Pages

ஞாயிறு, ஜூலை 12, 2026

ஐரோப்பாவில் அடங்கிய கால் இறுதி போட்டிகள்

 

கால் இறுதிக்கு முந்தைய சுற்று முடிவடைந்து கால் இறுதிப் போட்டிகள் நாளை காலை(10.7.20) துவங்க உள்ளது. கால் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்ற எட்டு அணிகளில் ஆறு அணிகள் ஐரோப்பாவை சேர்ந்தவை. அதிலும் குறிப்பாக ஐரோப்பாவின் ஸ்கான்ட்நேவியன் பகுதியை சேர்ந்த ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், நார்வே நாடுகள் அடங்கும்.
இந்த உலகப் கோப்பை போட்டியில் இதுவரை கேப் வேர்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முத்திரை பதித்து சென்றுள்ளன.
இதுவரை நான்கு முறை உலக கோப்பையை வென்ற இத்தாலி லீக் ஆட்டத்திற்கு கூட தகுதி பெறவில்லை. இரண்டு முறை உலக கோப்பையை வென்ற உருகுவே இந்தப் போட்டியில் லீக் ஆட்டத்துடன் வெளியேறியது. நான்கு முறை கோப்பையை வென்ற ஜெர்மனி இரண்டாவது சுற்றில் வெளியேறியது.
ஐந்து முறை கோப்பையை வென்ற உலகில் கால்பந்தை பரவலாக அறிமுகப்படுத்திய பிரேசில் அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டது. கால் இறுதிக்கு முன்னேறி உள்ள எட்டு அணிகளில் நான்கு அணிகள் அர்ஜெண்டைனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை ஏற்கனவே கோப்பையை வென்றுள்ள அணிகள்.
சுற்று பதினாறில் அமெரிக்காவின் அத்துமீறல் உச்சகட்டத்திற்கு சென்றது. சிவப்பு அட்டை காட்டப்பட்ட பாலேகான் மீண்டும் விளையாட வேண்டும் என்று ட்ரம்பு தலையிட்டு ஃபீபாவின் தலைவர் அதற்கான நிர்ப்பந்தம் கொடுத்து ஆட வைத்தார். ஏற்கனவே டிரம்பிற்கு கால்பந்து அமைதிக்கான புதிய ஒரு கேடயத்தை உருவாக்கி வழங்கினார். இந்த கால்பந்து போட்டியில் அமெரிக்க லீலைகள் என்று தனியாக எழுத வேண்டிய அளவுக்கு அதன் அடாவடித்தனங்கள் இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கிற 193 நாடுகளைவிட கால்பந்தாட்ட அமைப்பில் 211 நாடுகள் உறுப்பினராக இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர் செய்த செயல்களை குறிப்பாக சிகப்பு அட்டையில் விஷயத்தில் அத்துமீறியதையும் டிரம்புக்கு கேடயம் கொடுத்ததையும் விமர்சித்து உள்ளது மட்டுமல்ல சட்டத்துக்கு புறம்பானது என்று கடுமையாக சாடி உள்ளது.
அமெரிக்காவின் அத்துமீறலை பெல்ஜியம் கால்பந்தாட்ட மைதானத்திற்குள் அடித்து நொறுக்கியது. டிரம்பை கேலிசெய்து அங்கேயே டான்ஸ் ஆடினர். அரங்கம் முழுவதும் அமெரிக்க ரசிகர்கள் அணி திரண்டு இருந்த பொழுதிலும் அமெரிக்காவின் அணிகள் படுதோல்வி அடைந்தன.
மற்றொரு முக்கியமான நிகழ்வு பிரேசில் தோல்வி அடைந்து வெளியேறியது. உலகம் முழுவதும் கால்பந்தாட்டத்தின் புகழைப் பரப்பியதில் பிரேசில் முதன்மையானது. அவர்களின் அழகியல் நிறைந்த ஆட்டங்கள் அற்புதமானவை. ஆரம்ப காலத்தில் பீலே ஆரம்பித்து நெய்மர் வரை பல்வேறு வீரர்கள் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். கால்பந்தை பல நுணுக்கங்களுடன் கையாள்வதில் அவர்களின் கால்கள் தனியாக வடிவமைக்கப்பட்டது போன்று தோன்றும்.
இந்த போட்டியில் காயப்பட்டிருந்த நெய்மறை விளையாட அனுமதித்து இருக்கக் கூடாது. அவர் இறங்கிய பிறகு வினிஷியஸ் ஜூனியர், என்றிக் இருவரின் ஆட்டமும் பக்கவாட்டில் ஒதுக்கப்பட்டதாகவே கருதுகிறார்கள். 2002 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட இடைவெளி பிரேசில் உலகக் கோப்பை இறுதிக்கு வர முடியாமல் இருக்கிறது. பிரேசில் பாரம்பரியங்களை மட்டுமே சுமக்காமல் புதிய காலத்துக்கு ஏற்ற வகையில் போதுமான பயிற்சிகள் எடுத்தால் 2030 ஆம் ஆண்டு கோப்பையை வெற்றி பெற முடியும் என்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

80 உய்குர்: அமெரிக்கத் தலையீடும் சீனாவின் அணுகுமுறையும்

  அ.பாக்கியம்   1989 ஆம் ஆண்டு முதல் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் தீவிரவாத நடவடிக்கைகளும் , பயங்கரவாத செயல்களும் பல்கிப்...