Pages

திங்கள், ஜனவரி 05, 2015

பாசிசம் அன்றும் - இன்றும்-2


அ.பாக்கியம்
பாசிசத்தின் தத்துவம் - அரசியல் கொள்கை :

            பாசிசத்தின் தத்துவம் பற்றி அறிஞர்கள் விரிவான முறையிலும், குறுகிய அளவிலும் எண்ணற்ற விளக்கங்களை அளித்துள்ளனர். அவற்றை சுருக்கி பொதுவாக அதன் அடிப்படை தத்துவம், இனவாதம், தேசியவெறி, வெளிப்படை சர்வாதிகாரம் என் 
று  வரையறுத்துள்ளனர். 

     ஜனநாயகம்,கம்யூனிசம், தாராளவாதம் ஆகியவை பாசிசத்தின் எதிர்ப்பாக இருந்தது. வசீகரமான, திறமைமிக்க, செயல்படும் ஒரே தலைவர். அவரின் கீழ் இராணுவம், அரசு, மக்கள், சமூகம் செயல்பட வேண்டும் என்பதுதான் பாசிசத்தின் அடிப்படை கொள்கை. அந்த தலைவரின் பேச்சை, எழுத்தை அனைவரும் கேட்க வேண்டும், கடைபிடிக்க வேண்டும் எனபது வேதமந்திரம்.

மதிப்புமிக்க ஜெர்மானிய ஒழுங்கும், கட்டுப்பாடும், தூய்மையையும் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று ஹிட்லர் கர்ஜித்தார். எனவே, “ ஒரே தலைவர், ஒரே பேரரசு, ஒரே மக்கள் ” என்று கோஷத்தை முன்வைத்தார். கலாச்சார அடையாளத்தை நிலைநாட்ட, சாம்ராஜ்ய மேலாண்மை பாதுகாக்க நம்பு, கீழ்படி, சண்டையிடு (க்ஷநடiஎந, டீயெல, குiபாவ) என்றும், 

        என்னை பின்தொடர், நான் துரோகம் செய்தால் கொன்றுவிடு, நான் கொல்லப்பட்டால் எனக்காக பழிவாங்கு என தனது வீரர்களுக்கு உத்திரவிட்டார் முசோலினி. தாராளவாதம் முதலாளித்துவத்திற்கும், வர்க்க மோதலுக்கும் இடையிலான தீர்வாக பாசிசம் முன்வைக்கப்பட்டது. வீணான போட்டி, லாபவெறி, புரட்சிகர மார்க்சியத்திற்கு மாற்று பாசிசம் என்று போதிக்கப்பட்டது.
அன்றைய இத்தாலி, ஜெர்மனியில் ஆளும் வர்க்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமான ஜனநாயகம், சோசலிசத்திற்கு எதிராகவும், சோவியத்யூனியனுக்கு எதிராகவும் சிந்தாந்த தாக்குதலை இரு நாட்டு தலைவர்களும் துவக்கினர்.
“ஜனநாயகம் பேசுவதற்கு அழகாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு தவறானது” என்று முசோலினி பேசினார். “நாம் சோசலிசத்தை எதிர்க்கின்றோம். காரணம் சோசலிசம் பிடிக்காது என்பதற்கு அல்ல அது தேசியத்தை எதிர்க்கிறது என்பதற்காகத்தான்” என்று முசோலினி கூறினார். ஹிட்லர் சோசலிசம் தொழிலாளர் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு, இனவெறி, தேசியவெறி, சர்வாதிகாரம்தான் சோசலிசம் என்று புதுவிளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். 

      சோவியத் யூனியனும், யூதர்களும் இணைந்து பாசிசத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என்று பேசினார். சோவியத் யூனியன் யூதர்கள் தலைமையில் செயல்படக்கூடிய “செல்வந்தர் ஆட்சி” (ஞடரவடிஉசயவ) என்று புளுகுமூட்டை பிரச்சாரத்தை, தவறாக கட்டமைக்கப்பட்ட புள்ளி விபரத்துடன் பிரச்சாரம் செய்தனர்.-- - - - -

1 கருத்து:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...