Pages

செவ்வாய், நவம்பர் 20, 2018

மார்க்ஸ்-எங்கல்ஸ் தேர்வுநூல் அறிமுகம் தொகுதி – 3



   தோழர்களே, நண்பர்களே, 
    வணக்கம்.

இந்த மூன்றாவது தொகுதி நூல் அறிமுக கூட்டத்திற்கு 80 பேர்களுக்குமேல் வருகைதந்துள்ளது நிறைவாக உள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த தொகுதி 175 பக்கங்களைகொண்டது. இத்தொகுயில் ஜெர்மனியில் புரட்சியும்-எதிர்ப்புரட்சியும், 

   கொலோனில் நடந்த சதிவழக்கு, இந்தியாவில் பிரிட்டிஷ்ஆட்சி என்ற மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. இந்தக் கட்டுரைகள் 1851-52ம் அண்டுகள் நியூயார்க் டெய்லி டிரிப்யூனல் என்ற அமெரிக்க பத்திரிக்கையில் மார்க்ஸ் பெயரில் வெளிவந்தது. 

      நாமெல்லாம் கருதுவதுபோல் மார்க்ஸ் இதை எழுதவில்லை. மாறாக எங்கல்ஸ் மார்க்ஸ் பெயரில் எழுதினார். அந்த பத்திரிக்கையில் மார்க்ஸ் நிருபராக இருந்து பணியாற்றினார். இக்காலத்தில் மார்க்ஸ் பொருளாதார ஆய்வில் ஈடுபட்டிருந்ததால் அவரால் எழுத முடியவில்லை. 1913ம் ஆண்டு மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதப் போக்குவரத்தை வெளியிட்ட போதுதான் இந்த தகவல் வெளி உலகிற்கு தெரியவந்தது.

 ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற தலைப்பில் 19 துணைத் கட்டுரைகள்  எழுதிஉள்ளார். 1848-49ம் ஆண்டுகளில் ஜெர்மனியில் நடைபெற்ற புரட்சிகளின் விளைவுகளை ஆய்வுசெய்து 1852-52 ஆண்டுகளில் இவை எழுதப்பட்டுள்ளன. வரலாற்றியல் பொருள்முதல்வாத நிலைகளிலிருந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

தோழர்களே, நீங்கள் அனைவரும் இந்த புத்தகத்தை வாசித்திருக்க மாட்டீர்கள்.  கணிசமான தோழர்கள் படித்திருப்பீர்கள். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு நடந் தநிகழ்வுகளை அன்றைய வரலாற்று பின்னனியுடன், இன்றைய தேவையுடன் இணைத்து வாசிக்க வேண்டும். எங்கல்ஸ் எழுத்து நடை நையாண்டியுடன், பல வரலாற்று நிகழ்வுகளை இணைப்பதாகவும், சமகால ஒப்பீடுகளுடன் எழுதியுள்ளார். 

        மார்க்ஸ்-எங்கல்ஸ் எழுத்துக்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு அக்காலத்தில் உழைப்பாளி மக்களிடமும், இதர பகுதியினரிடமும் இருந்தது. எனவே, அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வெளியிட பிரபலபத்திரிக்கைகள் முன்வந்தன. எங்கல்ஸ் இந்த கட்டுரைகளில் நிகழ்வுகளையும், அதன் விளைவுகளையும் வர்க்க அடிப்படையிலேயே ஆய்வு செய்கின்றார்.

இங்கிலாந்திலும் பிரான்சிலும பெரிய நகரங்களில் குறிப்பாக தலைநகரங்களில் குவிந்திருந்த வலிமைமிக்க, செல்வம் படைத்தமுதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் அழித்திருந்தது. ஜெர்மனியில் உயர்குல நிலப்பிரபுத்துவம் தனியுரிமை, நிலவுடைமைகளை நீடித்து வைத்திருந்தார்கள். அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். ஜென்மானிய முதலாளி வர்க்கம் அந்த அளவு செல்வம் படைத்தவர்களாகவோ, செறிவுடையவர்களாகவோ இருக்கவில்லை.

அன்றைய ஜெர்மனி 36 சிற்றரசுகளாக சிதறிக் கிடந்ததையும் நிலப்பிரபுக்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையேயான போராட்டங்கள் புரட்சிகளையும், அதன் நோக்கங்களையும் விரிவாகவே விளக்குகின்றார். இவர்கள் மக்கள்தொகையில் சிறுபகுதியாக இருந்தனர். பெரும் மக்கள்திரள் விவசாயிகள், கைவினைஞர்கள், உழைப்பாளிகளாக இருந்தனர். இம்மக்களின் அரசியல் போராட்டங்களையும்  அதன் தாக்கங்களையும், போதாமைகளையும் ஆய்வு செய்துள்ளார். 1847ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் பெரும்பாலும் பலர், அல்லது பல அமைப்புகள் தங்களை சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏன் முனைப்புக் காட்டினர் என்பதற்கான சூழல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
    
இதே காலகட்டத்தில் ஜெர்மனியில் சித்தாந்தவளர்ச்சியும் உறுதிபட்டது. ஹெகல் வெளியிட்ட “சட்டத்தின் தத்துவவியல்” என்ற  நூல் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சிதான் முபமையானது என அறிவித்தனர். இளம் ஹெகலியர்களின், அவரது மறைவுக்கு பிறகு துணிச்சலான அரசியல் கோட்பாடுகளை முன்வைத்து அரசுக்கும் மதத்திகும் எதிராக திரண்டனர். இதே காலத்தில் “இளம் ஜெர்மனி” என்ற இலக்கிய போக்குகளில் இருந்த போலித் தன்மைகளை எங்கல்ஸ் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார். 

           நிலப்பிரபுக்கள், உருவாகி வந்த முதலாளித்துவம், தொழிலாளி வர்க்கம் என்றுஎபோராட்டங்களிலும், புரட்சிகளிலும், உள்ள குறிக்கோள்களை ஆய்வு செய்து, உழைப்பாளி மக்களுக்கான அரசியில் உத்திகளை உருவாக்கி வழிகாட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியை நீங்கள் படிக்கும் போது வரலாற்று சம்பவங்கள் புதிதாக இருக்கலாம். புரிந்துகொள்வதற்கு கடினமாககூட இருக்கலாம். ஆனால் எங்கல்சின்   எழுத்து நடை தடையில்லாமல் வாசிப்பை வழிநடத்திசெல்கிறது.

நூலின் அடுத்த பிரிவான கொலோனில் சமீபத்தில் நடந்த வழக்கு. பிரஷ்ய அரசாங்கம் கம்யூனிஸ்ட் கழகத்தை சேர்ந்த 11 பேர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டி வழக்கு தொடுத்து. பொய்யான சாட்சிகள், ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாக 7 பேர்களுக்கு மூன்று முதல் ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியது. மிதவாத முதலாளித்துவ வர்க்கமும், குட்டி முதலாளிகளும் அவர்களது சமூக அந்தஸ்தை கொண்டு, அரசின் உதவியுடன் பல அமைப்புகளை நடத்தினர். 

               பாட்டாளி வர்க்கம் அத்தகைய சமூக அந்தஸ்து, பணவசதி இல்லை. ஏனவே பலரகசிய அமைப்புகளை நடத்தினர். அரசு அவற்றின் மீது தாக்குhலை தொடுத்து.அவைகள் கண்டுப்பிடிக்கப்பட்டு சதிவழக்குகள் தொடரப்பட்டன.

இந்த கட்டுரையில், பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கான மார்க்சிய அடிப்படையை உருவாக்கி கொடுத்தார். அன்றைய கம்யூனிஸ்ட் கழகத்தின் நோக்கம் ஆட்சி மாற்றம்தான், ஆனால் அதற்கான வலிமை அமைப்புக்கு இல்லை என்பதையும், அதை நோக்கிய அணிதிரட்டலை பகிரங்கமாக பறைசாற்றுகின்றனர். “உழைப்பின் மீதான மூலதனத்தின் ஆதிக்கத்தை என்றென்றைக்கும் நசுக்கியேதீரவேண்டும்” என்று அறிவித்தனர். 

    தொழில்துறை முதலாளிகளுக்கு எதிராக குட்டிமுதலாளிகளும், தொழில்துறை தொழிலாளர்களும் அணிதிரள்வதை, கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளதை விவரிக்கின்றார். முதல் பகுதியைவிட மேலும் கூடதலாக கவனம் செலுத்தி படிக்கவேண்டும். காரண ஆயுதப் புரட்சிக்கான மார்க்சிய அடிப்படை கருத்துத்ககளை முன்வைத்துள்ளார். பிற்காலத்தில் இவை மேம்படுத்தப்பட்டன.

மூன்றாவது முக்கியபிரிவாக இருப்பது மார்க்ஸ் இந்தியாவை பற்றி எழுதியது. மார்க்ஸ் இந்தியாவை பற்றி 172 பக்கங்கள் எழுதியுள்ளார் என வரலாற்றாளர் யேன் மிர்தால் தெரிவித்துள்ளார். இந்தியாவை பற்றிய மார்க்ஸ் எழுதியகருத்துக்கள் குறிப்பாக, ஆசியஉற்பத்திமுறை, நிலவுடைமை, நீர்ப்பாசனவசதி, சலனமற்ற கிராமங்கள், கிராம வேலைபிரிவினை, பிரிட்டிஷ் ஆட்சியின் இரட்டைபணி (அழித்தல், ஆக்கம்) பற்றிய கருத்துக்கள் மீது விவாதங்கள் விரிவாகநடந்துள்ளன. அவைப்பற்றி இங்கு விவாதிக்க நேரமும், இன்றைக்கான தலைப்பும் இல்லை. ஏனவே நான் இந்தb தாகுதியில் அடங்கியுள்ள 18 பக்கங்களை கொண்ட இரு கட்டுரைகளை மட்டும்  கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.இவை 1853-ம் ஆண்டு எழுதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற கட்டுரையில் இந்தியா, இத்தாலி, அயர்லாந்து இடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிடுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களுக்கு பொற்காலம் என்று நம்புகிறவர்களை மார்க்ஸ் மறுக்கிறார். இந்தியா அதுவரை சந்தித்திராத கொடுங்கோன்மையை சந்தித்தது பற்றியும், அடிமைகள் மீது எஜமானறுக்கு இருந்த பரிவுகூட இல்லாமல் இந்திய மக்கள் சுரண்டப்பட்டதை மார்க்ஸ் எடுத்துரைக்கிறார். பிரிட்டிஷார் பொதுமராமத்து துறையை புறக்கணித்ததால் இந்திய விவசாயம் எவ்வாறு அழிந்தது. 

          இந்திய சமுதாயத்தின் அச்சானியாக இருந்த நூற்பாளர், நெசவாளர்களை அழித்த விதத்தையும், இந்திய உழைப்பாளிகள் செய்த அதிவிசேஷமான பருத்தி துணிகளை பெற்று வந்த ஐரோப்பா, அவற்றை நசுக்கி, பருத்தி துணிகளின் அசல் தாயகமான இந்தியாவிற்கே பருத்திதுணிகளை இறக்குமதி செய்த கொடுமைகளை விவரிக்கப்பட்டுளளது.

இந்தியாவில் அதுவரை நடந்த  படையெடுப்புகள் இந்திய சமூகத்தின் அடித்தளத்தை அசைக்கவில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி அவற்றை அசைத்து நசுக்கிவிட்டது. முதலில் இந்திய ஐக்கியம் வால் மூலம் உருவாக்கப்பட்டாலும், பிறகு மின்சாரம் தந்தி மூலம் அவை வலுப்பட்டது.

இந்தியா எப்போது விடுதலை என்பது பற்றி மாhக்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். பிரிட்டனில் தொழில்துறை பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றினால் அல்லது ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியர்கள் முற்றிலும் வளர்ந்து ஒழிக்கும் வரையில் இவ்வாட்சி நீடிக்கும் என்கிறார். இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைகள், மூடப்பழக்கங்கள் பற்றியும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

, மார்க்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ்ஆட்சி ஒழியவேண்டும் என்பதிலும், அதற்கு எதிரான போராட்டங்கள்  போராட்டங்கள் வலுப்பெறவ nண்டும் என இப்பதிரிக்கையின் மூலம் உலககருத்தை திரட்டினார்.


             தோழர்களே, இந்தநூல் நமக்கு ஒரு அடிப்படையான வரலாற்று அறிவையும், வர்க்க பார்வை ஆய்வையும், ஆயுதப் புரட்சி எப்போது, எப்படி, என்ற மார்க்சிய அடிப்படையையும், இந்தியச முதாயம், பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகள், அதன் எதிர்காலம் குறித்த குறிக்கோள்களையும் விளக்குகிறது. வாசியுங்கள். வர்க்கப் பார்வையை விசாலப்படுத்துங்கள்

-அ.பாக்கியம்
தோழர் சிங்காரவேலர் படிப்பு வட்டம்
திருவண்ணாமலை
17.11.2018 பிற்பகல் 3 மணி - வேங்கிக்கால்

வியாழன், நவம்பர் 08, 2018

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்


  அம்மா
“அவருக்கு உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.” 
என்று உறவினர் ஒருவர் சொன்னபோது 
“எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் இருக்க வேண்டாமா?”

என்று மென்மையாக பதில் அளித்து தனது திடச் சித்தரத்தை வெளிப்படுத்திக் கொண்டார். காரணம் ஏதுமின்றி அல்லது சொல்லாமலேயே பிரிந்துவிட்டு 36 வருடங்கள் கழித்து முதுமையின் இயலாமையுடன் தன்னிடம் திரும்பி வந்த கணவன், புகழ் பெற்ற தலைவர் கொண்டபல்லி சீத்தாரமய்யாவை பார்க்க மறுத்து அவரது மனைவி கோட்டேஸ்வரம்மா கேட்ட எதிர்க்கேள்விதான் இது.


என்னைப் போன்றவர்கள் 80-ம் ஆண்டுகளுக்கு பிறகு இயக்கத்திற்கு ஈர்க்கப்பட்ட காலத்தில், கொண்டபல்லி சீத்தாரமய்யாவின் சாகசங்கள் எங்களை கவர்ந்தது. அவரது பாதைகளை அப்போதே ஏற்க முடியவில்லை என்றாலும், அரசின் அடக்குமுறைக்கு எதிராக அவர் களம் கண்ட செய்திகள் பலரை கவர்ந்தன. அவரின் துணைவியார் பற்றி, அதாவது கோட்டேஸ்வரம்மா பற்றி, அவரது மரணத்தினை தோழ.ர்எஸ்.வி.இராஜதுரை எழுதிய கட்டுரை மூலமாவே அறிய முடிந்தது. அதிலும் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற செய்தி, அவரது ‘ஆளற்றபாலம்’ என்ற சுயசரிதை நூலை தேடிப் படிக்கத் தூண்டியது.

           இந்த எதிர்வினை, பெண் சமத்துவம், பெண் விடுதலை புரட்சிகர இயக்கத்திற்குள்ளும் பேணப்பட வேண்டும், இல்லையென்றால் போராட வேண்டும் என்ற கருத்தை பறைசாற்றுவதுடன் மட்டுமல்ல, கோட்டேஸ்ரம்மாவின் வாழ்க்கையில் இது முக்கிய பகுதியாகவும் அமைந்துள்ளது. 1918 ஆகஸ்ட் 5-ல் பிறந்து 2018 செப்டம்பர் 19 அன்று மரணமடைந்தார். 100 ஆண்டுகள் ஒரு மாதம் மற்றும் 14 நாட்கள் வாழ்ந்துள்ளார். அவரது வாழ்க்கையை படிக்கும்போது ஒருவரின் வாழ்க்கையில் இவ்வளவு துக்கம் இருக்க முடியுமா என மனம் கரைந்து போகிறது.

              குழந்தைப் பருவத்தில் திருமணம், சிறுவயதிலேயே பால்ய கணவன் மரணம், இதனால் விதவைக் கோலம் பூண்டார். இவை அனைத்தும் அவரால் அறிந்திருக்க முடியவில்லை. பிற்காலத்தில்தான் தனக்கு திருமணம் நடந்தது, தான் விதவை என்பதை அறிந்தார். தேசிய இயக்கம், புரட்சிகர இயக்கங்களால்  ஈர்க்கப்பட்டு 1939-ல் சுந்தரய்யா, ராஜேஸ்வரராவ், கந்துகூரி சந்திரராவ் ஆகியோர் முயற்சியால் கொண்டபல்லி சீத்தாரமய்யாவுடன் மறுமணம். அன்றைய காலத்தின் புரட்சிகரமான திருமணம். 

        இடப் பெயர்வு, தலைமறைவு வாழ்க்கை, நாடக, கலைநிகழ்ச்சி பிரச்சாரம், ஆயுத பயிற்சி, இரு குழந்தைகளுக்கு தாய், காரணமின்றி பிரிந்த கணவன், குழந்தைகளுடன் பிரிவு, மகன் காவல்துறையால் சுடப்பட்டு மரணம், மகளின் கணவர் திடீர் மரணம், மருத்துவரான மகளின் மனநிலை பாதிப்பு, மரணம், பெற்ற தாய் அஞ்சம்மாவின் மரணம், வாழ்க்கை தேவைக்காக 35 வயதில் படிப்பு, வேலை என துயரங்களினூடே எப்படி 100 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற வினா எழுகிறது.

       இவரின் துக்ககம் எந்த அளவிற்கு தனிமனுஷியுனுடையதோ அந்த அளவிற்கு சமுதாயம் மற்றும் அரசியல் இயக்கம் சார்ந்ததாகவும் இருக்கும். தனியாக இருந்தாலும் கோட்டேஸ்வரம்மா தனது சொந்த சம்பாத்தியத்தில் வாழ்ந்து, கடைசி வரை அவர் அரசியல் போராளியாக வாழ்ந்தார்.

        அரசியல் ஆண்களின் துறை, பெண்களுக்கு அங்கே மனைவி, சகோதரி, தாய் என்ற முறையில்தான் இடம் உண்டு என்ற நிலையை எதிர்கொண்டார் கோட்டேஸ்வரம்மா. பெண் சமத்துவம், விடுதலைக்காக கடைசிவரை தனது போராட்டத்தை சமரசமற்ற முறையில் தொடர்ந்தார்.

          தேசிய இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், புரட்சிகர இயக்கம் என்று தளத்தில் அவரது அனுபவங்கள் அமைந்துள்ளன. பெண்கள் பொது சேவைக்கு வருவதில் இருந்த தடைகளை உடைப்பதில். பெண்கள் மேடையேறி பாடக்கூடாது, நாடகத்தில் நடிக்க கூடாது என்ற கீழ்த்தரமான கருத்தோட்டத்தை உடைத்தெறிவதில், பெண்கல்வியை வளர்ப்பதில் என பல தளங்களில் பணியாற்றி உள்ளார். 35 வயதில் படித்து, பணியில் சேர்ந்து, வாழ்வின் கணிசமான பகுதியை மகளிர் விடுதியில் கழித்தார்.

            தன்னை கைவிட்ட கணவனை கடைசி காலத்தில் இயக்கத்தோழர்கள் ஒருமுறை பார்க்க வலியுறுத்திய போது “மனுசாஸ்திரம், இந்து மனப்பான்மை என்னுள் ஜீரணித்து இருந்து, எத்தனை வேதனைகளை அனுபவித்து இருந்தாலும், பதிவிரதையைபோல் கணவனை காப்பாற்றுவேன் என்று தப்பித்தவறி நான் சொன்னால்கூட, வேண்டாம் என்று தடுக்க வேண்டிய கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள், அடக்கிவைக்கப்பட்ட பெண்ணினத்திற்கு அநியாயம் செய்யலாமா” என்று கேட்கிறார் கோட்டேஸ்வரம்மா.

       ஆந்திர மாநிலத்தில் அக்காலத்தில் பொதுவுடைமை இயக்கம் எவ்வாறு வீறுகொண்டு எழுந்தது என்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு ஆந்திராவின் கலை இலக்கிய அமைப்புகள் உயிரோட்டமமான செயல்பாடுகளுக்கு வேர் எங்கே இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

           ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் ஆயுத தாங்கிய போராட்டங்கள், கட்சி பள்ளிகள் நடத்தியது மட்டுமல்ல, ஆந்திர கட்சியின் அக்கால செல்வாக்கிற்கு ஆக்கப்பூர்வமான பணிகள் அடிப்படையானது என்பதை இந்நூலில் அறிய முடிகிறது. 

            பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் கட்டுவதையும், உற்பத்தியை பெருக்குது எனது வயல்கள் மேம்பாடு, நீராதரம் பெருக்கும் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. வறட்சியை எதிர்கொள்ள விவசாயிகளை அணிதிரட்டி ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டது மிக மிக அடிப்படையாக அமைந்துள்ளது. இதன் அடிநாதமாக விவசாய இயக்கம், பெண்கள் இயக்கம், கலைக்குழு அமைப்புகள் கட்சியின் வழிகாட்டலில் இயங்கியுள்ளன. இந்த ஆக்கப்பூர்வ பணிகளை கோட்டேஸ்வரம்மா வலிந்து சொல்லவில்லை. தனது வாழ்வின் சம்பவங்களின் ஒரு பகுதியாக சொல்லி செல்கிறார்.


               இயக்க பிளவுகள் மற்றும் தனக்கான துயரங்கள் வந்தபோதும், தனது குமுறல்களை வெளிப்படுத்துகிறார் தவிர அவதூறுகளை அள்ளி வீசவில்லை.நூலின் பின் இணைப்பாக தோழர் சுந்தரய்யா, ராஜேஸ்வரராவ், கந்துகூரி மற்றும பெண் ஆளுமைகள் பற்றி அவர் எழுதியுள்ளவை அவரின் பிற்கால மதிப்பீடுகள் ஆகும். உரிய முறையில் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒரு பெண்ணின் 100 ஆண்டுகளின் போராட்டக் களம், அளவு கடந்த வாழ்க்கை அனுபவமும், எல்லையில்லா துணிச்சலுடன் வாழந்துள்ளார்.இந்த நூலை வாசிப்பதின் மூலம் வரலாற்றை பெண் விடுதலைக்கான சமரசமற்ற போராட்டத்தை இயக்கத்திற்குள் இருக்கும் போக்குகளை, இயக்க வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பணிகளும் அடிப்படையானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
                                                                                                         
  பாக்கியம்

திங்கள், நவம்பர் 05, 2018

படேல் சிலையும் பெட்ரோல் விலையும்.


                            

                     சர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி அரசு உலகின் மிக உயர்ந்த சிலையை குஜராத்தி அமைத்துள்ளது. இந்த சிலை அமைக்க 3000 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மோடியும், பாதுகாப்பு அமைச்சர் சீதாராமனும் நாடு முழுவதும் இருந்து இரும்பை கொண்டு இந்த சிலையை கட்டியதாக தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள். பொய் கதை கட்டுவதில் இந்த கும்பல்தான் இன்று உலகிலேயே படேல் சிலையைவிட உயரமாக இருக்கிறது. 
               சிலை கட்டுவதற்கான பணத்தை மக்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதோ அதன் பட்டியல்
இந்தியன் ஆயில் கார்பரேசன் - ரூ 900 கோடி
ஓ.என்.ஜி.சி. - ரூ 500 கோடி
பாரத் பெட்ரோலியம் - ரூ 250 கோடி
ஆயில் இந்தியா கார்பரேசன் - ரூ 250 கோடி
கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் - ரூ 250 கோடி
பவர் கிரீட் - ரூ 125 கோடி
குஜராத் மினரல் டெவலப்மெண்ட் கார்பரேசன் - ரூ 100 கோடி
என்ஜினியர்ஸ் இந்தியா - ரூ 50 கோடி
பெட்ரோ நெட் - ரூ 50 கோடி
பால்மர் லாறி - ரூ 50 கோடி
                   

சிலைக்கு பணம் கொடுத்த பெரும்பாலான நிறுவனங்கள் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களே. ஒரு பக்கம் பெட்ரோல் விலையை ஏற்றி கொள்ளையடித்து மறுபுறம் படேல் சிலைக்கு பணத்தை கொடுத்துள்ளனர்.
(கிரீஷ் குபேர் ழுசைiளா மரநெச லோக்சக்தா என்ற மராத்தி பத்திரிகை எழுதிய கட்டுரையிலிருந்து)

வியாழன், அக்டோபர் 25, 2018

மோடி ஜி ! பாலியல் துன்புறுத்தலில் இந்தியா வல்லரசாகுமோ?


                 
                 2014-17 இடைப்பட்ட காலததில் மோடி ஆட்சியில் பணித்தளத்தில பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 54 சதவிதிதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆம் ஆண்டு 371 வழக்குகள் பதிவாகி இருந்தது. 2017-ல் 570 வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தினசரி இரண்டு வழக்குகள் வீதம் மொத்தம் 2535 வழக்குள் பதிவாகி இருப்பதாக அரசு 2018 ஜுலை 17-ம் தேதி பாராளுமன்றத்தில் அறிக்கை வைத்துள்ளது. 

          பதிவாகிய வழக்குள்தான் இது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் 70 சதம்பேர்கள் புகார் அளிப்பதில்லை என்று ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டு முதல் 7 மாத்தில் இதுவரை 533 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆட்சியாளர்கள் அறிவிப்பது போல் குறைவதாக தெரியவில்லை.

                   மாநில அளவில் எடுத்துக்கொண்டால் பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்கள் அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளன. பணியிடம் பாலியல் துன்புறுத்தலில் உத்திர பிரதேசத்தில் 726 புகார்கள் அல்லது 29 சதம் 2014-18-ல் அதிகரித்துள்ளது. டெல்லியில் 369 அரியானா 171 மத்தியபிரதேசம் 154 மகாராஷ்டிரா 147 என புகார்கள் நிரம்பி வழிகின்றன.

                              இந்திய தண்டனைச் சட்டம்  354ஏ பிரிவின்படி உடல்தியான தொடர்பு, வேண்டப்படாத அல்லது வெளிப்படையாக ஆபாசமாக பேசுதல், பாலியல் நடத்தைக்கு நிர்பந்திப்பது அல்லது வேண்டுவது, பெண்ணிடம் ஆபாச படங்களை காட்டுவது பாலியல் துன்புறுத்தும் குற்றமாகும் என்று  வரையறுத்துள்ளது. 

                    இந்திய குற்றப்பிரிவு ஆவணக்காப்பகம் (சூஊசுக்ஷ)  பெண்களை அவமானப்படுத்தல்  (“iளேரடவ வடி அடினநளவல டிக றடிஅநn” ) பணியிட பாலியல் குற்றம் என்றும் இது போன்ற நடவடிக்கைகள்  இந்திய தண்டனை சட்டம் 509-கீழ் குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் 2014-ல் 526 வழக்குகளும் 2016-ல் 665 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

                         பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் 70 சதம்பேர்கள் புகார் அளிப்பதில்லை என்று ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். விளையாட்டு துறையில் 23 பேர்கள் தங்களது பயிற்சியாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துளளனர்.

                                             பெண்கள் மீது பணியிட பாலியல் வன்முறை (தடுத்தல், தடை, மற்றும் நிவர்த்தி செய்தல்) சட்டம் 2013, Sexual Harassment at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) Protection of Children from Sexual Offense Act (POCSO Act), 2012. என சட்டங்கள் இருக்கின்றன. 

                                      ஆனால் அவற்றை அமுலாக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கிறது. அல்லது குற்றவாளிகளை பல நேரங்களில் பாதுகாக்கிறது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2017 ஜுலை மாதம் 24-ம் தேதி  பாலியல் குற்றங்களை தடுக்க மின்னஞ்சல் புகார் பெட்டியை Sexual Harassment electronic–Box (SHe-Box)அறிமுகப்படுத்தினார். அறிமுகபடுத்திய இருமாதங்கள் இந்த எண் செயல்படவில்லை. மேலும் இதுவih 107 புகார்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. 
(https://www.indiaspend.com/metooindia-54-rise-in-sexual-harassment-reported-at-workplaces-between-2014-17/)



புதன், அக்டோபர் 17, 2018

அரசமைப்புச் சட்டத்தின் காலாட் படை வீரர்.



.பாக்கியம்





     அரசமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்என்பது புத்தகத்தின் துணைத் தலைப்பாகஇருந்தாலும், வாசிப்பின் முடிவில் ஒரு காலாட்படை வீரர் அசாத்தியமான சாதனைகளைநிகழ்த்தியிருப்பதாகவே கருத்து ஏற்படுகிறது. தீஸ்தா செதல்வாட் தனது நினைவோடைகளை பதிவு செய்திருந்தாலும் அவை கள எதார்த்தங்களை கண் முன்னால் நிறுத்துகிறது. காவல்துறைஅமைப்பு, உயர் அதிகாரிகள், அரசு நிர்வாகம்,அரசியல் இயக்கத் தலைமை, புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பெரும் ஊடக நிறுவனங்கள், நீதித்துறை ஆகிய அமைப்புகள் அழுகி முடைநாற்றம் எடுத்து சிதைந்து கொண்டிருப்பதை இந்த நினைவோடைகள் மூலமாக நிறுவியிருக்கிறார்.

    மேற்கண்ட அரசமைப்புகள் நடுநிலை என்றும் மக்களுக்கானது என்றும் அரிதாரங்களை அள்ளி அள்ளி பூசிக் கொண்டாலும் ஆளும் வர்க்கத்திற்கும், வகுப்புவாதிகளுக்கும் சேவகம் செய்வதே வர்க்கக் கடமையாக உள்ளதை அம்பலப்படுத்தியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்று விடலாம் என்று களமிறங்கிய தீஸ்தா செதல்வாட் அது சாத்தியமில்லை, மக்கள் இயக்கமும், விழிப்புணர்வும் அதற்கு அவசியமானது என தனது களத்தை விரிவுப்படுத்திக் கொண்டுள்ளார். இன்றளவும் அவர் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டு வருகிறது. மிரட்டல்கள், பாதுகாப்பற்ற பயணங்கள், இணையதள ரவுடிகளின் வசவுகள் என தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகிக் கொண்டே போராட்டக் களத்தில் பயணித்து கொண்டிருப்பதை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது

      .புத்தகத்தின் முதல் பகுதியில் வகுப்புவாத கலவரங்களின் நிகழ்வுகளை எதார்த்தமாக சொல்கிறபோது வாசிப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கிறது. குஜராத் கலவரங்களை பற்றிபுத்தகம் அதிகமாக பேசியிருந்தாலும் கலவரங்களின் அடிப்படை அரசியல் பொருளாதாரத்தையும் விளக்கியுள்ளார். 1970ம் ஆண்டுகளில் மும்பையில் பிவண்டி - மகத்ஜல்கோன் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் வந்தேறிகளை பற்றிவெறுப்பு பேச்சுகளே கலவரத்திற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டது. 

        1970ம் ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் அதிகம் சேர ஆரம்பித்தனர். 1984ம் ஆண்டு வரைசிவசேனா இந்துத்துவா பற்றியோ, இந்து ராஷ்ட்டிரம் பற்றியோ வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை. 1984ம் ஆண்டு மே மாதம் மும்பையில் பிவண்டியில் மதக்கலவரங்களை சிவசேனாவினர் திட்டமிட்டு உருவாக்கினர்.

        1980ம் ஆண்டுகளில் வகுப்புவாத விஷப்பற்கள் வேகமாக வளர்ந்ததையும் இதனால் வகுப்புக்கலவரங்களின் எண்ணிக்கை 1980ம் ஆண்டில் 427 ஆகவும், 1983ம் ஆண்டில் 500 ஆகஉயர்ந்ததையும், மரணங்கள் 1981ல் 196 லிருந்து1983ல் 1143 ஆக உயர்ந்ததையும் புத்தகத்தில் விவரித்துள்ளார். 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாம் மாநிலத்தில் நெல்லி என்ற இடத்தில்3023 பேர் படுகொலை ‘‘ நெல்லி படுகொலைகள்’’செய்யப்பட்டனர். 1984ம் ஆண்டு இந்திராகாந்திபடுகொலையின் போது நவம்பர் 1 முதல் 3 வரை தில்லியில் 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு 1993-94ல் மும்பையில் நடைபெற்ற கலவரம் இந்தியா முழுவதும் ஏற்படுத்தியதாக்கத்தை விவரிக்கிறார். மேற்கண்ட அனைத்துவகுப்பு கலவரங்களை விட குஜராத்தில் 2002ம்ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து நடைபெற்ற மதக்கலவரம் ஆயிரம் மடங்குபெரியது என்பதையும், அது எவ்வாறு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதையும் களத்திலே நின்று ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார்.


       குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பெரும் கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 1,68,000 பேர்அதிகாரப்பூர்வ கணக்கின்படி இடம் பெயர்ந்துள்ளனர்.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே குஜராத் கலவரத்திற்கு விரிவான முறையில் திட்டமிடல் நடந்துள்ளது என அம்பலபடுத்துகிறார். இறந்தவர்களின் சடலங்களை வி.எச்.பி தலைவர்கள் அகமதாபாத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றது கலவர திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன்பே ஆயுத சேகரிப்பு, சிலிண்டர்கள் சேகரிப்பு போன்றவை நடைபெற்றதையும் காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அலுவலகம், பாஜக மந்திரிகளின் கைகளில் இருந்ததும், காவல்துறை கலவரக்காரர்களோடு சேர்ந்து சிறுபான்மை மக்களைதாக்கியது, வரவழைக்கப்பட்ட இராணுவத்தை 10 மணி நேரம் கலவரப் பகுதிக்கு அனுப்பாமல்கால தாமதம் செய்தது, அதன் பிறகும் கலவரம் நடைபெறாத பகுதிக்கு திட்டமிட்டு தவறுதலாக அனுப்பப்படுவது என அடுக்கடுக்கான ஆதாரங்களை களத்திலே இருந்து கண்டவற்றை சொல்கிறபொழுது அழுகி முடைநாற்றம் எடுக்கும் அரசு எந்திரத்தை புரிந்து கொள்ள முடிகிறது. 

    இதற்குமேல் தொலைக்காட்சிகள் எரிப்பு சம்பவத்தை மீண்டும்மீண்டும் காட்சிப்படுத்திய சம்பவங்களையும் நினைவு கூர்கின்றார்.குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தஎம்.எச்.கத்ரி, திவேசா போன்றவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்கள் தலைமை நீதிபதியை தொடர்புகொண்டபோது காவல்துறையை நம்பாதீர்கள் என்று கூறும் அளவிற்கு நிலைமை இருந்துள்ளது. பல நிவாரண முகாம்களில் நடைபெற்ற கொடுமைகளை விவரிக்கிறபொழுது மனம் பதறுகிறது. சிறுபான்மை பெண்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் நிர்வாணமாக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.

     பெண்களுக்கு முன்னால் சிறுபான்மை சமூகத்தினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்என அனைத்தும் அரங்கேற்றப்பட்டுள்ளது.கலவரத்தையொட்டி அன்றைய பிரதமர் வாஜ்பாய் அது விபத்துதான் என்று அறிவித்ததை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதேநேரத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இந்துக்கள் இனி விழித்துக் கொள்வார்கள்என்று கொலை பாதக செயலுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். நிவாரண முகாம்களில்தங்கியிருந்த சிறுபான்மை மக்களை பார்த்து முதல்வர்மோடி நிவாரண முகாம்கள் குழந்தை உற்பத்திதொழிற்சாலையாக மாறியிருக்கிறதுஎன்று தரம்தாழ்ந்து பேசினார். இதை நீதிமன்றம் வரை தீஸ்தா செதல்வாட் கொண்டு சென்றுள்ளார். 

     புத்தகத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ள விஷயம் வழக்குகள், தண்டனைகள், நீதிமன்ற செயல்பாடுகள் பற்றியது. சிபிஐ விசாரித்த வழக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்தது. புகழ்பெற்ற அதிகாரி ஜூலியஸ் ரெபைரோ எஜமானின் கூண்டுகிளி போல் சிபிஐ இருந்ததை கிண்டலடித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு எப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையும் அதன்பிறகு நடந்த கலவரத்தையும் சமப்படுத்தி பார்த்த வேலையை இந்த அமைப்புசெய்தது. கூட்டம்கூட்டமாக புதைக்கப்பட்டதையும் கோத்ரா சம்பவத்திற்கு முன்னால் நடைபெற்ற சதி வேலைகளை கூட விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் தயாராக இல்லை. 

      நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்பட்டதும் பழிவாங்கப்பட்டதும் நடந்து கொண்டே இருந்தததை காண முடிகிறது.இந்த கலவரங்களுக்கு பின்னால் மோடியும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இருந்தார்கள் என்பதையும் அம்சமும், மோடிக்கு முன்பு குஜராத்தில் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பதையும்படம் பிடித்து காட்டியுள்ளார். மும்பை கலவரத்தில் கண்ணீர் வடித்த ரத்தன்டாட்டா, குஜராத்கலவரத்திற்கு பிறகு ரத்தக்கரை படிந்த மோடியை கட்டித்தழுவினார்.

         டாட்டா, அம்பானி, எஸ்ஸார் குழுமம் போன்றவர்களெல்லாம் ஒன்றுகூடி அடுத்த பிரதமர் மோடி என்ற அறிவிப்பை இவர்களே முதலில் செய்தார்கள் என்பதை செதல்வாட் பதிவு செய்துள்ளார்.குஜராத் கலவரத்திற்கு பிராமணர்களும், படேல்களும் திட்டமிட்டார்கள். ஆனால் களத்தில் இறக்கிவிடப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும். ஆனால் இம்மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது அவர்களுக்கான ஜாமீன் பெறக்கூட திட்டமிட்டவர்கள் உதவி செய்யவில்லை. 

        அகமதாபாத் நகரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தலித்துகள் தனியாக வாழ்வதற்கு 300க்கும் மேற்பட்ட காலனிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.நீதிமன்றம், காவல்துறை, ஊடகம் என அனைத்தும் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. அதே நேரத்தில் 2004ம் ஆண்டு மத்தியில்ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கலவரக்காரர்களை தண்டிப்பதற்கு உரிய முயற்சிகள் செய்யவில்லை. ஒரு வழக்கை தவிர மற்ற வழக்கிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. 2008-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பவுண்டேஷன் குஜராத் அரசை சிறந்த அரசு என்று பாராட்டியது இதில் ஒரு பகுதியாகும். பெஸ்ட் பேக்கரி வழக்கு வருகிறபோது சாட்சிகளை களைத்த பாஜக எம்எல்ஏமது ஸ்ரீவஸ்தவாவின் சகோதரர் காங்கிரசில் இணைந்ததால் இவ்வழக்கு பற்றி சீரிய முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

       எனினும் குஜராத் கலவரத்தில் செதல்வாட் தலைமையிலான அமைப்பு 69 பெரும் வழக்குகளையும் 150 தண்டனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. நரோடா பாட்டியா வழக்கில் இரு அமைச்சர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. சிதலமடைந்த அரசமைப்பு செயல்பாட்டிற்கிடையில் தீஸ்தா செதல்வாட்டும் அவரது அமைப்புகளும் குஜராத் கலவரத்தில் மோடியும் வகுப்புவாதிகளும் தொடுத்த தாக்குதலை எதிர்கொண்டு நடத்திய போராட்டங்கள் களப்போராளிகளுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்கிறது.

    1989ம் ஆண்டு மும்பை மதக்கலவரங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியபொழுது சிஐடியு தலைவர் விவேக் மாண்டிரோ, அகல்யா ரங்கனேகர் போன்ற தலைவர்கள் உடன் இருந்ததையும் நீதிமன்றத்தில் அவருக்கு பாதுகாப்பாக தலித், பழங்குடி அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கட்சியும் இருந்ததையும் அவர்மீது பொய் வழக்கு தொடுத்தபோது பிருந்தாகாரத் போன்ற தலைவர்கள் இருந்ததையும் ஏனைய மனித உரிமைபோராளிகள், வழக்கறிஞர்கள் உடன் இருந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

      புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை அதுல் செதல்வாட். தாத்தா எம்.சி.செதல்வாட் இந்தியாவின் முதல் தலைமை வழக்கறிஞர். காஷ்மீர் பிரச்சனைகளை அரசின்சார்பில் ஐ.நா.சபையில் பேசியவர். இவரது கொள்ளு தாத்தா சிமன்லால், காகா ஜாலியன் வாலாபாக் படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆண்டர்சன் கமிஷனில் இடம்பெற்று ஜெனரல் டயரை குறுக்கு விசாரணை செய்தவர். எனினும் தன்னை ஒரு களப்போராளியாக மாற்றிக்கொண்டு பன்முக எதிர்ப்பினை சந்தித்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருக்கிறார். 

      ஒரு கேள்வியை தேசத்தின் முன் எழுப்புகிறார்? 84-ம் ஆண்டு பிவண்டி கலவரத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால்,84- சீக்கியர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால், 1993 மும்பைகலவரங்கள் நடந்திருக்குமா?93-ல்மும்பை கலவரம்கிருஷ்ணா கமிஷன் அறிக்கைபடி தண்டிக்கப்பட்டிருந்தால், 2002 குஜராத் இனக்கலவரம் நடந்திருக்குமா? இதற்கு பதில் கண்டுபிடித்தாக வேண்டும்.இவரை பற்றி ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.எஸ்.வர்மா என்ன செய்திருக்கிறார் தீஸ்தாசெதல்வாட். நாட்டின் பிரஜை என்ற முறையில் அரசமைப்புச் சட்டத்தின் கீழான அடிப்படை உரிமைகளுக்காக முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    நாம் ஒவ்வொருவரும் அவர்மேற்கொண்டுள்ள பாதையில் செல்வோமானால் குஜராத்தில் நடந்தது போன்ற கலவரங்கள் எங்கும் நடக்காது”.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த புத்தகத்தை தமிழில் ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்இருவரும் சிறப்பான முறையில் மொழிப்பெயர்த்துள்ளனர். வார்த்தை ஜாலங்கள் வர்ணனைகள் என்பதற்கு இடமே இல்லாமல் சம்பவங்களையும் சதிகளையும் வாசகர்களின் முன்னால் பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். பாரதி புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது.

தீக்கதிர் 15.10.2018
புத்தக மேசை
-
தீஸ்தா செதல்வாட் நினைவோடை,
தமிழில்: ச.வீரமணி - தஞ்சை ரமேஷ்,
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018,
பக்:232, விலை ரூ.200,
தொலைபேசி: 044 - 24332424




82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?

  அ.பாக்கியம் சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களு...