Pages

வியாழன், ஜூலை 20, 2023

வளர்ச்சி: இந்தியா- சீனா சொல்லும் செயலும் பகுதி -𑅂

 

உலக அரங்கில் சீனா-3

அ.பாக்கியம்


பகுதி -𑅂

சில துறை வாரியான ஒப்பீடுகள்:

சீனப் பொருளாதார சீர்திருத்தம் என்பது உற்பத்தியை பெரும் அளவில் அதிகரிக்க உதவியது. மக்கள் உற்பத்தியை பெருக்குவதில் ஈடுபட்டது மட்டுமல்ல முடிவெடுக்கும் இடத்திலும் பங்கெடுக்க வைக்கப்பட் டார்கள். எனவே உற்பத்தி செலவு குறைந்தது. இதனால் சீனாவின் உலகின் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டது. உற்பத்தி வெகு ஜனத்தன்மையை அடைந்தது.

அதாவது புதிய சந்தை முறை உத்திகளை சீனா சீர்திருத்தங்களின் வாயிலாக மேற்கொண்டது. இந்தியா சேவை துறையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் இதை கோட்டை விட்டது

சீர்திருத்த காலத்தில் இந்தியாவில் சில உழைப்பு பணிகள் புறக்கணிக்கப்பட்டது. சில தொழில்கள் இழிவாக பார்க்கப்பட்டது. இந்தியா கால் சென்டர்கள் போன்ற சேவை துறைகளில் அதிகமாக ஈடுபட்டனர். ஆனால் சீனாவில் காலணிகள் செய்வது, பொம்மைகள், ஆடைகள் தயாரித்தல், மின்னணு சாதனங்களை செய்வது, மற்ற உற்பத்தி பொருட்களை அசெம்பிள் செய்வது போன்ற உற்பத்தி துறையில் ஈடுபட்டு உள்ளூர் பொருளாதாரத்தை பலப்படுத்தியதுடன் அந்நிய செலவாணியின் குவித்தது. சீனா உள்ளூர் சந்தையை பலப்படுத்துவதற்கு தேவையான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்வது.

தங்களது குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இந்தியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து குவித்தனர். பிராண்டட் என்ற பெயரால் மிக அதிகமான அளவிற்கு வளரும் நாடுகளை கொள்ளையடித்த கம்பெனிகளுக்கு மாற்றாக நடுத்தர, குறை வருமானமுடைய பிரிவினருக்கு சீனாவின் பொருட்கள் ஈர்த்தது. உதாரணமாக மைக்ரோ மேக்ஸ், லாவா, இண்டெக்ஸ், போன்ற ஸ்மார்ட் போன்கள் ஒருகட்டத்தில் இந்திய சந்தைபங்கில் 54% பிடித்திருந்தது. சீன நிறுவனங்கள் இந்தியாவிலிருந்த பன்சால்-மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் மொபைல்ஸ் கம்பெனிகளுடன் இணைந்து பொருட்களை உற்பத்தி செய்து இறக்குமதி செய்தனர். அதாவது புதிய சந்தை முறை உத்திகளை சீனா சீர்திருத்தங்களின் வாயிலாக மேற்கொண்டது. இந்தியா சேவை துறையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் இதை கோட்டை விட்டது

 மலிவு உழைப்பும் திறன் உழைப்பும்

சீனா மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் மக்களை குறைந்த கூலிக்கு வேலை வாங்குகிறார்கள் என்ற பிரச்சாரம் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இதை ஒரு கட்டுக்கதை என்று தெளிவுபடுத்தி உள்ளது. சீனாவின் உழைப்பு சக்தி அதிக உற்பத்தி திறன் கொண்ட உழைப்பு சக்தியாகும் என்றும், சீன அரசு தொழில் துறைகளுடன் இணைந்து தொழிலாளர்களின் திறன் சக்தியை மேம்படுத்த எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்றனர். இதன் விளைவாக சீனத் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் இந்தியாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதையேதான் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் "சீனா நீண்டகாலத்திற்கு முன்பே மலிவு உழைப்புக்கு முடிவு கட்டிவிட்டது. மேற்கத்திய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற முடியாததற்கு காரணம் அதன் அசாத்தியமான செயல் திறன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களில் 2.3% மட்டுமே முறையான திறன்பயிற்சி பெற்றவர்கள் என்று 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க துறையின் வெளியீடான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி திறனற்ற உழைப்பு சக்தியை இந்தியா உருவாக்கிக் கொண்டுள்ளது. தற்போது ஸ்கில் இந்தியா திட்டம் போன்ற திட்டங்களை அறிவித்திருந்தாலும் அதை திறம்பட செயல்படுத்த முடியவில்லை. இதன் விளைவாக இந்தியாவில் அதிகபட்ச தொழிலாளர் சக்தியானது உற்பத்தி செய்யாதது அல்லது குறைவான உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவின் எம்பிஏ மாணவர்கள் மென்பொருள் துறைகளுக்கும் சேவை துறைகளுக்கும் செல்வதை விட உற்பத்தி துறையில் செல்வதுதான் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவில் முதலீடும்  அளப்பெரிய வளர்ச்சியும்:

சீனா எவ்வாறு பொருளாதார வல்லரசாக மாறியது என்பதன் பின்புலத்தில் கல்விமுறை மிகமுக்கிய காரணியாக இருந்தது. கல்வியில் மிக முக்கிய அதே நேரத்தில் மிக வேகமான சீர்திருத்தங்கள் கொண்டு வந்தனர். 2022 ஆம் ஆண்டு சீனாவின் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் 15% கல்விக்காக ஒதுக்கியது. இது சுமார் 600 பில்லியன் டாலர்களாகும். சீனா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைக்காக தனது உள்நாட்டு உற்பத்தியில் செய்கிற நிதி ஒதுக்கீடு 2.44% அதாவது 400 பில்லியன் டாலர்களாகும். இதன் விளைவாக உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் சீனாவை சேர்ந்த 24 பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளது. சீனக் கல்விமுறை தொழில் படிப்புகளை ஊக்கிவிக்கிறது.

போர்ப்பஸ் பத்திரிக்கையின் மதிப்பீட்டின்படி 2011 மற்றும் 2013 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையில் சீனாவில் 6.6 ஜிகாடன்(Gigatons) கான்கிரீட் பயன்படுத்தப்பட்டு
ள்ளது
.
 இது இருபதாம் நூற்றாண்டு முழுவதும் அமெரிக்காவில் பயன்படுத்தியவிட அதிகம் என்பதை நினைக்கும் பொழுது உள்கட்ட அமைப்பின் வளர்ச்சியை கற்பனை செய்து கொள்ளலாம்.


இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைக்காக செலவிடுவது 20 பில்லியன் டாலர்கள் மட்டுமே. தற்போது மோடியின் ஒன்றிய அரசு மூடநம்பிக்கைகளை வளர்ப்பதற்காக எடுக்கிற முயற்சியில் இந்திய கல்வித்துறை மேலும் பின்னடைய வாய்ப்பு இருக்கிறது. 2023-24 இல் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கல்விக்காக செய்த ஒதுக்கீடு 1,16,417 கோடி மட்டுமே. டாலர்களில் கணக்கெட்டால் மிக மிக குறைவாக இந்திய நிதி ஒதுக்கீடு இருக்கிறது. இந்தியாவில் 92% பள்ளிகள் அரசு அறிவித்த கல்வி உரிமை சட்டத்தை (RTE) அமல்படுத்தாமல் உள்ளனர். பெண்களின் கல்வி அறிவு விகிதத்தில் மொத்தம் 157 நாடுகள் தர வரிசையில் இந்தியா 115 வது இடத்திலும் சீனா27-வது இடத்திலும் உள்ளது. இதன் விளைவாக 2018 ஆம் ஆண்டுக்கான சீனாவின் கல்வி அறிவு விகிதம் 96.84 சதவிகிதமாகவும் இந்தியாவின் கல்வி அறிவு விகிதம் 74. 37% ஆகவும் இருக்கிறது என்று யுனெஸ்கோவின் புள்ளியல் நிறுவனம் தெரிவிக்கிறது. மறுபுறத்தில் இந்தியாவினுடைய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவிற்கான பட்டதாரிகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு பயன்படுகிறது.

உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது. உலகின் தொழிற்சாலைகளாக அல்லது உற்பத்தி மையத்தை உருவாக்குவதற்கு முன் தேவையாக இருப்பது உள் கட்டமைப்பாகும். சீனா இக்காலத்தில் உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. உள்கட்டமைப்பு இல்லாமல் தொழில் நிறுவனங்களை ஈர்க்கவோ, தொழிற்சாலைகளை உருவாக்குவோ அல்லது லட்சக்கணக்கான மக்களை நகரங்களை நோக்கி  நகர்த்தவோ முடியாது. மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், முடிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், நல்ல போக்குவரத்து அவசியமானது. இதேபோன்று மின்சார தேவை, தொழிலாளர்களுக்கான வீடுகள், இந்தக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். உலகத்தரம் வாய்ந்த சாலைகள், நெடுஞ்சாலைகள், அதிவேக ரயில்கள், விமான நிலையங்கள், சுரங்கப்பாதைகள், துறைமுகங்கள் போன்றவற்றிற்காக கடந்த 30 ஆண்டுகளில் சீனா ட்ரில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. சீனாவின் கட்டமைப்புகள் ஒட்டுமொத்தமாக இந்தியாவை விட பல மடங்கு மேம்பட்டவை.  42,000 கிலோ மீட்டர் புல்லட் ரயில் பாதைகள், 8000 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில், உலகின் வானளாவிய கட்டிடங்களில் சரி பாதி கட்டிடங்கள் சீனாவில் கட்டப்பட்டுள்ளது. உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஏழு துறைமுகங்கள் சீன நாட்டில் உள்ளது.

உள்கட்ட அமைப்பின் வேகத்திற்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். ஃபோர்ப்பஸ் பத்திரிக்கையின் மதிப்பீட்டின்படி 2011 மற்றும் 2013 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையில் சீனாவில் 6.6 ஜிகாடன்(Gigatons) கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இருபதாம் நூற்றாண்டு முழுவதும் அமெரிக்காவில் பயன்படுத்தியவிட அதிகம் என்பதை நினைக்கும் பொழுது உள்கட்ட அமைப்பின் வளர்ச்சியை கற்பனை செய்து கொள்ளலாம்.  ஒரு திட்டத்தை  உருவாக்குகிறபோது 25 ஆண்டுகள் தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப் படுகிறது. 70 சதவீதம உயர் தொழில்நுட்ப தொழில்களில் தன்னிறைவு அடையும் திட்டத்தையும் அமல்படுத்துகிறது. 2049 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு உருவான நூறாவது ஆண்டில் உலக அளவில் முதலிடத்தில் இருப்பதற்கான திட்டமிடலுடன் முன்னேறுகிறது.

இதற்கு நேர் மாறாக இந்தியாவில் தேர்தல் லாபங்களை கணக்கில் கொண்டு பல திட்டங்களை அறிவிப்பது திட்ட வளர்ச்சியை ஊழல்கள் நிறைந்த தேர்தல் கால பண வசூலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் போக்கு உள்ளது. ஒரு திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையற்ற குறுகிய கால பார்வை உள்ளது. ஒரு உதாரணத்தை இதற்கு எடுத்துக்காட்டலாம். பம்பாய் அகமதாபாத் புல்லட் ரயில் ஐந்து ஆண்டுகளைக் கடந்தும் ஆமை வேகத்தில் அமர்ந்து கொண்டிருக் கிறது. அலகாபாத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக் கப்பட்டு தரமான முறையில் சீரமைக்கப்பட்டது. கும்பாபிஷேக காலத்தில் அந்த சாலைகள் முழுவதும் சர்வ நாசமாக்கப்பட்டு பழைய நிலைமைக்கு திரும்பியது.

மற்றொரு முக்கியமான பலவீனம் இந்தியா உள்கட்டமைப்பில் போதுமான அளவு முதலீடு செய்வதில்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பதற்கு 6.5% நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆனால் ஒதுக்கப்படுவதோ 4.7% மட்டுமே. சீனாவிற்கு தேவைப்படும் நிதி 6.5% ஆகும். ஒதுக்கப்படுவதோ 8.7%ஆகும். இதன் விளைவாக சீனாவில் விநியோகசங்கிலி செலவு (SUPPLY CHAIN) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% உள்ளது. இதுவே இந்தியாவில் விநியோகசங்கிலியின் செலவு மொத்த நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக இருக்கிறது.

தொடரும்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...