நூல் மதிப்புரை
வறுமையின் நிறமல்ல வளர்ச்சியின் நிறமே
சிவப்பு
அன்பான தோழர். அ.பாக்கியம் அவர்களுக்கு வணக்கம்..
19.01.26 வெளிவந்த தங்களது-14 வது புத்தகம் சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகம் படிக்க
துவங்கினேன்.. சோர்வின்றி தூக்கம் இன்றி நிறுத்த முடியாமல் -188 பக்கங்கள் முடிந்தது..
புதிய விவரங்கள்..
இது வரை அறியாத தகவல்கள் ஆதாரங்கள்
உடன் எளிய தமிழில் பிழைகள் இன்றி மடை திறந்த வெள்ளம் போல் வேகமாக போகிறது..
தூவல் பெருமாள், தவத்திரு. பாலபிரஜாபதி
அடிகளார், பத்திரிக்கை யாளர் விஜயசங்கர், சிபிஎம் மாநில செயலாளர் தோழர். பெ. சண்முகம், சிபிஐ மாநில
செயலாளர் மு. வீரபாண்டியன் ஆகியோர் அணிந்துரை யும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில்
உள்ளது..
சின் வம்சம் ஆட்சியின் நினைவாக
சீனா என்ற பெயர் உருவானது..
வறுமை நிறம் சிவப்பு அல்ல அதை
மாற்றும் நிறமே சிவப்பு.
வளர்ச்சியின் நிறமே சிவப்பு என்று
கூறும் வகையில் இன்று சீனா முற்றிலும் வறுமை
ஒழித்து உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி பெற்று கம்பீரமாக
நடந்து வருகிறது...
சீனா சர்வாதிகார நாடு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
ஆட்சி.. மதம் நம்பிக்கை வழிபாடுகள் மறுக்கும் நாடு என்ற நீண்டகால பேச்சு களுக்கு இந்த
புத்தகம் முற்று புள்ளி வைக்கிறது..
சீன மக்கள் அவர்களது மூதாதையர்கள்
மற்றும் இயற்கை யை வழி பட்டு வந்தனர்.
மனிதன்
பட்டினியாய் இருந்தால் சோறு போடு..
குளிரால்
அவதி பட்டால் போர்வை கொடு..
நோயால்
பாதிக்கப்பட்டால் மருத்துவம் செய் என்பதே சீனாவின் அடிப்படை..
சீனாவில் மத நம்பிக்கைகள் இருக்கின்றன..
பெளத்தம்
தாவோயிசம்
இஸ்லாம்
கத்தோலிக்
புராட்டஸ்டன்ட்
ஆகிய
மதங்கள் அரசு அங்கீகரித்துள்ளது..
மத விசுவாசிகள்
1997 ல் 10கோடி
2018 ல் 20 கோடி..
மத கல்வி
நிறுவனங்கள்.. 91
பெளத்தம்-41
புராட்டஸ்டன்ட்-21
தாவோயிசம்-10
இஸ்லாம்-10
கத்தோலிக்-9
என செயல்
பட்டு வருகிறது..
17 லட்சம் இஸ்லாமிய உரைகள்.
160 மில்லியன் பைபிள்.
ஓவ்வொரு
ஆண்டும்-10,000 இஸ்லாமியர்கள் மக்காவிற்கு சென்று வருகிறார்கள்..
1,44,000 வழி பாட்டு தளங்கள்..
மசூதிகள்-35, 000
பெளத்தம்-33, 500
தாவோயிசம்-9, 000
புரோட்டஸ்டென்ட்-60, 000
கத்தோலிக்-6000
உள்ளது..
மத குருமார்கள்
பெளத்தம்-2, 22,000
இஸ்லாம்-57, 000
புராட்டெஸ்டன்ட்-57, 000
தாவோயிசம்-40, 000
கத்தோலிக்-8, 000
என மொத்தம்
-3, 80,000 மத குருமார்கள் உள்ளனர்..
மத நம்பிக்கை
அற்றவர்கள்-52 %
பெளத்தம்-18 %
தாவோயிசம்-3%
புராட்டெஸ்டன்ட்-3.8 கோடி..
இஸ்லாம்-2.5 கோடி
கத்தோலிக்-60 லட்சம்
இந்து
மதம் உள்ளிட்ட இதர மத நம்பிக்கை உடையவர்களும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்..
இந்த நிலையில்..
மதம் குறித்து கம்யூனிஸ்ட் மமேதைகள்
சொன்ன கருத்துக்கள் வலிமையாக எளிமையாக பதிவு செய்து.. அதன் வழியில் சீனா கம்யூனிஸ்ட்
அரசு தற்போது எப்படிசெயல்பட்டு வருகிறது என்று சொன்னது சிறப்பு...
மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ்
சொன்னதை மதவாதிகள் மிகை படுத்தி பிரச்சாரம் செய்தற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் தரப்பட்டுள்ளது...
மத நம்பிக்கை உடைய மக்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டு சீன மக்கள் அரசு... சோசலிச அமைப்பு நிறுவபட்டாலும் நமது பொருளாதாரம்
, கலாச்சாரத்திலும்
வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டாலும் மதம் விரைவில் வாடி விடும் என்று நினைப்பது
யதார்த்தத்திற்கு மாறானது என்று முடிவு செய்து கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது..
மத வழிபாட்டு
தளங்களை அரசே கட்டி தருகிறது...
மத குருமார்களுக்கு
மாத சம்பளம், மருத்துவ காப்பீடுகள் வழங்கி வருகிறது...
நம்பிக்கை
உடைய மக்கள் எந்த தடை இன்றி வாழ்ந்து வருகின்றனர்...
ஆனால்
கட்சி உறுப்பினர்கள் மத கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை..
மத வழிபாட்டு
தளங்களுக்கு கண்காணிக்கும் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க பட்டு உள்ளது...
இப்படி மதங்களையும் வழிபாட்டு
தளங்களையும் மத கடவுள் நம்பிக்கை உள்ள மக்களையும் சீன கம்யூனிஸ்ட் அரசு பாதுகாத்து
வருகிறது..
எங்கள் கடவுள் சீன தேசத்தின் உழைப்பாளிகளும் , வெகுஜனங்களே தவிர வேறு
யாரும் இல்லை என்று மாவோவின் வார்த்தைகளும் உருவம் கொடுத்து உள்ளது சீன சோசலிசம்..
சீன கம்யூனிஸ்ட் அரசுமே..
இந்த புத்தகத்தை கட்சி உறுப்பினர்கள்
அனைவரும் படிப்பதும்... இன்றைய சூழலில் சீன கம்யூனிஸ்ட் அரசு செயல்படும் நிலை குறித்து
கட்சி உறுப்பினர்களுக்கும் மத கடவுள் நம்பிக்கை உள்ள மக்களுக்கும் நாம் சொல்ல வேண்டிய
தேவை உள்ளது..
ஏ.ஜி.கண்ணன்
மாவட்ட செயற்குழு உப்பினர்
திருவள்ளுர் மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக