Pages

வியாழன், ஆகஸ்ட் 30, 2018

மோடியின் பயனற்ற பணமதிப்பு நீக்கம்



                பலகோடி மக்களை படுபாதாளத்தில் தள்ளி நுற்றுக்கும் மேற்பட்ட மக்களை வரிசையில் நிற்கவைத்து பழிவாங்கிய மோடியின் பணமதிப்பு நீக்கம் எந்தவித பயணும் தரவில்லை என்று ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் வருடாந்திர அறிக்கை(ஆக.29) தெரிவித்துள்ளது.
2016 ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மோடி இரவு எட்டுமணிக்கு 1000 ருபாய் 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார், கறுப்பு பண்ம் பிடிபடும், கள்ளப்பணம் மறையும், ஊழல் அழியும், தீவிரவாதம் ஒழியும் என்று மார்தட்டினார் மோடி. 50 நாட்களில் இது நடக்கவில்லை என்றால் என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கேளுங்கள் என்றார், இதில் எதுவும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல முன்பைவிட அதிகமாகி உள்ளது.
பணமதிப்பு நீக்கம் அறிவிப்பின்போது புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகளில் மதிப்பு 15.44 லட்சம் கோடிகள் ஆகும். இதுவரை ரிசர்வ் பாங்க ஆப் இந்தியாவிற்கு திரும்பி வந்த்து 15.31 லட்சம் கோடிகள் ஆகும். இது மோடி அரசு எதிர்பார்த்த்தைவிட 10 லட்சம் கோடிகள் அதிமாகும்.  அதாவது 99 சதவிகிதம் பணங்கள் திரும்பிவந்துவிட்டது.
நோட்டுகளின் புழக்க மதிப்பு ஏற்கனவே இருந்த்தைவிட 37.7 சதம் அதிகமாகி 2018 மார்ச் கணக்குபடி 18.03 லட்சம் கோடியாக உயந்துவிட்டது. அரசு எதிர்பார்த்த அளவிற்கு மின்ன்னு பண பரிமாற்றம் உயரவில்லை.
  • ·         100 க்கும் மேற்பட்டவர்கள் மரணம்.
  • ·         தீவிரவாதம் குறையவில்லை அதிகமாகி உள்ளது,
  • ·         ஊழல் குறையவிலை நோட்டுக்கள் அச்சடிப்பதிலும்    பரிமாற்றத்திலும்    அதிமாகி உள்ளது,
  • ·         கள்ளநோட்டுகள் 7,62,072 மட்டுமே வங்கியில் கண்டறியப்பட்டுள்ளது, இது 20,4 சதம் மட்டுமே அதிமாகும்.
  • ·         2018 நிதியாண்டு ஏப்ரல் ஜுன் மாத காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5,7 சதமாக குறைந்துள்ளது. கடந்த முன்றாண்டுகளில் இதுவே குறைவானதாகும்.
  • ·         நோட்டுக்கள் அச்சடிக்க 2015/16ம் ஆண்டைவிட 2016/17 ல் இரட்டிப்பாகி உள்ளது, அதாவது ரு 3420 கோடியிலிருந்த ரு 7965 கோடியாக உயர்ந்துள்ளது. இது வங்கிக்கு திரும்பாத ரு 8,900 கோடியைவிட சற்று குறைவானதாகும்.
  • ·         இக்காலத்தில் ஆர்பிஐ வருமானம் 23.56 சதம் குறைந்து செலவுகள் 107.84 சதம் அதிகரித்துள்ளது.
  • ·         பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு பொதுத்துறை வங்க்கிகளில் வாராக்கடன்  பலமடங்கு அதிகமாகி உள்ளது. முதலீடு குறைந்துள்ளது,
  • ·         2017 ஜனவரி ஏப்ரல் மாத்த்தில் 15 லட்சம் பேர்கள் உடனடியாக வேலை இழந்தனர்.
  • ·         மோடி ஆட்சியில் பணமதிப்பு நீக்கம் படுதோல்வி அடைந்த்து மட்டுமல்ல இன்றளவும் இந்திய மக்களை பாடாய்படுத்தி வருகிறது.
  • அ.பாக்கியம்
  •  


சனி, ஜூலை 14, 2018

மோடி அரசின் 4 ஆண்டு சாதனை?


         2015-ம் ஆண்டில் இந்தியாவில் 75 சதமான குடும்பங்கள் . ரூ 5000 மாதம் வருமானத்தில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. ஆனால், மோடியின் இந்த 3 ஆண்டு ஆட்சியில் 1 சதம் பணக்கார குடும்பங்கள் சொத்து 48 % லிருந்து  58% ஆக உயர்ந்துள்ளது.

           2017 டிசம்பர் வரை அதானியின் சொத்து மதிப்பு 124. 6% உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 2015-16 மற்றும் 2016_17-ல் பாஜக வின் சொத்து மதிப்பு 81. 18%. அதிகரித் ள்ளது. அதாவது 570.86 கோடியிலிருந்து 1034. 27 கோடியாக உயர்ந்துள்ளது.

திங்கள், மே 21, 2018

போலி தேசபக்தர்களின் துப்பாக்கி முனையில் மாணவர்கள்:



  •    போலிகள் தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அதீத நிஜம்போல் நடிப்பரர்கள், அப்படித்தான் இப்போது பாஜக கட்சியும் ஆட்சியும் நடந்துகொள்கிறது, மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அந்த மாநில அரசு புதிய உத்திரவை மே 15 அன்று பிறப்பித்துள்ளது
  • ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு அழைக்கிறபோது மாணவர்கள் ஜெய் இந்த் என்றுதான் பதில்சொல்ல வேண்டும் என அந்த உத்திரவு கூறுகின்றது,  மாணவர்கள் மத்தியில் தேசபற்று படிப்படியாக ஆழமாக வளர்க்க இந்த உத்திரவாம். அந்த மாநிலத்தில் உள்ள 1.22 லட்சம் பள்ளிக்கூடங்களும் இதை கடைபிடிக்கவேண்டுமாம்
  • கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துவதைவிட தங்களின் போலி தேசபக்தியை நிருபிக்க பாடுபடுகின்றனர், கடந்த ஆறு ஆண்டுகள் போதுமான நிதியை ஒதுக்கியும்  94 சதமான பள்ளிகள் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவில்லை, பணங்கள் பதுக்கப்பட்டதை மறைக்கவும் இவர்களுக்கு ஜெய் இந்த் தேவைப்படுகிறது, 


வியாழன், மே 17, 2018

இதுவும் நடக்கும்?



கர்நாடக தேர்தல் முடிந்து வழக்கபோல் பாஜக தனது வித்தைகளை காட்ட ஆரம்பித்து விட்டது. வகுப்புவாத அரசியல் ஊழல் பேர்வழிகளையும், கிரிமினல் குற்றவாளிகளையும், கார்போரேட் கோடீஸ்வரர்களையும் ஊக்குவிக்கும் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகள்  மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது,

           தேர்ந்தெடுக்கப்பட்ட 221 சட்டமன்ற உறுப்பினர்களில் 77பேர்கள்(35%) கிரிமினல் குற்றவாளிகள். அதிலும் 54 பேர்கள் கொலை மற்றும் கொலைமுயற்சி என கடுமையான குற்றப்பின்ன்னி கொண்டவர்கள். 2008ம் ஆண்டு இந்த குற்றப்பின்ன்னி 24சதமாக இருந்த்து, இதிலும் வழக்கபோல் பாஜகதான் முன்னனி. மொத்தமுள்ள 77 போர்களில் 41பேர்கள் பாஜகவினர். 23 பேர்கள் காங்கிரஸ், 11பேர்கள் மஜக ஆகும்,

              221 சட்டமன்ற உறுப்பினர்களில் 215பேர்கள் கோடீஸ்வரர்கள். இதிலு 50சதத்தினர் 10கோடிக்குமேல் சொத்துள்ளவர்கள். (இது வேறு வழியில்லாமல் தெரிவித்த்து). அதாவது 93 சதம்விகிதம் சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வர்ர்கள்,  2008ம் ஆண்டு 63 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.

82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?

  அ.பாக்கியம் சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களு...