Pages

வியாழன், மே 26, 2022

சென்னை:உட்புற சாலைகள் ஊழலுக்கு வழி வகுக்குமா? அ. பாக்கியம்

 


     சென்னையில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சாலை சீரமைப்பு செய்வது என்று முடிவெடுத்து நடைபெற்று வருகிறது.

      பல ஆண்டு காலமாக சென்னை யின் சாலைகள் போடப்படாமல் சிதிலமடைந்து கிடந்தது. ஊழல் சாரை சாரையாக நடைபெற்றதால் சாலை சிதிலமடைந்தது. 

         தற்போது பேருந்துகள் செல்லக் கூடிய சாலைகளில் 90% சாலைகள் போடப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள் ளது.

     ஆனாலும் உட்புற சாலைகள் போடப் படாமல் கைவிடப்படும் நிலையில் உள்ளது. சுமார் 800 சாலைகள் ஒப்பந்தம் செய்த  ஒப்பந்தக்காரர்கள் விலை ஏற்றத்தால் போட முடியாது என்று கைவிடுகிறார்கள். 

        ஒரு டன் தாரின்(bitumen) விலை  ஜனவரி மாதம் 46,022 ரூபாயிலிருந்து  57,662ரூபாயாக உயர்ந்துவிட்டது.  ஓராண்டுகள்   வரையிலான விலையேற்றத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் தற்பொழுது ஐந்து மாதங்களாகியும் விலையேற்ற பில் தொகை கொடுக்க மறுக்கிறது. 

     ஏது எப்படியோ  சாலைகள் கணிசமான அளவு போடப்படவில்லை.

2021-22 ஆண்டுகளில் 1654 புதிய சாலைகள் 311km போடுவதற்கு 202.08 கோ டிகள் சிங்கரசென்ன2.0 மற்றும் இரு திட்டங்கள் மூலம் நிதி    ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. 

       இதுவரை 1098 சாலைகள் போடப் பட்டு உள்ளது. 540 சாலைகள் போடப்படவில்லை. 16 சாலைகள் முடியாது என்று கைவிடப்பட்டுள்ளது.

      2019-21 ஆண்டுகளில் 7395 உட்புற சாலைகளை போடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இவற்றில் 7037 உட்புற சாலைகள் போடப்பட்டன.135 சாலைகள் முடிக்கப்படவில்லை. 223 சாலைகளில் கைவிடப்பட்டன. 

        மணலி மண்டலத்தில் 108 சாலைகளில் 18 உட்புற சாலைகளில் தான் முடிக்கப்பட்டுள்ளது. 90 உட்புற சாலைகள் முடிக்கப்படவில்லை. மாதவரம் மண்டலத்தில் 108 உட்புற சாலைகளில் 41 சாலையில்தான் முடிக்கப்பட்டுள்ளது. 

      மீதம் 67 சாலைகள் அமைக்கப் படவில்லை. இவை தவிர 240 சாலைகள் மழைநீர் வடிகால்வாய் துறையும், மற்ற துறைகலும் பள்ளம் தோண்டி உள்ளதால் சாலைகள்போடப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.

         மொத்தத்தில் உட்புற சாலைகள் போடுவதில் முயற்சி எடுக்கவில்லை ஒதுக்கப்பட்ட நிதிகள்எங்கே போகும் என்று தெரியாது. 

       இப்பணிகளை கண்காணிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்பாடுகள் இல்லை. முடிக்கப்பட்ட சாலைகள், முடிக்கப்படாத சாலைகளில் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்று எதுவும் நடக்கவில்லை. 

   பல புகார்கள் அளிக்கப்பட்டும் அதன் மீது நடவடிக்கை இல்லை.

         எனவே பெருநகர சென்னை மாநகராட்சி யின் உட்புற சாலைகள் அனைத்தும் சீரமைப்புக்கான வாய்ப்புகள் இல்லாமல் ஒதுக்கப்பட்ட பணங்கள் கொள்ளை போவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

      ஒப்பந்தக்காரர்கள்,கமிஷன்காரர்கள் கூட்டுக் கொள்ளையாக  மாறிவிடக் கூடாது.

அ. பாக்கியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...