Pages

திங்கள், ஆகஸ்ட் 24, 2026

85 மஞ்சு இனக்குழு: எட்டுப் பதாகைகைகளின் பேரரசு

 



அ.பாக்கியம்

சீன மக்கள் குடியரசில் இருக்கக்கூடிய 56 இனங்களில் மஞ்சு இனக்குழுவும் ஒன்றாகும். சீன அரசு அங்கீகரித்துள்ள இனச் சிறுபான்மை குழுவில் மஞ்சு இனக்குழுவும் அடங்கும். 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மஞ்சு இன மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சம் ஆகும். சீனாவில் இருக்கக்கூடிய அதிக மக்கள் தொகை கொண்ட இனச் சிறுபான்மை குழுக்களில் இதுவும் ஒன்றாகும். மஞ்சு இன மக்கள் தற்போது சீனாவின் வடகிழக்கு பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றார்கள். இவை தவிர லியோனிங், ஜிலின், ஹெய்லோங்ஜியாங் மற்றும் ஹீபெய் மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர். பெய்ஜிங் நகரம் மற்றும் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குறிப்பாக, மஞ்சு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லியோனிங் மாகாணத்திலும், ஐந்தில் ஒரு பகுதியினர் ஹீபெய் மாகாணத்திலும் வாழ்கின்றனர்.

பழங்குடியிலிருந்து பேரரசு நோக்கி

சீனாவின் 5000 ஆண்டு வரலாற்றில் கடைசி ஆயிரம் ஆண்டுகளில்  350 ஆண்டுகள் சீன வம்சம் அல்லாதவர்களின் ஆளுகைக்கு சீனா உட்பட்டிருந்தது. 1271 முதல் 1368 வரை சுமார் நூறு ஆண்டுகள் மங்கோலியர்களின் யுவான் வம்ச ஆட்சி நடைபெற்றது. மஞ்சு வம்சத்தினர் 1644 முதல் 1912 ஆம் ஆண்டு வரை மஞ்சு வம்ச ஆட்சி நடைபெற்றது. 1644 ஆம் ஆண்டில், மிங் வம்சத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவர்கள் பெய்ஜிங்கைக் கைப்பற்றி முழு சீனாவையும் ஆட்சி செய்யத் தொடங்கினர். சீனாவுக்கு அருகாமையில் இருந்த மஞ்சு இன அரசு சீனாவின் பெரும்பகுதியை கைப்பற்றி சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். ஒரு சீனர் அல்லாத இனச் சிறுபான்மையின ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். பெய்ஜிங் நகரின் வீதிகளில் மஞ்சு இனத்தவர் திடீரெனத் தோன்றியது எவ்வளவு எதிர்பாராததாக இருந்ததோ, அதைவிட வியக்கத்தக்கதாக அமைந்தது அவர்கள் தங்கள் அதிகாரத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்திய விதமாகும். இந்த வியப்பு அவர்களுக்கே கூட இருந்தது. 1644-ஆம் ஆண்டு துவங்கி, 1912-ஆம் ஆண்டு வரை மஞ்சு பேரரசர்கள் தொடர்ந்து ஆட்சி செய்வார்கள் என்று யாரால் துணிந்து கணித்திருக்க முடியும்? அவர்கள் அவ்வாறு ஆட்சி செய்தது வரலாற்றாசிரியர்களுக்குப் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பியது. அவற்றில் மிக அடிப்படையான ஒன்று “சிறுபான்மையினர் ஆட்சி குறித்த கேள்வி” ஆகும். அதாவது, சீனர்களை விட எண்ணிக்கையில் சுமார் 350-க்கு 1 என்ற விகிதத்தில் மிகக் குறைவாக இருந்த மஞ்சு இனத்தவர், எவ்வாறு சீனாவைக் கைப்பற்றி, பின்னர் ஏறக்குறைய 250 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிந்தது என்பது ஒரு நுட்பமான விவகாரமாகும்.

மஞ்சு என்ற சொல் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து புழக்கத்தில் உள்ளது. ஜூச்சென்கள் என்பவர்கள் துங்குஸ் (Tungusic) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, வேட்டையாடும்-திரளும் பழக்கத்தைக் கொண்ட ஒரு பழங்குடி இனக்குழு ஆவர். இவர்கள் வடகிழக்கு சீனப் பகுதியான மஞ்சூரியாவின் காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்ந்தனர். “ஜூச்சென்கள்” (Jurchens) தான் பின்னாளில் “மஞ்சு” (Manchu) என்று அழைக்கப்பட்ட இனக்குழுவின் மூதாதையர்கள் ஆவர்.  தொடக்ககால சீனப் பதிவுகளில் அவர்கள் டோங்ஹுய் அல்லது “கிழக்கத்திய காட்டுமிராண்டிகள்” என்று அழைக்கப்பட்டனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில், இவர்கள் கிதான் (Khitan) பழங்குடியினரால் நிறுவப்பட்ட லியாவோ (Liao) பேரரசின் கீழ் இருந்தனர். ஆனால், 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1115), வான்யன் அகுடா (Wanyan Aguda) என்ற தலைவரின் கீழ் இவர்கள் லியாவோவின் ஆதிக்கத்தை உதறித் தள்ளி, வட சீனாவின் பெரும்பகுதியை ஆண்ட “சின்” (Jin) என்ற பேரரசை (கி.பி.1115–1234).  நிறுவினர். பின்னர், இவர்கள் மங்கோலியர்களின் தாக்குதலால் கி.பி. 1234 இல் அழிக்கப்பட்டனர்.

மேலும் உயிர் பிழைத்த ஜூச்சென்கள் வடகிழக்கு மஞ்சூரியாவிற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்த ஜூச்சென்களின் வழித்தோன்றல்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர், ஆனால் விரைவிலேயே அவர்கள் ஜூச்சென் என்ற பெயரைக் கைவிட்டு மஞ்சு என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர். 17ஆம் நூற்றாண்டில் நுர்ஹாசி (Nurhaci) என்ற தலைவர் பல நுழென் பழங்குடியினரை ஒன்றிணைத்து, 1636 இல் ‘மஞ்சு’ என்ற பெயரில் சிங் வம்சத்தை நிறுவினார். வரலாற்று ரீதியாக, “மஞ்சு” (Manchu) என்ற பெயர் பின்னர் 1635 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் மஞ்சூரியாவின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்தனர்.  தெற்கு நோக்கி நகர்ந்து,  1644 ம் ஆண்டு சீனா உள்நாட்டுக் கிளர்ச்சிகளால் பலவீனமடைந்திருந்த போது பெய்ஜிங்கைக் கைப்பற்றினர்கள்.

 

வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவை சீன மக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும்  1680-க்குள் மஞ்சுக்கள், சீனாவின் அனைத்துப் பகுதிகளிலும் முழுமையான கட்டுப்பாட்டை நிலைநாட்டினர். மஞ்சுக்கள் சுமார் 1800 வரை ஒரு சிறப்பான மற்றும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிர்வகித்து வந்தனர். சீனாவின் கடைசிப் பேரரசு ஆட்சியாளர்களான கிங் (மஞ்சு) வம்சத்தினர் (1644–1912) 1800-ஆம் ஆண்டிற்குள் பேரரசின் அளவை இரட்டிப்பாக்கினர், அதே நேரத்தில் அதன் மக்கள் தொகை ஏறக்குறைய மும்மடங்கானது.

எட்டுப்பதாகை சமூக-அரசியல் அடையாளம்

மஞ்சுக்கள், சீனாவைக் கைப்பற்றுவதற்கு உதவிய சில சீன மற்றும் மங்கோலியக் குழுக்களுடன் கூட்டணிகளை உருவாக்கினர். மஞ்சு ஆட்சி சீனாவின் அரசாங்கத்தையோ அதன் சமூக, கலாச்சார வாழ்க்கையையோ முற்றிலுமாகச் சீர்குலைக்கவில்லை. மாறாக, மஞ்சு ஆட்சியாளர்கள் தாங்கள் கைப்பறிறி பகுதிகளில் சீன வாழ்வின் அம்சங்களைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்தனர் மற்றும் மாற்றியமைத்துக் கொண்டனர். அவர்கள் தாங்கள் ஆட்சி செய்த பல்லினப் பேரரசுக்கு ஏற்ற ஒரு ஆட்சி முறையை உருவாக்கினர். அதில் சீனர்களே மிகப்பெரிய மக்கள்தொகையாக இருந்தனர். மஞ்சு ஆட்சியாளர்கள் தங்கள் அரசாங்க நடைமுறைகளில் பலவற்றை முந்தைய சீன மிங் பேரரசின் நடைமுறைகளை மாதிரியாகக் கொண்டு அமைத்தனர். உதாரணமாக, சீன அரசாங்க அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக, முந்தைய சீன பேரரசுகள் போலவே அவர்கள் ஒரு குடிமைப் பணித் தேர்வு முறையைப் பயன்படுத்தினர். மஞ்சு பேரரசர்கள் சீன மற்றும் மஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தனர். அதே சமயம், மஞ்சு ஆட்சியாளர்கள் பல மஞ்சு பழக்கவழக்கங்களை அரசவையிலும் பொதுமக்களிடையேயும் பேணி வளர்த்தனர்.

மஞ்சு பேரரசர்கள் பெரும்பான்மையான சீன மக்களை ஆட்சி செய்கிற பொழுது இருவிதமான தன்மைகளையும் கடைபிடித்தனர். சீன அரசியல் நெறிமுறைகளை மஞ்சு இனத்தவர் ஏற்றுக் கொள்வதையும் அவற்றை சீன அறிஞர்கள் அங்கீகரிப்பதையும் சார்ந்து இருந்தது மட்டுமல்ல, மஞ்சு இனத்தவர்களுக்கும் பெரும்பான்மை சீன ஹான் இனத்தவர்களுக்குமான வேறுபாடுகளை தக்க வைக்கும் பணிகளையும் தங்கள் ஆட்சி காலம் முழுவதும் கடைபிடித்தனர். அதாவது கலாச்சார தழுவல் என்பதில் சீன மயமாதல் ஒரு பக்கம் நடைபெறுகிற பொழுது தங்களின் தனித்துவத்தை காப்பாற்றக்கூடிய செயல்களையும் கடைப்பிடித்தனர்.

1601-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘எட்டு கொடிகள்’ அமைப்பு, மஞ்சு இன அடையாளத்தை தனித்துவமாக வெளிப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு இராணுவ அமைப்பாக மட்டுமல்லாமல், மஞ்சு இனத்தின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் அடையாளத்தின் மைய அச்சாகவும் செயல்பட்டது. “எட்டு கொடிகள்” என்பது வெறும் போர் வீரர்களின் கூட்டம் அல்ல. அது ஒரு முழுமையான தனி சமூக அமைப்பு (suborder of society) . ஒவ்வொரு குடும்பமும் ஒரு கொடியில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த உறுப்பினர் உரிமை மரபுவழியாக தொடரப்பட்டது. இந்த அமைப்பு மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தியது. இராணுவ பயிற்சி முதல், ஊதியம் மற்றும் உணவு விநியோகம், திருமணம், இறப்பு பதிவு, மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் வரை. இவ்வாறு, கொடி மக்கள் (banner people) என்ற பெயர் மஞ்சு இனத்தின் சமூக அடையாளமாக மாறியது. எட்டு கொடிகள், ஒரு இராணுவ கட்டமைப்பைத் தாண்டி, மஞ்சு இனத்தின் “இன இறையாண்மை” (ethnic sovereignty) மற்றும் தனித்துவமான சமூக-அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய கருவியாக அமைந்தது. ஒரு சிறுபான்மை இனமாக இருந்தும், மிகப்பெரிய ஹான் சீன மக்கள்தொகையை 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆள்வதற்கு இந்த அடையாளப் பாதுகாப்பே முக்கிய காரணமாக கருதப்படுகிறது

வரலாற்று ரீதியாக, ஆண்களின் தலைமுடி பாணியில் மஞ்சு மற்றும் ஹான் இனத்தினரிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தது. மஞ்சு ஆண்கள் தங்கள் நெற்றிப் பகுதியை மொட்டையடித்து, பின்புறத்தில் உள்ள முடியை நீண்டு, பின்னல் போட்டு வைத்தனர். இது அவர்களின் பாரம்பரியப் பழக்கமாகும். ஹான் சீனர்கள், கன்பூசியஸ் போதனைகளின்படி, முடியை வெட்டாமல், அதை முடிச்சு அல்லது கொண்டை போட்டு வளர்த்தனர். 1644-ல் சிங் வம்சம் ஆட்சிக்கு வந்த பிறகு, மஞ்சு ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தின் அடையாளமாக ஹான் ஆண்கள் அனைவரும் இந்த ‘கியூ’ சிகையை வளர்க்க வேண்டும் என்ற கட்டாய ஆணையைப் பிறப்பித்தனர். இதற்கு இணங்க மறுத்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1912-ல் சிங் வம்சம் வீழ்ச்சியடைந்த பின்னரே இந்தக் கட்டாய சிகை முறை ஒழிக்கப்பட்டது.

ஒரு படகில் மிதக்கும் பொருளாதாரம்

மஞ்ச வம்ச (1644-1912) காலத்துப் பொருளாதாரம், ஒரு படகில் மிதக்கும் வெள்ளப்பெருக்கு போன்றது—சில காலகட்டங்களில் கரைபுரண்டு ஓடியது. வேறு சிலவற்றில், எதிர்பாராத புயல்களையும் சுழிப்புகளையும் சந்தித்தது. இது “கிளாசிக்கல்” வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலின் தொடக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் உச்சத்தை அடைந்த இந்தப் பொருளாதாரம், பின்னர் உள் நெருக்கடிகள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களால் சீர்குலைந்து, முடிவில் நவீன தொழில்துறை வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது.

ஆரம்பகால மஞ்ச வம்சம், குறிப்பாக காங்ஷி, யோங்ழெங் மற்றும் கியான்லாங் பேரரசர்களின் கீழ், குறிப்பிடத்தக்க பொருளாதார விரிவாக்கத்தைக் கண்டது. இந்தச் சகாப்தம் பெரும்பாலும் “காங்-கியான் பொற்காலம்” என்று குறிப்பிடப்படுகிறது. அரசாங்கம் புதிய நிலங்களைச் சாகுபடி செய்ய ஊக்குவித்தது. அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சோளம் போன்ற பயிர்கள், வறண்ட நிலங்களில் பயிரிடப்பட்டு, உணவு உற்பத்தியை வெடிக்கச் செய்தன. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வரிச்சீர்திருத்தங்கள் விவசாய உற்பத்தியை மேலும் அதிகரித்தன. மேம்பட்ட உணவு விநியோகத்தால், சீனாவின் மக்கள்தொகை 1650-ஆம் ஆண்டில் சுமார் 100-150 மில்லியனில் இருந்து 1800-ஆம் ஆண்டிற்குள் 300 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது. இந்த மக்கள்தொகை அதிகரிப்பே விரிவாக்கத்திற்கு உந்துதலாகவும், விளைவாகவும் இருந்தது.

வெள்ளி பொருளாதாரத்தின் உயிர்நாடியாக மாறியது. அதன் விநியோகத்தில் ஏற்பட்ட கூர்மையான அதிகரிப்பு, தொலைதூர வர்த்தகத்தையும், பிராந்திய வணிகர் குழுக்களான ஷான்சி (சான்சி) மற்றும் ஹுய் (ஆன்ஹுய்) வணிகர்கள் போன்றவர்களின் எழுச்சியையும் தூண்டியது. பணம் சம்பாதிப்பதற்கான இந்த உத்வேகமே, நாடு முழுவதும் பொருட்களும் அதற்கான கருத்துக்களும் பரவ உதவியது.

உலக வரலாற்றில், இந்தக் காலகட்டத்தில் சீனாவின் பொருளாதார செல்வாக்கு மகத்தானதாக இருந்தது. 1750-ஆம் ஆண்டில், சீனாவின் உற்பத்தித் துறை உலகின் மொத்த உற்பத்தியில் 32.8% ஆக இருந்தது. இது முழு ஐரோப்பாவின் மொத்த உற்பத்தியையும் விட அதிகமாகும்.

 

இந்தப் பொற்காலம் நீடிக்கவில்லை. 19-ஆம் நூற்றாண்டு, பொருளாதார நெருக்கடிகளால் உந்தப்பட்டு, அடிக்கடி ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது. வெள்ளி விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை, ஜியாகிங் (Jiaqing) மற்றும் டாவோகுவாங் (Daoguang) ஆட்சிக் காலங்களில் தொடர் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுத்தது. இது உணவுப் பொருட்களின் விலையில் கூர்மையான உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது.

அந்நிய நாடுகளுடன் செய்யப்பட்ட அடிமைத்தனமான ஒப்பந்தமும் அபினி யுத்தமும் சீன பொருளாதாரத்தை அழிவின் விளிம்புக்கு தள்ளின. வெள்ளிகள் குவிந்திருந்த ஒரு நாட்டில் போதைப் பொருட்களுக்காக வெள்ளிகளை வெளியேற்றினார்கள். அரசாங்க வருவாய் முடங்கியது. அபினி யுத்தத்தில் தோல்வியடைந்த பிறகு மஞ்சு அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பாக துறைமுகங்களையும், வணிகங்களையும் மேற்கத்திய நாடுகளுக்கு திறந்து விட்டது. இதனால் கடும் பாதிப்புகளை சந்தித்தது.

ஒருபுறம் பொருளாதார நெருக்கடியும் மறுபுறத்தில் மேற்கத்திய நாடுகளின் ஊடுருவல் காரணமாக நவீன பொருளாதார அஸ்திவாரங்களும் உருவாக்கப்பட்டது. தைப்பிங் கிளர்ச்சி (Taiping Rebellion, 1850-64) மஞ்ச ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, மைய அரசு உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிக நிதி மற்றும் இராணுவ அதிகாரத்தை வழங்கியது. உள்ளூர் அரசாங்கங்கள் தங்கள் சொந்த இராணுவத்திற்கு நிதியளிக்க லிஜின் (likin) என்ற புதிய உள்நாட்டு வர்த்தக வரியை அறிமுகப்படுத்தின. இது நவீன தொழில்களில் முதலீடு செய்ய பிராந்தியங்களுக்கு ஒரு வழியை உருவாக்கியது. இந்த உள்ளூர் முதலீடு, கப்பல் கட்டுதல், சுரங்கம், மற்றும் ஆயுத உற்பத்தி போன்ற தொழில்களில், “தானாகவே நடக்கும்” தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. இது அரசால் நடத்தப்படும் “யாங்-வு (ஸ்வான்-வு)” இயக்கத்துடன் இணைந்து, சீன தொழில்மயமாக்கலின் முதல் படிகளைக் குறித்தது. தந்தி இணைப்புகள் மற்றும் இரயில் பாதைகள் கட்டப்பட்டன. 1900-ஆம் ஆண்டிற்குள், முக்கிய நகரங்களில் மின்சார விளக்குகள் மற்றும் தொலைபேசிகள் போன்ற நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. யாங்சே மற்றும் மேற்கு நதிகள் கப்பல் போக்குவரத்திற்கு மேற்கத்திய நாடுகளுக்கு திறக்கப்பட்டன.

 

மஞ்ச வம்சத்தின் பொருளாதாரம் என்பது உள் செழிப்பு, பின்னர் உள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு எதிரான போராட்டம், இறுதியில் நவீனமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலின் அழுத்தங்களுக்குத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளின் கதையாகும்.

மொழியும் பண்பாட்டு அடையாளமும்

மொழியை பொருத்தவரையில், மஞ்சு மக்கள் மஞ்சு மொழியை பேசுகின்றனர். இது துங்கஸ் (Tungus) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. எழுத்துமுறை: 1599 ஆம் ஆண்டு, நுர்ஹாசி மங்கோலிய எழுத்துமுறையைத் தழுவி மஞ்சு மொழிக்கு ஏற்றார். பின்னர் 1632 இல் தஹாய் (Dahai) இதில் புள்ளி மற்றும் வட்டக் குறிகளைச் சேர்த்து நவீன எழுத்துமுறையை உருவாக்கினார். இது மேலிருந்து கீழாகவும், வலமிருந்து இடமாகவும் எழுதப்படும். இருப்பினும், சிங் வம்ச ஆட்சிக் காலத்தில் ஹான் சீனக் கலாச்சாரத்தின் தாக்கத்தால், இன்று பெரும்பாலான மஞ்சு மக்கள் சீன மொழியையே பேசுகின்றனர் .

இவர்களின் பண்பாட்டு அடையாளம் ஹான் சீனர், மங்கோலியர், திபெத்தியர் போன்ற ஏனைய இனக்குழுக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவர்கள் மரபுவழி ஷாமனிசம் (Shamanism) நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். பாரம்பரியமாக ‘ஷாமனிசம்’ (Shamanism) எனும் இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டைப் பின்பற்றினர். தேவாலயங்களிலும், கிராமங்களிலும் ஷாமன்கள் மதச் சடங்குகளை நடத்தினர். பின்னர் பௌத்தம், தாவோயிசம் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தின. மஞ்சு சமூகம் தாய்வழிக் குலச் சமூகத்தின் (Matrilineal Clan Society) பண்புகளைத் தக்கவைத்திருந்தது. இதனால், பெண்களின் குடும்ப மற்றும் சமூக நிலை மிகவும் உயர்வாக இருந்தது. சீனாவில் பெண்கள் அடிமைத்தனத்தின் உச்சமாக பாதம் கட்டும் முறை இருந்தது. ஆனால் மஞ்சு பெண்கள் பாதம் கட்டும் வழக்கத்தை (foot-binding) பின்பற்றவில்லை. வேட்டை, போர் போன்ற சமூகப் பொருளாதார நடவடிக்கைகளில் ஆண்களுடன் சேர்ந்து பங்கேற்றனர். சமீபத்திய மரபணு ஆய்வுகள், மஞ்சு மக்கள் தங்கள் பாரம்பரிய தாயகமான வடகிழக்கு சீனாவில் மரபணு ரீதியாக ஒருமித்த தன்மையுடன் காணப்படுவதாகக் கூறுகின்றன.

கிங் வம்சம் ஒருபுறத்தில் உள்நாட்டு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த பொழுது மேற்கத்திய நாடுகள் மிகக் கொடூரமான முறையில் ஒரு தலைபட்சமான ஒப்பந்தங்களில் கையளித்திட வைத்து சீன மக்களை சுரண்டினார்கள். இதன் விளைவாக தேசபக்த இயக்கமும் அந்நிய சக்திகளுக்கு எதிரான எழுச்சியும் ஏற்பட்டது. 1850 முதல் 1864 வரை நடைபெற்ற தாய் பிங்க் விவசாயிகள் கிளர்ச்சி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1853 முதல் 1868 வரை நடைபெற்ற நியான் கிளர்ச்சி, 1796 முதல் 1804 வரை நடைபெற்ற வெள்ளை தாமரை கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகள் கிங் வம்சத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற பாக்சர் கிளர்ச்சி கிங் அரசாங்கத்துக்கு எதிராக இல்லை என்றாலும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தேசியவாத கிளர்ச்சியாக ஆரம்பித்து ஆட்சியாளருக்கு எதிராக மாறியது. இந்தக் கிளர்சிகள் அனைத்தும் ஒரு பொதுவான அம்சத்தை பிரதிபலித்தது.

கிங் வம்சத்தின் பலவீனமான ஆட்சியும் சமூக பொருளாதார நெருக்கடிகளும் இந்த கிளர்ச்சிகளில் பிரதிபலித்தன. இதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு டாக்டர் டன் யாட் சன் தலைமையில் ஜனநாயக புரட்சி ஏற்பட்டு ஜனநாயக குடியரசு உருவாகியது. 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் புதிய ஜனநாயக புரட்சியின் மூலமாக மக்கள் சீன குடியரசு உருவாக்கப்பட்டது. மக்கள் சீன குடியரசில் இனச் சிறுபான்மை மக்களுக்கான தனித்துவமான கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. இதன் விளைவாக மஞ்சு இனம் சீன மக்கள் குடியரசில் இனச் சிறுபான்மை தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டது.

மற்ற இனங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் சீனாவின் 250 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு இனம் சீன கலாச்சாரத்தில் கலந்து விட்டது. தங்களின் தாய் மொழியை கடந்து பெரும்பாலான மஞ்சு இன மக்கள் சீன மொழியை பேசுகிறார்கள். இருப்பினும் ஒரு தனி இனச் சிறுபான்மையாக அங்கீகரிப்பதற்கான பல்வேறு விதமான தனித்த அடையாளங்கள் நீடிக்கின்றது.இவர்களின் பாரம்பரிய மொழி, எழுத்து, உடை, ஷாமன் மதம், பதாகை அமைப்பு போன்றவை இவர்களை தனித்துவமாகக் காட்டுகின்றன. இன்று, பெரும்பாலான மஞ்சு மக்கள் சீனப் பிரதான கலாச்சாரத்தில் ஒன்றிணைந்தாலும், தங்கள் வரலாற்று அடையாளத்தைத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள்.

சீன மக்கள் குடியரசில் மஞ்சு இன மக்கள்

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட பிறகு மஞ்சு இன மக்களின் உரிமைகளை இன பிராந்திய தன்னாட்சி சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் பாதுகாக்கிறார்கள். மஞ்சு இன மக்கள் உட்பட சிறுபான்மையினரின் அரசியல் பொருளாதார கலாச்சார துறைகளில் சம உரிமைகளும் தன்னாட்சி உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது மஞ்சு இன மக்களின் பொதுவான செழுமைக்கு வழி வகுக்கிறது. 14வது ஐந்தாண்டு திட்டத்தில் மஞ்சு இன கிராமங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு 94 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மஞ்சு மொழி அழியும் நிலையில் இருப்பதால், அரசாங்கமும் கல்வி நிறுவனங்களும் பின்வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெய்லோங்ஜியாங் பல்கலைக்கழகத்தின் மஞ்சு ஆய்வு நிறுவனம் போன்றவை, நீண்ட காலமாக மஞ்சு மொழி கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆய்வாளர்கள், மஞ்சு மொழி இன்னும் பேசப்படும் சான்ஜியாசி கிராமம் போன்ற இடங்களுக்குச் சென்று, 20 முதியவர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு, முதல் நிலை மொழித் தரவுகளைப் பாதுகாக்கின்றனர்.

சீன-துங்குசிக் மொழி தரவுத் தளக் கட்டுமானம் மற்றும் ஆராய்ச்சி” என்ற தேசிய சமூக அறிவியல் முக்கியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்முக தரவுத் தளத்தை உருவாக்கி, மஞ்சு, ஹெஜென் போன்ற அழியும் நிலையிலுள்ள மொழிகளை முறையாகப் பாதுகாக்கிறது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் மஞ்சு-சீன இரு மொழி இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்பை Transformer மாதிரியின் அடிப்படையில் உருவாக்கி வருகின்றனர். இது மஞ்சு காப்பக ஆவணங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் மொழித் தகவல் செயலாக்கத்தில் உள்ள தொழில்நுட்ப சவால்களைத் தீர்க்க உதவும்.

மஞ்சு பாரம்பரிய கலைகளான காகித வெட்டு, எம்பிராய்டரி போன்றவை தேசிய மட்ட பண்பாட்டு அல்லாத பொருள் பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டு, பாரம்பரியக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு, படைப்பு கலைப் பொருட்கள் மூலம் அவை உயிர்ப்புடன் வைக்கப்படுகின்றன. மேலும், கிராமங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் தனித்துவமான கலாச்சார நினைவுகள் பாதுகாக்கப்படுகின்றன.

மஞ்சு இன மக்களின் கல்வியறிவு நிலை, சீனாவின் மற்ற இனக்குழுக்களுடன் ஒப்பிடுகையில், வரலாற்று ரீதியாகவும் தற்போதும் சிறப்பாக உள்ளது. கிங் வம்சத்தில் மஞ்சு இன மக்கள் ஆட்சியாளர் இனமாக இருந்த காரணத்தால், மஞ்சு மக்களுக்கு கல்வி மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு வாய்ப்புகள் இருந்தன. இந்த கல்வி மரபு தனியார் பள்ளிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டது. அவை கன்பூசியன் கிளாசிக்ஸ் மற்றும் மஞ்சு மொழி, வில்வித்தை போன்றவற்றில் கல்வி கற்பித்தன.

1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி மஞ்சு இனத்தில், ஒவ்வொரு 10,000 பேரில் 1,652.2 பேர் பல்கலைக்கழக கல்வி பெற்றிருந்தனர். இது தேசிய சராசரியான 139.0 மற்றும் ஹான் சீனர்களின் 143.1 ஐ விட மிக அதிகம். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுத்தறிவு இல்லாதவர்களின் விகிதம் 1.41% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 22.21% மற்றும் ஹான் சீனர்களின் 21.53% ஐ விட மிகக் குறைவு. மஞ்சு இனத்தில் பல்கலைக்கழக கல்வி பெற்றவர்களின் விகிதம் 7.58% ஆகவும், உயர்நிலைப் பள்ளி கல்வி பெற்றவர்கள் 20.35% ஆகவும் இருந்தனர். இவை ஹான் மற்றும் பிற இனக்குழுக்களை விட அதிகம். அவர்களின் கல்வியறிவு இல்லாத விகிதம் மற்ற இனக்குழுக்களை விட குறைவாக இருந்தது.

மஞ்சு கலாச்சாரம் சீன நாகரிகத்தின் முக்கிய பகுதி என்பதை உணர்ந்து, அதன் பாதுகாப்பிற்கு வரலாற்று மற்றும் தற்போதைய முக்கியத்துவம் உண்டு என்பதாகும். முன்னாள் பிரதமர் சௌ என் லாய் குறிப்பிட்டது போல், மஞ்சு இனம் வரலாற்றில் நாட்டின் ஒற்றுமைக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. எனவே, புதிய சீனாவில் அனைத்து இனங்களும் செழுமையை நோக்கி நகர வேண்டும்.

அ.பாக்கியம்

84 நித்திய நெருப்பின் எழுச்சியும் இணைப்பும்

 



சீனாவில் இருக்கக்கூடிய 56 இனக்குழுக்களில் ஐந்து இனக் குழுக்கள் வரலாற்று ரீதியாக தனித்தன்மை வாய்ந்தவைகளாகவும் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடைய இனக்குழுக்களாகவும் உள்ளது. சன் யாட் சன் தலைமையிலான குடியரசு ஆட்சி காலத்தில் சீனாவை ஐந்து இனங்களின் ஒன்றியம் என்று அழைத்தார். இவற்றில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஹான் இனம் மற்றும் மங்கோல், மஞ்சு, திபெத்து, ஹய் இனங்கள் ஆகியவையே அந்த ஐந்து இனங்களாகும். இவற்றில் மங்கோலிய இனமும் வரலாற்று ரீதியாகவும் கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாகவும் தனித்தன்மை நிறைந்ததாக இருக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பாகவே உள் மங்கோலியா என்ற தன்னாட்சி பகுதியை அமைத்தார்கள். சீனாவில் உருவாக்கப்பட்ட முதல் தன்னாட்சி பகுதி இதுவாகும். அது மட்டுமல்ல வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் தேசிய இனங்கள் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையும் இதில் வெளிப்பட்டது. 1947 ஆம் ஆண்டு மே 1ம் தேதி உள் மங்கோலியா தன்னாட்சி பிரதேசம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைப்படி அதன் தலைமையில் நிறுவப்பட்டதாகும். 1940 ஆம் ஆண்டு முற்பகுதியில் சீன ஜப்பானுக்கு இடையிலான இரண்டாம் போர் நடைபெற்றது. அப்போது உள் மங்கோலியா பிரதேசத்தில் பல்வேறு அரசியல் சக்திகள் இயங்கின. ஜப்பான் மங்கோலிய மக்களை இன ரீதியாக சீனர்களுக்கு எதிராக திசை திருப்பும் பணியினை தீவிரமாக செய்து கொண்டிருந்தது. செங்கிஸ்கான் பாரம்பரியத்தை சீனர்களுக்கு எதிராக ஜப்பான் நிலை நிறுத்தியது. வரலாறு அவ்வாறாக இல்லை. யுவான் வம்சம் அதாவது மங்கோலியர்களின் ஆட்சி காலத்தில் ஒட்டுமொத்த சீனாவுடன் மங்கோலியா இணைந்து இயங்கி வந்தது. இந்தச் சூழலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தோழர் மாசேதுங்கும் அன்றைக்கு யுத்தத்தில் இணைந்து செயல்பட்ட கோமிங்தாங்க் கட்சியுடன் இணைந்து செங்கிஸ்கானின் நினைவிடத்தை தன்மயம் ஆக்கியது. இந்தப் பின்னணியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மங்கோலிய இன மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரித்து அவர்களையும் ஒருங்கிணைத்து சீனப் புரட்சியின் ஒரு பகுதியாக மாற்றுகின்ற கொள்கையை உருவாக்கி அமலாக்கியது.

1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் மே 1 வரை, உள் மங்கோலியாவின் வாங்யேமியோ (இன்றைய உலான்ஹோட் நகரம்) இல் தன்னாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலுடன், மங்கோலிய, ஹான், மஞ்சு, ஹுய், தாங்சியாங், ஓரோச்சென் உள்ளிட்ட பல இனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தன்னாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். இந்தத் தீர்மானத்தை மாசேதுங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு முழுமையாக ஆதரித்து செயல் வடிவம் கொடுத்தார்கள். இதன்படி 1947 மே ஒன்றாம் தேதி தன்னாட்சி பிரதேச அரசாங்கம் முறையாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் தோழர் மாசேதுங்கும் செயல்பட்டார்கள். இதன்படிதான் 1947 அன்று மே 1ஆம் தேதி உள் மங்கோலியா தன்னாட்சி அரசாங்கம் முறையாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன சமத்துவம் மற்றும் பிராந்திய தன்னாட்சிக் கொள்கையின் முதல் நடைமுறை செயல்பாடாகும் என்பதை சீன மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. 1949 இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதி அதிகாரப்பூர்வமாக மாகாண நிலை நிர்வாகப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டு இன்றுவரை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. உள் மங்கோலியா என்ற தன்னாட்சிப் பிரதேச நிறுவப்பட்டது மட்ட மல்ல இதர மாகாணங்களில் அதிகமாக வாழக்கூடிய மங்கோலிய மக்களுக்கான தன்னாட்சி பிராந்தியங்களும், தன்னாட்சி மாவட்டங்களும்  அந்த மாகாண அதிகாரத்துக்கு உட்பட்டு அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட பிராந்தியம் மற்றும் மாவட்டங்களில்  குறிப்பிடத்தக்கது , சின்ஜியாங்கில் உள்ள போர்டாலா மற்றும் பாயிங்குவோலெங் ஆகிய இரண்டு மங்கோலிய தன்னாட்சிப் பிராந்தியங்களும், கிங்ஹாயில் உள்ள மங்கோலிய மற்றும் கசாக் தன்னாட்சிப் பிராந்தியமும், சின்ஜியாங், கிங்ஹாய், கான்சு, ஹெய்லாங்ஜியாங், ஜிலின் மற்றும் லியோனிங் ஆகிய மாகாணங்களில் உள்ள ஏழு தன்னாட்சி மாவட்டங்களும் அடங்கும். சீனாவில் உள்ள மற்ற அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவித்து வரும் மங்கோலியர்கள், நாட்டின் உண்மையான எஜமானர்களாக அவர்களுடன் இணைந்து நாட்டை நிர்வகித்து வருகின்றனர்.

 

இத்துடன் மங்கோலிய இன வரலாற்றையும் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. மங்கோல் என்பது ஆரம்ப காலத்தில் எர்குணா நதிக்கரையில் சுற்றித்திரிந்த ஒரு பழங்குடி இன மக்களின் பெயராக இருந்தது. இவர்களின் குடியேற்றம் மேற்கு பகுதி மற்றும் கிழக்குப் பகுதியை நோக்கி மாறிக் கொண்டிருந்தது. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மங்கோலியப் பழங்குடியைச் சேர்ந்த தெமுஜின், இந்தப் பழங்குடியினர் அனைவரையும் ஒன்றிணைத்து, மங்கோல் என்றழைக்கப்பட்ட ஒரு புதிய தேசிய சமூகத்தை உருவாக்கினார்

மங்கோலிய இனத்தின் வரலாறு பழமையானது. அவர்கள் "நித்திய நெருப்பு" என்று பொருள்படும் "மங்கோல்" என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு பாரம்பரிய நாடோடி இனமாகும். 1206 ஆம் ஆண்டு தெமுஜின் (Temujin) ஓனோன் நதிக்கரையில் ஒரு குல மாநாட்டை நடத்தினார். அதில் தெமுஜினுக்கு செங்கிஸ்கான் என்ற பட்டம் சூட்டப்பட்டது. கான் என்பது அரசன் அல்லது தலைவன் என்று பொருள்படும். செங்கிஸ் என்பது பெருங்கடல் அல்லது அகண்ட விரிந்த எனப் பொருள்படும். 'தெங்கிஸ்' எனும் மங்கோலிய வார்த்தையிலிருந்து உருவானது. அனைத்து மங்கோலிய இனக்குழுக்களின் மாபெரும் கானாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பிரபுத்துவ ஆட்சியின் கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவ கானேட் நிறுவப்பட்டது. இது மங்கோலிய சமூகத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது. தெமுஜின் அரியணை ஏறிய உடனேயே பெரிய அளவிலான இராணுவ வெற்றிகள் தொடர்ந்தன. 1211 மற்றும் 1215 ஆம் ஆண்டுகளில், அவர் கின் அரசுக்கு (1115-1234) எதிராக பெரும் தாக்குதல்களைத் தொடுத்து, சோங்டுவைக் (இன்றைய பெய்ஜிங்) கைப்பற்றினார். 1219 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் மேற்கத்தியப் படையெடுப்பைத் தொடங்கி, மத்திய ஆசியா மற்றும் தெற்கு ரஷ்யா வரை தனது அதிகார வரம்பை விரிவுபடுத்தினார். அவர் 1227 இல் இறந்தார். மங்கோலியப் படையினர் சிறுவயது முதலே குதிரை ஏற்றத்திலும், குதிரையின் மீதிருந்து அம்பு எய்வதிலும் வல்லவர்கள். செங்கிஸ்கான் தனது படையினரைப் பயன்படுத்திய தந்திரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. எடுத்துக்காட்டாக, விரட்டும் எதிரிகள் மீது பின்னோக்கித் திரும்பி அம்பு எய்யும் உத்தி மூலம் பல ஐரோப்பியப் படைகளை வீழ்த்தினார். வெறும் 90,000 படைகளைக் கொண்டு, 10 லட்சம் வீரர்களைக் கொண்ட சீனப் படையைத் தோற்கடித்தார். உலகின் முதல் தபால் துறையை நிறுவியவர். தனது பேரரசில் மத நல்லிணக்கத்தைப் பேணினார். மேலும், ஏழைகளுக்கு வரி விலக்கு அளித்த முதல் அரசர்களில் ஒருவராவார்

1260-ல், குப்லாய் கான் (1215-1294) மாபெரும் கான் ஆனார். அவர் தனது தலைநகரை கோபி பாலைவனத்திற்கு வடக்கே இருந்த ஹெலினிலிருந்து யான்ஜிங்கிற்கு மாற்றினார், அது பின்னர் தாது (மாபெரும் தலைநகரம்) எனப் பெயர் மாற்றப்பட்டது. 1272-ல் அவர் யுவான் வம்சத்தை (1206-1368) நிறுவினார். 1279-ல் தெற்கு சாங் வம்சத்தை (1127-1279) அடக்கி, சீனா முழுவதையும் தனது மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

1360 ஆம் ஆண்டுகளில் மங்கோலியர்களின் யுவான் வம்சம் வீழ்ச்சி அடைந்து மிங் வம்சம் வெற்றி பெற்று மங்கோலியாவை தனது ஆட்சிக்கு உட்பட்டதாக மாற்றியது. இதைத்தொடர்ந்து 1644 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிங் அதாவது மஞ்சு வம்சம் ஒட்டுமொத்த மங்கோலியாவையும் மத்திய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஒன்றிணைத்தது.

தற்போது இருக்கிற உள் மங்கோலியா சீன நாட்டின் தன்னாட்சி பிரதேசமாகவும் வெளி மங்கோலியா தனி நாடாகவும் இருப்பதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுகிறது. உள் மங்கோலியா 1635 ஆம் ஆண்டில், மங்கோலியத் தலைவர் லிக்டன் கானின் மகன் எஜெய் கான், மஞ்சுக்குப் பேரரசரிடம் சரணடைந்தார். இதனுடன் உள் மங்கோலியப் பகுதி மஞ்சு ஆட்சியின் கீழ் வந்தது. இவர்கள் ஒப்பீட்டளவில் முன்னதாகவே கீழ்ப்படிந்ததால், "உள்" மங்கோலியா என்று அழைக்கப்பட்டனர்.

            வெளி மங்கோலியா கல்கா (Khalkha) மங்கோலியர்கள் என்று அழைக்கப்பட்ட வெளி மங்கோலியப் பகுதி, மேற்கு மங்கோலியர்களான ஜுங்கர்களின் (Dzungars) அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, 1691 ஆம் ஆண்டில் மஞ்சு பேரரசரிடம் சரணடைந்தது. இவர்கள் பின்னர் கீழ்ப்படிந்ததால், "வெளி" மங்கோலியா என்று அழைக்கப்பட்டனர். கிங் வம்சம் இவ்விரு பகுதிகளையும் வெவ்வேறு நிர்வாக அமைப்புகளின் கீழ் இணைத்து, இரு மங்கோலியாக்களுக்கும் இடையிலான பிரிவை நிலைநிறுத்தியது.

பல நூற்றாண்டுகள் தனித்தனி அரசியல் ஆட்சியின் கீழ் இருந்ததால், அவர்களுக்கு இடையே சில வேறுபாடுகள் உருவாகியுள்ளன. சீனாவின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக உள்ள உள் மங்கோலியாவில், பல நூற்றாண்டுகளாக ஹான் சீனர்களின் குடியேற்றமும், கலப்புத் திருமணங்களும் அதிகரித்ததால், அங்கு "சீனமயமாக்கல்" (Sinicization) ஒரு முக்கிய பண்பாடாக உருவெடுத்துள்ளது

உள் மங்கோலியா இன்னும் பாரம்பரிய மங்கோலிய எழுத்து முறையைப் பயன்படுத்துகிறது. ஆனால், மங்கோலிய நாடு, சோவியத் தாக்கத்தின் காரணமாக, சிரில்லிக் (Cyrillic) எழுத்து முறையைப் பயன்படுத்துகிறது. அல்டாயிக் மொழிக்குடும்பத்தின் மங்கோலியக் குழுவைச் சேர்ந்த, தங்களுக்கென சொந்தமான பேச்சு மற்றும் எழுத்து மொழியைக் கொண்டுள்ள மங்கோலியர்கள், உள் மங்கோலியன், பராக்-புர்யாட் மற்றும் உயிர்அத் ஆகிய மூன்று வட்டார மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். மங்கோலிய எழுத்துமுறையானது, 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹுய்ஹு அல்லது பண்டைய உய்குர் எழுத்துமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு திருத்தப்பட்டு, இன்றுவரை பயன்படுத்தப்படும் வடிவமாக மேம்படுத்தப்பட்டது.

மங்கோலியர்கள் ஒரு சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் சீனாவிற்கு கலாச்சாரம் மற்றும் அறிவியலில் அழியாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர். அவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் தங்கள் எழுத்துமுறையை உருவாக்கினர், பின்னர் பல சிறந்த வரலாற்று மற்றும் இலக்கியப் படைப்புகளை உருவாக்கினர். 'டா யுவான் யி டோங் ஷி' (மாபெரும் யுவான் வம்சத்தின் கீழ் சீனாவின் ஒருங்கிணைப்பு) என்பது யுவான் அரசவையின் ஆதரவின் கீழ் தொகுக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற புவியியல் ஆய்வுப் படைப்பாகும். அக்காலத்தில் நகரங்கள் மற்றும் குறிப்பாக அரண்மனைகளின் கட்டுமானத்தில் மங்கோலியக் கட்டிடக்கலையும் தனித்துவமாக இருந்தது.மிங் வம்ச காலத்தில் மங்கோலியர்களால் பண்பாட்டில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன

மருத்துவ அறிவியல், வானியல் மற்றும் நாட்காட்டி ஆகியவற்றில் மங்கோலியர்களின் சாதனைகளுக்கு ஹான் மற்றும் திபெத்தியர்களின் செல்வாக்கே காரணமாகும். மங்கோலிய மருத்துவம் அதன் லாமாயிச சிகிச்சைக்காக மிகவும் அறியப்படுகிறது; இது காய அறுவை சிகிச்சைக்கும், எலும்பு முறிவுகளைச் சரிசெய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் மருத்துவ அறிவியலை மேலும் மேம்படுத்துவதற்காக, மங்கோலியர்கள் பல ஹான் மற்றும் திபெத்திய மருத்துவப் படைப்புகளை மங்கோலிய மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.

கணிதம் மற்றும் நாட்காட்டித் துறையில், முன்னேறியதற்கான பெருமை  மங்கோலிய வானியலாளரும் கணிதவியலாளருமான மிங் அந்துவுக்கு சேரும். வட்டத்துண்டுகளின் பரப்பளவைக் கண்டறிவதற்கான விரைவான முறை மற்றும் ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதத்தை மதிப்பிடுதல் என்ற அவரது படைப்பும் (அவரது மகனாலும் மாணவர்களாலும் முடிக்கப்பட்டது), சீனாவின் கணித வளர்ச்சிக்கு ஒரு பங்களிப்பாகும்.சின்ஜியாங்கில் அவர் மேற்கொண்ட புவியியல் ஆய்வுகளின் காரணமாகவே, அறிவியல் முறைகளில் வரையப்பட்ட சீனாவின் முதல் நிலப்படத் தொகுப்பான 'பேரரசின் முழுமையான நிலப்படத் தொகுப்பு' முடிக்கப்பட்டது.

திபெத்திய பௌத்தம் (லாமாயிசம்) இங்குள்ள மங்கோலிய இனத்தவர்கள் பெரும்பாலும் பின்பற்றும் மதமாகும். பௌத்தம் மங்கோலியர்களிடம் யுவான் வம்சத்தின் போது அறிமுகமானது, ஆனால் மிங் மற்றும் கிங் வம்சங்கள் இதைப் பரப்புவதில் தீவிர முயற்சி எடுத்தன. அப்போதைய சீன அதிகாரிகளின் பார்வையில், "பௌத்தம் இரத்தப்பாதிப்பைத் தடுக்கும்" என்பதால், இது போர்க்குணமிக்க மங்கோலியர்களை அடக்கும் ஒரு அரசியல் கருவியாகவே பார்க்கப்பட்டது. வரலாற்றில் இது "மங்கோலியாவின் அரச மதமாக" இருந்தது. தற்போதும் இங்கு பல பிரபலமான லாமா மடங்கள் உள்ளன. சீன மற்றும் மங்கோலிய நாட்டுப்புற மதங்கள் பௌத்தத்தை விட அதிகமானோர் பின்பற்றுவதாக மதிப்பிடப்பட்டாலும், இவை பெரும்பாலும் பாரம்பரிய சாமனிய நம்பிக்கைகள், மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை வழிபாடு போன்ற உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் கலந்தவையாகும். உள் மங்கோலியா பல மதங்கள் ஒருங்கிணையும் ஒரு பகுதி. திபெத்திய பௌதம் மங்கோலியர்களின் முக்கிய மதமாகத் தொடர்ந்தாலும், இப்பகுதியில் பல்வேறு மதங்களின் தாக்கமும் உள்ளது.

சீனாவில் சீர்திருத்தம் மற்றும் திறப்பு கொள்கை அறிவிக்கப்பட்ட பிறகு உள் மங்கோலியாவின் பொருளாதார மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது. மக்களின் வறுமை முழுமையாக துடைத்தெறியப்பட்டது.1978-ஆம் ஆண்டு முதல், கால்நடை மேய்ப்பர்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் அவர்கள் செய்யும் வேலையின் அளவைப் பொறுத்து அமையும் 'பணிப் பொறுப்பு முறை' இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது மங்கோலிய மக்களின் உற்சாகத்தை மேலும் தூண்டியுள்ளது.

 

இவையெல்லாம் மங்கோலிய மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. முற்காலத்தில், அவர்களில் பெரும்பாலோர் பழைய கூடாரம் போன்ற வாழ்க்கையின் அத்தியாவசிய வசதிகள் இன்றி, பட்டினியில் வாழ்ந்தனர். இன்று அவர்களிடம் சுத்தமான படுக்கைகள் மற்றும் புதிய போர்வைகளுடன் கூடிய நன்கு அலங்கரிக்கப்பட்ட கூடாரங்கள் உள்ளன. தையல் இயந்திரங்கள், வானொலிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைநோக்கிகள் மற்றும் பால் பிரிப்பான்கள் ஆகியவை சாதாரண மங்கோலிய மேய்ப்பர்களுக்கு இனி புதுமையானவை அல்ல. மங்கோலியக் குடியிருப்புகளில் கண்ணாடிச் சன்னல்களுடன் கூடிய பல புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

உள் மங்கோலியாவின் பொருளாதார வளர்ச்சி, அதன் பாரம்பரிய வள ஆதாரங்களில் இருந்து, பசுமைத் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்ப உற்பத்தி, மற்றும் வெளிப்புறத் திறப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு மாறும் சக்தியாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.7% உயர்ந்து. 2.671 டிரில்லியன் யுவான் ஆக உயர்ந்தது, இது தேசிய அளவில் நடுத்தர நிலைப் பொருளாதாரமாக திரும்பியுள்ளதைக் குறிக்கிறது. உள் மங்கோலியா அதன் கரி மற்றும் அரிய பூமி வளங்களுக்கு பெயர் பெற்றது. உண்மையில், இது தேசிய அளவிலான அரிய பூமி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது. புதிய எரிசக்தி திறன் 100 மில்லியன் கிலோவாட்களைத் தாண்டியுள்ளது. "14வது ஐந்தாண்டுத் திட்டம்" காலத்தில், இப்பகுதி 30 மில்லியன் டன்களுக்கு மேல் கார்பன் உமிழ்வைக் குறைத்து, 12 மில்லியன் டன் நிலக்கரிக்கு சமமான ஆற்றலைச் சேமித்துள்ளது. உயர் தொழில்நுட்ப உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியது, குறிப்பாக நவீன நிலக்கரி வேதிப் பொருட்கள் (+39.6%) மற்றும் அரிய பூமி (+32.0%) துறைகளில்.

தேசிய திறப்பின் ஒரு முக்கிய வாயில் "இரட்டை சுழற்சி" மாதிரியுடன் இணைந்து, உள் மங்கோலியா வடக்கு நோக்கிய திறப்புக்கான ஒரு முக்கியமான பாலமாக செயல்படுகிறது. 20 திறந்த துறைமுகங்கள் மற்றும் ரஷ்யா மற்றும் மங்கோலியாவுடனான எல்லைகள் மூலம், இது சர்வதேச வர்த்தகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில், துறைமுக சரக்கு போக்குவரத்து 112 மில்லியன் டன்களை எட்டியது, இது அனைத்து சீன எல்லைப்புற மாகாணங்களிலும் முன்னணியில் உள்ளது. விவசாய உற்பத்தித்திறன் இப்பகுதி உணவு உற்பத்தியில் "22வது தொடர் மிகுந்த அறுவடையை" பதிவு செய்து, 84.07 பில்லியன் கதிர்களை அறுவடை செய்தது. இது பால் (7.585 மில்லியன் டன்கள்) மற்றும் இறச்சி உற்பத்தியிலும் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது.

சீனாவின் தன்னாட்சி பிரதேசத்தில் இருக்கக்கூடிய இப்பகுதியில் திபெத்திய லாமா மதம் கூடுதலாக இருப்பதால் கலாய்லாமா வகையறாக்கள் மூலம் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் சீனாவிற்கு எதிராக செயல்படுவதற்கான தொடர் சதி வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள் இவை அனைத்தையும் சீனா முறியடித்து சீன சோசலிசத்தின் ஒரு பகுதியாக மங்கோலிய மக்களையும் இணைத்து முன்னேறி வருகிறது.

அ. பாக்கியம்

 

 

 

83 யார் இந்த "ஹுய்"?

 


தேசிய இனங்கள் குறித்து மார்க்சிய கோட்பாடுகளில் தோழர் ஜோசப் ஸ்டாலின் எழுதிய கோட்பாடுகள் பொதுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தக் கோட்பாடுகளுக்கு சவால் விடக்கூடிய முறையில் தான் சீனாவில் ஹுய் தேசிய இன பிரச்சனை அல்லது இனச் சிறுபான்மையினரின் பிரச்சினை இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனச் சிறுபான்மை குறித்த கோட்பாடுகளை பொதுவாக உருவாக்கி இருந்தாலும் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் அவற்றை அமலாக்கியதின் மூலமாக இந்த சவால்களை சந்தித்தது.

இனப் பிரச்சினை குறித்த ஆய்வு அலுவலகம்

1913 ஆம் ஆண்டு ஜோசப் ஸ்டாலின் எழுதிய மார்க்சியமும் தேசிய இன பிரச்சனையும் என்ற நூலில் தேசிய இனத்தை நான்கு பண்புகளின் அடிப்படையில் வரையறுத்து இருப்பார். பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுவான கலாச்சாரத்தில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம் என்பதுதான் அந்த வரையறை ஆகும். ஆனால் சீனாவில் ஹுய் இனச் சிறுபான்மையினர் இந்த வரையறைக்குள் முழுமையாக அடங்கவில்லை.

1935 முதல் 1949 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமாக இருந்த யானான் (வடக்கு ஷான்சி) பகுதியிலும் அதைச் சுற்றியும் பல மங்கோலியர்களும் சீன மொழி பேசும் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்.1940-இல், சீன கம்யூனிஸ்ட் கட்சி 'இனப் பிரச்சினை குறித்த ஆய்வு அலுவலகத்தை' நிறுவியது; இதன் நோக்கம் இனப் பிரச்சினை குறித்து முறையாக ஆய்வு செய்து, அது தொடர்பான பகுப்பாய்வுகளை வெளியிடுவதாகும். ஹுய் (Hui) மற்றும் மங்கோலியர்கள் (Mongols) தொடர்பான பிரச்சினைகள் குறித்த இரண்டு முக்கிய கொள்கை வரைவுகளும் 1940-இல் மத்தியக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. யனான் (Yan’an) காலகட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட இந்த ஆய்வுகள், கம்யூனிஸ்டுகளின் இனக் கொள்கைக்கான கருத்தியல் அடிப்படையை உருவாக்கின. லி வெய்ஹான் (Li Weihan) எழுதிய ஹுய்ஹுய் இனப் பிரச்சினை என்ற சிறுநூல், கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பிறகு சீனாவின் முஸ்லிம் மக்கள் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) மேற்கொண்ட இனக் கொள்கைக்கான அடித்தளத்தையும் அமைத்தது. இந்தச் சிறுநூல், சீன மொழி பேசும் முஸ்லிம்களை ஒரு தனி 'மின்சு'வாக (இனக்குழுவாக) வரையறுத்தது; இதன் மூலம் அவர்கள் ஹான் (Han) இனத்தவரிடமிருந்தும், பிற முஸ்லிம் சமூகங்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டப்பட்டனர்.

மங்கோலிய சிறுபான்மை மக்கள் பற்றி வரையறை செய்கிற பொழுது ஜோசப் ஸ்டாலின் உருவாக்கிய கோட்பாடுகள் பொருத்தப்பாடாக இருந்தது. காரணம் மங்கோலியர்கள் தங்களின் சொந்த வரலாறை கொண்டிருந்தார்கள். நன்கு வரையறைக்கப்பட்ட பிரதேசத்தில் கிட்டத்தட்ட பிரத்தியேகமான முறையில் வாழ்ந்தனர். தங்களது சொந்த மொழியை பயன்படுத்தினார்கள். விவசாயத்திற்கு மாற்றாக நாடோடி மேய்ச்சல் வாழ்க்கையை பின்பற்றினார்கள். உணவு, இசை, குதிரை ஏற்றம் மற்றும் மல்யுத்தம் போட்டிகள் போன்றவற்றிலும், பொதுவான தங்கள் நாட்டுப்புற முறைகளால் குறிப்பிட்ட அளவு ஒரே மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்களை ஒரு இனமாக அங்கீகரிப்பதில் பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லை.

ஆனால் சீன மொழி பேசும் முஸ்லிம்கள் அதாவது ஹுய் என்று அழைக்கப்பட்ட இனத்தினர் மங்கோலியர்கள் போல் இல்லை. மிங்க் வம்ச ஆட்சி காலத்தில் இருந்து, சீனாவை தளமாகக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ஹுய் இன முஸ்லிம்கள் மக்கள் வாழ்ந்தார்கள். இவ்வாறு வாழக்கூடியவர்களுக்கு மத்தியில் பிரதேசங்களுக்கு ஏற்ற வேறுபாடுகளும் இருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் வசிக்கக்கூடிய மக்கள் அங்குள்ள உள்ளூர் சமூகத்துடன் பழகி அவற்றையும் உள்வாங்கிக் கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். உள்ளூரில் இருந்த இதர மக்களுடன் தொடர்பு கொண்டு உறவாடி தங்கள் பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொண்டனர். கலப்புத் திருமணங்கள் செய்ததன் மூலம் சில இடங்களில் உடல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு எந்தப் பகுதியில் வாழ்ந்தார்களோ அந்தப் பகுதியின் சீர்களைப் போலவே காட்சியளித்தார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீனா முழுவதும் ஹுய் இன மக்கள் முன்மாதிரியாக செயல்படக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் எதுவும் இல்லை. ஹுய் இன மக்கள் அப்படிப்பட்ட ஒரு பகுதியை ஆக்கிரமித்தும் குடியேறவில்லை. மேலே சொன்ன மிக முக்கியமான அம்சங்கள் ஒரு தேசிய இனம் என்ற வரையறைக்குள் முழுமையாக உட்படுத்த முடியாத நிலைமை இருந்ததை சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டது. இருந்தாலும், இவர்களுக்கான சில பொதுவான அடையாளங்கள் மேலோங்கி இருந்ததை சீன கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் எடுத்துக் கொண்டது.

"ஹுய்" இனக்குழு தோற்றம் பரவல்

சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட சிறுபான்மை இனக்குழுக்களில் ஒன்றான ஹுய் இனம், அதன் தனித்துவமான தோற்றம், பரந்த பரவல் மற்றும் இஸ்லாமியக் கலாச்சாரம் ஆகியவற்றால் சிறப்புத்தன்மை அடைகிறது. ஹுய் இனத்தின் உருவாக்கம் பல நூற்றாண்டுகள் நீடித்த ஒரு சிக்கலான இனக்கலப்பு செயல்முறையின் விளைவாகும்.

இன்றைய "ஹுய்" இனக்குழு, பல்வேறு காலகட்டங்களில் சீனாவிற்கு வந்த பல முஸ்லிம் சமூகங்களின் இணைப்பிலிருந்து உருவானது. சுமார் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் (டாங் வம்சம்), அரேபிய மற்றும் பெர்சிய முஸ்லிம் வணிகர்கள் கடல் மற்றும் பட்டுப் பாதை வழியாக சீனாவிற்கு வந்தனர். அவர்கள் குவாங்சோ, சியான் போன்ற நகரங்களில் குடியேறி, உள்ளூர் சீனர்களை மணந்தனர். இவர்கள் "ஃபான்கே" (வெளிநாட்டு விருந்தினர்கள்) என்றும், அவர்களின் சந்ததியினர் "துஷெங் ஃபான்கே" (உள்நாட்டில் பிறந்த வெளிநாட்டு விருந்தினர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர்.

13 ஆம் நூற்றாண்டில் செங்கிஸ்கானின் மேற்கத்திய படையெடுப்புகளின்போது, மத்திய ஆசியா, பாரசீகம் மற்றும் அரேபியாவிலிருந்து ஏராளமான முஸ்லிம்களும், படை  வீரர்கள், கைவினைஞர்கள், அறிஞர்கள் என பலதரப்பட்டவர்கள் குடியேறவோ அல்லது கட்டாயமாக இடம்பெயர்க்கவோ செய்யப்பட்டனர். இவர்கள் சீனா முழுவதும் பரவி, குறிப்பாக இராணுவ முகாம்களில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டனர். இவர்கள் "ஹுய்" அல்லது "ஹுய்ஹுய்" என்று அழைக்கப்பட்டனர்.

யுவான் வம்ச ஆட்சிகாலத்தில் (1271–1368) இந்த இரண்டு பிரிவினரும் இணைந்தனர். இவர்கள் சீன மொழி மற்றும் கலாச்சாரத்தைத் தழுவியதுடன், இஸ்லாத்தைப் பகிர்ந்து கொண்ட இந்த சமூகமே இன்றைய ஹுய்களின் முக்கிய மூதாதையர்களானது. யுவான் வம்ச ஆட்சிகாலத்தில்  "ஹுய்ஹுய்" என்பது முதன்மையாக ஒரு இனம் அல்லது புவியியல் அடையாளமாக மாறிவிட்டது.  மிங் வம்ச(1368-1644) ஆட்சி காலத்தில் மத்திய ஆசியா, அரேபியா, பெர்சியா ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள், ஹான் சீனர்கள், மங்கோலியர்கள், உய்குர்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்களுடன் நீண்டகாலம் கலந்து வாழ்ந்ததன் விளைவாக, மிங் வம்ச காலத்தில் ஹுய் ஒரு தனி இனக்குழுவாக உருவெடுத்தது. சமீபத்திய மரபணு ஆய்வுகள், தற்கால ஹுய் மக்களின் மரபணுப் பங்களிப்பில் கிட்டத்தட்ட 70% கிழக்கு ஆசியப் பகுதிகளிலிருந்தும், ஏறக்குறைய 30% மேற்கு யூரேசியப் பகுதிகளிலிருந்தும் வந்திருப்பதைக் காட்டுகின்றன. இது அவர்களின் உருவாக்கத்தில் உள்ளூர் மக்களின் பெரும் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.

தனித்துவ தன்மையின் வெளிப்பாடு

இந்த பன்முகத் தோற்றம் கொண்ட சமூகம் எவ்வாறு ஒரு தனித்துவமான "ஹுய்" இனக்குழுவாக உருவெடுத்தது?

 இவர்களை இணைப்பதற்கு பொதுவான நம்பிக்கை மற்றும் சமூக அமைப்பு இஸ்லாம் மைய அடையாளமாக இருந்தது. "ஜியாஃபாங்" (பள்ளிவாசல் சமூகம்) என்ற அமைப்பு, பரவலாக வாழ்ந்த ஹுய் மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படை அலகாக செயல்பட்டது. பள்ளிவாசல் மத நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி, சமூகக் கூட்டங்களுக்கும் மையமாக விளங்கியது. காலப்போக்கில், இஸ்லாமிய சூஃபி மாயவாதமும் சீனக் குல முறையும் இணைந்து "மென்ஹுவான்" (ஆணாதிக்க மத அமைப்பு) எனும் தனித்துவமான முறையும் உருவானது. பள்ளிவாசலைச் சுற்றி மையம் கொண்ட இந்த சமூகங்கள், மத மற்றும் சமூகப் பணிகளை மேற்கொண்டன.

ஆரம்பத்தில் அரபி, பெர்சிய மற்றும் சீன மொழிகளைப் பேசிய இவர்கள், காலப்போக்கில் மாண்டரின் சீன மொழியையே முக்கிய மொழியாகத் தழுவினர். இருப்பினும், தங்கள் இஸ்லாமியப் பெயர்கள் மற்றும் பல கலாச்சாரப் பழக்கவழக்கங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். இது அவர்களை ஹான் சீனர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

ஹுய் இனத்தவர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் மூன்று விஷயங்கள்  மற்றவர்களிடம் இருந்து முழுமையாக வேறுபட்டு இருந்தது. இது இவர்களை தனியான இனச்சிபான்மையினராக வகைப்படுத்த மேலும் வலுசேர்த்தது.

1.மொழி: ஹுய் மக்கள் சீனா முழுவதும் பரந்து வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய மொழி சீன மொழியின் மாண்டரின் வகையாகும். இது இவர்களை வெவ்வேறு துருக்கிய அல்லது ஈரானிய மொழிகளைப் பேசும் பிற சீன முஸ்லிம் இனக்குழுக்களிடமிருந்து (உய்குர்கள் போன்றோர்) வேறுபடுத்துகிறது . பல ஹுய் மக்கள் சீன மொழியுடன் சில அரபு அல்லது பாரசீக வார்த்தைகளையும் தக்க வைத்துள்ளனர் .

2.இஸ்லாம்:  வரலாற்று ரீதியாகவும் இன்றும், இஸ்லாம் ஹுய் இன அடையாளத்தின் மிக முக்கியமான மையமாக உள்ளது. இந்தப் பகிரப்பட்ட நம்பிக்கையே இவர்களின் பல கலாச்சார பழக்கவழக்கங்களுக்கு அடித்தளமாக அமைகிறது. இவர்கள் இஸ்லாமிய மதத்தை (சுன்னி இஸ்லாம், ஹனஃபி பள்ளி) பின்பற்றுகின்றனர். இது அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையிலும், பாரம்பரியங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மரபுகளின் பிரதிபலிப்பாக, ஆண்கள் வெள்ளை அல்லது கருப்பு நிற தொப்பிகளை அணிவார்கள். பெண்கள் கருப்பு, வெள்ளை அல்லது பச்சை நிற தலையில் முக்காடு அணிவது வழக்கம்.

3.பொதுவான உணவுப் பழக்கவழக்கங்கள் (ஹலால்): இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும் ஹுய் மக்கள், பன்றி இறைச்சி, இரத்தம், மற்றும் சரியான இஸ்லாமிய முறையில் அறுக்கப்படாத விலங்குகளின் இறைச்சியை உண்பதைத் தவிர்க்கின்றனர். பன்றி இறைச்சி சீன உணவு கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிப்பதால், இந்தத் தவிர்ப்பே அவர்களை ஹான் சீனர்களிடமிருந்து மிகவும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கிய கலாச்சார அடையாளமாகும். மது அருந்துவதையும் தவிர்க்கின்றனர். இவர்களின் உணவு வகைகளில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது.

மொழி அடிப்படையும் கருத்தியல் மோதல்களும்

சீனாவில் இனச்சிறுபான்மை வளர்ச்சிப்போக்கில்  ஹுய் இன உருவாக்கும் வேறுபட்ட முறையில் அமைந்தது. குயிங் வம்ச(1644-1912)ஆட்சி காலத்தில் இனவியலாளர்கள் அதன் குடிமக்களை மொழியின் அடிப்படையில் பிரித்தனர், இதனால் சீன மொழி பேசும் ஹான் இனத்துடன் ஹீய் இன மக்களையும் இணைத்துவிட்டனர். இது பெரும் விவாதப்போக்கை உருவாக்கிவிட்டது. குயிங் வம்சத்தின் கடைசி ஆண்டுகளிலும், குடியரசுக் காலத்தின் துவக்கத்திலும் முஸ்லிம் அறிவுஜீவிகள் .குழப்பம், அறியாமை மற்றும் மாகாணவாதம் ஆகியவற்றை கடந்து தேசிய ஹுய் அமைப்புகளை உருவாக்க போராடினர்.

குயில் வம்ச பேரரசு நெருக்கடிகளில் இருந்தும் சமூகத்தில் டார்வின் இனிய சிந்தனைகளின் வெளிப்பாடுகளில் இருந்தும் அறிவுசார் சக்திகள் ஃபுல் இன மக்கள் ஒரு தனித்துவமான மரபணு ரீதியாக வரையறுக்கப்பட்ட மக்களாக அதாவது ஒரு இனமாக பார்க்கத் தொடங்கினார்கள். மறுபுறத்தில் மத குருமார்கள் இமாம்கள் இஸ்லாம் மட்டும்தான் உயிரினத்தின் அடையாளம் என்று கருத்துக்களை முன் வைத்தார்கள். சில இடதுசாரி அறிவுஜீபிகள் மரபணு ரீதியான வகைப்படுத்தப்பட்ட இனம் என்பதை ஆதரித்தனர். 1930 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த அறிவு ஜீவிகளின் ஆராய்ச்சியின் அடிப்படையில் சீன மொழி பேசும் முஸ்லிம்களை  ஹய்சு அல்லது ஹுய் ஹுய் minsu என்று குறிப்பிடத் தொடங்கியது.

புதிய சீனாவில் சீன மொழி பேசும் முஸ்லிம்களுக்கு ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் முஸ்லிம் அறிவு ஜீவிகள் மற்றும் அல்ல இஸ்லாமிய நவீனத்துவத்தால் ஈர்க்கப்பட்ட இமாம்களும் பொய் மக்களுக்கு பல நிறுவனங்களை உருவாக்கினார்கள். இந்த நிறுவனங்கள் சீன அரபு தொடக்கநிலை இடைநிலை மற்றும் சாதாரண பள்ளிகள் ஆகியவற்றை நடத்தினார்கள் இந்தப் பள்ளி நிறுவனங்களில் மதப் பாடங்களிலும் நவீன மதச்சார்பற்ற பாடத்திட்டத்தையும் இணைத்து நடத்தினார்கள். இஸ்லாமிய கன்பூசிய நீதியை அடிப்படையாகக் கொண்ட அறிஞர்கள் வெளிநாட்டு மொழிகள் கணிதம் அறிவியல் மற்றும் பிற நவீன பாடங்களை உள்ளடக்கிய கலப்பு இஸ்லாமிய சீன பாடத்திட்டத்தை கற்பிக்க பள்ளிகளை வடிவமைத்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பெரிய பின்னணியில் சீன மொழி பேசும் முஸ்லிம்கள் ஒரு புதிய சீனாவிற்குள் சாதகமாக வரையறுக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணியாக மாறியது. இந்த வகையில் ஒரு சீன இனக்குழுவாக உயிர் சமூகத்தை அங்கீகரிப்பதற்கு ஒரு சீன தேசிய அரசு உருவாக்கப்பட்ட பின்னரே சாத்தியம் என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தார்கள். இந்தப் பின்னணியில் தான் 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் புரட்சி நடைபெற்று சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது.

புரட்சிக்கு முந்தைய கள அனுபவம்

புரட்சிக்கு முந்தைய காலங்களிலிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி இனப்பிரச்சனைகளுக்கான படிப்பினைகளை களத்திலிருந்து பெற்றிருந்தது. 1935க்குப் பிறகு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜப்பானிய எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இஸ்லாமிய சமுகத்திலிருந்த நிலபிரபுக்கள் கோமிண்டாங் கட்சியில் இருந்து கொண்டு மக்களை குறிப்பாக ஏழை இஸ்லாமியர்களை சுரண்டினர். இந்த பின்னயில் இஸ்லாமிய மக்கள் CCP- யில் இணைந்தனர். ஜப்பான் மற்றும் கோமிண்டாங்கிற்கு எதிரான பரந்த சமூக கூட்டணியில் உறுதியாக இருந்த CCP , இந்த கட்டத்தில், மதம் அல்லது மதத் தலைமைக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. நீண்ட பயண காலத்திற்கு பிறகு, எட்டாவது பாதை இராணுவத்தில் போராடும் வடமேற்கு முஸ்லிம்களிடம் எட்கர் ஸ்னோ கீழ்கண்டவாறு கருத்துக்ளை பகிர்ந்து கொண்டார். சீனர்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள்; சீனர்கள்  முஸ்லிம் இரத்த த்தையும் முஸ்லீம்கள் சீன இரத்தத்தைக் கொண்டுள்ளோம்; நாம் அனைவரும் டாசுங் குவோவைச் சேர்ந்தவர்கள் [டா ஜோங்குவோ, அதாவது சீனா], எனவே நாம் ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்? நமது பொதுவான எதிரிகள் நில உரிமையாளர்கள், முதலாளிகள், வட்டிக்காரர்கள், நமது அடக்குமுறை ஆட்சியாளர்கள் மற்றும் ஜப்பானியர்கள். நமது பொதுவான நோக்கம் புரட்சி. ”

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஏற்கனவே சீனா ஒரு பல்லின நாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தது. ஏனெனில் அவர்களின் நீண்ட பயண காலத்தில் அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் மங்கோலியர்களை மட்டுமல்ல, குய்சோ, யுன்னான், சிச்சுவான் மற்றும் கிழக்கு திபெத்தின் கலாச்சார ரீதியாக வேறுபட்ட (மற்றும் கட்டுப்படுத்த கடினமாக) சீனரல்லாத மக்களையும் சந்தித்தனர்.

இந்த அனுபவத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு சீன மக்கள் குடியரசு இன சிறுபான்மை மக்களுக்கான ஐந்து தன்னாட்சி பிரதேசங்களை உருவாக்கியது அவற்றில் ஒன்றுதான் நிங்சியா ஹுய் தன்னாட்சிப் பகுதி (Ningxia Hui Autonomous Region) 1958 ஆம் ஆண்டு இந்த தன்னாட்சி பிரதேசம் அமைக்கப்பட்டது. குறிப்பாக இது ஹுய் இன மக்களின் தன்னாட்சிப் பகுதியாகவும், மஞ்சள் ஆற்றின் (Yellow River) நாகரிகத்தின் தொட்டிலாகவும் விளங்குகிறது.

இதன் பரப்பளவு தோராயமாக 66,400 சதுர கிலோமீட்டர்கள். 2024 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, இங்கு சுமார் 72.9 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் ஹுய் இன மக்களின் எண்ணிக்கை சுமார் 36.69% ஆகும். நிங்சியா சீனாவின் முக்கியமான நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மையமாக விளங்குகிறது. 2024 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் (installed capacity) மொத்தத்தில் 50% ஐத் தாண்டியுள்ளது. நவீன நிலக்கரி வேதியியல், புதிய பொருட்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய தொழிற்கூட்டுகள் இங்கு முன்னிலையில் உள்ளன.

மஞ்சள் ஆற்றின் பாசன வசதி காரணமாக, இப்பகுதி தரமான கோதுமை, நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்குப் பெயர் பெற்றது. மேலும், கோஜி பெர்ரி (wolfberries) மற்றும் திராட்சை சாகுபடியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.

 

கடந்த நாற்பது ஆண்டுகளில், ஹெலன் மலை அடிவாரத்தில் பாலைவன நிலம் இப்போது சீனாவின் முதன்மையான திராட்சை தோட்டப் பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆண்டுக்கு 14 கோடி பாட்டில்கள் மதுவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளும் இங்கு உள்ளன.

2024 ஆம் ஆண்டில் நிங்சியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 550.3 பில்லியன் யுவான்களாக (சுமார் $76 பில்லியன்) இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 5.4% வளர்ச்சியாகும். மஞ்சள் ஆற்று நாகரிகம், மர்மமான மேற்கு சியா அரச கல்லறைகள், ஷாஹு ஏரி, மற்றும் பாலைவனக் காட்சிகள் போன்றவை முக்கிய ஈர்ப்புகளாகும். மேற்கு சியா அரச கல்லறை சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சுற்றுலாவும் வேகமாக வளர்ந்து வருகிறது; 2024 இல் கிராமப்புறங்களை 13.56 மில்லியன் பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

அ.பாக்கியம்

 

புதன், ஆகஸ்ட் 05, 2026

82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?

 

அ.பாக்கியம்


சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களும் அவதூறுகளும் கட்டுப்பாடின்றி பரவ மேற்கத்திய நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது. இதுமிக ஆபத்தான போக்காகும். எனவே உண்மைகளையும், எதார்த்தங்களையும், வெளி கொணர்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் மக்கள் ஒரு நடுநிலையான நியாயமான கண்ணோட்டத்தில் இருந்து தாங்களாகவே ஒரு முடிவுக்கு வர முடியும்.

முதல் பொய் என்னவென்றால் சுமார் பத்து லட்சம் உய்க்கூர் முஸ்லிம்கள் பயிற்சி முகாம் என்ற பெயரில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான்.

இது சீனாவுக்கு எதிரான ஒரு அமைப்பால் புனையப்பட்ட பொய்யாகும். அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற சீன மனித உரிமைகள் பாதுகாவலர்கள் (CHRD) என்ற அமைப்பு உய்குர் இனத்தைச் சேர்ந்த எட்டு பேர்களிடம் ஒரு நேர்காணலை நடத்தி ஒரு தோராயமான மதிப்பீட்டின் அடிப்படையில் சின்ஜியாங்கில் உள்ள 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் 10% பேர் மறு கல்வி முகாம்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரப்புகிறார்கள்.

இந்தப் பணியை செய்யக்கூடிய முக்கியமான நபர் ஏட்ரியன் ஜென்ஸ் என்பவர் ஆவார். இவர் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளித்து செயல்படக்கூடிய தீவிர வலதுசாரி. சென்ட்ரல் ஏசியன் சர்வே என்ற இதழில் இது பற்றிய கட்டுரையை வெளியிடுகிறார். அந்தக் கட்டுரையில் சின்ஜியாங்கில் மறு கல்விக்காக தடுத்து வைக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்.

உய்குர் நாடு கடந்த ஊடக அமைப்பு என்றழைக்கப்படும் ஒரு ஊடக அமைப்பு துருக்கியை தளமாக கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் இஸ்திகிலால் என்ற டிவி நடத்தப்படுகிறது. இது பிரிவினை வாதத்தையும் தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் ஒரு டிவி ஆகும். இந்த டிவியின் ஒரு செய்தியின் மூலமாகத்தான் இப்படிப்பட்ட கருத்தை இவர் பிரச்சாரம் செய்கிறார். தனது கட்டுரைக்கு ஆதாரத்தை கேட்டால் இந்த டிவியில் செய்தி வந்ததாக கூறுகின்றார். மேலும் சீனாவுக்கு எதிராக பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் கடவுளால் வழிநடத்தப்படுவதாக இந்த ஏட்ரியன் ஜென்ஸ் பேசுகிறார்.

அமெரிக்காவால் இயக்கப்படும் அமைப்பும், ஏட்ரியன் ஜென்ஸ் அந்த டிவியில் வெளியிட்ட காணொளி என்னவென்றால், காஷ்கர் தடுப்பு காவல் நிலையத்தில் ஒரு கைதிகள் குழுவை இடம் மாற்றுகிற பொழுது எடுக்கப்பட்ட காணொளி ஆகும். நீதித்துறை அதிகாரிகளால் கைதிகளை இடம் மாற்றுவது ஒரு சாதாரண நடைமுறையாகும். ஆனால் இந்த காணொளியை ஒளிபரப்பி லட்சக்கணக்கான மக்களை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று திரித்து வெளியிடுகிறார்கள்.

இரண்டாவது பொய் என்னவென்றால் மாகாணத்தில் ஏராளமான மசூதிகளை சீன அரசாங்கம் இடித்து தள்ளி விட்டது என்ற பொய்யாகும். இந்தப் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், தங்கள் பொய்களை ஆதரிப்பதற்காகப் பழைய, சிதிலமடைந்த மசூதிகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தினர். சின்ஜியாங் மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது, மத நடவடிக்கைகளைக் கண்காணிப்பில் வைத்திருக்கிறது, முஸ்லிம்களை நோன்பு நோற்கத் தடை செய்கிறது, மசூதிகளை வலுக்கட்டாயமாக இடிக்கிறது, மற்றும் மத நம்பிக்கையாளர்களைத் துன்புறுத்துகிறது என்று சீனாவுக்கு எதிரான சக்திகள் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றன.

உண்மை என்னவென்றால், சின்ஜியாங்கில் 24,400 மசூதிகள் உள்ளன. இதன் பொருள், சராசரியாக ஒவ்வொரு 530 முஸ்லிம்களுக்கும் ஒரு மசூதி இருக்கிறது. இந்த விகிதம், சில முஸ்லிம் நாடுகளில் உள்ளதை விடவும், இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவருக்கு உள்ள தேவாலயங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும். “இடிக்கப்பட்டுவிட்டதாக”க் கூறப்பட்ட யெச்செங் மாவட்டத்தின் ஜியாமி மசூதியும், ஹோட்டான் மாகாணத்தின் இட் கா மசூதியும், உண்மையில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. புதுப்பிக்கின்ற பணிகளுக்காக நடைபெற்றதை குறிப்பிட்ட பகுதியை படமெடுத்து பரப்புகின்றனர்.

அரசியலமைப்பு மற்றும் அது தொடர்பான சட்டங்களுக்கு இணங்க, சின்ஜியாங் மத நம்பிக்கையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதோடு, மதத்தின் ஒழுங்கான நடைமுறையையும் உறுதி செய்கிறது. நம்பிக்கையாளர்கள், மதக் கோட்பாடுகள், நியதிகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப, வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது தங்கள் வீடுகளிலோ, வழிபாடு, நோன்பு மற்றும் மதப் பண்டிகைகளைக் கொண்டாடுதல் உள்ளிட்ட சட்டப்பூர்வமான மத நடவடிக்கைகளில் ஈடுபட சுதந்திரம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எந்தவிதமான தலையீட்டையோ அல்லது கட்டுப்பாட்டையோ எதிர்கொள்வதில்லை.

விசுவாசிகள் சமயத் தகவல்களை எளிதாக அணுகும் வகையில், குர்ஆன் மற்றும் ஸஹீஹ் அல்-புகாரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட சமயப் பெருநூல்கள் சீன, உய்குர், கஸாக் மற்றும் கிர்கிஸ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன

சின்ஜியாங்கில் உள்ள மசூதிகளில் குழாய் நீர், மின்சாரம், இயற்கை எரிவாயு, தொலைத்தொடர்பு கருவிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகள், நூலகங்கள் மற்றும் எளிதான சாலை அணுகல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஜும்ஆ தொழுகைக்காக ஜமாஅத் மசூதிகளில் கழுவுதல் மற்றும் சுத்தம் செய்யும் வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. மசூதிகளில் மருத்துவ சேவைகள், எல்.ஈ.டி திரைகள், கணினிகள், மின்விசிறிகள் அல்லது குளிரூட்டிகள், தீயணைப்பு உபகரணங்கள், தண்ணீர் வழங்கும் கருவிகள், காலணி உறைகள் அல்லது தானியங்கி உறை வழங்கும் கருவிகள் மற்றும் லாக்கர்கள் ஆகியவையும் உள்ளன. இவை அனைத்தும் மத நம்பிக்கையாளர்களுக்கு மிகுந்த வசதியை அளிக்கின்றன. “மதத் துன்புறுத்தல்” என்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

மூன்றாவது பொய் சின்ஜியாங் பகுதியில் சீன அரசாங்கம் கட்டாய கருத்தடைகளை செய்கிறார்கள் என்ற பொய்யாகும். உண்மை என்னவென்றால் சீனாவில் இருக்கக்கூடிய ஐந்து இன தன்னாட்சி பிரதேசங்களில் சின்ஜியாங் பிரதேசமும் ஒன்றாகும். இந்தப் பிரதேசம் பல இன குழுக்களின் தாயகமாகும். இங்கு தலைமுறை தலைமுறையாக 13 இனக்குழுக்கள் வசித்து வருகின்றனர். அனைத்து இனக்குழுக்களையும் சேர்த்து 25 மில்லியன் மக்கள் இந்த மாகாணத்தை தங்கள் இல்லமாக கருதி நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

சீன அரசாங்கம் மக்கள் தொகையில் பெரிய இனக் குழுவோ அல்லது சிறிய இனக்குழுவோ என்று பார்க்காமல் அனைத்து குழுக்களின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கிறது. 1978-க்கும் 2018-க்கும் இடையில், சின்ஜியாங்கில் உய்குர் மக்களின் எண்ணிக்கை 5.55 மில்லியனிலிருந்து 11.68 மில்லியனாக இரட்டிப்பானது. (1762-ல் கிங் அரசாங்கம், போரின் குழப்பங்கள் காரணமாக, உள்ளூர் மக்கள் தொகை 300,000-க்கும் குறைவாக இருந்தது. 1949-ல் அமைதியான விடுதலை ஏற்பட்ட நேரத்தில் அது 4.33 மில்லியனாக வளர்ந்திருந்தது. 1953-ல் நடத்தப்பட்ட முதல் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளின்படி, சின்ஜியாங்கின் மக்கள்தொகை 4.78 மில்லியனாக இருந்தது. 1964-ல் இரண்டாவது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதன் மக்கள்தொகை 7.27 மில்லியனாக அதிகரித் திருந்தது,

1978-ல் சீனா சீர்திருத்தம் மற்றும் திறந்த கொள்கையைத் தொடங்கிய நேரத்தில், இந்த எண்ணிக்கை 12.33 மில்லியனாக வளர்ந்திருந்தது. இந்த சீரான வளர்ச்சிப் போக்கு 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. 2010 இல் நடத்தப்பட்ட ஆறாவது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகளின்படி, சின்ஜியாங்கின் மக்கள்தொகை 21.82 மில்லியனாக இருந்தது. 2020 இல் நடத்தப்பட்ட ஏழாவது தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தரவுகளின்படி 25.85 மில்லியனை இதில், ஹான் இனக்குழுவினர் 10.92 மில்லியனாகவும், இனச் சிறுபான்மையினர் 14.93 மில்லியனாகவும் இருந்தனர். வறு ஒழிப்புத் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதால், இந்த வளர்ச்சி விகிதம் நீடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக வருமானம் உள்ள குடும்பங்கள் பெரும்பாலும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. எனவே, வளர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. இது மனித வரலாற்றில் மக்கள்தொகை மாற்றம் என்று அழைக்கப்படும் ஒரு இயல்பான செயல்முறையாகும். இதைக்கூட தங்கள் நாட்டில் நடப்பதை மறைத்து மேலைநாடுக் அவதுறு பரப்பலாம்.

பல ஆண்டுகளாக, உய்குர் மக்களும் பிற இன சிறுபான்மையினரும் முன்னுரிமை அளிக்கப்பட்ட மக்கள் தொகைக் கொள்கையை அனுபவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஹான் மக்களுக்கு 1970-களின் முற்பகுதியில் குடும்பக் கட்டுப்பாடு முதன்முதலில் செயல்படுத்தப்பட்டது. மேலும் 1980-களின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதி வரை இன சிறுபான்மையினருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

1992-ல் தன்னாட்சிப் பிராந்தியத்தால் வெளியிடப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகள், நகர்ப்புற ஹான் மக்கள் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தையையும், விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதிகளில் வசிப்பவர்கள் இரண்டு குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே சமயம் இன சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, நகர்ப்புற மக்கள் ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகளையும், விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதிகளில் வசிப்பவர்கள் மூன்று குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விதித்தன. குறைந்த மக்கள்தொகை கொண்ட இன சிறுபான்மைக் குழுக்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. சின்ஜியாங்கில் உள்ள இன சிறுபான்மை மக்களின் மக்கள்தொகை விரைவான வளர்ச்சி விகிதத்தைத் தக்கவைத்துக் கொண்டதற்கு இதுவே முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

நான்காவது பொய் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெருமளவில் கட்டாய உழைப்பு நடைபெறுகிறது என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆஸ்திரேலியா வியூகக் கொள்கை நிறுவனம் (ASPI) என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பிற்கு அமெரிக்க அரசாங்கமும் ஆயுத வியாபாரிகளும் நிதி உதவி அளிக்கின்றனர். இந்த நிறுவனம் விற்பனைக்கு உய்குர்கள் என்று அழைக்கப்படும் ஒரு அறிக்கையை தயார் செய்து சுற்றிக்கு விட்டது. இது தெற்கு ஜின்ஜாங்கில் உள்ள மக்கள் சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வேலைகளை தேடி அலைகிறார்கள் என்றும் வறுமையில் இருக்கிறார்கள் என்றும் ஒரு பொய்யான அறிக்கையை கதை கட்டி விடுகிறார்கள். கட்டாய உழைப்பு என்ற பொய்யின் மூலம் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.

காரணம் சின்ஜியாங்கின் பருத்தி, தக்காளி, சூரியஒளி மின்னழுத்த பொருட்கள் போன்ற தொழில்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இது அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பொருட்களோடு சந்தையில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறது. எனவே இந்த தொழில்துறை சங்கிலியை சீர்குலைக்க கூடிய முயற்சிக்காகத்தான் கட்டாய உழைப்பு என்ற கதையை கட்டி விடுகிறார்கள். இந்த அடிப்படையில் சீனாவின் ஏற்றுமதி பொருட்களை தடுப்பதற்காக கட்டாய உழைப்பு செய்யக்கூடிய பருத்தி, தக்காளி. சூரிய மின்னழுத்த பொருட்களை அமெரிக்கா வாங்க கூடாது என்று தடை செய்கிறது. அது மட்டுமல்ல சின்சியாங்கில் உள்ள உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பை பறிப்பது, வறுமையில் இருந்து வெளியேறுவதை தடுப்பது, பின்தங்கிய நிலைமையில் இருந்து முன்னேறுவது, வளர்ச்சிக்கான உரிமைகளையும் வாய்ப்புகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தறிகெட்ட சிந்தனையும் இந்த மேற்கத்திய நாடுகளின் கட்டுக்கதையில் அடங்கி இருக்கிறது. எனவே இந்த கட்டாய உழைப்பு என்ற கதை கட்டமைப்புகளுக்கு பின்னால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் நடவடிக்கை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

வேலைவாய்ப்பு தொடர்பான செயலூக்கமான கொள்கைகளைச் சின்ஜியாங் அரசு செயல்படுத்துகிறது. அது தொழிலாளர்களின் விருப்பங்களை முழுமையாக மதித்து, சட்டப்படி வேலை செய்வதற்கான உரிமையைப் பாதுகாத்து, சர்வதேச தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் தரநிலைகளைப் பின்பற்றுகிறது. அது தொழிலாளர் சட்டங்களையும் விதிமுறைகளையும் செயல்படுத்தி, தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து, அனைத்து இனக்குழு மக்களும் கடின உழைப்பின் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கித் தங்களின் சொந்த வளர்ச்சியை அடைய வழிவகை செய்யப் பாடுபடுகிறது.

ஐந்தாவது பொய் பெற்றோர்களையும் குழந்தைகளையும் சீன அரசாங்கம் பிரித்து வைக்கக்கூடிய நடவடிக்கையில் இறங்குகிறது. இதன் மூலம் தலைமுறை இடைவெளியை உருவாக்கி உய்குர்களை சீன இனமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக உறைவிட பள்ளிகளை அமைத்து அதன் மூலம் இதை நிறைவேற்றுகிறது என்று மிகப் பெரிய புனைவை உருவாக்கி வருகின்றனர். ஆனால் உண்மை வேறுவிதமானது.

சீனாவின் அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்குக் கல்வி பெறும் உரிமையும் கடமையும் உண்டு என்று குறிப்பிடுகிறது. மேலும், கல்விச் சட்டம், குடிமக்கள் தங்களின் இனம், இனம், பாலினம், தொழில், சொத்து, மத நம்பிக்கை போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் கல்வியில் சம வாய்ப்பைப் பெற வேண்டும் என்று வழங்குகிறது. கட்டாயக் கல்விச் சட்டம், தேவைப்படும் இடங்களில், மாவட்ட அளவிலான மக்கள் அரசாங்கம் உறைவிடப் பள்ளிகளை அமைக்கலாம் என்றும், அதன் மூலம் சிதறிய பகுதிகளில் வசிக்கும் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளும் இளம் பருவத்தினரும் கட்டாயக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்யலாம் என்றும் கூறுகிறது.

உறைவிடப் பள்ளிகளை நிறுவுவது சீனாவின் கட்டாயக் கல்வியில் ஒரு வழக்கமான நடைமுறையாகும். 2020-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் சுமார் 11 மில்லியன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் உறைவிடத்தில் இருந்தனர், இது மொத்த தொடக்கப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 10 சதவீதமாகும். மேலும், 23 மில்லியன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறைவிடத்தில் இருந்தனர், இது மொத்த நடுநிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 47 சதவீதமாகும்.

சின்ஜியாங்கின் பரந்த நிலப்பரப்பு மொத்தம் 1,664,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கிராமங்களும் நகரங்களும் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் அமைந்துள்ளன. மேலும், சில விவசாய மற்றும் கால்நடை வளர்ப்புப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைவாகப் பரவியிருப்பதால், தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்கு வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையேயான தினசரிப் பயணம் மிகவும் கடினமாக உள்ளது.

உறைவிடப் பள்ளிகள், கட்டாயக் கல்விக்கான உலகளாவிய அணுகலை உறுதிப்படுத்தவும், சமச்சீரான கல்வியை ஊக்குவிக்கவும் உதவும். அவை சிறந்த கல்வி வளங்களை ஒருமுகப்படுத்தவும், கற்பித்தல் தரத்தை உறுதி செய்யவும் உகந்தவை. மேலும், அவை மாணவர்களின் குடும்பங்களின் சுமையைப் பெருமளவில் குறைக்கின்றன. உறைவிட மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளியிலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டிலும் தங்குவார்கள். அவர்கள் தேவைப்படும் போதெல்லாம் விடுப்பு கோரலாம். உறைவிடத்தில் தங்குவதா வேண்டாமா என்பதை மாணவர்களின் குடும்பங்களே முடிவு செய்ய வேண்டும். “பெற்றோர்-குழந்தை பிரிவினை” என்ற கூற்றுகள் உண்மைகளைப் பெருமளவில் திரித்துக் கூறுவதாகும்.

இவை தவிர கலாச்சார இனப்படுகொலை மத துன்புறுத்தல் பற்றி எல்லாம் நடக்கக்கூடிய பொய் பிரச்சாரங்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு முந்திய பகுதிகளில் விரிவாக எழுதப்பட்டுள்ளது

 

அ.பாக்கியம்

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...