இது வேறெங்கும்இல்லை இந்தியாவில்தான்.சிறு மாற்றங்கள் நடந்தாலும் பெரும் முன்னேற்றம் இல்லை என்பது தான் உண்மை.உலக குழந்தை தொழிலாளர் உழைப்பு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கும் இக்காலத்தில் இந்தியாவில் 5 வயது முதல் 14 வயது வரை 1.26 கோடி குழந்தை தொழிலா ளர்கள் உள்ளனர்.


அதாவது இந்த திருத்தத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குடும்ப தொழிலுக்கு, வனப்பகுதி பணிகள், வீடுசார்ந்த தொழில்கள், பொழுதுபோக்கு தொழில்கள், விளையாட்டு துறைசார்ந்த பணிகளில் ஈடுபடுத்தலாம் என்றும், இதை பள்ளி துவங்கும் முன் அல்லது பள்ளிக்கூடம் முடிந்த பிறகு இச்சிறுவர்களை பயன்படுத்தலாம் என்று மோடி அரசு திருத்தத்தை நிறைவேற்றி உள்ளது.
இந்த திருத்தம் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்வி அடிப்படை உரிமை என்ற சட்டத்தை மறுக்கிறது.

18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது. விபத்து போன்ற வற்றில் சட்டப்படியான நலன்களை பெறமுடியாது.

குடும்பத் தொழில் என்று அனைவரும் தப்பித்துக்கொள்ள மோடி அரசு வழிவகுத்துள்ளது.
மோடியின் சட்ட திருத்தம் சாதிய குல தொழிலையும், நவீன முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு பட்டாளத்தையே உருவாக்கும்.மேலும் குழந்தை தொழிலாளிகளின் ஏண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்..
பதிலளிநீக்கு