Pages

சனி, ஜூலை 23, 2022

அ... புளுகு,! ஆ..... புளுகு!! இது அமீத்ஷா புளுகு....,!


 --------------------------------------------------


 அண்ட புளுகு ஆகாச புளுகு இவற்றையெல்லாம் மிஞ்சிவிடும் அமித்ஷா புளுகு.......

     ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் தேசிய மாநாட்டில் கிராமப்புற பொருளாதாரம் பற்றி பேசினார்.

       சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளில் 64 லட்சம் ஹெக்டேர் நிலம் மட்டும்தான் சாகுபடி செய்யக்கூடிய நிலமாக மாற்றப்பட்டது. 

ஆனால் பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 64 லட்சம் ஹெ்டேர் விவசாய நிலம் அதிகரித்து உள்ளது என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். 

இது பிரதான் மந்திரி க்ரிஷ்  சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் மூலமாக சாதிக்கப்பட்டுள்ளது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.

இது ஒரு விவரங்கெட்ட புளுகுனியாக உள்ளது. ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மூலமாக நில பயன்பாடு குறித்து 2021  ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 2018 19 வரையிலான விவரங்கள் அடங்கியுள்ளது.

      1950-51 இல், நாட்டில் 1,897 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடி நிலப்பரப்பு, 2013-14ல் 1,819 லட்சம் ஹெக்டேராக சுருங்கியது.  

அதாவது, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபோது, ​​அமித் ஷா கூறியது போல் இந்தியாவின் சாகுபடி நிலம் 64 லட்சம் ஹெக்டேர் அல்ல, 1,819 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

சுதந்திரத்துக்கும் 2013-14க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாய நிலம் 78 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது.  இருப்பினும் சாகுபடி நிலம் குறைந்து கொண்டே போவது நிற்கவில்லை. தொடர்கிறது.  

     சமீபத்திய தரவு, 2018-19 முதல், இந்தியாவின் விவசாய நிலத்தின் அளவு 1,809 லட்சம் ஹெக்டேராக உள்ளது.  அதாவது  பாஜக ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாகுபடி நிலம் 10 லட்சம் ஹெக்டேர் சுருங்கி விட்டது.

     விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏப்ரல் 2022 இல் ராஜ்யசபாவில் அளித்த பதிலின்படி, 62.4 லட்சம் ஹெக்டேர் நிலம்,   நுண்ணீர் பாசனத்தின் (சொட்டுநீர் மற்றும் தெளிப்பான்) பர் ட்ராப் மோர் க்ராப்' (Per Drop More Crop) கூறு மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.  

இத்திட்டத்தின் 'நீர்நிலை மேம்பாடு' கூறுகளின் கீழ், 5.6 லட்சம் ஹெக்டேர் பாதுகாப்பு நீர்ப்பாசன திறன் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தோமர் கூறினார். 

     இவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்படும் சாகுபடி நிலத்தில் நீர்ப்பாசன முறைகளில் ஏற்பட்டு இருக்க கூடிய மாற்றம் மட்டுமே. அமித்ஷா கூறியிருப்பது போல் 8 ஆண்டுகளில் 64 லட்சம் ஹெக்டேர் புதிதாக சேர்த்து விட்டோம் என்று கூறுவது உண்மை அல்ல.

 நீர்வள ஆதாரம் ஒரு கண்ணோட்டம் 2022 என்று அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

       2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 64. 14 லட்சம் ஹெகடேர் நீர் பாசன வசதிகள் செய்யப்பட்டு ள்ளது.11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007-2012) முடிவில் நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத் திறன் ஏற்கனவே 1,135 லட்சம் ஹெக்டேராக இருந்தது என்றும் அறிக்கை  குறிப்பிட்டுள்ளது. 

       1950-51 இல் 17.1%  நீர்ப்பாசனம் செய்யப்படும் மொத்த பயிர்ப் பகுதியாக இருந்தது. 2013-14 இல் 47.7% ஆக அதிகரித்துள்ளது.  இது மோடி அரசாங்கத்தின் கீழ் முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் 4 சதவீதம் மட்டுமே  வளர்ச்சியடைந்து, 2018-19ல் 52% ஆக உயர்ந்துள்ளது.  அதாவது இந்தியாவில் 48% விளைச்சல் நிலம் இன்னும் மழையை நம்பியே உள்ளது.

அ.பாக்கியம் 

https://www.factchecker.in/fact-check/amit-shahs-claim-on-increase-in-agricultural-land-doesnt-check-out-827381

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...