Pages

வியாழன், ஜனவரி 15, 2015

பாசிசம் அன்றும் - இன்றும்-5

அ.பாக்கியம்-
பாசிசம் : வர்க்க பாசத்தின் குறை மதிப்பீடு
இன்றைய முதலாளித்துவ தாராளவாத அறிஞர்கள் பலர் பாசிசத்தை வரலாற்றில் இரு நாடுகளில் நடந்த தற்காலிக நிகழ்வாக பார்க்கின்றனர். அதையே உண்மை என நிருபிக்க முயலுகின்றனர். பாசிசம் அன்றே உலகம் தழுவிய நிகழ்வாகத்தான் இருந்தது. ஐரோப்பாவின் நான்கு நாடுகளை கடந்து ஜப்பான், அர்ஜெண்டைனா நாடுகளிலும் ஆட்சியை பிடித்தது.
உலகில் பல பாசிச கருத்துக்களை கொண்ட இயக்கங்கள் ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாவதற்கு காரணமாக இருந்தன. லெபனானில் பலேங்கி இயக்கம், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபா, எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புகளின் உருவாக்கத்திற்கு உந்து கோலாக அமைந்தது. ஐரோப்பாவின் பிரான்ஸ் முதல் டென்மார்க் வரை அனைத்து நாடுகளிலும் பல அமைப்புகளுடன் விரிவான உறவை பாசிஸ்ட்கள் வைத்திருந்தனர்.
யூதர்களையும் இதர பகுதி மக்களை இனப்படுகொலை செய்தது முசோலினி, ஹிடலர் என்று மட்டும் கூறுவது தவறு. அன்று பின்தங்கிய நாடுகளான போலந்தில் இருந்த ஆட்சியாளர்களுடன் மட்டுமல்ல, வளர்ந்த நாடான பிரான்ஸ், டென்மார்க்குகளில் உள்ள பல அமைப்புகளுடனும், ஆட்சியாளர்களின் உதவியுடனும் இந்த படுகொலைகளை பாசிஸ்ட்கள் அரங்கேற்றினர். இதுபோன்ற படுகொலைகளுக்கு துவக்கமும், முடிவும் ஹிட்லரும், முசோலினியும்தான் என்று போதிக்கப்படுகிறது. 
   
      இதற்குமுன் அமெரிக்கா தனது எல்லை விரிவாக்கத்தை செவ்விந்திய பூர்வகுடி மக்களின் இரத்த வெள்ளத்தில்தான் அரங்கேற்றியது. ஆஸ்திரேலிய பூர்வகுடி பூமியில் இன அழிப்பின் வாடை இன்றும் வீசுகிறது. அமெரிக்காவின் புதிய உலகம் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் அடிமை வியாபாரம், வியட்நாம் அழிப்பின் மீது கட்டமைக்கப்பட்டது. இன்றும் அது ஈராக், பாலஸ்தீன படுகொலைகளின் மீதுதான் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.
சர்வாதிகாரிகளின் பட்டியலில் ஹிட்லர், முசோலினியுடன் ஸ்டாலினையும், சோசலிசத்தையும் இணைத்து பிரச்சாரம் செய்வது அபாண்டமானது. சோவியத் நாடு, ஸ்டாலின் தலைமையில் பாசிசத்தை மட்டும் தோற்கடிக்கவில்லை, இன்றைய ஐரோப்பாவில் ஜனநாயகம், தாராளவாதம் (டுiநெசயடளைஅ) இருப்பதற்கு காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. 60 லட்சம் யூதர்களின் படுகொலைகளை பற்றி அயராது பேசும் ஏகாதிபத்தியவாதிகள் சோவியத் யூனியனின் 2.66 கோடி மக்களின் இழப்பு பற்றி பேச மறுக்கிறது. 

       இரண்டாவது உலக யுத்தம் காலத்தில் ஒரு சில கப்பல்களை ஜெர்மனிக்கு அனுப்பி யூதர்களை ஏற்றி வந்ததை பேசும் ஏகாதிபத்தியவாதிகள், யூதர்களுக்காக மட்டுமல்ல, பாசிச பிடியிலிருந்து சாதாரண மக்களும் தப்பிக்க தனது எல்லையை திறந்துவிட்ட சோவியத் பற்றி பேச மறுக்கிறது.
இரண்டாவது உலக யுத்த முடிவில், ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டில் உள்ள பாசிச ஆட்சியை நீக்கிவிடலாம் என்று ஸ்டாலின் முன்வைத்த ஆலோசனையை பிரிட்டன், அமெரிக்கா மறுத்துவிட்டன. பிறகு ஸ்பெயின் நாட்டு பாசிச ஆட்சியுடன் உறவு கொண்டு அவர்களை நேட்டோ ராணுவ அமைப்பில் இணைத்தனர். 1975 -ம் ஆண்டு வரை ஜெனரல் பிராங்கோவின் இராணுவ ஆட்சியை அமெரிக்கா. பிரிட்டன் ஆதரித்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...