்தில் இருக்கக் கூடியது சீனா என்பது அனைவரும் அறிந்தது தான். இந்தியாவை விட எகிப்து, ரஷ்யா,தென் ஆப்பிரிக்கா, பல ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சங்க அடர்த்தி அதிகமாக இருக்கிறது என்பதை தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
உண்மையை மறைத்து அவதூறு பிரச்சாரங்களை அள்ளி வீசுவதற்கு முதலாளி வர்க்கத்திற்கான அடிமை உணர்வு தான் அடிப்படையாக உள்ளது.
அ.பாக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக