Pages

திங்கள், ஜூலை 11, 2022

மோடியின் ராஜ்யத்தில் சிவனே யானாலும் சிறை தான்.



      அசாமில் இரண்டு சமூக ஆர்வலர்கள், பிரிஞ்சி போரா மற்றும் சக பெண், பரிஷ்மிதா, சமூக பிரச்சனைகள் பற்றிய ஒரு சிறு நாடகத்திற்காக சிவபெருமான் மற்றும் அவரது மனைவி பார்வதி தேவியாக உடையணிந்தனர்.

     'சிவா' மற்றும் 'பார்வதி' இருவரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​எரிபொருள் தீர்ந்ததால் வாகனம் நின்றது.  "சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே இந்த பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு 'சிவா' எரிபொருள் விலை உயர்வு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து மோடி அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்குகிறார்" .

    அப்போது, ​​விலைவாசி உயர்விலிருந்து விடுபட நரேந்திர மோடி அரசுக்கு எதிராக பொதுமக்கள் வெளியே வந்து போராட்டம் நடத்துமாறு ‘சிவா’ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காணொளி வலைத்தளத்தில் வைரலானது.

      சங்கிகளுக்கு பயம்  வந்துவிட்டது. எங்கே மக்கள் மோடிக்கு எதிராக திரும்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் கோழைத்தனத்தில், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாமல் கைது செய்து உள்ளனர்.

      பாரதிய ஜனதா கட்சியின் (BJP) இளைஞர் பிரிவு  புகார்  செய்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி பின்னர் புகார் அளித்துளனர். 

 நாடகத்தில் சிவபெருமானாக நடித்த பிரிஞ்சி போராவை கைது செய்தனர்.

பின்னர் அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

https://m.thewire.in/article/rights/assam-activist-arrested-shiva-street-play-rising-prices/amp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...