உண்மை நிலவரம் என்ன?
அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தொழிலாளர்களின் 70% வெளிநாட்டினர். அமெரிக்காவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 20% குடியேறியவர்களால் நிறுவப்பட்டது. மேலும் 25 சதவீதம் குடியேறியவர்களின் வாரிசுகளால் நிறுவப்பட்டது இதில் அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் உள்ளடங்கும்.
சீனாவில் இருந்து குடியேறி அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.ஜூம் மற்றும் டோர்டாஷ் போன்ற வெற்றிகரமான நிறுவனங்கள் சீனாவில் இருந்து குடியேறியவர்களால் நிறுவப்பட்டது. குறைக்கடத்தி(semiconductor) சின்னமாக விளங்கக்கூடிய லாம் ரிசர்ச் சீனாவில் பிறந்த பொறியாளரால் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் சிறந்த செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியாளர்களில் 38 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள்
என்விடியா (Nvidia) மற்றும் பல நிறுவனங்கள் தைவானில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற சீனர்களால் நிறுவப்பட்டது.
தற்போது சீனாவின் வளர்ச்சி கண்டு, வாய்ப்புகளைக் கருதி உலகின் திறமைசாலிகள் சீனாவை நோக்கி செல்கின்றனர். திறமையான வெளிநாட்டின்ருக்கான புதிய விசாக்கள், அதிக சம்பளம், ஆராய்ச்சி செய்வதற்கான போதுமான மானியங்கள், சீனாவில் வாழ்வதற்கான சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை அவர்கள் சீனாவை நோக்கி செல்வதற்காக காரணமாக மாறுகிறது.
சீனா ஆயிரம் திறமைகள் திட்டம் (Thousand Talents Program TTP) ஏராளமான விஞ்ஞானிகளை சீனாவை நோக்கி ஈர்த்து வருகிறது. இந்தத் திட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றியை தந்துள்ளது.
இப்போது அமெரிக்காவில் வாழ்கின்ற சீனர்களும் இதர நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டினரும் சீனாவை நோக்கி படையெடுக்கின்றனர். நோபல் பரிசு பெற் ஃப்ரெஞ்ச் நாட்டை சேர்ந்த லேசர் விஞ்ஞானி ஜெரார்ட் மௌரோ (Gérard Mourou ) அவருக்கு சென்று பணியாற்ற விருப்பப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் சீன வழித்தோன்றல் விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவது அதிகமாகி வருகிறது. 2010 ஆம் ஆண்டு சீனா மற்றும் ஹாங்காங் பகுதிக்கு 500 பேர்களும் இதர நாடுகளுக்கு 400 பேர்கள் வரை வெளியேறினர். 2021 ஆம் ஆண்டு சீனாவிற்கு சுமார் 2000 பேர்களும், இதர நாடுகளுக்கு 500 முதல் 700 பேர்கள் வரை வெளியேறுகின்றன
அமெரிக்காவை பிடித்து ஆட்டக்கூடிய இன ஒதுக்கல், சீனாவுக்கு எதிரான பிரச்சாரம், புவிசார் அரசியல் செயல்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான சீன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சீனாவிற்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற சீன மாணவர்களும் சீனாவிற்கு திரும்பி வருகின்றனர்.
காரணம்,
சீனா ஆராய்ச்சி துறையிலும், காப்புரிமை, அறிவியல் வெளியீடுகளில் உலகில் முதலாவது இடத்தில் உள்ளது. உலகில உயர்தர வெளியீடுகளில் சீனா முன்னிலையில் உள்ளது. ஆராய்ச்சி துறைக்கான உலகில் உள்ள 10 சிறந்த நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் சீனாவில் உள்ளது உயர்தர அறிவியல் வெளியீடுகளில் சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனாவின் Huawei நிறுவனத் மட்டும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) 1.5 பில்லியன் டாலர் செலவழிக்கிறது. அங்கு மட்டும் 36,000 தலைசிறந்த விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உருவாக்கப்பட்டு முன்னணி தொழில்நுட்பங்களில் பணியாற்றுகிறார்கள்.
சீனா இப்போது முழு ஐரோப்பிய யூனியனை (EU) விட R&Dக்காக அதிக பணத்தை செலவழிக்கிறது. அமெரிக்காவிற்கு சமமான அளவில் செலவு செய்கிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா 806. 0 பில்லியன் டாலர்,சீனா 667.6 , பில்லியன் டாலர் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளை உள்ளடக்கிய செலவு 474.1 பில்லியன் டாலர் ஆகும்.
சீனா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 2023 ஆம் ஆண்டு 500 பில்லியன் டாலர் செலவு செய்வது. இந்தத் தொகை வாங்கும் திறனுடன் ஒப்பிட்டால் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு இணையாகும்.
சர்வதேச காப்புரிமைகளில் சீனா உலகை வழி நடத்துகிறது சர்வதேச
காப்புரிமைகளில் 80 சதவீதத்தை 5 நாடுகள் பெற்றுள்ளன. காப்புரிமையில் சீனா 25.5% அமெரிக்கா 20.4% ஜப்பான் 18.0% தென்கொரியா 8.2% ஜெர்மனி 6.2% மற்றவர்கள் 21. 7%இவற்றில் சீனா முதலிடத்தில் இருக்கிறது சீனாவில் ஹுவை (Huawei) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா சீனாவின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு வெறிபிடித்து அலைவதை விடுத்து சீனாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் ராணுவ அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கைவிட்டு தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் மக்களின் வாழ்க்கை பெற மேம்பாட்டிலும் சீனாவுடன் போட்டி போட வேண்டும் இது உலகத்திற்கு நல்லது என்று சீனா வலியுறுத்தி வருகிறது.
அ.பாக்கியம்
தகவல் ஆதாரம்
https://x.com/Kanthan2030/status/1862136599053770999?t=83gh8yQeQnP2X01udIQ9Bw&s=19