Pages

வெள்ளி, ஜூலை 08, 2022

"கழிப்பறை". பிரதமரின் துல்லியமற்ற தாக்குதல்:



        செல்கிற இடம் எல்லாம் துல்லிய தாக்குதல் பற்றி வாய் நிறைய பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் ஜெர்மனி சென்ற பொழுது கழிப்பறை பற்றியும் துல்லியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு 100% வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு சாதனை நிகழ்த்தி விட்டதாக பேசி இருக்கிறார்.

       2019 ஆம் ஆண்டு அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்று ஒன்றிய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

        அதாவது திறந்தவெளி மலம் கழித்தல்(ODF) முற்றிலுமாக்  ஒழிக்கப்பட்டது என்று பெருமை பேசப்பட்டது.

        இது உண்மை அல்ல என்பதையும் ஊடகங்கள் ஆய்வு செய்து நிரூபித்திருக்கின்றனர். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS)  அறிக்கை 2022 -ம் ஆண்டு  19 சதவீதம் வீடுகளுக்கு கழிப்பறை இல்லை என்பதையும் அவர்கள் திறந்தவெளி மலம் கழித்தல் முறையை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் வெளியிட்டுள்ளது.

     2014 ஆண்டு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 61% வீடுகளுக்கு கழிப்பறை வசதி இருந்துள்ளது. மீதமுள்ள 39 சதவீத வீடுகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுப்பதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு ஸ்வாச் பாரத் மூலம் அமலாக்க திட்டமிடப்பட்டது. 2015-16 முதல் 2021 வரை 20% வீடுகளுக்கு மட்டும்தான் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

     மேலும் தற்போது 19 சதவீதம் வீடுகளுக்கு கழிப்பறை இல்லை என்பதுதான் உண்மை.

       தேசிய அளவில் 81% கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டிருக் கிறது என்று ஆய்வுகள் தெரிவித்தாலும் பீகாரில் 62% வீடுகளுக்கும் ஜார்கண்டில் 70% வீடுகளுக்கும் ஒரிசாவில் 71% வீடுகளுக்கும் மட்டும்தான் அதாவது தேசிய சராசரியை விட மிக குறைவான அளவிற்கு தான் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

      2021 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் ஜூலை மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி இந்தியாவில் 15 சதவீத மக்கள் திறந்தவெளி மலம் கழித்தல் கடைபிடிக்கின்றனர் என்றும் இதில் கிராமப்புற மக்கள் தொகையில் 22 சதவீதம் பேர் இருக்கின்றனர் என்றும் நகர்புறத்தில் ஒரு சதவீதம் பேர் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

     ஆனால் இந்திய மக்களை மட்டும் அல்ல உலகம் முழுவதும் துணிச்சலாக உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியும் விஷயங்களை மறைத்து துல்லியமான பொய்களை பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது பாஜகவின் மோடி தலைமையிலான அரசு.

அ.பாக்கியம்.

https://www.factchecker.in/fact-check/pm-modi-claims-india-open-defecation-free-all-villages-electrified-but-data-show-otherwise-824267



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...