Pages

ஞாயிறு, ஜனவரி 04, 2015

பாசிசம் அன்றும் - இன்றும் -1



-அ.பாக்கியம்-

  காதிபத்திய நிதி மூலதனம் பெற்றெடுத்த மற்றொரு அரக்கன் பாசிசம். முதலாளித்துவத்தின் இருத்தலுக்கும், சுரண்டலுக்கும் ஆபத்து வந்தபோது, ஜனநாயகம், தாராளவாதம், தனிமனித சுதந்திரம் என்ற தனது மேலாடைகளை கலைந்து எறிந்துவிட்டு சுயரூபத்தை வெளிக்காட்டிய வடிவம்தான் பாசிசம். அணிதிரட்டப்பட்ட தொழிலாளர், விவசாய வர்க்கத்திடம் தனது மேலாண்மையை இழந்துவிடுவோம் என்ற அச்சுறுத்தல் வந்தபோது பாசிசம் என்ற கொடூர அடக்குமுறை வடிவத்தை கையிலெடுத்தது முதலாளித்துவம்.    
    பாசிசம் இருநாடுகள், இரு தலைவர்கள் தொடர்புடைய வரலாற்றின் பக்கங்கள் என்று விவரிப்பது அர்த்தமற்றது மட்டுமல்ல வரலாற்றின் புரட்டாகும். முதலாளித்துவ சமூக அமைப்பு உருவாகிய பிறகு, உழைக்கும் மக்களை இரத்த வெள்ளத்தில் முழ்கடித்த பேரழிவு நிகழ்வாகும் பாசிசம். குடுவையின் பூதத்தை வெளியே விட்டு கட்டுக் குள் கொணர முடியாமல் தினறிய மந்திரவாதி போல் அதன் தலைமை திகைத்த போது, சோவியத் யூனியன் தலைமையிலான உழைப்பாளி வர்க்கம் எழுச்சியுற்று பாசிசத்தை தோற்கடித்தது. பாசிசம் தலைதூக்கியதையும், தலைவிரித்தாடியதையும் படித்தால் மீண்டும் அதன் முகங்கள் வெளிவருவது தெரியும். வேறு தலைவர்களால், வேறு வார்த்தைகளில், வேறு வடிவத்தில் வலம்வர துடிக்கிறது.


பெயரும் - பிறப்பும் :


            ஃபாசஸ் (faces) என்ற தொன்மையான வார்த்தை யிலிருந்துதான் பாசிசம் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது.இணைத்து கட்டப்பட்டிருக்கும் இரும்புத்தடிகளின் கழுத்தில் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் கோடாரி காம்பை குறிக்கும் சொல் இந்த ஃபாசஸ். பண்டைய ரோமர்களின் ஒற்றுமை மற்றும் அதிகாரத்தை குறிக்கும் சொல் ஆகும். பண்டைய ரோம சாம்ராஜியத்துடன் இணைப்பதற்கும், பழம்பெருமைகளில் புதிய சுரண்டலை நடத்திடவே, தொன்மையான வார்த்தைகளை தோண்டி எடுத்தார் முசோலினி.    

   அன்றைய உழைக்கும் மக்களாகிய அடிமைகளின் தலைவனான ஸ்பார்ட்டகசையும், லட்சக்கணக்கான அடிமைகளையும் “ரத்தக்கடலில் முழ்கடித்த” ரோம சாம்ராஜியத்தையே தனது முன்மாதிரியாக அறிவித்தான் முசோலினி. அச்சுறுத்தும அடையாளத்துடன், ஒற்றுமை அதிகாரம் என்ற கோஷத்துடன் தன்து அரசியல் களத்தை துவக்கினான்.
1921 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 -ம் தேதி தேசிய பாசிஸ்ட் கட்சியை, பெனிட்டோ முசோலினி இத்தாலியில் துவக்கினார். 1922 -ம் ஆண்டு இத்தாலியின் பாராளுமன்றத்திற்கு (ஊhயஅநெச டிக னநயீரவநைள) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஆட்சி அமைத்த லிபரல் கட்சிக்கு எதிராக செயல்பட்டு, ரோமாபுரியை நோக்கி “கருஞ்சட்டை வீரர்களின்” அச்சுறுத்தும் பேரணியை நடத்தி குழப்பம் விளைவித்தார். 
          அதே ஆண்டு மன்னரால் கூட்டணி அரசுக்கு பிரதமராக நியமிக்கப்பட்டார். 400 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 35 உறுப்பினர் உள்ள தேசிய பாசிஸ்ட் கட்சி பிரதமர் பதவியை பிடித்து 1924 -ம் ஆண்டு முசோலினி நாட்டின் அனைத்து அதிகாரமிக்க தலைவரானார்.
1920 -ம் ஆண்டு தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சியை அன்டன் டக்ஸ்லர் என்பவரால் துவக்கப்பட்டு 1921 -ம் ஆண்டு அடால்ப் ஹிட்லர் இதன் தலைவரானார். இதுவே நாசி கட்சி என்று அழைக்கப்பட்டது. ஜெர்மனியில் இருந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, தனது பழுப்புநிற சீருடை (brown shirts) வீரர்களால் அச்சுறுத்தலை நிகழ்த்தி 1933 -ம் ஆண்டு ஜனவரி 30 அன்று மன்னரால் ஜெர்மன் அதிபராக நியமிக்கப்பட்டார். 
          பெயின் நாட்டில் 1936 -ம் ஆண்டு முதல் ஜெனரல் பிராங்கோ தலைமையில் பாசிச கட்சி ஆட்சியை பிடித்தது. போர்ச்சுகல், அர்ஜெண்டைனா, ஜப்பான் நாடுகளிலும் பாசிச கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தனர். முசோலினி தனது அரசை மூன்றாம் ரோம சாம்ராஜ்யம் என்றும், இது இத்தாலிய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் அறிவித்தார். ஹிட்லர் தனது அரசை மூன்றாம் ரீச் (பாராளுமன்றம்) என்றும், அதையே இனத்தூய்மையின் சின்னம், மூன்றாம் பேரரசு என்றும் அறிவித்தார்.


2 கருத்துகள்:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...