Pages

திங்கள், ஜூன் 29, 2026

கால்பந்து உலகக் கோப்பை அசத்தும் ஆப்பிரிக்கா

 



 

கால்பந்து உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிந்து நாக்கவுட் சுற்று 29 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கிறது. கலந்து கொண்ட 48 நாடுகளில் 32 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

 

உலகில் உள்ள நாடுகளை ஆறு மண்டலங்களாக பிரித்து உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச்சுற்றுகளை நடத்தி அதன் மூலம் 48 அணிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். 

 

ஆப்பிரிக்க மண்டலத்தில் 54 நாடுகளுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஒன்பது நாடுகள் தகுதி பெற்று லீக் ஆட்டத்தில் கலந்து கொண்டனர். எகிப்து, மொராக்கோ, காங்கோ ஜனநாயக குடியரசு, செனகல், அல்ஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, கோபா வெர்டி மற்றும் டுனிசியா ஆகிய 9 நாடுகளில் டுனிசியா தவிர மற்ற எட்டு நாடுகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

 

ஆசிய மண்டலத்தில் உள்ள 47 நாடுகளுக்கு எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. எட்டு நாடுகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார், உஸ்பெகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா ஆகிய எட்டு நாடுகளில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

 

ஐரோப்பா மண்டலத்தில் 55 நாடுகளுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டு லீக் ஆட்டத்திற்கு முன்னேறினார்கள். இவற்றில் 12 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 

 

தென் அமெரிக்கா மண்டலத்தில் பத்து நாடுகளுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. லீக் ஆட்டத்தில் கலந்து கொண்ட அர்ஜென்டைனா, பிரேசில் ,கொலம்பியா, ஈகுவடார், ராகுவே, உருகுவே ஆகிய ஆறு நாடுகளில் உருகுவே தவிர மற்ற ஐந்து நாடுகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

 

வட அமெரிக்க மண்டலத்தில் 41 நாடுகளுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் கலந்து கொண்டனர். இவற்றில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் மட்டும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. 

 

ஓசினியா மண்டலத்தில் 11 நாடுகளுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு நியூசிலாந்து வெற்றி பெற்று வந்து, லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. ஆஸ்திரேலியா புவியியல் ரீதியாக ஓசினியாவில் இருந்தாலும் ஆசிய மண்டலத்தில் விளையாடுகிறது. கயானா, சூரனாம் நாடுகள் தென் அமெரிக்காவில் இருந்தாலும் வட அமெரிக்க மண்டலத்தில் கலந்து கொள்கிறது. இஸ்ரேல் ஆசியாவில் இருந்தாலும் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐரோப்பிய மண்டலத்தில் கலந்து கொள்கிறது.

 

ஆப்பிரிக்காவின் கோபா வேர்டி என்று சொல்லக்கூடிய சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட தீவு நாடு முதல்முறையாக உலக கோப்பைக்கு தகுதி பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இப்படி ஒரு நாடு இருக்கிறது என்பதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது அந்த நாட்டின் விளையாட்டு வீரர்கள். குறிப்பாக அதன் கோல் கீப்பர் வோசின்ஹா (VOZINHA) ஆவார். 2022 ஆம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பை போட்டியின்போது  மொராக்கோ உலக கால்பந்து ரத்தில் முதல் இடத்தில் இருந்த பிரேசிலை கால் இறுதியில் வெளியேற்றியது. சவுதி அரேபியா முதல் சுற்றில் அர்ஜெண்டனாவை வீழ்த்தியது. ஜப்பான் ஜெர்மனியை தோற்கடித்தது. வலுவான ஜெர்மனியும், பெல்ஜியமும் முதல் சுற்றிலேயே வெளியேறினார்கள். 

 

கால்பந்தாட்ட  அணியின் பாரம்பரிய சக்திகளை கடந்து வலிமை பெற்று வரும் புதிய அணிகள் உருவாகி இருக்கிறது. புதிய கதாநாயகர்கள் உருவாக்கினார்கள். ஆப்பிரிக்கா இந்த வகையில் முன்னணியில் இருக்கிறது. மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கால்பந்தாட்ட அமைப்புகள், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது, கடுமையான இனஒதுக்கல் போன்ற சவால்களை எதிர்கொண்டாலும் அணி ஒற்றுமை என்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக ஒன்பது அணிகளில் 8 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இருப்பது பெரும் மாற்றம் ஆகும். 

 

அ. பாக்கியம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கால்பந்து உலகக் கோப்பை அசத்தும் ஆப்பிரிக்கா

    கால்பந்து உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிந்து நாக்கவுட் சுற்று 29 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கிறது. கலந்து கொண்ட 48 நாடுகளில் ...