Pages

வியாழன், ஜனவரி 08, 2015

பாசிசம் அன்றும் - இன்றும்-4


-அ.பாக்கியம்-
பாசிசம் எழுச்சி பெறக் காரணம் என்ன?
பாசிசம் முதலாளித்துவத்தின் மற்றொரு அடக்குமுறை வடிவமாக இருந்தாலும், இவை எழுச்சிபெற மூன்று முக்கிய காரணங்கள இருந்தன. ஒன்று, அன்றைய ஐரோப்பாவில் நிலவிய பொருhளாதார நெருக்கடிகள். முதலாம் உலக யுத்தத்தில் ஐரோப்பா கடும் இழப்புகளை சந்தித்து இருந்தது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் 1919 -ம் ஆண்டு ஜூன் மாதம் 20 -ம் தேதி பிரான்சின் தலைநகர் அருகில் வெர்செயில்ஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ஜெர்மனி எல்லை சுருக்கப்பட்டது. ஜெர்மனியின் இராணுவம் கட்டுப்படுத்தப்பட்டது. இராணுவ நிலையங்கள், பள்ளிகள், பயிற்சிகள் தடைசெய்யப்பட்டன. 

யுத்த இழப்புகள் அனைத்தும் ஜெர்மனி மீது திணிக்கப்பட்டது. இதன் விளைவாக, பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்தது. “வண்டி நிறைய பணத்தை எடுத்துச் சென்று பைகளில் காய்கறி வாங்கி வரும் அளவிற்கு” பாய்ச்சல் வேக பணவீக்கம் இருந்தது. மதிப்பிழந்த காகித பணத்தை பெண்கள் அடுப்பு பற்ற வைக்கக்கூட பயன்படுத்தினர்.
எனவே, கடும் நெருக்கடியில் இருந்த மக்களிடம் நாசிக்கட்சியின் பிரச்சாரம் எடுபட்டது. ஆட்சியில் இருந்த வெய்மர் அரசு இராஜ துரோக செயல்களில் ஈடுபட்டு வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை அமுலாக்க முயற்சிக்கிறது. இழந்த இராணுவத்தை மீண்டும் உருவாக்க, ஜெர்மனி இழந்த பகுதியை மீட்டு ஒன்றுபட்ட ஜெர்மனியை அமைத்திட, ஜெர்மனியின் நெருக்கடிக்கு காரணமான வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும் என்று ஹிட்லர் பிரச்சாரத்தை துவக்கினான்.
 இதே போன்று முதல் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ருஷ்யாவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி நடைபெற்று போல்ஷ்விக் கட்சி லெனின் தலைமையில் ஆட்சியை பிடித்தது. அத்தகைய சூழல் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் இருந்தது. ஜெர்மனியில் தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் கட்சியும் பலமாக இருந்தது. இத்தாலியிலும் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம் சக்தியான அமைப்பாக திகழ்ந்தது. 1918 முதல் 1922 வரை மேற்கண்ட மூன்று நாடுகளிலும் தொழிலாளர், விவசாய எழுச்சிகளும் நடைபெற்றது. சில நேரத்தில் புரட்சிகரமான நடவடிக்கைகளும் இருந்தன. எந்த நேரத்திலும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றி விடும் என்ற அபாயத்தை முதலாளித்துவம் எதிர்கொண்டு நின்றது.
இந்த பின்னணியில் 1928 -ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில் ஹிட்லரின் நாசி கட்சி 3 சதவிதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. எனவே, அன்றைக்கு இருந்த முதலாளித்துவ வர்க்கம் தனது சுரண்டிலின் மேலாண்மையை பாதுகாக்க, ஜனநாயகம், தாராளவாதம், தனிமனித சுதந்திரம் என்ற வேஷத்தை கலைத்து பாசிசத்தை தழுவிட முடிவெடுத்தது. எனவே, ஹிட்லருக்கும் முசோலினிக்கும் முதலாளிகள், நடுத்தர முதலாளிகள், தாராளமான வகையில் நிதி உதவி செய்தனர். 


ஹிட்லர், மார்க்சிய புரட்சியை தடுத்திட, அதற்கு எதிராக முதலாளிகள், நடுத்தர வர்க்கம் முன்வர வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். முதலாளித்து அறிவுஜீவிகளை தன்னைச் சுற்றி இருக்க வைத்தார். வெகுமக்களை கவருவதற்கு “சோசலிச புரட்சி” பாசிசத்திற்கு எதிரான யூதர்களின் சதி என்று முசோலினி பிரச்சாரம் செய்தார். எனவே, நெருக்கடியிலும், ஒற்றுமையின்றியும், வர்க்கப் புரட்சியின் அபாயத்தை எதிர்நோக்கிய தொழில் நிறுவனங்கள் (ஊடிசயீடிசயவநள) ஹிட்லர், முசோலினி பின்னால் அணி திரண்டனர்.
இரண்டாவதாக, பாசிசம் ஆட்சிக்கு வந்த நாடுகளில் இருந்த அரசியல் கட்சிகள் குறிப்பாக நடுநிலைக் கட்சிகளாக (ஊநவேநசளைவ யீயசவநைள) தங்களை அறிவித்துக் கொண்டவர்களின் சந்தர்ப்பவாத நிலைபாடுகள், பாசிச கட்சிகளுடனான உடன்பாடுகள் ஏற்படுத்தியதால் ஹிட்லர், முசோலினி தங்களது செல்வாக்கை பெருக்கி கொண்டனர்.
மூன்றவதாக, சோவியத் யூனியன் போல், இத்தாலியிலும், ஜெர்மனியிலும் புரட்சி நடைபெறுமோ என பிரிட்டன், அமெரிக்கா அஞ்சி நடுங்கியது. எனவே, பிரிட்டன் அரசு முசோலினிக்கு பொருளாதார உதவி உட்பட அனைத்து உதவிகளையும் யுத்தம் ஆரம்பிக்கும் வரை செய்து வந்தது. அமெரிக்கா ஜெர்மனியில் நாசிக்கட்சியுடன் உறவுகளை வைத்தது. அந்நாட்டு நாசிக்கட்சி முதலாளிகளுடன் தொழில் உறவு, இராணுவ தளவாட வர்த்தகம் உட்பட அனைத்தையும் செய்து வந்தது. பாசிசத்தின் எழுச்சிக்கு இவை அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

1 கருத்து:

  1. “வண்டி நிறைய பணத்தை எடுத்துச் சென்று பைகளில் காய்கறி வாங்கி வரும் அளவிற்கு” பாய்ச்சல் வேக பணவீக்கம் இருந்தது. மதிப்பிழந்த காகித பணத்தை பெண்கள் அடுப்பு பற்ற வைக்கக்கூட பயன்படுத்தினர்.
    Very simplest description and useful article...

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...