அ.பாக்கியம்
மனிதன்
இயற்கையின் ஒரு பகுதி அதிலிருந்து பிரிந்தவன் அல்ல. இயற்கை என்பது மனித குலத்தின் கனிமஉடல்.
அதன் இருப்பு நல்வாழ்வுக்கு அவசியமானது. மனித குலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான
சம நிலையான இணக்கமான பரிமாற்றத்தின் மூலமாகத்தான் மனிதனும் இயற்கையும் வாழ முடியும்.
சுற்றுச்சூழல் குறித்து காரல் மார்க்ஸ் மேற்கண்ட கருத்தை கொண்டு இருந்தார். இதைத்தான்
அவர் வலியுறுத்தினார்.இன்னும் அழுத்தமாக முதலாளித்துவம் இயற்கையுடனான மனித குலத்தின்
உறவை சீர்குலைத்து வருகிறது. இயற்கை வளங்களை சுரண்டி, கழிவுகளை உருவாக்குவதன்
மூலம் ஒரு வளர்ச்சிதை மாற்ற விரிசலை ஏற்படுத்துகிறது என்று ஆணித்தரமாக பதிய வைத்தார்.
இவ்வாறு நடப்பதற்கு காரணம் முதலாளி உற்பத்தி முறை என்று அவர் தெரிவித்தார். இயற்கையின்
நிலைத்த தன்மையைவிட முதலாளித்துவ உற்பத்தி முறை லாபத்தை முன்னிலைப் படுத்துகிறது. மண்,
காற்று, மற்றும் நீரின் சீரழிவுக்கு வழிவகுக்கிறது.
எதிர் காலத்தில் உருவாகும் கம்யூனிச சமூகம் பூமியின் வளங்களை ஒத்துழைப்புடன் மற்றும்
பகுத்தறிவுடன் நிர்வகிக்க முடியும். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான மோதல்களை
தீர்க்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்
சோசலிச
கொள்கைகளை ஏற்று ஆட்சி நடத்தி வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பூமிக்கோளத்தில் மனிதன்
வாழக்கூடிய முறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சீனா முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உலகில் முன்னணி நாடாக சீனா
திகழ்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திபெத்திய பிராந்தியத்தில் சீன பண்புகளுடன்
கூடிய சோசலிச கட்டமைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முன்னுரிமை அளித்து நடவடிக்கை
எடுக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகின் சுற்றுச்சூழல் வளத்தில் திபெத் ஒரு முக்கிய
பங்காற்றுகிறது என்பதை சீன அரசு உணர்ந்துள்ளது.
பரவலாக்கப்படும் வனப்பகுதியும்
புல்வெளிகளும்
திபெத்திய
பீடபூமி உலகின் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்
பனிப்பாறை களுக்குப் பிறகு பனி மற்றும் பனிக்கட்டிகளின் மிகப்பெரிய அளவைக் கொண்டுள்ளது.
இது உலகின் காலநிலை ஒழுங்குமுறையில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் இங்குள்ள பனிப்பாறைகள்
பல ஆசிய நாடுகளின் நன்னீருக்கு ஆதாரமாக உள்ளன. தனித்துவமான நிலப்பரப்பு, காலநிலை, சுற்றுச்சூழல், அரிதான பல்லுயிரிகள் இங்கு காணப்படுகிறது.
இங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் மூலமாக சீனாவிற்கு மட்டும் நன்மை பயக்க கூடியது
அல்ல உலகிற்கே நன்மை பயக்கக்கூடிய செயலாகும்.
சீன
மக்கள் குடியரசு கிங்காய்-திபேத் பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கும் என்று கருதுகிறார்கள். சுற்றுச்சூழல்
நாகரிகத்தை முன்னேற்றதற்கு தேசிய அளவிலும் சர்வதேசி அளவிலும் கிங்காய்-திபெத் பகுதிகளை
ஒரு மாதிரி பிராந்தியமாக மாற்றுவதற்கு சீன அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது. சுற்றுச்சூழலின்
பாதுகாப்பு மேம்பாட்டை ஒருங் கிணைப்பதற்கான முழுமையான திட்டத்தை உருவாக்கி பின்பற்றுகிறது.
பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
அழகிய திபெத்தை கட்டியமைக்கும் அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய
செயல்கள் இருந்தால், அதற்கான செலவுகளை செய்து பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கான மாற்று ஏற்பாடுகளை
செய்து வருகிறார்கள்.
இதன்
முதல் நடவடிக்கையாக வேசாங்டாங்,
மவுண்ட் கோமோலாங்மா, மவுண்ட் காங்க்ரின்போக்,
காவோலிகாங் மலை மற்றும் யார்லுங் சாங்போ, கிராண்ட்
கேன்யன் ஆகிய மலை மற்றும் காட்டுப்பகுதிகளை சீனாவின் தேசிய பூங்காக்களாக அறிவித்து
உள்ளனர். திபெத்தின் இயற்கை இருப்பை அதிகப்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து வருகிறது.
தற்போது 47 க்கும் மேற்பட்ட இயற்கை பாதுகாப்பு வனப்பகுதிகள் திபெத்தில்
உள்ளது. இவை மொத்தம் 4,12,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவாகும்.
இந்த பிராந்தியத்தில் உள்ள நிலங்கள், காடுகள், புல்வெளிகள், ஈர நிலங்கள், நீர்
பிடிப்பு கொண்ட பகுதிகள், இதர சுற்றுச்சூழல் செயல்பாடுகளைக் கொண்ட
நிலங்கள் சுமார் 1.08 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது.
மூன்றாவது தேசிய கணக்கெடுப்பின்படி இந்த தரவுகளை சீன அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு
அப்பால் இருக்கக்கூடிய டாங்குலா மழையின் வடக்கே உள்ள பகுதி, யாங்சி
மற்றும் லாகாங் நதிகள் உருவாகிற இடங்களில் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கான பூங்காக்களை
உருவாக்கி உள்ளார்கள்.
பல்கிப்பெருகும் பல்லுயிரிகளும்
தாவரங்களும்
மற்றொரு
முக்கியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியாக திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள
பல்லுயிரிகளின் எண்ணிக்கையை பாதுகாத்து வருவது மட்டுமல்ல அதிகப்படுத்துவதற்கான சூழலையும்
உருவாக்கி உள்ளார்கள். 2016 முதல் 2022 வரை திபெத்திய பிராந்தியத்தில் 5,54,
666 ஹெக்டேரில் மரங்கள் நடப்பட்டது. இதன் விளைவாக காடுகளும் புல்வெளிகளும்
தாவரங்களும் இக்காலத்தில் இரட்டை வளர்ச்சியை அடைந்தது. திபெத்திய நிலப்பரப்பில் 1072 முதுகெலும்புள்ள விலங்குகள் வாழுகின்றது. இவற்றில் பனிச்சிறுத்தை,
திபெத்திய யாக் என்ற காட்டு எருதுகள், திபெத்திய
மாறிமான், கருப்பு கழுத்து கொக்கு, யுன்னான்
தங்க மூக்கு குரங்கு போன்ற அரிதான இனங்கள் இங்கு வாழ்கின்றன. இவற்றை பாதுகாக்க கூடிய
முறையில் 65 வகையான காட்டு விலங்குகளை தேசிய முதல் தர பாதுகாப்பிலும்,
152 வகையான காட்டு விலங்குகளை தேசிய இரண்டாம் தரப்பாதுகாப்பின் கீழ்
வகைப்படுத்தப்பட்டு பாதுகாத்து வருகின்றனர். ஒட்டு மொத்த சீனாவில் உள்ள பெரிய மற்றும்
நடுத்தர வகையான காட்டு விலங்கு இனங்களில் திபெத்திய பிராந்தியம் மட்டும் அதிக எண்ணிக்கையை
கொண்டுள்ளது.
திபெத்திய
நிலப்பரப்பில் வாழக்கூடிய விலங்குகளின் எண்ணிக் கையை இரண்டாவது தேசிய கணக்கெடுப்பு
அடிப்படையில் இறுதி செய்தனர். இந்த கணக்கெடுப்பின் தரவுகளின்படி திபெத்திய மாறிமான்
70,000 லிருந்து
1990 இல் 3,0,0000உயர்ந்துள்ளது. திபெத்திய
யாக் என்று அழைக்கக்கூடிய காட்டு எருதுகள் 10,000லிருந்து 20,000அளவிற்கு உயர்ந்துள்ளது. கருப்பு கழுத்து கொக்குகள் இக்காலத்தில் 3000 த்தில் இருந்து 10,000வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைவிட
முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம், சர்வதேச சமூகத்தால்
ஒரு காலத்தில் அழிந்து விட்டதாக கருதப்பட்ட திபெத்திய சிவப்பு மான்கள் திபெத்தில் இருப்பதை
கண்டுபிடித்தார்கள். இந்த மான்களின் எண்ணிக்கை 200இல் இருந்து
தற்போது 800க்கு மேலாக அதிகமாகி உள்ளது. இதற்கு மேலாக விலங்குகளைப்
பற்றிய கணக்கெடுப்புகளை, அதை பாதுகாக்க வேண்டும் என்ற முறையிலும்
உட்பகுதி முழுவதும் இருக்கக்கூடிய விலங்கினங்களை ஆய்வு செய்த பொழுது 5 புதிய விலங்கினங்களும், ஒரு புதிய தாவர வகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரிய
அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை ஏற்படுத்துவதும் பசுமை வளர்ப்பின் ஒரு பகுதியாக
தீபத்தில் சிறப்பு கவனம் செலுத்தியதன் மூலமாக கிங்காய் திபெத்திய பிராந்தியத்தில் வனப்பகுதியின்
அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இவை தவிர திபெத்திய பிராந்தியத்தில் 750 வகையான வாஸ்குலர் தாவரங்கள்
இருக்கிறது. வாஸ்குலர் தாவரம் என்பது நீரையும், நீர்ச்சத்து உணவுகளையும்
கடத்தக்கூடிய ஒன்றாகும். இவற்றில் மிக முக்கிய ஒன்பது வகையான தாவரங்களை தேசிய முதல்
தரப் பாதுகாப்பிலும், 148 தாவர இனங்களை தேசிய இரண்டாம்தர பாதுகாப்பின்
கீழ் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
தற்போது
பணப்பகுதி 12.31% இருக்கிறது இதற்கு மேலும் புல்வெளியின் பரப்பளவு தாவரங்களின் பரப்பளவு 47.14% எட்டியுள்ளது. 2024 ஆண்டில் மட்டும் திபெத்தில் 70,667 எக்டேர் பரப்பளவு காடுகளை வளர்த்துள்ளனர். பல்வேறு காலங்களில் பராமரிப்பு
இல்லாமல் சீரழிந்து கிடந்த 4 லட்சம் எக்டேர் புல்வெளிகளை மறுசீரமைப்பு
செய்து பசுமையாக்கி உள்ளார்கள். இதுபோன்ற முயற்சிகளின் விளைவாக மிக உயரமான இடங்களில்
வாழும் உயிரினங்களும் புத்துயிர் பெற்று இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளது.
மேம்பட்ட காற்றின் தரமும் கார்பன்
நடுநிலை திட்டமும்
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு நடவடிக்கையின் விளைவாக திபெத்திய பகுதியில் வாழ்க்கைச் சூழல் தொடர்ந்து
மேம்பட்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் இங்கு காற்றின் தரம் உயர்ந்து வருகிறது. 99% சுத்தமான காற்று கிடைக்கிறது. 2022 ஆம் ஆண்டு சீனாவில்
உள்ள 168 முக்கிய நகரங்களில் காற்றின் தரத்தை அளவீடு செய்தபொழுது
திபெத்திய பிராந்தியத்தின் தலைநகரம் லாசா முதலிடத்தை பிடித்தது. இதே போன்று அடுத்த
இரண்டு இடங்களும் திபெத்திய பகுதியில் உள்ள நியஞ்சி, காம்டோ நகரங்கள்
பிடித்தன. ஆண்டு முழுவதும் சிறந்த தரமுடைய காற்றை இப்பகுதி மக்கள் சுவாசித்து வருகிறார்கள்
திபெத்திய
பகுதியில் ஓடக்கூடிய நதிகளும் ஏரிகளும் தரமான நிலையில் உள்ளது. அனைத்து நதிகளும் முதல்
தர நிலையிலும், இரண்டாவது தர நிலையிலும் இருக்கிறது. இதன் விளைவாக திபெத்திய பகுதியில் இருக்கக்கூடிய
அனைத்து மாவட்டங்களுக்கும் சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கிறது. இதற்குக் காரணம் திபெத்திய
பகுதியில் மண் மாசுபடாமல் மண் வளத்துக்கான சுற்றுச்சூழலை சீன அரசு மக்களின் ஆதரவுடன்
பாதுகாத்து வருகிறது. எனவே தான் இந்த தரத்தை கொண்டு வர முடிந்தது.
மேற்கண்ட
சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு முயற்சியும் மண் மாசுபடுவதை தவிர்க்கக் கூடிய முயற்சிகளும்
திபெத்திய பிராந்தியத்தில் மட்டுமல்ல சீனாவிலும் கார்பன் உமிழ்வின் அளவை மிகப் பெரும்
அளவிற்கு குறைத்து வருகிறது. சீன அரசின் இலக்கான கார்பன் நடுநிலை நோக்கத்தை நிறைவேற்றுவதை
நெருங்கிக் கொண்டிருக்கிறது. திபெத்திய பிராந்தி யத்தில் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பதையும்
பசுமை திட்டத்தின் அடிப்படையில் வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.மாசு இல்லாத
பண்ணை, பசுமை
பண்ணை, கரிம பண்ணை பொருட்கள் அல்லது வேளாண் பொருட்களை உற்பத்தி
செய்யக்கூடிய 1014 பண்ணைகளை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம்
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பசுமை உற்பத்தி பொருட்கள் என்று விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவில் பசுமை உற்பத்தியில் சிறந்து விளங்கக்கூடிய 100 பண்ணைகளில்
திபெத்திய பிராந்தியத்தில் இருந்து சில பண்ணைகளும் இடம் பிடித்து உள்ளது. பசுமை பொருட்கள்
என்ற முத்திரையிடப்பட்ட பொருட்களை மக்கள் திரும்பி வாங்குகிறார்கள்.
வளர்ச்சி
திட்டங்களால் குறிப்பாக நதிகளில் நீர் மின் நிலையங்களை கட்டுகிற பொழுது சுற்றுச்சூழல்
பாதிப்பு ஏற்படாதா என்ற கேள்வி எழுவது நியாயமானது. அதை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள்
என்பதற்கான ஒரு உதாரணம் இங்கே கொடுக்கப்படுகிறது. யார்லுங் சாங்போ நதியில் ஜாம் நீர்
மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. இந்த நிர்வாண பணிகளால் அங்குள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படாமல்
இருக்க, அரிதான
அந்த மீன்களை பாதுகாக்க 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறுகள் அமைக்கப்பட்டு
மீன்கள் இடம் பெயர்ந்து செல்வதற்கான முறைகள் ஏற்படுத்தப்பட்டது. அது மட்டுமல்ல மீன்
குஞ்சுகளின் இனப்பெருக்கத்திற்கான வசதிகள் செய்யப்பட்டு ஆண்டுதோறும் இவை ஆறுகளில் விடப்படுகிறது.
திபெத்திய பீடபூமியின் அரிய வகை மீன்களை அழிந்து விடாமல் பாதுகாத்து மீண்டும் வளர்த்தெடுக்
கிறார்கள்.
மற்றொரு
சம்பவம் லாசா-சிகேஸ் ரயில் பாதை கட்டுகிற பொழுது அந்த வழித்தடத்தில் இருந்த சிறந்த
மரங்களை தேர்வு செய்து ரயில் பாதைக்கு அருகில் மணல் திட்டுகளை உருவாக்கி அங்கு அவற்றை
பாதுகாத்து காடுகளாக வளர்த்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் திபெத்திய காடுகளின்
அளவு குறையாமல் இருக்கக்கூடிய வகையிலும்,
அரிய மரங்கள் அழியாமல் இருக்கக்கூடிய வகையிலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ரயில்
பாதை போன்ற திட்டங்கள் நிறைவேறுகின்ற பொழுது விலங்குகளின் பாதை தடைபடும். இவற்றைக்
கணக்கில் எடுத்து விலங்குகள் தடையின்றி இடம் பெயர்வதற்கு முக்கியமான இடங்களில் உயரமான
பாதைகள் அமைக்கப்பட்டு விலங்குகள் தடையின்றி இடம்பெயர வழிவகை செய்யப்பட்டது. மற்றொரு
ரயில் பாதை கட்டுமானத்தின் போது கருப்பு கழுத்து கொக்குகள் இருக்கக்கூடிய பகுதிகளின்
ஒரு பகுதி பாதிப்பை ஏற்படுத்தியது. அவற்றை பாதுகாப்பதற்காக கருப்பு கொக்குகளுக்கு வாழ்வதற்கு
ஏற்ற குளிரான பகுதிகள் உருவாக்கப்பட்டு அவற்றின் வாழ்விடத்தையும் எண்ணிக்கையும் பாதுகாத்தார்கள்.
இந்த முயற்சியின் விளைவாக கருப்பு கொக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
சீன
மற்றும் திபெத்திய பிராந்தியத்தில் சுற்றுச்சூழல், நீர்நிலை, காடுகள்
என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சட்டங்கள் சமரசம் இன்றி அமுல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக
மேலும் சுற்றுச்சூழல் பலமடைந்து உள்ளது. ஆறுகள், ஏரிகள்,
காடுகள், புல்வெளிகளை பாதுகாப்பதற்காக தனித்தனியாக
பொறுப்புத் தலைவர்கள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
பிராந்தியம் முழுவதும் உள்ள இதுபோன்ற நூற்றுக்கணக்கான பொறுப்புத் தலைவர்களின் அமைப்பு
வலுவாக செயல்படுகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் திபெத்திய நீர்வள நிர்வாக அமைப்பை அமுல்படுத்தி நீர் நிலைகளையும்,
கரையோரங்களின் நிர்வாகத்தையும் வலுப்படுத்தவும் ஆறுகள், ஏரிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அவற்றின் நிலையான
பயன்பாட்டை நீடித்திருக்க செய்யவும், நதி மற்றும் ஏரிகளின் தலைவர்,
வழக்கறிஞர், பாதுகாப்பு ஜெனரல், காவல்துறை தலைவர் ஆகியவர்களே அடங்கிய அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டது. சீனக்
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் உள்ளூர் கட்சி குழுக்கள், அரசாங்கத்
துறைகள் ஒருங்கிணைந்து கூட்டாக முடிவுகளை நிறைவேற்றுகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தொடர்பான பொது நல வழக்குகளை கையாளவும், சட்ட அமலாக்கத்திற்கான
திறனை மேம்படுத்தவும், 11 தேசிய இயற்கை இருப்பு பகுதிகளில் 35க்கு மேற்பட்ட வழக்கறிஞர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், அதனால் ஏற்படக்கூடிய
மாற்றங்களை தொடர்ந்து பகுப்பாய்வு செய்வதற்கு மத்தியஅரசு அறிவியல் ஆய்வு தொழில் நுட்பத்
துறையின் மூலமாக கண்காணித்து வரக்கூடிய அமைப்புகளை உருவாக்கியது. இதன் மூலம் சுற்றுச்சூழலை
மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும்,
இயற்கை பேரழிவுகளை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும்,
பசுமை வளர்ச்சியை ஊக்குவிப் பதற்குமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து இவை செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி தொழில்நுட்ப வசதிகளை
மத்திய மற்றும் பிராந்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
திபெத்திய
தலைநகரம் லாசாவில் முதல் முறையாக ஜெர்ம்பிளாசம் வள மையத்தை நிறுவி உள்ளார்கள்.(ஜெர்ம்பிளாசம்
என்பது ஒரு இனம், மக்கள் தொகை, நில இனம், கலப்பினம்
அல்லது சாகுபடி மரபனுவை குறிக்கலாம் ) இந்த மையத்தில் 2,047 இனங்களை
உள்ளடக்கிய 8,458 ஜெர்ம் பிளாசம் பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இது பல்லுயிர் பாதுகாப்பிற்கு மிக மிக அடிப்படையான ஆதரவாகும். அதிக கார்பன்களை வெளியிடாத
குறைந்த அளவு கார்பன் ஆற்றலுடன் பீடபூமியில் திடக்கழிவு மற்றும் உயிர் பொருட்களை பயன்படுத்துவதற்கான
ஒரு அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தத் திட்டம் 15 சதவீதம் செலவுகள் குறைந்தது மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபாட்டை 75 சதவீதத்திற்கு மேல் குறைத்து விடும்.
இதன்
மூலம் அதாவது ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு 300 மில்லியன் யுவான் வருமானம்
ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பசுமை பாதுகாப்பு ஒருங்கிணைந்த
திட்டத்திற்கு 4.93 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் இழப்பீட்டிற்காக 3.7 பில்லியன் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டது. இது 2022 இல் 16.1 பில்லியன் அளவில் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழலை
பாதுகாப்பதற்கான அதன் பாதிப்புகளை சரி செய்வதற்கான தொடர் முயற்சியின் காரணமாக இந்த
இழப்பீட்டுத் தொகை பயன்படுத்தப் படுகிறது.
சுற்றுச்சூழலை
பாதுகாப்பை மேம்படுத்துகிற பொழுது அது வறுமை ஒழிப்பிற்கான ஒரு காரணியாகவும் செயலாற்றுகிறது.
2016 முதல்
2022 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5,37,700 வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது. இவற்றுடன் கூடவே உள்ளூர் மக்கள் பசுமை
வணிகங்களை துவங்குவதற்கும், பசுமை வேலைகளை கண்டறியவும் உதவி செய்யப்படுகிறது.
திபெத்திய
பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை பிரபலமாகிவிட்டது. மனித குலத்திற்கும்
இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மக்கள் பின்பற்றி நிலையான வளர்ச்சியை மதிக்கும்
ஒரு புதிய பீடபூமி சூழல் கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளார்கள். திபெத்திய பிராந்தியத்தில்
உள்ள நியின்ஜி நகரம் தேசிய அளவிலான வன நகரமாக(நகரமே வனமாக) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
போமி மாவட்டம் , ஷானன் நகரத்தில் உள்ள கோங்கியாய் மாவட்டம், காம்போ நகரத்தில்
உள்ள ஜூம்டு மாவட்டம் உள்ளிட்ட 11 நகரங்கள் தேசிய சுற்றுச்சூழல்
நாகரீக நகரங்களின் மாதிரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று லாசா உட்பட சில நகரங்களில்
உள்ள பல கிராமங்கள், சிறு நகரங்கள் தெளிவான நீர் நிலைகளும் பசுமையான
மலைகளும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்ற, சுற்றுச்சூழல் தத்துவத்தை
உள்ளடக்கிய தளங்களாக பட்டியலிடப் பட்டுள்ளன.
திபெத்திய
பிராந்தியத்தில் சீன அரசு இயற்கையும் மனிதனையும் இணைந்து வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி
வருகிறது. சீன ஜனாதிபதி சி ஜின் பிங் “ஒருவர் புயலுக்கு பயந்து துறைமுகத்திற்கு திரும்பக்
கூடாது அவ்வாறு திரும்பினால் அது நம்மை கடலின் மறுபக்கத்திற்கு அழைத்துச் செல்லாது”
என்று கூறினார். திபெத்தில் ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட புயல்களை எல்லாம்
கடந்து திபெத் உலகின் உயரமான கூரை மட்டுமல்ல அந்த மக்களின் வாழ்க்கையும் உயரமானது என்று
நிருபித்திருக்கிறார்கள். காரல் மார்க்ஸ் தெரிவித்தது போல் இயற்கையின் ஒரு பகுதி மனிதன்.
அதிலிருந்து அவன் பிரிந்தவன் அல்ல என்ற கோட்பாட்டை சீன பண்புகளுடன் கூடிய சோஷலிசத்தில்
வெற்றிகரமாக அமலாக்கி வருகிறார்கள்.
– அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக