- போலிகள் தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அதீத நிஜம்போல் நடிப்பரர்கள், அப்படித்தான் இப்போது பாஜக கட்சியும் ஆட்சியும் நடந்துகொள்கிறது, மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அந்த மாநில அரசு புதிய உத்திரவை மே 15 அன்று பிறப்பித்துள்ளது,

- ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு அழைக்கிறபோது மாணவர்கள் ஜெய் இந்த் என்றுதான் பதில்சொல்ல வேண்டும் என அந்த உத்திரவு கூறுகின்றது, மாணவர்கள் மத்தியில் தேசபற்று படிப்படியாக ஆழமாக வளர்க்க இந்த உத்திரவாம். அந்த மாநிலத்தில் உள்ள 1.22 லட்சம் பள்ளிக்கூடங்களும் இதை கடைபிடிக்கவேண்டுமாம்.
- கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துவதைவிட தங்களின் போலி தேசபக்தியை நிருபிக்க பாடுபடுகின்றனர், கடந்த ஆறு ஆண்டுகள் போதுமான நிதியை ஒதுக்கியும் 94 சதமான பள்ளிகள் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவில்லை, பணங்கள் பதுக்கப்பட்டதை மறைக்கவும் இவர்களுக்கு ஜெய் இந்த் தேவைப்படுகிறது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக