Pages

சனி, ஜனவரி 17, 2015

பாசிசம் அன்றும் - இன்றும்-6

-அ.பாக்கியம்-
75 ஆண்டுகளுக்கு பிறகு...?
 பாசிசம்   முடிந்துவிட்ட
ஒன்றல்ல....

       பாசிசத்தின் ஆட்சி அகற்றப்பட்டு 75 ஆண்டுகளுக்கு பிறகும் அவை புதிய வடிவில் தலைதூக்கிடும் நிகழ்வுகள் நடக்கிறது. அதற்கான சமூக பொருhளாதார நெருக்கடிகளும் வளமாக இருக்கிறது. அன்று “இனம்” முக்கிய கருவியாக பயன்பட்டது. இன்று “மதம்” பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகள் இன்று பல நாடுகளில் பாசிச சக்திகளை நீரூற்றி அல்ல “நிதியூற்றி, ஆயுதம் கொடுத்து வளர்க்கப்படுகின்றது.
    ஜனநாயம் மற்றும் பொருளாதார சுயசார்பு அடிப்படையில் உருவாகிற நாடுகளை அழிக்க பாசிச சக்திகளை பயன்படுத்துகின்றனர். சிலியில் ஹலேண்டே படுகொலை துவங்கி சிரியா வரை விரிவுபடுத்துகின்றனர்.
    அரபு உலகில் முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் ஆட்சியை அகற்றிடவும், அவர்களை அழித்திடவும் மத பழமைவாதிகளை பயன்படுத்துகின்றனர். எகிப்து உட்பட பல நாடுகளில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பையும். பாகிஸ்தானில் ஜமைத்-இ-இஸ்லாம், சவுதி அரேபியாவில் வஹாப்பிசம், ஆப்கனில் தாலிபான், தற்போது சிரியாவிற்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என பாசிச குணங்கொண்டவர்களை வளர்த்தெடுக்கின்றனர். இதன் வெளிப்பாடு இன்று அரபு உலகில் மதரீதியான பிரிவுகளில் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
   பாசிசத்தின் நேரடி அழிவுக்கு இரையான ஐரோப்பாவில், பாசிசம் தலைதூக்குகிறது. பிரிட்டனின் டோரிக் கட்சிக்குள்ளும், பிரான்சில் சர்கோஸியின் கட்சியிலும் அமெரிக்காவில் குடியரசு கட்சிக்குள்ளும் பாசிச சக்திகள் தலைதூக்குகின்றன.
     எனவே, பாசிசம் முடிந்துவிட்ட ஒன்றல்ல. முதலாளித்துவத்துடன் இணைந்தே நடைபோடும் ஒரு வடிவம். முதலாளித்துவம் மேலாண்மையை இழக்கும் நெருக்கடி ஏற்படுகிறபோது பாசிசம் பட்டவர்த்தனமாக வெளிபட்டு அழிவுகளை ஏற்படுத்தும்.


1 கருத்து:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...