
• 2015 ஆம் ஆண்டு தேசிய குற்றப் பிரிவு அறிக்கை பிரகாரம் தினசரி 123 தாக்குதல்கள் தலித்துகள் மீது நடைபெறுகிறது. 3 நாட்களுக்கு ஒரு தலித் படுகொலை செய்யப்படுகிறார்.
• இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். 2015-ல் மட்டும் 34,771 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர் என தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
• 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 4030 வகுப்பு கலவரங்களில் 648 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 11228 பேர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 650 வகுப்பு கலவரங்கள் நடந்து வருகிறது.
• 1 கோடி 40 லட்சம் பேர் சுற்றுச்சூழல் பாதிப்பால் காற்று மாசடைவதால் முன்கூட்டியே இறந்து விடுவதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
• 59.5 கோடி மக்களுக்கு இதுவரை கழிப்பிட வசதி இல்லை. மோடியின் கழிப்பிடம் கட்டுவதற்கான அறிவுப்புகள் நடந்த பிறகு சில கோடி கட்டிய பிறகும், இன்னும் சரிபாதி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை என ஐக்கிய நாடுகள் சபையும், உலக வங்கியும் தெரிவித்துள்ளது.
• இந்தியாவிற்கு சொந்தமான கருப்பு பணம் 15.2 இலட்சம் கோடியிலிருந்து 18.1 இலட்சம் கோடி வரை அந்நிய நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக 2016 ஆம் ஆண்டின் இத்தாலிய வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
• அதிக ஊழல் செய்யும் நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. நகர்ப்புறத்தில் வாழும் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 4400 ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக கூசயளேயீயசநnஉல iவேநசயேவiடியேட என்ற அமைப்பு ஆய்வு நடத்தி தெரிவித்துள்ளது.
• இந்தியாவில் 28.7 கோடி வயதுவந்தோர் கல்வி அற்றவர்களாக உள்ளனர். இது உலக வயதுவந்தோர் கல்வி அற்றவர்களில் 37 சதவீதம் ஆகும்.
• 19.5 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைவால் அதாவது பட்டினியால் வாடுகின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 15 சதவிகிதம் என ஐக்கிய நாடுகள் சபையின் 2015 ஆம் ஆண்டு அறிக்கை (ருசூ ழரநேச சுநயீடிசவ) கூறுகிறது.
• 17.2 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே (12.4 சதவிகிதம்) வாழ்கிறார்கள் என்று 2015 ஆம் ஆண்டு உலக வங்கி மதிப்பீடு தெரிவிக்கிறது.
- ஏ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக