Pages

செவ்வாய், ஜனவரி 20, 2015

மோடி ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி உயர்வு

ஏ.பாக்கியம்
             இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியை தோற்கடித்து மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகமாகியது. இது நல்ல விஷ்யம் தானே என்று கேட்கலாம். அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஹார் ஆட்சியில் இது நடக்கிறது என்பதுதான் கேள்வி. செத்தமாட்டின் தோலை உரித்ததற்காக 5 பேர்கள் அடித்துக் கொள்ளப் பட்டார்களே அந்த கொள்கையாளர்கள் ஆட்சியில் அல்லவா இது நடக்கிறது.

                      இதோ கடந்த ஆட்சியின் போது பசுவதை பற்றியும், மாட்டிறைச்சி கூடம் பற்றியும் இன்றைய பிரதமர் என்ன பேசினார் தெரியுமா?  ’’இந்த நாட்டிற்கு தேவை பசுமைப் புரட்சிதான். ஆனால் மத்தியில் ஆட்சியில் (ஐமுகூ)இருப்போர்கள்இளம்சிவப்புபுரட்சி((pinkrevolution நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’ அதாவது இறைச்சி கூடங்களுக்கான திட்டங்களை இவ்வாறு விவரிக்கின்றார் இன்றைய பிரதமர்.

 ’’இந்தஅரசு (ஐமுகூ) அரசு பசுவளர்பவர்களுக்கு மானியம் வழங்க விரும்பவில்லை.மாறாக இறைச்சிக் கூடங்களை கட்டுவோருக்கு மான்யம் வழங்குகின்றது’
இன்று மோடி ஆட்சியில் என்ன நிலைமை?

            2014 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மாட்டிறைச்சி ஏற்றுமதி 16 சதம் அதிகரித்துள்ளது. அதாவது 8,77,844 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாசுமதி அரிசி 2 சதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள 3600 இறைச்சிக் கூடங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ருஷ்யா  புதிதாக 4 இறைச்சிக் கூடங்களிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.ஏற்கனவே ஜோர்டான், சவுதி அரேபியா.எகிப்து. தாய்லாந்து, மலேசியாடன், வியட்நாமுடன் \ ருஷ்யாவும் இணைந்துள்ளது\.

          பஞ்சாப், உத்திர பிரதேசம், மகாரா\டிரம், ஆந்திர பிரதேசம், ஆகிய மாநிலங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யும் மாநிலமாகும்.இந்தியாவில் மொத்தம் 8.8 கோடி எருதுகள் உள்ளன.இது உலக எருதுகள் எண்ணிக்கையில் 58 விழுக்காடாகும். ஹிவை  இந்திய பொருளாதாரத்துடன் கலந்தது என்பதை போலி மதவாதிகள் (இந்துவத்தை அரசியலுக்ககாக பயன்படுத்வோர்கள்) புரிந்தகொள்ள வேண்டும்,அல்லது அவர்களைப்பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,

             பசுவதை பற்றியும் மாட்டிறைச்சி பற்றியும் பேசுவோர்கள் நோக்கம் மக்களின் வாக்கும், அதன்மூலம் கிடைக்கும் அதிகாரமும், அதன்வழி கார்பொரேட் முதலாளிகளுக்கு கிடைக்கும் உதவியும் மட்டும்தான் என்பதை புரியமுடிகிறது. 
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...