Pages

வெள்ளி, ஜூலை 22, 2022

குப்புறவிழுந்தாலும் ..... இல்லை தலை குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை......


அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ரூபாயின் வீழ்ச்சி ஏற்பட்ட பொழுது மோடி வீர வசனம் பேசினார். மன்மோகன் சிங் அரசு பலவீனமான அரசு, பலவீனமான ரூபாய் என்றார்.

இப்போது 56 இன்ச் பலமான ஆட்சியில் ஏன் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்றால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்.

டிசம்பர் 31, 2014 அன்று ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 63.33 இந்திய ரூபாயாக இருந்தது. ஜூலை 11, 2022 அன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.41 ஆகக் குறைந்தது. இன்று ரூபாயின் வீழ்ச்சி 80.03 என்ற அளவில் விழுந்து விட்டது.

டிசம்பர் 2014 முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது

ரஷ்யா-உக்ரைன் மோதல்,கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக நிதி நிலைமைகள் இறுக்கம்

போன்ற உலகளாவிய காரணிகள் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். ." என்று நிதி அமைச்சர் நிம்மி காரணம் கூறுகிறார்.அது காரணமாக தெரியவில்லையா?

பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயை விட வலுவிழந்துள்ளன, என்று நொண்டிச்சாக்கு சொல்கிறார் நிதி அமைச்சர் நிம்மி.

நாணயத்தின் தேய்மானம் ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்க வாய்ப்புள்ளது, இது பொருளாதாரத்தை சாதகமாக மாற்றும் என்று 56 அங்குல அரசின் வெட்டிப்பேச்சு.

RSS தலைவர் ரூபாயின் மதிப்பு குறைத்தால் நமக்கு வெளிநாட்டு நன்கொடை அதிகம் கிடைக்கும் என்று பேசி வெந்தபுண்ணில் வேல் பாச்சுகிறார்.

2022-23 நிதியாண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு போர்ட் ஃபோலியோ முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளனர் என்று நிதி அமைச்சர் கூறினார். (ANI). உலகமெல்லாம் சுற்றி சுற்றி மோடி கொண்டுவந்தார் என்பது இதுதானா?


மோடி அரசின் பொருளாதார வீழ்ச் சிதான் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் 28இன்ச் மார்புள்ள மனிதனும் புரிந்து கொள்வார்.

அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...