அ.பாக்கியம்
சீனாவில்
இருக்கக்கூடிய 31 மாநிலங்களில் தன்னாட்சி உரிமை பெற்ற மாநிலமாக திபெத் தன்னாட்சி பிரதேசம்
உள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேச மாநிலத்தின் அண்டை நாடுகளாக இந்தியா, நேபாளம், பூட்டான், மியான்மர்
ஆகிய நான்கு நாடுகள் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து
கொள்வது மட்டுமல்ல திபெத் மாநில எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக
இந்தியா மற்ற நாடுகளை விட திபெத்துடன் அதிக எல்லைகளை கொண்டுள்ளது.
இந்தியா
சீனாவுடன் 3488 கிலோ மீட்டர் உள்ள எல்லைகளில் திபெத் மாநில எல்லை மட்டும் 890 கிலோமீட்டர் அடங்கும். மேற்கண்ட நான்கு நாடுகளும் திபெத்தில் அரசியல் நிகழ்ச்சி போக்குகளை உற்று
நோக்குவதும், அங்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து
கவனத்தில் எடுத்துக் கொள்வதும் அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை செய்து
கொள்வதும் நியாயமானதாக இருக்கும். ஆனால் வடக்கு உலகில் இருக்கக்கூடிய
அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் திபெத் தில்
தலையிடுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின்
மேலாதிக்க கொள்கைதான் இந்த தலையீடுக்கு
அடிப்படை காரணம்.
பஞ்சசீல பாதையில்
இந்தியா
1947 ஆம்
ஆண்டு விடுதலை அடைந்தது. சீனா 1949 ஆம் ஆண்டு புரட்சி வெற்றி
பெற்று சீன மக்கள் குடியரசை நிறுவியது. இந்த இரண்டு நாடுகளும் அண்டை நாடுகள் என்ற
அம்சங்களை கடந்து நீண்ட பாரம்பரியங்களையும், வரலாறுகளையும்,
நாகரீகத் தொட்டில்களையும் உள்ளடக்கிய நாடுகளாகும். எல்லைப் பகுதி
மிக நீளமானது. அதே நேரத்தில் காலனி ஆதிக்க நாடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி
வெற்றி பெற்றனர். இந்தப் போராட்டத்தின் மூலமாக கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்
இரு நாடுகளும் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த
எண்ணங்களின் செயலாக 1954 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால்
நேரு அவர்கள் சீனாவிற்கு பயணம் செய்தார். இந்தப் பயணம் உருவாகியிருந்த, நல்லெண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இரு நாடுகளும் பஞ்சசீலக் கொள்கை
என்ற ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி கையெழுத்திட்டார்கள். பஞ்சசீலக் கொள்கை ஐந்து
முக்கிய அம்சங்களை முடிவு செய்து இருந்தது
§ இறையாண்மை மற்றும் பிராந்திய
ஒருமை ப்பாட்டுக்கான பரஸ்பரம் மரியாதை கடைப்பிடிப்பது அதாவது ஒவ்வொரு நாடும்
மற்றவரின் சுதந்திரத்தையும் எல்லைகளையும் மதித்து அங்கீகரிப்பது.
§ பரஸ்பரம் ஆக்கிரமிப்பு
இல்லாமல் இருக்க வேண்டும். எந்த ஒரு நாடும் மற்றொன்றுக்கு எதிராக பலத்தையோ அல்லது
ஆக்கிரமிப்பையோ செய்யக்கூடாது.
§ பரஸ்பரம் குறுக்கீடு
செய்யாமல் ஒவ்வொரு நாடும் மற்றொன்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க
வேண்டும்
§ சமத்துவம் பரஸ்பர நன்மைகளை
அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சமத்துவத்தை
அடிப்படையாகக் கொண்டதாகவும் பரஸ்பர நன்மையை நோக்கமாகக் கொண்டதாகவும் இருக்க
வேண்டும்.
§ இரு நாடுகளும்
பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவதன் வழியாக
அமைதியான சகவாழ்வு மேற்கொள்வது.
மேற்கண்ட
பஞ்சசீலக் கொள்கை சீன பிரதமர் சௌ என் லாய் மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு
இடையே ஏற்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும்
இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு அடித்தளமாக அமைந்தது. அது மட்டுமல்ல இரு பெரும்
நாடுகள் காலனித்துவ விடுதலைக்குப் பிறகு
ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம் சர்வதேச உறவுகளுக்கும் உந்து சக்தியாக
அமைந்தது. மேற்கண்ட ஒப்பந்தங்கள், ஜவஹர்லால் நேருவின்
சீனப் பயணமும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய
சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் சகவாழ்வு நமது
ஆதிக்கத்திற்கு சாவு மணி அடித்து விடும் என்று அஞ்சினார்கள். இரு நாடுகளுக்கும்
எவ்வாறு மோதல்களை உருவாக்குவது என்ற விரிவான திட்டங்களை உருவாக்க ஆரம்பித்தார்கள்.
இதுதான் சிஐஏவின் திபெத்திய திட்டம் என்பதை 33 வது
அத்தியாயத்தில் பார்த்தோம்.
தலாய்லாமாவின் இந்திய
வருகையும் ஊசலாட்டமும்:
புத்தரின்
2500
ஆவது பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வரவேண்டும் என்று
தலாய்லாமாவும் பஞ்சன்லாமாவும் இந்திய அரசிடம் அனுமதி கேட்டனர். இந்திய அரசும்
அனுமதி கொடுத்தது. 1956 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தனர்.
இருவரும் தரை மார்க்கமாகசிக்கிம் வந்து அங்கிருந்து விமானத்தின் மூலம் டெல்லி
சென்றடைந்தார்கள். டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி
விட்டு புத்தகயா விற்கு பயணம் மேற்கொண்டனர்.
தலாய்லாமா
டெல்லியில் தங்கி இருந்த பொழுது சீனாவின் பிரதமர் சௌ என் லாய் ஆசிய நாடுகளின்
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா வந்து சேர்ந்தார். இந்தியாவில் அவர்
ஜவஹர்லால் நேரு அவர்களை சந்தித்து,
இரு நாடுகளின் உறவுகள் மேம்படுத்துவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மேலும் சில இந்திய தலைவர்களை சந்தித்துள்ளார். இதன் பிறகு டெல்லியில் உள்ள
தலாய்லாமாவை சீன பிரதமர் சந்தித்தார். இக்காலத்தில் திபெத்தில் தலாய்லாமாவும்
சீனாவும் ஏற்படுத்திக் கொண்ட 17பிரிவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் திட்டங்கள் அமலாகி
கொண்டு இருந்தது. இவற்றை சீர்குலைப்பதற்காக சிஐஏ உதவியுடன் திபெத்திலிருந்த
நிலப்பரப்புகளும் அடிமையுடைமையாளர்களும் ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் சதி வேலைகளில்
ஈடுபட்டு இருந்தனர். தலாய்லாமா வின் மூத்த சகோதரர் கியாலோதோண்டப்நீண்ட காலமாக சிஐஏ
உடன் இணைந்துசெயல்பட்டவர்இந்தக்கலவரங்களுக்குஉறுதுணையாகஇருந்தார்.
இந்தியாவில்
இருந்த பொழுது தலாய்லாமா நாட்டின் பல பகுதிகளில் இருந்த புத்த ஸ்தலங்களுக்கு
சென்று வந்தார். டெல்லியில் நடைபெற்ற
வரவேற்பு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இக்காலத்தில் தலாய்லாமாவின்
இரண்டு சகோதரர்கள் கியாலோ தோண்டப்,
ஜிக் மே நோர்போ இருவரும் தலாய்லாமா வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தால்
நல்லது என்று வலியுறுத்தினார்கள். தலாய்லாமாவிற்கு ஆரம்பத்தில் தஞ்சம் அடைவது
தொடர்பான எண்ணங்கள் இல்லை. சிஐஏ திட்டத்தின்படி திபெத்தில் கலவரத்தை தீவிரப்
படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த தஞ்சமடையும் முயற்சியாகும்.
