Pages

செவ்வாய், மே 24, 2022

ருஷ்யாவின் கச்சா எண்ணெய் எங்கே? அ. பாக்கியம்

 

      ரஷ்யா உக்ரேன் யுத்தத்தில்  ரஷ்யாவின் மீது அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தது. 

     குறிப்பாக ரஷ்யாவிட மிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று முடிவெடுத்தார்கள். 

        ஆனால் ஒன்றிய மோடி அரசு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று அறிவித்தார். நமக்கெல்லாம் அதிசயமாக இருந்தது.

      அமெரிக்காவின் சொல் பேச்சை கேட்காமல் இந்திய மக்கள் மீது அக்கறை கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கி றார். எனவே நமது நாட்டில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை குறையும் என்று எதிர்பார்த் தோம். நடந்ததோ வேறு விஷயம்.

       கச்சா எண்ணெய் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து வந்தது உண்மை.

       ஆனால் அவை அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள அம்பானியின் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், எரிவாயுவாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு சந்தை விலையில் ஏற்றுமதி செய்யும் பணிகள் அமோகமாக நடந்து வருகிறது. 

    இந்த  குறைந்த விலையில் ரஷ்யாவின் எண்ணெய் இந்திய  மக்களுக்கு கிடைக்கவில்லை.  மாறாக அம்பானிக்கு கிடைத்து அவர் கடந்த மூன்று மாதங்களில் அதாவது 90 நாட்களில் 16000 கோடி ரூபாய் ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் சம்பாதித்து இருக்கிறார்.

       யுத்தமே நடந்தாலும் சரி அதில் கிடைக்கிற லாபம் அம்பானிக்கும் அதானிக்கும் தான் என்பதை மோடி அமுல் படுத்தி வருகிறார்.

அ. பாக்கியம்


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...