Pages

சனி, ஜூலை 02, 2022

ஊரான் வீட்டு நெய்: மோடியின் கை:


     

இந்தியா முழுவதும் 100% கிராமங்களுக்கு தனது அரசு மின்சாரம் வழங்கி விட்டது என்று ஜெர்மன் சென்று முழங்கி இருக்கிறார் நமது பிரதமர்.  இது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உந்து சக்தி என்று வேற பேசி இருக்கின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளரின் கிரா மத்திற்கே மின்சாரம் இல்லை என்ற கதை உலகறிந்த விஷயம் தான். இந்திய கிராமங்கள் அனைத்திற்கும் பாஜக அரசு தான் மின்சாரம் கொடுத்தது போன்ற பிரச்சாரம் செய்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

சுதந்திரம் பெறுகிற பொழுது 1500 கிராமங்களுக்கு மின்சாரம் இருந்தது. 1950 ஆம் ஆண்டு 3000 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு 4,81,124 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. 10வது ஐந்தாண்டு திட்டத்தில் (2002-07) 63,955 கிராமங்களுக்கும் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் (2007-12) 45,955 கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. 2015 மார்ச் 31 இந்தியாவில் உள்ள கிராமங்களில் 97 சதவீதம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் சென்சஸ் கிராமங்கள் 5,97,464 உள்ளது. இவற்றில் 5,79,012 கிராமங்களுக்கு பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது.
மீதம் உள்ள 18,452  கிராமங்களுக்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மோடியின் முதல் ஐந்தாண்டுகளையும் வாஜ்பாய் ஆட்சியின் ஐந்தாண்டுகளையும் சேர்த்தால் கூட வருடத்திற்கு 2000 கிராமங்களுக்கு தான் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத ஆண்டுகளில் வருடத்திற்கு 8000 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளில் 10% வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அங்குள்ள பள்ளிக்கூடங்கள் அலுவலகங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டால் அந்த கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட கிராமம் என்ற கணக்கிட்டுக்குள் வந்துவிடும்.

மோடி அவர்கள் 100% மின்சாரம் கொடுக்கப்பட்டு விட்டது என்று பேசுவதை அனைத்து வீடுகளுக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது அப்படித்தான் அவர்கள் பேசி வருகிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிற்பாடு மின்சாரம் கொடுக்கப்பட்டதாக அறிவித்துள்ள 18,452 கிராமங்களில் 8 சதவீதம் வீடுகளுக்குதான் மின்சாரம் கிடைத்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் சென்சஸ் கிராமங்கள் தவிர குக்கிராமங்கள் ஏராளமாக இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரின் டுங்குர்ஷாஹி கிராமமாகும். இவரின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 1350 குக்கிராமங் களுக்கு மின் இணைப்பு கிடையாது.

மோடி அரசு கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் தன்னுடைய சாதனைகளாக, இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்து விட்டது போன்ற பிரச்சாரத்தை உலகம் முழுவதும் சென்று பறைசாற்றிக் கொள்வது பச்சை பொய்யாகும்.
அ. பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...