தலாய்லாமா
ஜவஹர்லால் நேருவை சந்தித்து பேசிய பொழுது தனது எண்ணமான தஞ்சம் அடைவது பற்றி
ஜவஹர்லால் நேருவிடம் தெரிவித்தார். ஜவஹர்லால் நேரு சீனாவுடன் இந்தியாவின் உறவுக்கு
தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது என்று உறுதியாக தனது நிலையை
தெளிவுபடுத்தி விட்டார். இருந்தாலும் தலாய்லாமா கூடுதல் அழுத்தம் கொடுக்க
ஆரம்பித்தார். சீனா உடன் உறவை செயல்படுத்த தனது சக்தியால் முடிந்த அனைத்தையும்
செய்ததாகவும் ஆனால் இப்போது திபெத்திற்கு திரும்புவதை விட இந்தியாவில் இருப்பது
நல்லது என்று கருதுவதாக நேருவிடம் தெரிவித்தார். நேரு இதை புரிந்து கொண்டு
தலாய்லாமாவிடம் நீங்கள் ஒன்றை உணர வேண்டும்,
இந்தியா உங்களை ஆதரிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டும் என்று தெரிவித்ததுடன் 17 பிரிவு ஒப்பந்தத்தை
விதிமுறைகளுக்கு உட்பட்டு திபெத்தில் அமலாக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும்
பொழுது தலாய்லாமா திபெத்தில் இருந்து அதற்காக பாடுபட வேண்டும் என்று பதில்
உரைத்தார்.
ஜவஹர்லால்
நேரு சந்திப்பிற்கு பிறகு தலாய்லாமாசீனப் பிரதமர் சௌ என் லாய்அவர்களைசந்தித்தார்.
அவரிடம் அரசியல் தஞ்சம் கோருவது தொடர்பான எந்த ஒரு அறிகுறியையும் காட்டிக்
கொள்ளவில்லை. ஆனாலும் சீன பிரதமர் தலாய்லாமாவும் அவருடைய சகோதரர்களும் அரசியல்
தஞ்சம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து
கொண்டார். திபெத் என்பது சீன மக்கள் குடியரசின் தன்னாட்சி உரிமை பெற்ற மாநிலம்
என்பதை அழுத்தம் திருத்தமாக தலாய்லாமாவிடம் தெரிவித்துச் சென்றார்.
அடுத்த
மூன்று ஆண்டுகளில் சிஐஏ உதவியுடன் சீனாவிற்கு எதிரான கலவரத்தை திபத்தில்
உருவாக்கினார்கள். இந்த கிளர்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தலாய்லாமா
திபெத்தின் நிலைமைகள் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அறிந்து கொண்டார்.
அமெரிக்க தேவையில் இருந்து சிஐஏ உதவியுடன் 1959 ஆம் ஆண்டு இந்தியாவில் வந்து தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே தஞ்சம் அடைவதை
விரும்பாத ஜவஹர்லால்நேரு திபெத்தில் இருந்த நிலைமைகளை கணக்கில் எடுத்து ஒரு ஆன்மீக
தலைவர் என்ற முறையில் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டார். இக்காலத்தில்
தலாய்லாமாவுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான அவருடைய சீடர்களும் வந்தார்கள்.
இந்தியாவில் 10 மாநிலங்களில் 45க்கும்
மேற்பட்ட இடங்களில் திபெத்தியர்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். இந்த
அகதிகளுக்கு கல்வி மற்றும் பிற சமூக சேவைகளை இந்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில்
இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகளுக்கு குடிஉரிமை, சொத்துரிமை
மீதான கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியா விதித்தது.தலாய்லாமா ஒரு ஆன்மீக தலைவர்
என்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.திபெத்தியர்கள் இந்தியாவில் எந்த
அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவது இல்லை என்று இந்தியா தனது
அதிகாரப்பூர்வமான கொள்கையை அறிவித்தது. ஆனாலும் நடைமுறைகள் வேறு விதமாக
படிப்படியாக உருவெடுத்தது
பதட்டம்–
அவநம்பிக்கை-யுத்தம்:
1962 ஆம் ஆண்டு சீன இந்திய யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்திற்கு முதன்மையான
காரணம் நீண்ட காலமாக இருக்கக்கூடிய எல்லை பிரச்சினையாகும். இந்தியா லடாக்கின் ஒரு
பகுதியாக அக்சாய்சின் பகுதியை உரிமை கோரியது. சீனா ஜின் ஜியாங் மாநிலத்தின் ஒரு
பகுதியாக அக்சாய்சின் பகுதியை கோரியது. சீனா திபெத்தின் ஒரு பகுதியாக தவாங்கு
பகுதியை கோரியது. இந்தியா இதை அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று
வாதாடியது. இந்த எல்லை பிரச்சனை இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களையும் அவ
நம்பிக்கைகளையும் உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக தலாய்லாமா கிளர்ச்சி செய்து
தோல்வியடைந்து இந்தியாவில் இருந்துகொண்டு ஒரு போட்டி அரசாங்கத்தை உருவாக்கியதும்
நிலைமைகளை மேலும் மோசமாக்கியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம்
நடைபெற்றது. இரு நாடுகளும் விடுதலை அடைந்த பிறகு இந்த ஒரு யுத்தத்தை தவிர வேறு
யுத்தங்கள் நடைபெறவில்லை. 1967 ஆம் ஆண்டு சிக்கிமின் சோலா
மற்றும் நாதுலா இடத்தில் சிறிய மோதல் ஏற்பட்டது. இதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் (2020 கல்வான் பிரச்சனை தவிர) இந்திய
சீன மோதல்கள் நடைபெறவில்லை. ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடந்தது இல்லை என்று
நிபுணர்கள்எழுதுகிறார்கள். தொடர்ந்து எல்லை பிரச்சினையை தீர்ப்பதற்கான
பேச்சுவார்த்தை நடந்ததுகொண்டிருந்தது.
இதே
காலத்தில் அமெரிக்கா திபெத்தை முன்வைத்து இந்தியாவையும், நேபாளத்தையும்,
பூட்டானையும் சீனாவிற்கு எதிராக நிறுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி
செய்து கொண்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு கல்வான்
பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்றது. நீண்ட
எல்லைகளைக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினைகள் இருந்த பொழுதும்
தொடர்ச்சியாக பெரும் மோதல்களும், யுத்தங்களும் நடைபெறாமல்
இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தியாவில் ஆட்சிகள் மாறிய
பொழுது அமெரிக்கா தனது மேலாதிக்க கொள்கைகளை அமலாக்குவதற்கான அழுத்தங்களை தொடர்ந்து
கொடுத்து வந்தது.
பிரதமர்களின் பயணங்களில்
ஏற்பட்ட உறவுகளும் உரசல்களும்:
1988 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சீனாவிற்கு பயணமானார். 1954 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்திய பிரதமரின் முதல் சீனப் பயணம் என்பதில்
இந்த பயணம் முக்கியத்துவத்தை பெற்றது. இந்தப் பயணத்தின் போது சீனாவுடன் சேர்ந்து
கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் திபெத் சீனாவின் தன்னாட்சி பகுதி என்ற இந்திய
அரசாங்கத்தின் நீண்ட கால மற்றும் நிலையான கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது
என்று அறிவித்தார். 2003 ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிகாரி
வாஜ்பாய் சீனாவிற்கு சென்ற பொழுது திபெத் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதி என்பதை
இந்தியா அங்கீகரித்து ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்தும் போடப்பட்டது.
இந்தியா முதல் முறையாக திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வமாக
கையெழுத்து போட்டு அங்கீகரித்துள்ளது என்பதை இந்தப் பயணம் வெளிப்படுத்தியது.
பதிலுக்கு சீனா ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சிக்கிம் மீதான இந்தியாவின்
இறையாண்மையை ஒப்புக்கொள்ள படிப்படியாக நடவடிக்கை எடுத்தது.
மேற்கண்டநிகழ்வுகள்உறவுகளை
பலப்படுத்தியது. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலாய்லாமா உடன்
சந்திப்பை நடத்தினார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் அழைப்பின் பேரில் தலாய்லாமா ராஷ்டிரபதி
பவனுக்கு சென்றார். 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அருணாசலப் பிரதேசத்தின்எல்லை பிரச்சினைகள் உள்ள
பகுதிக்கு தலாய்லாமாவை பார்வையிட அனுமதித்தா. இந்த மூன்று நிகழ்வுகளும் உறவில்
உரசல்களை ஏற்படுத்தியது. சீனா இந்த நிகழ்வுகளை கடுமையாக கண்டனத்துக்கு
உள்ளாக்கியது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு
விழாவிற்கு நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் தலைவரான லோப் சாங் சங்கையை
அழைத்து இருந்தார். அதன் பிறகு இந்திய பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான
இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு 2018 ஏப்ரல் மாதம் ஹுனானில்
நடைபெற்றது. இது உறவுகளை மேம்படுத்தியது.எனவே 2019 ஆம்
ஆண்டில் பிரதமர்நரேந்திரமோடிதனது பதியேற்பு விழாவிற்குஅவரை அழைக்க வில்லை. இந்த
முறைசாரா உச்சி மாநாட்டின் புரிதல்படி நாடு கடத்தப்பட்ட தலாய்லாமா அல்லது திபெத்
அரசாங்கம் நடத்தும் நிகழ்வுகளுக்கு அரசு அதிகாரிகள் செல்வதை தடுக்க வெளியுறவு
அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இதேகாலத்தில் நாடு கடத்தப்பட்ட திபெத்
அரசாங்கத்தின் 60ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் டெல்லியில்
திட்டமிடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தர்மசாலாவிற்கு மாற்றப்பட்டன.
உறவின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா:
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் இந்திய பிரதமர்
நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜிஜின் பிங் இருவரும் சந்தித்து பேசினர். இதன்
முன்னேற்றமாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள்
நிறுவப்பட்டதின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 2025 ஆம் ஆண்டு முழுவதும் இரு நாடுகளிலும் கொண்டாடுவது என்று
முடிவெடுக்கப்பட்டது. பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய
நிகழ்வுகளையும் பரஸ்பர நம்பிக்கை உருவாக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் ராஜதந்திர
முயற்சிகளை மேலும் அதிகப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று
முடிவாகியது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் இந்தியாவின் வெளியுறவுச்
செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனாவிற்கு பயணம் சென்றார். அங்கு பாதுகாப்பு அமைச்சர்
வெளியுறவு அமைச்சர்களை வழக்கமாக சந்திப்பதையும் கடந்து, சீன
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து வந்தார்.
மேற்கண்ட
சந்திப்பின் விளைவாக உறவுகளை பலப்படுத்துவதற்கும், இடையில் ஏற்பட்ட சில பிளவுகளைஒழுங்கு படுத்துவதற்குமான
முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது.
எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான நீர் நிலைகள் குறித்தும் ஒத்துழைப்புகளை தொடங்குவது
என்று முடிவுகள் எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் நின்று போன நேரடி விமான
சேவைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஊடகத்துறையிலும் அறிவுத்துறையிலும்
பரிமாற்றங்களை மேம்படுத்திக் கொள்ள பொருத்தமான நடவடிக்கையில் எடுக்க வேண்டும்
போன்ற நல்ல அறிகுறிகள் தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக சீனாவின் வெளியுறவு த்துறை
துணை அமைச்சர் சன் வெய்டோங் இந்தியாவிற்கு பயணம் செய்து மக்களை மையமாகக் கொண்ட
நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டமிட வேண்டும். அதன் மூலமாக உறவுகளை
மேம்படுத்துவதற்கான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் வெளியுறவு
கொள்கையில் அமெரிக்க சார்பு தன்மைகள் அதிகமாய் கொண்டிருக்கக் கூடிய சூழலில்,
அமெரிக்காவும் சீன இந்திய உறவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலைமை
தொடர்ந்து எடுத்து வருவதால் இந்த முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைத்த்தா என்பதை
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக