Pages

சனி, ஜூலை 14, 2018

மோடி அரசின் 4 ஆண்டு சாதனை?


         2015-ம் ஆண்டில் இந்தியாவில் 75 சதமான குடும்பங்கள் . ரூ 5000 மாதம் வருமானத்தில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. ஆனால், மோடியின் இந்த 3 ஆண்டு ஆட்சியில் 1 சதம் பணக்கார குடும்பங்கள் சொத்து 48 % லிருந்து  58% ஆக உயர்ந்துள்ளது.

           2017 டிசம்பர் வரை அதானியின் சொத்து மதிப்பு 124. 6% உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 2015-16 மற்றும் 2016_17-ல் பாஜக வின் சொத்து மதிப்பு 81. 18%. அதிகரித் ள்ளது. அதாவது 570.86 கோடியிலிருந்து 1034. 27 கோடியாக உயர்ந்துள்ளது.

திங்கள், மே 21, 2018

போலி தேசபக்தர்களின் துப்பாக்கி முனையில் மாணவர்கள்:



  •    போலிகள் தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அதீத நிஜம்போல் நடிப்பரர்கள், அப்படித்தான் இப்போது பாஜக கட்சியும் ஆட்சியும் நடந்துகொள்கிறது, மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அந்த மாநில அரசு புதிய உத்திரவை மே 15 அன்று பிறப்பித்துள்ளது, 
  • ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு அழைக்கிறபோது மாணவர்கள் ஜெய் இந்த் என்றுதான் பதில்சொல்ல வேண்டும் என அந்த உத்திரவு கூறுகின்றது,  மாணவர்கள் மத்தியில் தேசபற்று படிப்படியாக ஆழமாக வளர்க்க இந்த உத்திரவாம். அந்த மாநிலத்தில் உள்ள 1.22 லட்சம் பள்ளிக்கூடங்களும் இதை கடைபிடிக்கவேண்டுமாம். 
  • கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துவதைவிட தங்களின் போலி தேசபக்தியை நிருபிக்க பாடுபடுகின்றனர், கடந்த ஆறு ஆண்டுகள் போதுமான நிதியை ஒதுக்கியும்  94 சதமான பள்ளிகள் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவில்லை, பணங்கள் பதுக்கப்பட்டதை மறைக்கவும் இவர்களுக்கு ஜெய் இந்த் தேவைப்படுகிறது, 


வியாழன், மே 17, 2018

இதுவும் நடக்கும்?



கர்நாடக தேர்தல் முடிந்து வழக்கபோல் பாஜக தனது வித்தைகளை காட்ட ஆரம்பித்து விட்டது. வகுப்புவாத அரசியல் ஊழல் பேர்வழிகளையும், கிரிமினல் குற்றவாளிகளையும், கார்போரேட் கோடீஸ்வரர்களையும் ஊக்குவிக்கும் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகள்  மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது,

           தேர்ந்தெடுக்கப்பட்ட 221 சட்டமன்ற உறுப்பினர்களில் 77பேர்கள்(35%) கிரிமினல் குற்றவாளிகள். அதிலும் 54 பேர்கள் கொலை மற்றும் கொலைமுயற்சி என கடுமையான குற்றப்பின்ன்னி கொண்டவர்கள். 2008ம் ஆண்டு இந்த குற்றப்பின்ன்னி 24சதமாக இருந்த்து, இதிலும் வழக்கபோல் பாஜகதான் முன்னனி. மொத்தமுள்ள 77 போர்களில் 41பேர்கள் பாஜகவினர். 23 பேர்கள் காங்கிரஸ், 11பேர்கள் மஜக ஆகும்,

              221 சட்டமன்ற உறுப்பினர்களில் 215பேர்கள் கோடீஸ்வரர்கள். இதிலு 50சதத்தினர் 10கோடிக்குமேல் சொத்துள்ளவர்கள். (இது வேறு வழியில்லாமல் தெரிவித்த்து). அதாவது 93 சதம்விகிதம் சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வர்ர்கள்,  2008ம் ஆண்டு 63 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.

திங்கள், ஏப்ரல் 30, 2018

ஹே மார்க்கெட்: தூக்குமேடைக்காட்சிகள்


                  1886-மே மாதம் 4-ம் தேதி சிக்காகோவின் ஹேமார்கெட்டில் நடைபெற்ற சம்பவத்திற்கு 31 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 8 பேருக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் சாமுவேல், பெல்டன், ஷவாஸ் ஆகியோருக்கு கவர்னர் மன்னிப்பு வழங்கினார். லூயிலிங்க்ஞு தூக்குதண்டனைக்கு முதல்நாள் சிறைச்சாலையில் டைனமைட் குண்டுவெடித்து இறந்தார். மற்ற நால்வரும் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆல்காட் ஸ்பைஸ், ஃபிஷர், எங்கேல் ஆகிய நால்வரும் 1887- நவம்பர் மாதம் 11-ம் தூக்கிலிடப்பட்டனர். 

      சிக்காகோவின் குக் கவுண்டி நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் இடையில் உள்ள டியர்பார்சன் தெருவின் நடைபாதையில் தூக்குமேடை அமைக்க்கப்பட்டது. மறுநாள் நால்வருக்கும் தூக்குதண்டனை. முதல்நாள் இரவு தூக்கும் வருமா? அவர்கள் நன்கு உறங்கினார்கள். காரணம் அந்த மரணத்தை மகத்தானது என நினைத்தார்கள்.ஆல்பர்ட் பார்சன் மட்டும் தனக்கு மிகவும் பிடித்தமான பாட்டை பாடிக்கொண்டிருந்தார். காலை எழுந்தவுடன் அவர்கள் விரும்பிய உணவு வழங்கப்பட்டது. 

              காவலர்கள் மதுவேண்டுமா? என்று கேட்டனர் பார்சன்ஸ் “இல்லை நான் தெளிவோடு செல்ல விரும்புகிறேன். மிதமான குடிப்பழக்கம் உள்ளவர்கள்  இரக்கத்தால் ஒரு துளி கண்ணீர் சிந்தலாம்” என்றார். தூக்கிலிடும்போது கண்ணீர்வரக்கூடாது எனபதில பார்சன்ஸ் உறுதியாக இருந்தார்.  காபியும் பிஸ்கெட்டும் கேட்டார். அவைகொடுக்கப்பட்டது. குடித்து முடித்தவுடன் பார்சன் “இப்போது நன்றாக  உணர்கிறேன் நாம் விஷ்யத்தை முடித்துவிடலாம்“ என்று  தூக்கிற்கு தயாராக சென்றனர். காலை 11.30 மணிக்கு bஷ்ரிஃப் மாட்சன். ஜெயிலர் ஃபோல்ஸ், குக்கவுண்டி மருத்துவர்,  மற்றும் பல காவலர்கள் முன்னிலையில் நால்வரும் அழைத்துவரப்பட்டனர். அங்கு மரணதண்டனை உத்திரவு வாசிக்கப்பட்டு தூக்கு தண்டனையை பார்க்க  அனுமதிக்கப்பட்ட  200 பேர்கள் கூடியிருந்த தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.  அந்தக் காட்சியை நேரில் பார்த்த நிருபர் இவ்வாறு எழதிஉள்ளார்.



          “எவ்வித கவலையுமின்றி  நாள்வரும் தங்கள்ல இடத்தில் நின்றார்கள்.கழுத்தில் மாட்டப்பட்ட கயிறை சரிசெய்ய ஃபிஷ்ர் உதவினார். ஸ்பைசின் கயிறு இறுக்கமாக இருந்தது.அது சற்று வசதியாக சரிசெய்யப்பட்டவுடன் அவர் புன்னகையுடன் “நன்றி“ என்றார். பின்னர் ஸ்பைஸ் பேசினார் “இன்று நெறிக்கும் எங்கள் குரல்களைவிட எங்கள் மவுனம் மிகவும் சக்திமிக்கதாக மாறும் காலம் ஒன்று வரும்” என்று உரக்க கூறினார். இதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்றார் எங்கேல். பார்சன்ஸ் கடைசியாக  பேசினார் “ஓ! அமெரிக்கர்களே! நான் பேச அனுமதிக்கப்படுவேனா? ஃbஷ்ரிப் மாடிசன் என்னை பேசவிடுங்கள்! மக்களின் குரல் கேட்கட்டும்!” என்றார். பின்னர் மதியத்திற்கு சில நிமிடங்கள் முன்னதாக அடிப்பலகை உருவப்பட்டது.

             தங்கள் மரணத்தைப்பற்றி கிஞ்சிற்றும் அஞ்சாமல் சிரித்த முகத்துடன் பெருமிதத்துடன் எதிர்கொண்டனர்.அடுத்த நாள் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 13-அன்று தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று தியாகிகளின் உடல்களை பெற்றுக்கொண்டனர். இறுதிநிகழ்வில் 5 லட்சம் மக்கள் அணிதிரண்டனர். தியாகிகளின் 5 உடல்களையும் அடக்கம் செய்யும் அவர்களின் வழக்கறிஞர் கேப்டன் பிளாக்கின் இவ்வாறு பேசினார் 

“இங்கே நாம் குற்றவாளிகளின் உடல்ளின் அருகே நிற்கவில்லை. அவர்கள்  மரணத்தில் அவமானப்பட எதுவுமில்லை. அவர்கள் சுதந்திரத்திற்காக , சிந்தனையில், செயலில் கட்டுப்படுத்தப்படாத பேச்சுரிமைக்காக, மனிதாபிமானத்திற்காக உயிர் நீத்தார்கள்.அவர்களின் நண்பர்களாக இருந்ததில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.

             (வில்லியம் அடல்மன் மேதின தியாகிகளின் மகத்தான வரலாறு புத்தகத்திலிருந்து)

               தொழிலாளர் வர்க்கம் இன்று அடைந்துள்ள அனைத்து வசதிகளும் வரலாறு முழுவதும் வழிந்தோடிய இரத்தாலும், எண்ணற்றவர்களின் உயிரிழப்புகளாலும், உடமைகள் இழப்புகளாலும் பெறப்பட்டவையே. ஆளுவோர்களும் முதலளாளித்துவ சிந்தனையுள்ள கட்சிகளும் தொழிலாளர்களை வாக்குவங்கியாக பயன்படுத்துகிறார்கள். பல குழுக்கள்  தொழிற்சங்கத்தை தொழிலாக மாற்றிவருகின்றனர். சீர்திருத்த சிந்தனையில் சிக்கித்தவிக்கின்றனர். பெற்ற சலுகைகளை பாதுகாக்கவும் சமுக மாற்றம் காணவும் தொழிலாளர்களை அணிதிரட்டவேண்டும் .வர்க்கப் பாசறையாக பரிணமிக்க வேண்டும்.

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...