Pages

புதன், மே 25, 2022

உழைப்புச் சக்தியின் வீழ்ச்சி உயர்ந்து வரும் வேலையின்மை:

 



    இந்தியாவில் உழைப்பு சக்தி வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

         15 வயதிற்கு மேற்பட்டவர்கள் உழைப்பில் ஈடுபடுவது  2016- 17 ஆம் ஆண்டு 46 சதமாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டு இது 40 சதமாக குறைந்துள்ளது.

          வேலை செய்ய தகுதி படைத்த 100 பேர்களில் 40 பேர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுகிறார்கள்.மீதி இருக்கும் 60 பேர்கள் உழைப்பில் ஈடுபடுவதற் கான வேலைவாய்ப்புகள் இல்லை.

      இதை எண்ணிக்கை அடிப்படையில் தெரிவித்தால் 44.5 கோடியில் இருந்து  43.5 கோடியாக குறைந்திருக்கிறது. இந்தியாவில் 108.5 கோடி பேர் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள். சட்டப்படி வேலை செய்ய தகுதி படைத்தவர்கள்.

       இதுவே உலக நாடுகளில் உழைப்பு சக்தி பங்கேற்பு 57 சதம் முதல்  60 சதம் வரை உள்ளது.

         உழைப்பு சக்தியில்  பெண்களின் பங்கேற்பு  ஏற்கனவே இந்தியாவில் குறைவாக இருக்கிறது.

        தற்போது 2016-17 ஆம் ஆண்டு 15 சதவீதம் பெண்கள் வேலை செய்தார்கள் அல்லது வேலை தேடினார்கள். 2021-22 ஆம் ஆண்டு இது 9.2 சதவீதமாக குறைந்திருக் கிறது.

      ஆண்கள் உழைப்பு சக்தியில் பங்கேற்பு 74 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக குறைந்திருக்கிறது.

     நகர்ப்புறங்களில் 44.7 சதவிகிதத்தி லிருந்து 37.5 சதமாக குறைந்திருக்கி றது. கிராமப்புறத்தில் 46.9 சதத்தில் இருந்து 41.4 சதமாக குறைந்திருக்கிறது.

      இந்தியாவில் 24 மாநிலங்களில் கணக்கெடுத்தால் 23 மாநிலங்களில் உழைப்பு சக்தி வீழ்ச்சி அடைந்திருக்கி றது

    ஆந்திராவில் உழைப்பு சக்தி பங்கேற்பு 54 சதமும் தமிழ்நாட்டில் 56 சதமும் இருந்தது. ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 சதவீதமும் ஆந்திராவில் 17%  உழைப்பு சக்தி வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பெரும் வீழ்ச்சியாகும்

     இந்தியாவில் 100க்கு 60பேர்கள் வேலை இல்லாமல்  வேலை செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.

அ.பாக்கியம்.


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...