சீனா
நீண்ட காலங்களாக பல்வேறு மதங்களைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. மத விதிமுறைகளின்
படி கட்டமைக்கப்பட்ட முக்கிய மதங்களைவிட அதிகமான அளவிற்கு நாட்டுப்புற நம்பிக்கைகளும், மூதாதையர்களின் வழிபாடுகளும்
நிரம்பி இருக்கக்கூடிய நாடு சீனாவாகும். மேற்கண்ட நாட்டுப்புற வழிபாடுகள் தவிர,
தாவோயிசம் சீனாவில் உருவான மதமாகும். மற்ற மதங்கள் வெளிநாடுகளில் இருந்து
சீனாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜின்ஜியாங்
உய்குர் தன்னாட்சி பிரதேசம், பல மத அமைப்புகளை கொண்ட பிரதேசமாகும்.
இங்குள்ள மதங்கள் கலப்பு ஏற்பட்டதன் மூலமாகவும், சகவாழ்வுகளால்
இணைந்தும் இருக்கின்ற அமைப்புகள் ஆகும். பல
மதங்கள் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஒன்று அல்லது இரண்டு மதங்கள்தான்
சில குறிப்பிட்ட காலங்களில் செல்வாக்கு மிக்கதாகவோ ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவோ இருந்திருக்கிறது.
ஜின்ஜியாங்கில் மதங்களின் பரிணாம
நிலைகள்
ஜின்ஜியாங்
உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் மதங்களின் பரிணாமங்களை நான்கு அம்சங்களாக குறிப்பிடலாம்.ஒன்று, பழமையான மதத்தின் நிலைகள்.
இரண்டு,புத்த மதத்தை பிரதானமாகக் கொண்ட பல மதங்களின் பரிணாம நிலை,
மூன்றாவது, இஸ்லாம் மற்றும் புத்த மதத்தை பிரதானமாகக்
கொண்ட பல மதங்களின் சகவாழ்வான நிலைமைகள். நான்காவது, இஸ்லாத்தை
பிரதானமாக கொண்ட பல்வேறு மதங்களின் வளர்ச்சி நிலைபாடுகள் என்று வகைப்படுத்தலாம்.
பொ.ஆ.மு.
4ஆம் நூற்றாண்டுகளுக்கு
முன்பு ஜின்ஜியாங்கில் பழமையான மதங்கள் மட்டும்தான் பரவலான முறையில் மக்களிடம் காணப்பட்டது.
பொ.ஆ.மு முதல் நூற்றாண்டில் பௌத்தம் இந்தியாவிலிருந்து பட்டுப்பாதைகள் வழியாக ஜின்ஜியாங்கில்
அறிமுகப்படுத்தப்பட்டது. பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டுகள் வரை ஜின்ஜியாங் பிரதேசத்தில் பௌத்தம் மிகப்பெரும் செல்வாக்கு
பெற்று உச்சத்தில் இருந்தது. அதே நேரத்தில் ஜோராஸ்ட்ரியனிசம் ஜின்ஜியாங் முழுவதும் பரவி இருந்தது. ஜோராஸ்ட்ரியனிசம் (Zoroastrianism)
என்பது பண்டைய பாரசீகத்தில் (ஈரான்) தோன்றிய உலகின் மிகப் பழமையான,
ஏகத்துவ (ஒரே கடவுள்) என்பதில் நம்பிக்கை கொண்ட மதங்களில் ஒன்றாகும்.
பொ.ஆ.5ஆம் நூற்றாண்டில் தாவோயிசம்
பிராந்தியத்தில் பரவியிருந்தது மட்டுமல்ல குறிப்பாக டர்பன் பகுதியிலும் ஹாமி பகுதிகளிலும்
பெரும்பாலான மக்களால் இந்த மத நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டன. பொ.ஆ 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 17 ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியிலும் திபெத்திய பௌத்தம் ஜின்ஜியாங் முழுவதும் பரவிடவில்லை என்றாலும்,
வடக்கு ஜின்ஜியாங்கில் செழித்து வளர்ந்திருந்தது. பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டில் மணிச்சேயிசம் ஜின்ஜியாங்கில் நுழைந்தது. மணிச்சேயிசம் (Manichaeism)
என்பது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் (ஈரான்) மானி (Mani)
என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பழங்கால மதமாகும். இது ஒரு காலத்தில்
மத்திய ஆசியா முதல் சீனா வரை பரவியிருந்த ஒரு முக்கிய சமயக் கோட்பாடாக இருந்தது. இது
நன்மை (Light/ஒளி) மற்றும் தீமை (Darkness/இருள்) ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டத்தை மையமாகக் கொண்டது. இதே காலத்தில்
நெஸ்டோரியனிசம் ஜின்ஜியாங் பகுதியில் நுழைந்தது. பத்தாம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை உய்குர் மக்களும்
வேறு சில இனக்குழுக்களும் இந்த மதத்தை தழுவியதால் நெஸ்டோரியனிசம் செழித்து வளர்ந்தது. நெஸ்டோரியனிசம் (Nestorianism)
என்பது இயேசு கிறிஸ்துவில் மனிதத் தன்மையும், தெய்வீகத்
தன்மையும் தனித்தனி நபர்களாக (two distinct persons) இணைந்திருப்பதாகக்
கூறும் ஒரு கிறிஸ்துவ இறையியல் கொள்கையாகும்
ஜின்ஜியாங்கில் இஸ்லாத்தின் வருகையும்
திணிப்பும்
பொ.ஆ.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,
10ஆம்எநூற்றாண்டின் துவக்க காலத்திலும் துருக்கிய காரா-கானிட்- கானேட்(ஆட்சி
பிரதேசத்தை குறிப்பது) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது. தற்போது ஜின்ஜியாங் பிரதேசத்தில்
இருக்கக்கூடிய காஷ்கர் (Kashgar) பகுதியை தலைமையிடமாகக் கொண்டு
ஆட்சி செய்த துருக்கிய வம்சம் தான் இது. தாரிம்படுகையில் தற்போதைய ஜின்ஜியாங்பகுதியில்
இருந்த பண்டைய பௌத்தன் கோட்டான் ராஜ்ஜியத்தின் மீது துருக்கிய இஸ்லாமிய வம்சம் தாக்குதலை
நடத்தியது. இதற்கு அவர்கள் ஜிஹாத் அதாவது புனித போர் என்று பெயர் சூட்டினார்கள். சுமார்
40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல் 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரம் அடைந்து 11ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பொ.ஆ.1006 முடிவுக்கு வந்தது
பௌத்த ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்து இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டினார்கள்.
16ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பல மதங்கள் ஜின்ஜியாங்கில் இணைந்து வாழ்ந்தன.
இஸ்லாம் பெருமளவு செல்வாக்கு செலுத்தியது. இக்காலத்தில் ஜோராஸ்ட்ரியனிசம், மணிச்சேயிசம், நெஸ்டோரியனிசம் மறைந்து, புத்தமதம் மற்றும் தாவோயிசம் ஓரளவு செல்வாக்குடன் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒயிட் மங்கோலியர்கள் திபெத்திய பௌத்தத்தை
ஏற்றுக் கொண்டனர். இந்த ஒயிட் மங்கோலியர்கள் அல்லது மோங்குர் மக்கள் அழைக்கப்படக் கூடியவர்கள்
மங்கோலியாவிற்கு வெளியே ஜின்ஜியாங், கிங்காய், கான்சு போன்ற மாகாணங்களில் வசிக்கக் கூடிய இனக்குழுக்கள் ஆகும். இதேபோன்று
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளின் படையெடுப்புகளை
தொடர்ந்து புராட்டஸ்டன்டிசம், கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி
திருச்சபை ஆகியவை ஜின்ஜாங்கில் பரவியது.
டாங்
மற்றும் சாங் வம்சங்களின் ஆட்சி காலத்தில் உய்குர் மக்கள் பௌத்தத்தை பிரதானமாக பின்பற்றினர்.
15ஆம் நூற்றாண்டு
வரை இவர்களின் பெரும்பாலானோர் பௌத்த மதங்களை தழுவியவர்களாக இருந்தார்கள். யுவான்வம்ச
காலத்தில் பல உய்குர்கள் நெஸ்டோரியனிசத்திற்கு
மாறினார்கள். ஜின்ஜியாங்கில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பது அரபுபேரரசின்
தோற்றம் மற்றும் இஸ்லாத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்துடன் தொடர்புடையது.10ஆம் நூற்றாண்டில்தான் ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை தழுவ ஆரம்பித்தனர். 16ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி உய்குர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள்.
இந்த நிகழ்வுகள் 17ஆம் நூற்றாண்டு வரை நடந்து கொண்டுதான் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உய்குர் மக்களின் பிரதான அடையாளமாக
இஸ்லாம் மதம் உருவெடுத்தது. இதற்குப் பிறகு இம்மக்களின் கலாச்சாரம், அவர்களின் அடையாளம் அனைத்திலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்தது. இக்காலத்திலிருந்து
இம்மக்கள் அதற்கு முந்தைய பௌத்த மரபு வழியிலான செயல்களை துண்டித்துக் கொண்டனர்.
இஸ்லாத்தின் திணிப்பும் உள்ளுர்மயமாதலும்
உய்குர்
மக்கள் இஸ்லாத்திற்கு மாறியது பொதுமக்களின் தன்னார்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில்
அமையவில்லை. மாறாக மதப்போர்கள் மற்றும் ஆளுவர்க்கத்தால் திணிக்கப்பட்ட அடிப்படையிலேயே
அமைந்ததது. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் செயல்முறைகளில் உய்குர்மக்களும் கசாக்
மக்களும் தங்களின் மூதாதையர்கள் நம்பிக்கைகளுடனும், வழிபாட்டு மரபுகளுடனும் ஒருங்கிணைத்தனர்.
அதே நேரத்தில் பிராந்தியத்தின் உள்பகுதியில் இருந்த பிற இனகுழுக்களின் கலாச்சாரங்களையும்
உள்வாங்கிக் கொண்டனர். இந்த உள்வாங்கல் மூலமாக சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பழைய
முறைபடியே கடைபிடிக்கப்பட்டன. எனவே ஜிஞ்ஜியாங்கில் இஸ்லாம் படிப்படியாக தனித்துவமான
உள்ளூர் மற்றும் இன அம்சங்களோடு ஒன்றிணைந்தது.
உதாரணமாக, மரபுவழி இஸ்லாம் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாரையும் அல்லது எதையும் வணங்குவதை அனுமதிக்காது. உய்குர்கள் மற்றும் வேறு
சில இனக்குழுக்கள் இன்னும் மசார்களை வணங்குகின்றன. அவை கல்லறைகள் அல்லது சன்னதிகள்,
பொதுவாக புனிதர்கள் அல்லது குறிப்பிடத்தக்க மதத் தலைவர்களின் கல்லறைகள்
ஆகும். மசார்வழிபாடு என்பது ஜின்ஜியாங்கில்
இஸ்லாத்தின் உள்ளூர்மயமாக்கலுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. மசார்களைச் சுற்றி
நீண்ட கம்பங்களை அமைக்கும் நடைமுறை, ஸ்ட்ரீமர்கள் மற்றும் செம்மறி
தோல்களால் தொங்கவிடப்பட்டது, போன்ற அம்சங்கள் ஷாமனிசம் மற்றும்
பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் செல்வாக்கின் விளைவாகும். மற்றொரு எடுத்துக்காட்டாக,
யினிங்கில் உள்ள பைதுல்லா மசூதி மற்றும் உரும்கியில் உள்ள ஷான்சி மசூதி
ஆகிய இரண்டும் முதன்முதலில் கிங் வம்சத்தின் போது பேரரசர் கியான்லாங்கின் ஆட்சிக் காலத்தில்
(1736-1795) கட்டப்பட்டது. இவை உள்நாட்டுப் பகுதிகளில் பொதுவாகக்
காணப்பட்ட பீம்-நெடுவரிசை கட்டுமானத்தால் உள்ளுர் கட்டிடக்கலையாக வகைப்படுத்தப்படுகின்
றன. இது இஸ்லாத்தின் உள்ளூர்மயமாக்கலின் ஒரு வடிவத்தை உள்ளடக்கியது.
ஜின்ஜியாங்கில் மதநம்பிக்கை சுதந்திரம்
ஜின்ஜியாங்கில்
இப்போது மசூதிகள், தேவாலயங்கள், லாமாக்கள் மற்றும் கோயில்கள் உட்பட 24,800 மத நடவடிக்கைகளுக்கான இடங்கள் உள்ளன, இதில் 29,300 மதகுருமார் பணியாளர்கள் உள்ளனர். இவற்றில், 24,400 மசூதிகளில்
29,000 மதகுருமார் பணியாளர்கள் உள்ளனர்; 59 புத்த கோவில்களில் 280 மதகுருமார் பணியாளர்கள் உள்ளனர்;
ஒரு தாவோயிஸ்ட் கோவிலில் ஒரு மதகுரு உள்ளார்; 227 புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் (கூட்ட மைதானங்கள்) 26 மதகுருமார்
பணியாளர்களைக் கொண்டுள்ளன; 26 கத்தோலிக்க தேவாலயங்கள் (கூட்ட
மைதானங்கள்) 27 மதகுருமார் பணியாளர்களைக் கொண்டுள்ளன;
மற்றும் மூன்று ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் (கூட்ட மைதானங்கள்) ஒரு மதகுருவைக்
கொண்டுள்ளன. ஜின்ஜியாங் இஸ்லாமிய நிறுவனம் மற்றும் ஜின்ஜியாங் இஸ்லாமிய பள்ளி உட்பட
எட்டு மதக் கல்லூரிகள் உள்ளன. 112 மத அமைப்புகளும் உள்ளன,
அவற்றில், தன்னாட்சி பிராந்திய மட்டத்தில்,
இரண்டு அமைப்புகள் உள்ளன, அதாவது, இஸ்லாமிய விவகாரங்களுக்கான குழுவுடன் ஒரு இஸ்லாமிய சங்கம் மற்றும் ஒரு புத்த
சங்கம்; மாகாணங்கள் மற்றும் மாகாண அளவிலான நகரங்களின் மட்டத்தில்
14 இஸ்லாமிய சங்கங்கள், மூன்று புத்த சங்கங்கள்
மற்றும் ஒரு புராட்டஸ்டன்ட் மூன்று சுய தேசபக்தி இயக்கக் குழு உள்ளன; மேலும் மாவட்ட மற்றும் மாவட்ட அளவிலான நகரங்களின் மட்டத்தில் 88 இஸ்லாமிய சங்கங்கள், இரண்டு புத்த சங்கங்கள் மற்றும்
இரண்டு புராட்டஸ்டன்ட் மூன்று சுய தேசபக்தி இயக்கக் குழுக்கள் உள்ளன.
சீனா, பெரும்பாலான நாடுகளைப்
போலவே, அரசாங்கத்தி லிருந்து மதத்தைப் பிரித்து வைக்கும் கொள்கையை
கடைபிடிக்கிறது. எந்தவொரு மத அமைப்பும் அரசியல் மற்றும் அரசு விவகாரங்களில் தலையிட
அனுமதிக்கப்படவில்லை. நிர்வாகம், நீதித்துறை விவகாரங்கள்,
கல்வி, திருமணம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில்
தலையிட, சமூக ஒழுங்கு, பணி ஒழுங்கு மற்றும்
வாழ்க்கை ஒழுங்கைத் தடுக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின்
சோசலிச அமைப்பை எதிர்க்க, அல்லது இன ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமையைக்
குறைமதிப்பிற்கு உட்படுத்த எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ மதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
மதத்தின்
வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்கும் எந்தவொரு
செயலையும் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்திய அரசு அனுமதிப்பதில்லை. எந்தவொரு
மதத்திற்கும் பாரபட்சம் காட்டவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது. எந்த மதமும் வேறு
எந்த மதத்தையும் விட உயர்ந்ததாக இருக்க அனுமதிக்காது. அனைத்து மதங்களுக்கும் சமத்துவத்தை
ஜின்ஜியாங் எப்போதும் நிலைநிறுத்துகிறது. சீனாவில் மதங்களின் வரலாறு, சீன சூழலுக்கு ஏற்ப தங்களை
தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவை சீன சமூகத்திற்குள் இடமளிக்கப்பட முடியும்
என்பதைக் காட்டுகிறது.
சோசலிச சமூகத்திற்கு ஏற்ப மதத்தை
தகவமைப்பது.
சோசலிச
சமூகத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சீனாவில் மதங்கள் நல்ல முறையில்
வளர்ச்சியடைய முடியும் என்பதையும் காட்டுகிறது. மதச்சார்பற்ற, நவீன மற்றும் நாகரிக
வாழ்க்கை முறைகளை நாம் வளர்த்து ஊக்குவிக்க வேண்டும். மேலும் பின்தங்கிய மற்றும் காலாவதியான
மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும். சீனாவில் மதங்களின் வரலாறு,
சீன சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவை சீன
சமூகத்திற்குள் இடமளிக்கப்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.
அனைத்து
மட்டங்களிலும் உள்ள மக்கள் மாநாடுகள் மற்றும் CPPCC குழுக்களில், ஜின்ஜியாங்கிலிருந்து
1,436 மத நம்பிக்கையாளர்கள் பிரதிநிதிகளாகவும் உறுப்பினர்களாகவும்
பணியாற்றுகிறார்கள். அரசு விவகாரங்களின் விவாதம் மற்றும் நிர்வாகத்தில் பங்கேற்கும்
உரிமையை நிறைவேற்றுகிறார்கள். கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எழுப்புகிறார்கள் அல்லது
அரசாங்கப் பணிகள், குறிப்பாக மதப் பணிகள் குறித்த திட்டங்கள்
மற்றும் பிரேரணைகளை சமர்ப்பிக்கிறார்கள்.
மதத் தீவிரவாதம் மனிதத்துவத்கிற்கு
விரோதமானது
1970களின் பிற்பகுதியிலிருந்தும் 1980களின் முற்பகுதியிலி
ருந்தும், குறிப்பாக பனிப்போர் முடிவடைந்ததிலிருந்த காலத்தில்
, உலகம் முழுவதும் மதத் தீவிரவாதத்தின் எழுச்சி ஏற்பட்டது. இவை
ஜின்ஜியாங்கில் மதத் தீவிரவாதத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும். இதன் விளைவாக, சமூக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்தியத்தில் உள்ள மக்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான
ஆபத்தை விளைவிக்கும் பயங்கர வாதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
பல்வேறு
இனக்குழுக்களுக்கு இடையே பகைமையைத் தூண்டுவது, தேசபக்தி, அமைதி,
ஒற்றுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றிற்கு எதிராக
களத்தை அமைத்தார்கள். இஸ்லாம் மற்றும் பல மதங்களால் பரிந்துரைக்கப்பட்ட நல்ல செயல்கள்
பற்றிய போதனைகளுக்கு எதிராக இயங்கினார்கள். இனப் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின்
சித்தாந்த அடித்தளத்தை உருவாக்கும் மதத் தீவிரவாதம், இயல்பிலேயே
மனிதத்துவத்கிற்கு விரோதமானது, சமூக விரோதமானது, நாகரிக விரோதமானது மற்றும் மத விரோதமானது ஆகும். இது மதத்திற்கு துரோகம் செய்வதாகும்.
மேலும் இதை ஒருபோதும் மத விஷயங்களுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அல்லது மத வார்த்தை
ஜாலங்களால் மறைக்கப்படவோ அல்லது மன்னிக்கப்படவோ கூடாது. சர்வதேச அனுபவங்களிலிருந்தும்,
பிராந்தியத்தின் யதார்த்தத்திலிருந்தும் படிப்பினைகளைப் பெற்று,
சட்டத்தின்படி பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும்,
பயங்கரவாதம் மற்றும் வன்முறை மற்றும் மத பயங்கரவாதத்தின் பரவலை திறம்படக்
கட்டுப்படுத்தவும் ஜின்ஜியாங் உய்குர தன்னாட்சி பிராந்திய அரசு உறுதியான நடவடிக்கை
எடுத்தது . அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. மேலும் பிராந்தியத்தில் சமூக
நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் பராமரித்து வருகிறது.
அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக