
• தண்ணீர் குடிக்கமால் இருக்க வாய்ப்பு !
• குளிக்கமால் இருக்க வாய்ப்பு !!
• வற்றிய உடலில் வேர்வையே வெளிவராமல் இருக்க வாய்ப்பு !!!
• வற்றிய வயிரோடு பட்டினியால் வாடிட வாய்ப்பு !!!!
• தற்கொலை செய்து கொள்ளாமல் தானாகவே மாண்டுபோகும் வாய்ப்பு.!!!!!
விவசாயத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதத்திறகுள் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய மோடி அரசு.அதாவது 11657 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தனர்,
தேசிய கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய 34,500 கோடி நிதியை விட குறைவாக 28,699 கோடி ஒதுக்கீடு செய்து (பழைய நிலுவையையும் சேர்த்தால் 34699 கோடி ) வாய்பினை பறித்த மோடி அரசு,

பாசன மற்றும் இயற்கை விவசாயத்திற்கு நிதிஒதுக்கீட்டை வெறும் 5600 கோடி ஒதுக்கீடு செய்து அதாவது மாவட்த்திற்கு 9 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து வாய்ப்பை பறித்த மோடி அரசு
கடந்த ஓராண்டில் விவசாயிகள் தற்கொலைகள் 26 சதம் அதிகமாவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிய மோடி அரசு, 2015-ம் ஆண்டு மட்டும் பிஜேபி ஆட்சி செய்யும் மராட்டிய மாநிலத்தில் 1088 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
ஆனால் மாநில அரசு 545 பேர்ககளை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தற்கொலை யாக அறித்துள்ளது. காரணம் மற்றவர்கள் பெயரில் நிலங்கள் இல்லை (குடும்பத்தில் மனைவி இறந்தால் கூட ) என்று அறிவித்துள்ளது.
உலக நிதிமூலதனத்தின் இந்திய பிரதி மோடி இந்திய முதலாளிகளின் அடிவருடியாக மேற்கண்ட வாறு பொதுநிதியை குறைத்து வருகிறது ...
பதிலளிநீக்கு