நான் எழுதிய சீன
சோசியலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கிய
அய்யா வைகுண்டர் தலைமை பதி திரு திரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார்
அவர்களை குமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தேன்.
எங்களை அன்புடன் வரவேற்று
நான் தான் உங்களை கௌரவிக்க வேண்டும் என்று எனக்கு பட்டாடை போர்த்தி மற்றவர்களையும்
கவனித்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
எனது புத்தகத்திற்கு சிறந்த
அணிந்துரை வழங்கியமைக்காக நான் நன்றி தெரிவித்த பொழுது நீங்கள் எனக்கு அணிந்துரை
அளிப்பதற்காக கொடுத்த வாய்ப்பு இருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று
தெரிவித்தார்.
அய்யா வைகுண்டரின் வழிகளைப்
பற்றியும், தற்போது வகுப்புவாத சனாதன சுயநலமிகள் கொடுக்கக்கூடிய தொல்லைகளை
எடுத்துரைத்தார்.
மண்டைக்காடு அம்மனை
ஆக்கிரமிக்க நினைத்த வகுப்புவாதிகளிடமிருந்து குன்றக்குடி அடிகளார் உடன் இணைந்து
நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
அவருக்கு வகுப்புவாதிகளால்
ஏற்படக்கூடிய தொல்லைகளிலிருந்து பாதுகாக்க கூடிய பணியில் குமரி மாவட்ட
மார்க்சிஸ்ட் கட்சி செய்த பெரும் பணிகளையும் நினைவுக்கு கொண்டு வந்தார்..
சட்டப் போராட்டங்களில்
கிடைத்த அனுபவங்களும் அரிய தகவல்களையும் எடுத்துச் சொன்னார் அவையெல்லாம் தனியாக
எழுத வேண்டும்.
அவரை சந்தித்து விட்டு நான்
மண்டைக்காடு சென்று கொண்டிருந்த பொழுது இடையிலையே என்னை தொலைபேசியில் அழைத்து சீன
வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைக்காட்சியில் பேசிய விஷயத்தையும் அடிகளார்
புத்தகத்தின் அணிந்துரையில் எழுதியுள்ளவற்றையும் தெரிவித்தார்.
அய்யா வைகுண்டரின் சமத்துவ
கருத்துக்களைப் பற்றி நீங்கள் உங்கள் நடையில் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று
தெரிவித்தார். நானும் மனம் மகிழுடன் ஏற்றுக் கொண்டேன். அதற்கான சில விவரங்களையும்
தெரிவித்தார் தொடர்ந்து தெரிவிக்கிறேன் என்றார்.
விடைபெறுகிற பொழுது ஒரு
வார்த்தை சொன்னார் அதாவது வகுப்புவாதிகளுடன் நடக்கக்கூடிய மோதல்களில் நாங்கள்
அய்யா வைகுண்டரை தெய்வமாக்க பார்க்கிறோம் நீங்கள் மனிதனாகவே வைத்திருக்க
பார்க்கிறீர்கள் என்று அவர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடிய விஷயத்தையும் சொல்லி
முடித்தார்.
என்னுடன் குமரி மாவட்ட மூத்த
தோழர் முருகேசன் அவர்களும் (இவரைப் பற்றி தனியாக எழுதுகிறேன்) தீக்கதி முருகேசன்
அவர்களும், சீனாவின் தொடரை வெளியீட்டையும் புத்தக வெளியிட்டயும் இணைந்து
வெளியிட்டுள்ள தமிழ் மார்க்ஸ் இணையதள பவுண்டேஷனின் வழக்கறிஞர் தோழர் ஜோதி
அவர்களும், தென்காசி தாலுகா செயலாளர் தோழர் பட்டாபிராமன்
அவர்களும் வந்திருந்தார்கள்.
ஏழாம் தேதி கன்னியாகுமரி
மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் திருவனந்தபுரம் இ எம்
எஸ் அகாடமியில் நடைபெற்றது. இந்த வகுப்பில் மனித குல வரலாறு என்ற தலைப்பில் பவர்
பாயிண்ட் முறையில் வகுப்பெடுத்தது நிறைவாக இருந்தது. புதியவர்களை சந்திப்பதும்
அவர்களுடன் கலந்துரையாடுவதும் பலன் மிக்கது.
அங்கிருந்து தோழர்கள்
ஸ்டீபன் மற்றும் சசியுடன் இணைந்து நாகர்கோவிலுக்கு வந்த பொழுது முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் தோழர்.லீமா ரோஸ் அவர்களின்
இல்லம் சென்று நலம் விசாரித்து விட்டு நாகர்கோவில் வந்து சேர்ந்தேன். இந்த நிகழ்வின்
ஒரு பகுதியாக அடிகளாரையும் சந்தித்தது நிறைவான ஒன்றாகவும் புதிய பணிகளுக்கான தேவை
இருப்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. தோழர் பட்டாபிராமன் உடன் இருந்து
ராஜாக்கமங்கலம் மற்றும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். கட்டிட சங்கத்தின்
மாநில தலைவர் ராஜா க மண்டலத்தில் குடியிருக்கும் KP பெருமாள் அவர்களையும், சந்திக்கும் வாய்ப்பும், ராஜாக்கமங்கலத்தில் வாலிபர்
சங்கத்தின் கட்டி வளர்த்த வரும் இடதுசாரிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய வருமான
தோழர் சந்திரன் அவர்களுடன் பேசுவதற்கான தருணமும் அமைந்தது.
அ. பாக்கியம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக