பெண்கள் அரைகுறை ஆடைகள் அணியும் வரை பாலியல் பலாத்காரம் தொடரும். மதகுரு மதே மகாதேவி - 2014 அக்டோபர்
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பகுதி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களா அரையாடைகளுக்கு சொந்தக்காரர்கள்? காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்தான்.பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 1477 பெண்கள் 10 வயதுக்கு குறைந்த குழந்தைகள். 2708 பெண்கள் 14 வயதுக்கு குறைந்தவர்கள் என்பது கவனித்தக்கது.

பாலியல் பலாத்காரங்களில் பெரும்பகுதி தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்களால்தான் நடந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 94 சதவீத நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குற்றவாளி யார் என்று தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.. சொல்ல முடிவதில்லை.
33,707 பாலியல் பலாத்காரம் நடைபெற்றுள்ளது. இதில் 31,807 நிகழ்வுகளில் (அதாவது 94 சதவீதம்) குற்றவாளி யார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியும். நெருங்கிய உறவினர் என்பதால் வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே நொந்துகிடக்கின்றனர். வீடு பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. 2854 பாலியல் பலாத்காரம் வீடுகளில் தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களால் நடந்துள்ளது.
சுதந்திரம் இரவிலே கிடைத்தது என்பதற்காக பெண்கள் இரவிலே சுற்றுவது சரியாகுமா? காங்கிரஸ் தலைவர் போல்டா சத்திய நாராயணா - டிசம்பர் 2012.

பாலியல் பலாத்காரம் அதிகமாக காரணம், அமெரிக்க கலாச்சாரம் உள்வாங்கப்படுவதால்தான். மேலும் நகர்புறத்தில் நமது மதிப்பீடுகள் குறைவதாலும் பலாத்காரம் நடைபெறுகிறது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆணாதிக்க - மேலாதிக்க சமூக அமைப்பு, மோசமான சட்டம் ஒழுங்கு, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக மாற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை காரணமாக சொல்லலாம். எனவேதான் 2013 -ல் பதிவு செய்யப்பட்ட 33,707 பாலியல் பலாத்கார வழக்குகளில் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.
ஏ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக