Pages

வெள்ளி, டிசம்பர் 30, 2011

தமிழகத்தில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


தமிழகத்தில் சாதி சமத்துவப் போராட்டக்
கருத்துக்கள்

ஏ. பாக்கியம்

             தமிழகத்தின் சிறந்த ஆயவாளர்களில் ஒருவரான காலம் சென்ற பேரா. நா. வானமாமலை அவர்களால் எழுதப்பட்டு 1960ம் ஆண்டுகளில் ஆராயச்சி மற்றும் தாமரை இதடிநகளில் வெளியிடப்பட்டு புத்தகமாக வடிவம்பெற்றது. இவை எழுதப்பட்ட காலத்திற்குப் பிறகு சமூக தளத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்புத்தகத்தின் கருத்துக்களும், முன்வைத்துள்ள விவாதங்களும் இன்றும் பொருத்தப்பாடு உடையதாக
உள்ளது.

     இவ்வெழுத்துக்களுக்குப் பிறகு, தமிழகத்திலும், பிறமொழியிலும் சாதிபத்தின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு, அதன் வளர்ச்சி போக்குகள் பற்றி
மாறுபட்ட கோணத்தில் பல புத்தகங்கள் வந்துள்ளன. எனினும், மார்க்சிய பார்வைகள் வந்துள்ள புதிய வரவுகளும், தரவுகளும் நா.வா.வின் கருத்துக்களுக்கு வலுசேர்ப்பவைகளாகவே அமைந்துள்ளது. இன்றைய தமிழக சமூக சூழலும், பல சாதிய அமைப்புகலும் தங்களை இட ஒதுக்கீடு வளையத்திற்கு கொண்டுவர பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக நிலைநிறுத்திட தயங்குவதில்லை. இன்றைய உலகமய சூழலில், பொருளாதார ரீதியில் பலன் அடைந்தவர்கள், அரசு அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலமே இதனைப் பெற்றுள்ளனர். பொருளாதார பலன் அடைவோர்கள், அதிகாரம் அழுத்தம் கொடுக்க வேண்டிய சாத்தியப்பாட்டிற்கு, சாதிய அணி திரட்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். உலகமய, தாராளமய கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்களை, இட ஒதுக்கீடு என்ற ஒற்றைத் தளத்தில் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்ற மாயையை உருவாக்குகின்றனர். அதே நேரத்தில், தங்களது சாதியத்தின் தொன்மைக் கதை மேன்மைகளைக் கருத்தாக்கி, சாதிய அணிதிரட்டல்களை செய்து
வருகின்றனர்.

 பேராசிரியரி  நா.வா.வின் தமிழ் நாட்டில் சாதி சமத்துவ போராட்டக்கருத்துக்கள், இப்பின்னணியுடன் பார்க்க வேண்டியுள்ளது. 1900ம் ஆண்டுகளில் இந்திய வரலாற்று இயலில் புதிய போக்குகள் தலைதூக்கியது.
பிரிட்டிஷார் இந்திய வரலாறுபற்றி எழுதும்போது, காட்டுமிராண்டிகள் என்று சித்தரிக்கும்போது, அதை எதிர்ப்பது என்ற கோணத்தில் பண்டைய இந்திய
வரலாற்றை பொற்காலமாக சித்தரிக்கும் போக்கு வளர்ந்தது. இந்த இரண்டுவிதமான போக்குகளுக்கும் மாறாக இயங்கியல் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆடீநுவு முறைகள் உருவாகின. இந்த ஆடீநுவு முறையின் வழிநின்று
தமிடிநச்சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை நா,.வா. இப்பத்தகத்தின் மூலமாக செடீநுதுள்ளார். வருண சிந்தாமணி (1901) சத்திரியகுல விளக்கம் (1904) பரதவர் புராணம் (1909), நாடார் மன்னரும், நாயக்க மன்னரும் (1937) கிளைவளப்பமாலை ஆகிய ஐந்து நூல்களை சாதிகளின் வரலாறு பற்றிய ஆடீநுவுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த ஐந்து நூல்களிலிருந்தும் பொதுவான அம்சங்களை விளக்கியுள்ளார்.

 சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள் எந்தப் பகுதியினரால் முன்வைக்கப்பட்டது? ஏன் இக்கருத்துக்கள் உருவானது? என்ற கேள்விக்கு சமூக பொருளாதார பின்னணியுடன் வர்க்க நிலைபாட்டிலிருந்து விடைகண்டுள்ளார். சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள் சாதி ஒழிப்பு என்ற நல்லெண்ண நோக்கிலிருந்து எழவில்லை
மாறாக சமூகத்தில் உயர்நிலை பெற்றுவிட்ட பிராமணர்கள் அல்லாத இதர சாதிகளில் பொருளாதார ரீதியில் மேன்மை அடைந்தவர்கள் தங்களின் சமூக
அந்த°தை உயர்த்திக்கொள்ள இக்கருத்துக்கள்முன்வைக்கப்பட்டன. மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தகங்களை எழுதியவர்கள் இச்சாதிகளில் செல்வம் படைத்தவர்கள். இவர்கள் தங்களது உயர்நிலையை நிலைநாட்டிட பல மூல நூல்களை தேடினர் அல்லது புதிய நூல்களை

      உருவாக்கினர். பிராமணர்கள் ஆரியவேதத்தை உயர்த்திப்பிடித்துள்ளனர். இவர்களுக்கு மாறாக இதர சாதிகளில் பொருளாதார வளம் பெற்றவர்கள் திராவிட வேதத்தை முன்வைத்தனர். திராவிட வேதத்தில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று வாதாடியது மட்டுமல்ல தங்களுக்கு கீழேயும் சாதிகள் இருக்க வேண்டும் என்றனர். இவர்கள் நான்கு வேதங்கலை வரவேற்றும்,
புராணங்களையும், மறு °மிருதிகளையும் எதிர்த்தனர். இதற்கான வர்க்க பின்னணி என்ன? என்பதை அன்றைய உற்பத்தி முறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் இணைத்து விளக்கப்பட்டுள்ளது அன்றைக்குப் புதிய
பார்வையாகும்.

         1818ம் ஆண்டு சித்தூர் அதாலத் கோர்ட் தீர்ப்பும், அதற்கு முன்பும், பிறகும் நடைபெற்ற நிகடிநவுகள், சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்களின் பின்னிருந்த வர்க்க உறவுகளை வெளிப்படுத்தும். இப்புத்தகத்தின் மற்றொரு முக்கய அம்சம், வலங்கை, இடங்கை சாதிகள் பற்றிய பார்வைகள் விளக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியில் பெரும் நில உடைமை தோன்றிய 11ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டுகள் வரை தமிழகத்தில் வலங்கை இடங்கை சாதிகளின் மோதல் தொடர்ந்தும், பரவலாகவும் நடைபெற்றது

    . வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் இம்மோதல்கள் பற்றி விரிவாக
விளக்கியுள்ளார். ஆனால் இந்த இடங்கை, வலங்கை சாதிகளின் மோதல்கள் எப்படி உருப்பெற்றன, எப்படி மறைந்தன என்ற வியப்போடுதான் தனது எழுத்தை முடித்துள்ளார். ஆனால், பேரா நா.வா. அவர்கள் இப்புத்தகத்தில் இம்மோதல்களின் காரணத்தையும், உருவாக்கத்தையும், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியோடு இணைந்து வெளிப்படுவதை விவரித்துள்ளார்.
சோழர்காலத்திய நில உடமைகளும், அதனைச் சார்ந்தகைவினைஞர்கள் உருவாக்கமும் தோன்றியது.

 மறுபுறத்தில் பெரு வணிகம் தோன்றியது. இந்த இரு பிரிவினர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆளும் நிலபிரபுத்துவ அரசு இம்மோதல்களைப் பயன்படுத்தியது. வளர்த்தெடுத்தது. சோழர்கள் நிலத்தில் சாதி அடிப்படையிலேயே சலுகைகள் கொடுப்பதும், வரிகள் விதிப்பதும் நடைபெற்றது. பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலேயே நடைபெற்றது. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் தங்களது நலனை பாதுகாக்க, இந்தப் பிரிவினையை கெட்டிப்படுத்தினர். “உடன் கூட்டம் ரத்து” என்ற சட்டத்தின் மூலம் இவர்கள் ஒன்று சேர்வதை தடுத்தனர்.

     எனவே, வலங்கை, இடங்கை சாதிய மோதல்கள் வெறுமனே சாதிக்கலவரங்கள் அல்ல. வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள். நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தங்களுக்கு ஆதரவான மக்களை இணைத்துக்கொண்ட நிகடிநவுகளாகும். இப்புத்தகம் தமிழகம் சாதிய கட்டமைப்பை ஊடுருவிப் பார்க்கவல்ல பேராயுதம். வரலாற்றியல் பொருள் முதல்வாத கண்ணோட்டங்களை உள்ளடக்கியது. பலமுறை இப்புத்தகம் வெளிவந்திருந்தாலும் பாரதி புத்தகாலயத்தின் மூலம் பரவலான வாசகர்களை அடையும்..

வியாழன், செப்டம்பர் 15, 2011

வளரும் பொருளாதாரம்? வீழும் வாழ்வாதாரம்?.


ஏ.பாக்கியம்

.முனைப்பாக இயங்கும் ஒரு அரசு, வேலைவாய்ப்புகளை மேம்படுத்து வதையோ அல்லதுநலத் திட்டங்களை வழங்குவதையோ அல்லதுசிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் செய்யப்படுவதையோ நிதிமூலதனம் விரும்புவதில்லை. ஆனால் தனது சொந்தநலனுக்காக மட்டும் அரசு முனைப்புடன் செயல்படுவதை அது விரும்புகின்றது. எனவே, சமுதாயத்திற்கு மேலாக நிற்கக்கூடிய வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பின் தோற்றத்துடன் இருந்துகொண்டு சமுதாய நன்மைக்காக கருணையுடன்தலையிடும் அரசு என்ற நிலையிலிருந்து நிதிமூலதனத்தின் நலன்கள் மீது மட்டுமே தனியான அக்கறைஎடுத்துக் கொள்ளும் அரசு என்ற நிலைக்குஅரசின் தன்மையிலேயேநிதி மூலதனம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுகிறது.
                                               (பிரபாத் பட்நாயக்)

 பருளதர ம்வளர்ந்தால், வாழ்வாதாரம் வளரும் என்பதுபொதுவிதி. ஆனால்
முதலாளித்துவ சமூகஅமைப்பில் பொருளாதாரம் வளர்ந்தால்,வாழ்வாதாரம் வீழும்என்பது சுரண்ட லின்விதி. அதுவும், நிதிமூலதன ஆட்சியின் கீழ் இந்த விதிகூடுதல் பலத்துடன் செயல்படும். இன்றைக்குஏற்பட்டுள்ள வளர்ச்சி வேலை வாய்ப்பற்றவளர்ச்சி என்ற உண்மையை மூடிமறைத்திட ஆட்சியாளர்கள் பல தகிடு தத்தங்களையும்,செய்து ஏமாற்றப்பார்க்கிறார்கள். ஆட்சியாளர்களின் கொள்கை அடித்தட்டு மக்கள் அதாவது90 சத மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏஏற்படுத்தவில்லை என்பதை அரசின் புள்ளி விபரங்களேவெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமீபத்தில்தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (சூளுளுடீ) தனது66வது சுற்று ஆய்வைவெளி யிட்ட து .வேலைவாய்ப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டவீழ்ச்சியை இந்த புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியது. ஆட்சியாளர்களால் பொறுக்க
முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு
வந்தது. சுய முரண்பாடுகள் நிறைந்த புள்ளி விப
ரங்கள். ஆய்வு முறைகள் அனைத்தும் தவறானது
(ழகூ. 20/6/11)  என்று திட்டக்குழுவின் துணைத்
தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தி
யாவின் புள்ளியல் துறைத் தலைவர் இந்த ஆய்வு
சரியானது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தனது அரசுக்கு கீழ் இயங்கும் நிறுவனங்கள் வ ளி யி டு ம்
உ ண் ம க  ள
மறுத்தும், தாக்
கி ப் ப சு வ து ம்
இந்த ஐ. மு. கூ.
அரசுக்கு புதி
தல்ல. வறுமைக்
கோடு பற்றிய
ஆய்வுகள் வெளி
வந்த போது
அதை மறுத்து
பேசினர். பண
வீக்கம் பற்றிய
ஆய்வுகள் வெளியான
போது வெளியிட்ட
அரசு நிறுவனத்தையே
கடுமையான முறையில்
விமர்சித்தனர். இந்தியாவில் 77
சதம் மக்கள் வறுமையில் வாழ்
கின்றனர் என்று அரசு நியமித்த
அர்ஜூன் சென் குப்தா
ஆய்வு முடிவை,
நாடாளுமன்றத்திலேயே
அப்போதைய நிதி அமைச்சர்
ப. சிதம்பரம் தாக்கிப் பேசினார்.
ஆள்வோரின் அனுகுமுறை எண்ணெய் குடித்த
நாயை விட்டு விட்டு எதிர்க்க வந்த நாயை அடித்த
கதையாகத்தான் உள்ளது. தேசிய மாதிரி ஆய்வு
நிறு வனம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல
வளரும் நாடுகளும் மதிக்கத்தக்க நிறுவனமாகும்.
ஆள்வோரின் கொள்கைகள் தோல்வி  அடைந்
ததை புள்ளி விபரங்கள் தோலுரித்துக் காட்டு
வதால் தான் இந்த தாக்குதல்கள் தொடர்கிறது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகாலமும்
வேலை வாய்ப்பு வளர்ச்சியில் பெரும் வீழ்ச்சிஏற்பட்டுள்ளது. 2000-2005ம் ஆண்டுகளில்
வளர்ச்சி விகிதம் 2.7 சதமாக இருந்தது. இது 2005-
2010ம் ஆண்டுகளில் 0.8 சதவீதமாக வீழ்ந்தது.
குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பு இந்த
ஐந்து ஆண்டுகளில் உழைப்பு சக்தியில் 17 சத
வீதம் குறைந்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு நிறு
வனத்தை குறைகூறிய மத்திய அரசு, தொழி
லாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையை ஆய்வு
நடத்த பணித்தது. இத்துறையும் வேலைவாய்ப்பு
பற்றி 54 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையின் படி 1983 முதல் 1993-94ம்
ஆண்டுவரை வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம்
2.06 சதமாக இருந்தது. ஆனால் 1994-95 முதல்
2004-2005 காலத்தில் 1. 87 சதமாக குறைந்து
காணப்பட்டது.
வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறைந்
துள்ள இக்காலத்தில் இந்தியாவில் மொத்த
உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 8 சதவீதம்
வளர்ந்துள்ளது. தீவிர வேலை வாய்ப்புத் திட்
டங்கள் இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உத்தரவாதச் சட்டம் (ஆழுசூசுநுழுஹ), பிரதமர்
வேலைவாய்ப்புத் திட்டம் (ஞஆநுழுஞ) மற்றும்
சுவர்ண ஜெயந்தி கிராம சுவரோஜ்கர் திட்டம்
(ளுழுளுலு),  சுவர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கர்
யோஜனா (ளுதுளுசுலு) போன்ற பல திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன. எத்தனை திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டாலும், என்ன வளர்ச்சி
என்று மார்தட்டினாலும் இவை அனைத்தும்
வேலைவாய்ப்பில் பிரதிபலிக்கவில்லை.


விவசாயத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிதான்
வேலைவாய்ப்பு குறைவிற்கு காரணம் என்று
கூறுவது மேலோட்டமான கருத்து. காரணம்
விவசாயம் சாராத தொழில்களிலும் வேலைவாய்ப்பு பெருகி இருக்க வேண்டும் அல்லவா?
அதுவும் நடக்கவில்லை. இத்துறைகளில் 2000
முதல் 2005 வரை வேலைவாய்ப்பு  வளர்ச்சி
விகிதம் 4.65 சதமாக இருந்தது. இதுவே 2005-
2010ல் 2.53 சதமாக குறைந்துள்ளது. இத்துறை
யில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு வளர்ச்சி
விகிதம் 4. 42 சதத்திலிருந்து 2. 89 சதமாகவும்,
பெண்களுக்கான வேலைவாய்ப்பு 5.76 சதத்தி
லிருந்து 0.76 சதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
சுய தொழிலிலிருந்து...தினக்கூலிக்கு
இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில்
சுமார் 51 சதவீதம் சுயவேலை வாய்ப்பாகும்.
கிராமப்புற உழைப்பு சக்தியில் 60 சதவீதமும்,
நகர்ப்புற உழைப்பு சக்தியில் 45 சதவீதமும், சுய
வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்
டது. 2000ம் ஆண்டிற்கு முன்புவரை சுயவேலை
வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. இதே
காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு கிராமப்
புறத்தில் 7 சதத்திற்கு கீழேயும், நகர்ப்புறத்தில் 40
சதவீதத்திற்கு கீழேயும் தேக்கமடைந்திருந்தது.
2005 முதல் 2010வரை இந்த ஐந்து ஆண்டுகளில்
சுயவேலை வாய்ப்பு பெண்களிடையே 20 சத
வீதம் குறைந்துள்ளது.  இதே அளவு ஆண்
களிடம் சுயவேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
தீவிர வேலைவாய்ப்பு திட்டங்கள் அறிவித்த
இக்காலத்தில், வெறும் 2 கோடியே 82 லட்சம்
வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகி உள்ளது.
இதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது ஒரு
கோடியே 82 லட்சம் தினக்கூலிகளும், 40 லட்சம்
சுயவேலை வாய்ப்பும், 60 லட்சம் நிரந்தர
வேலைவாய்ப்பும் ஆகும்.
முறைசாரா இந்தியா?
தினக்கூலி மட்டுமே இந்தியாவின் மிகப்பெரிய
வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. அதுமட்டு
மல்ல, இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,
ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஒரே வேலை
வாய்ப்பு தளமாக மாறிவிட்டது. பழங்குடி
இனத்தவர்களில் நிரந்தர வேலை செய்வோர் 6.7
சதம் மட்டுமே. தாழ்த்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினரில் நிரந்தர வேலை செய்
வோர் 12 சதமாக உள்ளது. மற்றவர்களில் நிரந்தர
பணி 24 சதவீதம் உள்ளது. குறிப்பாக தாழ்த்தப்
பட்டோரில் 48 சதம் தினக்கூலிகளாகவே
உள்ளனர்.
வறுமை ஒழிப்பு பற்றியும், வறுமைக் கோடு
பற்றியும், ஆள்வோர்கள் வானளாவிய விளக்கங்
களையும், வாய்கிழிய சபதங்களையும் விடு
கின்றனர். ஆனால் இந்த தினக்கூலிகள்தான்
வஞ்சிக்கப்பட்டு வறுமையில் தள்ளப்படுகின்ற
னர். 2004-2005ன் கணக்குப்படி இந்த தினக்கூலி
செய்வோரில் 22 சதம் வறுமைக் கோட்டிற்கு கீழேஉள்ளனர். இந்தியாவில் உள்ள மொத்த
உழைப்பாளர்களான 45. 19 கோடியில் இந்த
தினக்கூலி பட்டியலாளர்கள் கோடிப்பேர்க
ளாகும். தற்போது தேசிய மாதிரி ஆய்வு மையம்
மதிப்பீட்டின்படி, தினக் கூலிகளில் வறுமையில்
வாடுவோர் 32 சதமும், சுய தொழில் புரிவோரில்
18 சதமும், நிரந்தர தொழிலில் 13 சதமும் வறுமை
யில் வாடுவோர்கள் என்று மதிப்பீடு செய்
துள்ளது.
இந்த லட்சணத்தில் எதிர்கால இந்தியா
எப்படி வல்லரசு இந்தியாவாக இருக்க முடியும்?
ஊழல் இந்தியா என்ற பெரும் பட்டத்தை
பெற்றுவிட்டது. அடுத்து முறைசாரா தொழில்
மட்டுமே உழைப்புக்களமாக மாறிவிட்டது. 2004-
2005 கணக்கின்படி 6 சதம் மட்டும். அமைப்புச்
சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர். இவர்களிலும்
மூன்றில் இரண்டு பகுதி பொதுத்துறை நிறுவனங்
களில் பணிபுரிவோர். கடந்த ஐந்து ஆண்டுகளில்
உருவான வேலைவாய்ப்புகள் குறைவாக இருந்
தாலும் அவை அனைத்துமே முறைசாரா தொழி
லில் மட்டுமே உருவாகியுள்ளது. இந்தியாவில்
பணிபுரியும் பெண்களில் 96 சதமும், ஆண்களில்
91 சதமும் முறைசாரா தொழில் பணிபுரிவோர்கள்
ஆவார்கள். இந்திய அரசின் தொழிலாளர் மற்றும்
வேலை வாய்ப்புத்துறை, இந்தியாவின் எதிர்காலம்
முறைசாரா தொழிலில்தான் உள்ளது என்று
பறைசாற்றியுள்ளனர். இதற்கு இன்னொரு பெயர்
வேலை ஒழிப்பு , வறுமை வளர்ப்பு என்பதாகும்.


பெண்கள் வேலைக்கு வராதது ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை
யில் பெண்களின் உழைப்பு சக்தி 17 சதம்குறைந்துள்ளது. அதாவது 14 கோடியே 85லட்சத்திலிருந்து 12 கோடியே 30 லட்சமாகக்
குறைந்துள்ளது. இதே காலத்தில் பெண்கள்
வேலையில் பங்கேற்பது (றுஞசு) 49 சதத்திலிருந்து
39 சதமாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு பல
குழப்பமான அறிக்கைகளையும் ஆய்வுகளையும்
கொடுத்து, உள்ளங்கை நெல்லிக்கனியாய் உள்ள
உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.
என்றுமில்லாத அளவிற்கு சம்பளம், கூலி
உயர்ந்துவிட்டது. எனவே, ஆண்கள் சம்பாதித்
தால் போதும் என பெண்கள் வீட்டுக்குள்ளே
முடங்கிவிட்டனர் என்ற விளக்கம் விவரங்
கெட்ட விளக்கமாகும்.  சம்பளம் உயர்ந்துள்ளது
என்பது உண்மைதான். ஆனால் அதைவிட அதிக
மாக விலை உயர்வும், உணவுப் பணவீக்கமும்
உயர்ந்துள்ளது என்பதை கணக்கில் கொள்ள
வேண்டாமா? 90 சதவீதம் தினக்கூலிகளாக
இருப்பவர்களுக்கு விலைவாசிப் புள்ளி கணக்
கிலா சம்பளம் உயர்கிறது? இவர்கள் எந்த பாது
காப்பும் இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.
பெண்கள் வேலைக்கு போகக் கூடாது என்ற
பழமைவாதக் கண்ணோட்டம்தான் இந்த பெண்
களின் வேலைக்கு வருவது குறைந்துள்ளது என்று
கூறப்படுகிறது. இது இந்தியாவில் நீண்ட
காலமாக இருக்கும் கண்ணோட்டம். ஆனாலும்
இது பல மாற்றங்களை கடந்து வந்துள்ளது. பொது
வாக இதர நாடுகளைவிட சராசரியில் பெண்
உழைப்பாளர்கள் குறைவாக உள்ளனர். இந்தியாவில்
கிராமப்புறத்தில் 25 முதல் 30 சதமும், நகர்ப்புறத்
தில் 15 முதல் 18 சதமும் உள்ளனர். பெண்களின்
பல பணிகளை அங்கீகரிக்காததால் உலக நாடுகளின் சராசரியில் இது குறைவாக உள்ளது. 2000-
2005ல் உயர்வதற்கு 2005-2010ல் பெண்கள் பங்கேற்பு
குறைவதற்கு இது ஒரு காரணம் இல்லை.
15 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்
கள் உயர்கல்வி படிக்கச் செல்வதால் பெண்கள்
வேலைக்கு வருவது குறைந்துள்ளது என்றவாதம்
முன்வைக்கப்படுகிறது. இது காரணமாக இருந்
தால் வரவேற்கத் தக்கதாகும். அதே நேரத்தில்
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்ப
தற்கு இது எப்படி காரணமாக இருக்க முடியும்.
15-24 வயதுடைய பெண்கள் படிப்புக்குச் சென்று
விட்டால் அந்த இடத்தில் இதர பெண்கள்
பணிக்கு வருவார்கள் இல்லையா? அதுவும்
நடக்கவில்லை. பெண்கள் வேலைக்கு வருவது
குறைந்திருப்பது 15-24 வயது மட்டுமல்ல
அனைத்து வயதிலும் இந்த வேலையில் பங்கேற்பு
குறைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும் புதிய
வேலைவாய்ப்புகள் உருவாகாததுதான் இந்த
வீழ்ச்சிக்குக் காரணம். 2007-2008ல் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடி கணிசமான பெண்
களை வேலையைவிட்டு விரட்டியது. குறிப்பாக
ஏற்றுமதி சார்ந்த தொழிலில் ஏற்பட்ட சரிவும்
முக்கிய காரணம். அப்படி வெளியேற்றப்பட்ட
பெண்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க
வில்லை என்பதும் முக்கிய காரணமாகும். முறை
சாரா தொழில் சுமார் 6 சதம் அளவிற்கு இந்த
பொருளாதார நெருக்கடி வீழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, சுமார் 80 லட்சம் புதிய வேலை
வாய்ப்புகளையும் தடுத்தது.

அளப்பெரிய வாய்ப்பா?
மிகப்பெரிய ஆபத்தா?
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய காரண
மாக உள்ளது வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி  (துடிடெநளள
ழுசடிறவா) தான். இதை மூடிமறைக்கவே, மேற்கண்ட
பலவிதமான காரணங்களை கூறுகின்றனர்.
இந்தக் கொள்கையால் புதிய வேலைவாய்ப்புகள்
உருவாகவில்லை என்பதுதான் உண்மையாகும்.
இந்தியாவில் இளம் வயதினரிடையே வேலை
யின்மை அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் 2011
முதல் 2016ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வேலைக்
குத் தகுதி படைத்தவர்கள் அதாவது 15 முதல்
59வயது வரை உள்ளவர்கள் சுமார் 63.5  கோடி
யாக உயரும். இதில் 20 முதல் 35 வயது வரை
உள்ளவர்களே அதிகமாக இருப்பார்கள். உலகி
லேயே இந்தியாதான் இளம் இந்தியாவாக
இருக்கும். அதாவது இந்திய மக்களின் சராசரி
வயது 29 ஆகும். சீனா, அமெரிக்காவில் சராசரி
வயது 37ஆகவும், மேற்கு ஐரோப்பாவில் 45
வயதாகவும், ஜப்பானில் 48 வயதாகவும் இருக்கும்.
எனவே, படித்து விட்டு உழைப்புச் சந்தைக்கு
இளைய சக்திகள் மடைதிறந்த வெள்ளம்போல்
வருகிறபோது, புதிய வேலைவாய்ப்புகள் உரு
வாகவில்லை என்றால் அதன் விளைவுகள்
என்ன? இந்த அளப்பரிய வாய்ப்பை பயன்படுத்த
வில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தாக மாறும்?

செவ்வாய், மே 31, 2011

7. நாங்கள் வலிமையானவர்கள்.


       எந்தவொரு சமூக அரசியல் மாற்றங்களுக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கும் இணைஞர்களின் ஆயுதம் தாங்கிய எழுச்சியும், தனிநபர் சாகசங்களும் முன்தேவையாக அமைந்திருக்கிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.சமுதாயத்தில் புதிய பொருளாதார அரசியல் வளர்ச்சிப்போக்குகள் உருவாகிறபோது புதியவிதமான பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.அவற்றிற்கான மாற்று மார்க்கம் உடனடியாக தெரியாதபோது  இதுபோன்ற ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் மற்றும் சாகசங்கள் மூலமாக தீர்வுக்கான தேடல் நடைபெறுகின்றது. இதற்கு ருஷ்யநாட்டு இளைஞர் இயக்க செயல்பாடுகள்  சிறந்த உதாரணமாகும். இக்காலத்தில் (1815-1890) செயல்பட்ட இளைஞர் அமைப்புகளில் இளம் ருஷ்யர்கள் பங்கேற்ற  அமைப்புகள் பலபோக்குகள் அதனுள் இருந்தாலும்  சிறந்த, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாகவும் திகழ்ந்தது.
          பத்தொன்பதாம்  நுற்றாண்டின் மிகப்பெரிய நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் ருஷ்யா இருந்தது.அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவும் சட்டம், சட்டமன்றம் எதுவுமற்ற சார் மன்னனிடமே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நாடாக ருஷ்யா திகழ்ந்தது.6-ல் 5பங்கு மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டிருன்தனர்.

   உற்பத்தி திறன்மிகவும் குறைவாக உள்ள விவசாயத்தில் அதிகம் விவசாயிகள் ஈடுபட்டிருந்ததாக லெனின் பிற்காலத்தில் ஆய்வு செய்து எழுதினார்.  1833-ல் 43 சதவீத மக்கள் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 1859-ல் 66 சதவீதமாக உயர்ந்தது. 1861-ம் ஆண்டு பண்ணைஅடிமைத்தனம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு ருஷ்யாவில் இயந்திர ஆலைமுதலாளித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது.

               1865-ம் ஆண்டுக்கும் 1890-ம் ஆண்டுக்கம் இடையில் உள்ள 25 ஆண்டுகளில் பெரிய ஆலைகளிலும் இரயிவேக்களிலும் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.7 லட்சத்திலிருந்து 14.3லட்சமாக உயர்ந்தது.அடுததசில வருடங்களில் இது 27 லட்சமாக உயர்ந்தது.ஆலைமுதலாளித்துவத்தின் விளைவாக 1870-ம் ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.1875-ல் ஒடேஸ்ஸா நகரத்திலும் 1878-ல்பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் தொழிற்சங்கம் உருவாகியது.1881 முதல் 1886-வரை 5 ஆண்டுகளில் 48-க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.

                        இதே காலத்தில் சார் அரசு அதன தேவைகளை முன்னிறுத்தி அதிகார வர்க்க எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியது.          மறுபுறத்தில் புதிய சூழலுக்கான நிர்வாகிகளின் தேவைகளுக்காக உயர்கல்வி    விவாக்கம் வேகமாக நடந்தது. ருஷ்யாவின் 5 பல்கலை கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்தது.இம்மாணவர்களில் பெரும்பகுதி நடுத்தர, மற்றும் கீழ்மட்ட மக்கள் பிரிவிலிருந்து வந்தனர். பாரம்பரிய உயர்வர்க்கமும் அதன் தலைமையும் இக்காலத்தில் குறைய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
                        இந்த பின்னனியில்தான் இளைஞர் கலகங்களும் எழுச்சிகளும், அப்புகளும் உருவாகின.1825-ம் ஆண்டு சார் மன்னன் முதலாம் நிக்கோலசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் இருந்த இளம் அதிகாரிகள் குழு பெரும் கலகத்தில் ஈடுபட்டது.அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து இளம் வீரர்கள் கலகத்தில் இறங்கியது மன்னனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.போராட்டம் கடுமையாக அடக்கப்பட்டு ஐந்து இளம் இராணுவ அதிகாரிகளின் தலை கொய்யப்பட்டது.இவர்களை டிசம்பரிஸ்டுகள் என்று அழைப்பார்கள்.

                        டிசம்படிரிஸ்டுகளின் தாக்கம் அடுத்தடுத்த ருஷ்ய சமுகத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்தது.இன்றளவும் டிசம்பரிஸ்டுகள் பற்றி நினைவுகூறல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1830-1860-ம் ஆண்டுகளில் ருஷ்ய சமூகத்தில் தத்துவார்த்த கருத்து மோதல்கள் தீவிரமடைந்தன. 1848-ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கை இந்த மோதலுக்கு புதிய வழித்தடத்தை திறந்து விட்டது. 

                 பல எழுத்தாளர்கள் சோசலிசத்தை பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தனர். பண்ணை அடிமைகள் விடுதலைசெய்வது, அரசின் அதிகாரத்தை குறைப்பது, பத்திரிக்கை சுதந்திரத்தை அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இக்கருத்துக்களின் ஊடாக சமூக அவலங்களை எதிர்த்து இளைஞர்களின் அணிதிரட்சி நடைபெற்றது.

திங்கள், மே 02, 2011

நீலக்குறிப்பேடு

  
                                                                 ஏ.பாக்கியம்
              (பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ள புத்தகத்தை பற்றிய அறிமுகம்)                                      

  நீலக்குறிப்பேடு என்ற இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் புரட்சியாளர் லெனினுடன் வாழ்ந்த உணர்வைப்பெறமுடியும். வாசிக்கும்வரை மட்டுமல்ல வாசித்து முடித்த பிறகும் அந்த உணர்வுகளும், நினைவுகளும் நம்மை விட்டு அகன்றிட மறுக்கும். அத்தகைய சக்தியான படைப்பாக இந்த 
   
    நீலக்குறிப்பேடு என்ற புத்தகம் திகழ்கிறது. இது குறுநாவலா? பயணக் கதையா? குடுப்பச் சித்திரமா? புரட்சிக்குழுக்களின் செயல்பாடுகளா? என்று பிரித்துச்சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து தன்மைகளையும் உள்ளடக்கிய படைப்பாக இந்த நூல் உள்ளது. 
    
    ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக பல விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.  சில புத்தகங்கள் உணர்வுகளை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் இந்த நீலக்குறிப்பேடு  இந்த இரண்டுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்து விட்டது. 

  ருஷ்யாவை 1917-ம் ஆண்டு புரட்சிகர சூழல் என்னும் சூறைக்காற்று சுற்றி  வளைத்திருந்தது. கொடுங்கோல்  ஆட்சி நடத்திய சார் மன்னன் தூக்கியெறியப்பட்டான். முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதியான கெரன்ஸ்கி தலைமையில் ஆட்சிநடைபெற்ற காலம். 

 கெரன்ஸ்கி அரசு தொழிலாளர்களையும், போல்ஷ்விக்குகளையும் கடுமையாக அடக்கியது. லெனினை ஜெர்மன் நாட்டு உளவாளி என்றும், மொடாக்குடியன் என்றும், பெண் பித்தன் என்றும் அவதூறுகளை அள்ளிவீசிய காலம். லெனினை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்து மோப்பநாய்களையும் வேட்டைநாய்களையும் கொண்டு காடுகழனியெல்லாம் தேடியது. 

  இத்தகைய சூழ்நிலையில்தான் லெனின் பெட்ரோகிராட் நகரத்தை அடுத்துள்ள குக்கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கைக்கு செல்கின்றார். அக்கிராமத்தில் எமல்யனோவ் என்பவரின் நிலத்தில் புல் அறுக்கும் பின்லாந்து நாட்டு வேலைக்காரனாக வேடமிட்டு  நடத்தும் தலைறைவு வாழ்வை விளக்குவதுதான் இப்புத்தகத்தின் நிகழ்வுகளாகும். 

 லெனின் வாழ்வில் இது சிறுபகுதியாக இருந்தாலும், கொந்தளிப்பு நிறைந்த காலம் என்பதால் வாசகனின் உள்ளத்தில் பெருவெள்ளத்தையும். உணர்ச்சி பிரளயத்தையும் ஏற்படுத்துகின்றது. லெனின் அக்கிராமத்திற்கு ரகசியமாக பயணம் செய்வதே திகிலூட்டுவதாக உள்ளது. 

 லெனினும், ஜுனோவிவ் இருவரும 
படகில் கடந்து செல்லும் 
அந்த பரந்த ஏரியின் நிசப்தமும், 
அதன் பூவிரியும் கரைகளும், 
கால்கள் புதையும் சகதியும், 
மிதமான தென்றலும, 
அசைவற்ற நீரின் நிசப்தமும், 
ஒளியை விழுங்கும் இருளும்  
இரவை போர்த்திக்கொள்ளும்  அமைதியும் 
வாசகனின் லேசான இதயத்தை  கலைத்து படபடப்பை கூட்டுகிறது.

 எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும்? எப்படி மாறுவேடத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு  பல செய்முறை விளக்கங்களை லெனின் மூலமாக இப்புத்தகம் வழங்குகிறது. பின்லாந்துகாரன் வேடத்திலும் புல்அறுக்கும் கருவிகளுடன் லெனின் எப்போதும் காட்சி தருகின்றார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு லெனின் துரிதமாக தன்னை தகவமைத்துக்கொள்கிறார். 

 ஈரப்பதம் நிறைந்த சிறிய குடிசை, மழைபெய்தால் ஒழுகும் நிலை, சிறிய வைக்கோல் படுக்கை கொசுக்கடிகளின் வலிகளுக்கும், அதன் ரீங்கார ஒலிகளுக்கும் இடையில் புதிய இடம் என்ற சிறிய வேறுபாடின்றி லெனின் தனது பணிகளில் மூழ்கினார். 

 எமல்யனோவின் குடும்பச் செயல்பாட்டை விவரிக்கின்ற விதம் வாசகனை அக்குடும்பத்தின் அங்கத்தினனாக மாற்றி விடுகின்றது. புரட்சியின் தலைமையகம் தற்காலிகமாக தனது சிறிய குடிசைக்குள் செயல்படுவதை எமல்யனோவும் அவரது மனைவியும் அறிந்தே செயல்பட்டனர். 

 நான்கு மகன்களும் அதுவரை இல்லாத மாறுபட்ட பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டனர். பாதுகாப்பு அரணாக, தகவல் தொடர்பு நிறுவனமாக ஒற்றர்படையாக, உணவு ஏற்பாடுகளை செய்யும் பிரிவாக துல்லியமாக வேலைப்பிரிவினை செய்து குடும்பமே செயல்பட்டது.

 ஆயுதங்களை எப்போது பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? அரசியல்வாதிக்கும் இராணுவ வீரனுக்கும் என்ன வேறுபாடுகள்? தவறான பாதைகளின் விளைவுகள் என்ன? போன்ற பல தந்திரோபாயங்களை விளக்கிட பலபக்கங்கள் தேவைப்படும். ஆனால் இப்புத்தகத்தில் நிகழ்வுகளின் காலத்தையும், களத்தையும் வாசகனின் கண்முன் காட்சிப்படுத்தி நிறுத்துவதால் சில வரிகளே மேற்கண்ட பெரும் கேள்விகளுக்கு விடைஅளித்து விடுகின்றது.

 தலைமறைவு வாழ்க்கையும் துண்டிக்கப்பட்ட இடமும் புரட்சிகரமான பணிகளை செய்வதற்கு தடையாக இருக்க முடியாது என்பதற்கு இப்புத்தகம் லெனின் மூலமாக பல தடயங்களை விட்டுச்சென்றுள்ளது. தனித்த இடத்தில் பரந்த புல்வெளியோடும், நிலவோடும் மட்டுமே உறவாடும  நிலை இருந்தாலும, அனைத்து பத்திரிக்கைகளையும் ரகசியமாக வரவழைத்து அவற்றை லெனினும் மற்றவர்களும் வாசிப்பதன் மூலமாக அன்றைய ருஷ்யாவின் கொதிப்பான நிலையை வாசகனுக்கு விவரிக்கின்றனர். 

 பத்திரிக்கைகளில் வருகின்ற செய்திகளுக்கு தினசரி லெனின் மறுப்புகளை எழுதிவந்தார். அத்துடன் முக்கிய அரசியல் நிலைபாடுகள் பற்றியும் மாறிய சூழல்கள் பற்றியும் லெனின் பிரசுரங்களை எழுதி ரகசியமாக வெளியிட்டார்.
லெனின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடித்தான் துண்டுபிரசுரங்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வேட்டைக்காரனுக்கு பயந்து பதுங்கி இருக்கும் மிருகங்கள் போல் தலைமறைவு வாழ்க்கையில் இது சாத்தியமா? லெனின் எப்படி சாத்தியப்படுத்தினார் என்பது இப்புத்தகத்தில்  விளக்கப்படுகிறது. 

  முக்கிய ஊழியர்களை வரவழைத்து மற்றவர்களுடன் உரையாடவிட்டு தான் மாறுவேடத்திலோ,  ஒளிந்திருந்தோ அதைக்கேட்டு நிலைமைகளை புரிந்து கொள்வார்.அதன் பிறகு அதற்கான பதிலையோ விளக்கத்தையோ எழுதுவார்.
லெனினுக்கும் ஜுனோவிவிற்கும் அந்தக் சின்னஞ்சிறிய குடிசைக்குள் நடைபெறும் விவாதங்கள் ருஷ்யாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளை நமக்கு விளக்குவதுடன் கட்சிக்குள் இருந்த சகலவிதபோக்குகளையும் அறிந்துகொள்ளக்  கூடியதாக உள்ளது.

  உரிய தயாரிப்புகள் இல்லாமல்  எந்த தாக்குதலும் பயன் தராது என்று ஜுனோவிவ் கூறுகின்றார். ருஷ்ய மார்க்சிஸ்ட்களின் நீண்டகால தாயாரிப்புகளை லெனின் எடுத்துரைக்கின்றார். தத்துவ விளக்கங்கள் அரசியலுக்கு உதவாது என்று ஜுனோவிவ் மறுத்துரைக்கின்றார். பிளாட்டோவின் தத்துவாதிகள் அரசாள வேண்டும் அல்லது அரசாள்வோர் தத்துவம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சொற்றொடரை முன்வைத்து லெனின் தத்துவத்தையும் அரசியலையும் இணைக்கின்றார். 

  இவை இரண்டிற்கும் அமைப்பிற்கும் உள்ள அவசியத்தையும் விளக்குகின்றார். பயனற்ற மோதல்கள் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்று ஜுனோவிவ் அச்சத்தை வெளிப்படுத்துகிறார். இழப்புகள் ஏற்படும் என்பதால் வாய்ப்புகளை பயன்படுத்த தவறவிடக்கூடாது  என்றும் இழப்புகள் நம்மைபோன்ற தனிநபர்களுக்குத்தான் தொழிலாளி வர்க்கத்திற்கு அல்ல என்று லெனின் தனது கருத்துக்களை முன்வைத்து ஏற்கச்செய்கிறார்.

  இந்த விவாதங்களுக்கு இடையே போல்ஷ்விக்குகள் ஆட்சியை பிடித்தால் தொடர்ந்து நடத்தமுடியுமா? வேண்டுகோளுக்கு பதிலாக உத்திரவிடவேண்டும். போராட்டத்திற்கு பதிலாக முடிவெடுத்து அமுலாக்கிட வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றது. இந்தக்காலத்தில் லெனின் நேர்த்தியாக குறிப்பெடுத்து எழுதிமுடிக்காமல வைத்திருந்த  அந்த நீலநிற குறிப்பேட்டை அவசரமாக தேடுகின்றார். அதை எழுதிமுடிக்க வேண்டிய தருணம்  என்று நினைக்கின்றார். 

  அரசைப்பற்றிய கருத்துக்களையும் புரட்சியை பற்றிய பார்வையை  வரலாற்று ரீதியான அணுகுமுறைகளையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தத்துவத்தை மேலும் வளப்படுத்துவதற்கான குறிப்புகளையும் முன்வைத்து புத்தகமாக எழுத ஆரம்பிக்கின்றார். நீலக்குறிப்பேட்டை அவர் தொடர்ந்து தேடுவதும் அதையே இந்த நூலுக்கு தலைப்பாக மாற்றி இருப்பதும் அந்த குறிப்பேட்டின்  முக்கியத்துவத்தையும் அதில் பொதிந்துள்ள தத்துவார்த்த அரசியலையும்  நமக்கு விளக்குகின்றது.

  புரட்சியாளர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு  உரியகவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு லெனின் கடைபிடித்த வழிமுறைகள் புதிய பாடமாக உள்ளது. நடைபயிற்சி, மலைஏறுதல், நீச்சல், குதிரை ஏற்றம், மீன் பிடித்தல் என்று பலமுறைகளை பின்பற்றி உள்ளார்.

 எமல்யனோவின் மவியுடன் உரையாடும்போதும், அவரின் பணிகளை பார்க்கும்போதும் பெண்விடுதலை பற்றி விவாதிக்கின்றார். கடுமையான பணிச்சுமைகளை புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக குறைக்க முடியும் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார். புரட்சிக்கு பிறகு அவரின் பணிகளில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்றார்.

 எமல்யனோவின் குடும்பத்தையும் அவரின் குழந்தைகளையும் பார்த்து  லெனின் பெருமிதம்   அடைகின்றார். தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லையே என்று ஏக்கம் கொள்கின்றார். குடும்பத்தின் மீதும் அந்த குழந்தைகள் மீதும் லெனின் காட்டும்  அலாதியான உணர்வுகளும்  வாசகனுக்கு லெனினை பற்றிய அனுதாப உணர்வு ஏற்படுகின்றது. அதே நேரத்தில் புரட்சியாளர்கள் குடும்பத்தை  நேசிக்கத் தெரியாதவர்கள் என்ற பொய்யுரைகளுக்கு பதிலாகவும் அமைகின்றது.

  குடும்பத்தை மட்டுமல்ல இயற்கையின் அழகை ரசிப்பதற்கும் தவறவில்லை. அகன்ற ஏரியையும், பரந்த பசுமையான புல்வெளியையும் அடர்ந்த மரங்களையும் இவற்றின் மீது கவிழ்ந்திருக்கும் மேகங்களையும் ரசிக்கும் லெனின் இவற்றை எல்லாம் வர்ணிக்க கார்க்கி என்ற கவிஞன் தன்னுடன் இல்லையே என்று ஏங்குகின்றார். கவிஞர்களுக்கு தனிமை தேவைதான் அதேநேரத்தில் மக்களிடம் இருந்து தனிமைபட்டுவிடக்கூடாது என்கின்றார். சிற்பிக்கு எந்த அளவு கலைகள் முக்கியமோ அந்த அளவு மக்கள் நமக்கு முக்கியம் என்று கருத்துக்களை விரித்துச்செல்கின்றார்.

   நீலக்குறிப்பேடு என்ற இந்தப்புத்தகம் புரட்சிகரமா அரசியல் நடவடிக்கைகளை மையப்படுத்தி இருந்தாலும் எந்தக்கருத்தும் வலிந்து திணிக்கப்பட்டதாக உணரமுடியவில்லை.  கதாபாத்திரங்களின்    வாழ்வினூடாக எழுத்துக்கள் செல்கிறதே தவிர எழுத்துக்களினூடாக கதாபாத்திரங்கள் செல்வது பின்னுக்குச் சென்றுள்ளது.  வாசிப்பு என்ற இன்பத்தினூடே எண்ணற்ற உணர்வுகளை உருவாக்கி உலாவரச் செய்கின்றது இந்த நீலக்குறிப்பேடு. 
                                                         -----------------    

சனி, ஏப்ரல் 30, 2011

6 கடிதமே பிரகடனமாய்


        புறச்சூழல் பொருத்தமாக இருந்தால் ஒரு சிறு தீப்பொறியும் காட்டுத்தீபோல் மள மள என பற்றிக் கொள்ளும் என்பதற்கு இளம் இத்தாலி சிறந்த உதாரணம்.போராட்ட சூழலில் ஒரு கடிதம் ஏற்கப்படாதபோது அதுவே போர் பறையாய் போராட்டத்தையே கொழுந்துவிட்டு எரிய செய்யும் என்பதற்கு மாசினியின் கடிதம் ஒரு உதாரணமாகும். 1931-ல் சார்டினிய அரசின் புதிய அரசராக சார்லஸ் ஆல்பர்ட் என்பவர் பதவியேற்றார்.  இவர் கார்போரிய இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இவ்வியக்கத்தில் இவருடன் கலந்துகொண்ட மாசினி அவருக்கு ஒரு கடிதம் எழுதினான். 

               க்கடிதத்தில் ஒன்றுபட்ட இத்தாலி உருவாக்குவது பற்றி அதை எப்படி அடைய முடியும் என்பது பற்றியும் அதற்கான திட்டத்தினையும் முன்வைத்திருந்தான். அந்த மன்னனோ இக்கடிதத்தை அலட்சியப்படுத்தினான்.பதிலும் இல்லை,பரிசீலனையும் இல்லை. இதனால் இளம் இத்தாலிய அமைப்பினர் அக்கடிதத்தை பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும்  விநியோகம் செய்தனர். தேசப்பற்றின் உணர்ச்சி பிழம்பாய் எழுதப்பட்ட அக்கடிதம் இளைஞர்களையும், பொதுமக்களையும் சாரை,சாரையாக அணிதிரட்டியது. அரசனுக்கோ இந்தக் கடிதம் அச்சத்தை ஏற்படுத்தியது, ஆத்திரமூட்டியது.

              மாசினி பிரான்சிலிருந்ததனால் அவனை கைதுசெய்யக்கோரி நிர்பந்தம் செலுத்தினான். ஆனால் பிரான்சு அரசோ மாசினியை கைது செய்யாமல் மீண்டும் ஸ்விட்சர்லாந்திற்கு நாடுகடத்தியது. இக்கடிதத்தை விநியோகம் செய்த இளைஞர்கள் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்கடிதமே இளம் இத்தாலியின் கொள்கை பிரகடனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர் எழுச்சிகள்
      கைதுகளும், நாடுகடத்தலும், தண்டனைகளும் இளைஞர்களின் எழுச்சிக்கு தடைபோட முடியவில்லை. எழுச்சிகள் தொடர்ந்தது மட்டுமல்ல பரவியும் சென்றது. 1833-ம் ஆண்டு அலெக்சான்டரியா, டூரின், ஜெனோவா, சாம்பிரி ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தாங்கி கலகம் செய்தனர். அரசு படைக்கும், இளைஞர்களுக்கும் வீதியில் கடும் மோதல் ஏற்பட்டது.

          அரசு அடக்குமுறையின் உச்சகட்டத்திற்கே சென்றது.இந்த எழுச்சியில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டது. மாசினி தலைமறைவாக இருந்தாலும் அவருக்கும் மரணதண்டனை என அறிவிக்கப்பட்டது. இந்த எழுச்சி தோல்வியில் முடிந்தாலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களின் பார்வை இத்தாலியை நோக்கி திரும்பியது.

      ளம் இத்தாலி அமைப்பின் இளைஞர்கள்  தோல்வி கண்டு துவளவில்லை. 1834-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி ஸ்விட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற இளைஞர்கள் அங்கே ஒன்று கூடினர். அங்கிருந்து பியன்மன்ட் நகர் மீது பெரும் தாக்குதல் தொடுத்தனர். மறுபுறத்தில் இளம் இத்தாலிய சங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு கரிபால்டி ஜெனோவா நகரை தாக்கினான்.  

                தனால் கோபமடைந்த சுவிட்சர்லாந்து அரசு 1834-ம் ஆண்டு மே மாதம் மாசினியை நாடுகடத்தியது. போராட்டமும் நசுக்கப்பட்டது. பாரிசுக்கு தப்பிச்சென்ற மாசினியை சார்டினிய அரசின் நிர்பந்தத்தால் அவ்வரசு கைது செய்து சிறையிர் அடைத்தது.மேற்கண்ட இரு எழுச்சிகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலால் இளம் இத்தாலிய அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்தது.நான்காண்டுகால இடைவெளிக்கு பின்னர் 1838-ம் ஆண்டு லண்டனில் ஒன்றுகூடி இளம் இத்தாலியை மீண்டும் புதுப்பித்தனர்.
 
             ந்த புனரமைப்பு புதிய தாக்குதலுக்கு புத்துயிர்ரூட்டியது.1841-முதல் 1845 வரை சிசிலி, அப்ரூசி, டஸ்கன், லம்போர்டி, வெனீசியா, ரோமக்னா ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் தொடர் எழுச்சிகளை ஏற்படுத்தினர். மேலும் சில நகரங்களில் இளம் இத்தாலியுடன் தொடர்பு ஏற்படுத்தியிருந்த சில இளைஞர் குழுக்கள் அரசிற்கெதிராக கலகம் செய்தனர்.  

            பிரௌன் பிரான்ஸ்கோ என்ற இளம் இத்தாலியன் சிசிலியில் 1848-முதல் 1856-வரை தீரமிகு போராட்டங்களை நடத்தி தனது 36-வது வயதில் மரணமடைந்தான். இவன் 1848-ல் பிரெஞ்சு படைகளை எதிர்த்து பாலிமோர் பகுதிகளை விடுதலைசெய்ததில் முக்கிய பங்காற்றினான். இவனது தீர செயல்கண்டு இராணுவத்தில் சேர்ந்திட அரசு கொடுத்த அழைப்பை நிராகரித்து இளம் இத்தாலிய அமைப்பில் இணைந்து செயல்பட்டான். 

   பிரெஞ்சு படைகள் மீண்டும் பாலிமோரை கைபற்றியபோது பிரெஞ்சு படைகளையும், உள்ளூர் அரசையும் எதிர்த்து 1850-முதல் இளைஞர்களை அணிதிரட்டி புரட்சி செய்தான். இதனால் 1853-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 1856-ல் அவன் விடுதலையானபோது சிறைவாழ்க்கை அவனது விடுதலைவேட்கையும் கனவுகளும் மேலும் உரமேறி உறுதிபட்டிருந்தது.எனவேதான் விடுதலையானவுடன் இளைஞர்களையும் விவசாயிகளையும் திரட்டி அரசுக்கெதிரான தாக்குதலை முன்னிலும் தீவிரமாகத் தொடுத்து

   1856 டிசம்பர் 20-ல் யுத்தக்களத்தில் வீரமரணம் அடைந்தான். அவனின்  வரலாற்றை அரசு மறைக்க முயன்றது. ஆனால் 1860-ல் கரிபால்டி சிசிலியை கைபற்றியவுடன் இவனது உடலை தோண்டி எடுத்து சொந்த மண்ணில் அடக்கம் செய்து, நினைவு ஸ்தூபியை உருவாக்கினான்.
 தேபோன்று பாண்டிரா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட 33 வயது நிரம்பிய அட்டிலோ , 25 வயது நிரம்பிய எமிலோ இருவரும் இளம் இத்தாலிய அமைப்பின் உதவியால் நேப்பில்ஸ் நகர கப்பற்படை மீது தாக்குதலை நடத்தினர். அந்நகரத்தின் சிறைக்கைதிகளையும் விடுதலை செய்தனர்.

       ரசு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 8 இணைஞர்கள் இறந்தனர். 1844-ல் அட்டிலோ, எமிலோ மற்றும் ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட்டு ஜீலை 23-ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றொரு இளைஞன் கார்லோ பிசாகானே, இவன் 39வது வயதில் யுத்த களத்தில் இறந்தான். 

  நெபபோலியனின் படையிலிருந்த இவன் இளம் இத்தாலியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு 1847-ல் இவ்வமைப்பில் இணைந்தான். மாசினி உருவாக்கிய மிலான் நகர எழுச்சிக்கு தலைமையேற்று பெரும் தாக்குதலை நடத்தி கைதிகளை விடுவித்தான். இவன் புருதோனின் அராஜகவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான்.  துப்பாக்கி முனை ஆயிரம் புத்தகங்களைவிட அதிக பிரகாசமானது என்றும் , செயல்கள் மட்டுமே சிறந்த கருத்துப்பிரச்சாரம் என்றும் பேசினான். 1853-ல் ஏற்படுத்திய மிலான் எழுச்சி பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகியது. பல பிரதேசங்களில் இளம் இத்தாலி அமைப்பு வேட்டையாடப்பட்டு, பெரும் பின்னடைவை சந்தித்தது.

   ளம் இத்தாலியில் குறிப்பிடவேண்டிய மற்றொருவர் ஜோசப் வெர்டி இவர் தனதுசேர்ந்திசை மற்றும் மேடை நாடகத்தின் மூலமாக இளம் இத்தாலிய கருத்துக்களை பிரச்சாரம் செய்து இளைஞர்களை திரட்டினார்.  மறுபுறத்தில் கரிபால்டி இளம் இத்தாலி பலவீனப்பட்டிருந்தாலும் அவர் தனியாக படையமைத்து இத்தாலியின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தார்.

   1870-ம் ஆண்டு சிசிலி எழுச்சியின்போது மாசினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.உடல்நிலை பாதிப்பால் அதே ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாசினி 1872-ல் பைசா நகரில் மரணமடைந்தார். அவரது சொந்த ஊரான ஜெனோவாவில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்றனர்.

    1872-ல் இளம் இத்தாலியின் கனவான ஒன்றுபட்ட இத்தாலி உருவாகியது. ஆனால் அவர்கள் கருதிய சுதந்திர குடியரசு உருவாகவில்லை. காரணம் பிற்போக்கு அரசுக்கு எதிராகவும் , ஆஸ்திரிய, பிரெஞ்சு அரசுக்கெதிராகவும் பிரபலமான எழுச்சிகள் மூலம் மட்டுமே ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிவிடலாம் என்று மாசினி நம்பினார்.

    சுதந்திர குடியரசிற்கு இதுமட்டும் சாத்தியமல்ல. செயல்கள், எழுச்சிகள், துப்பாக்கிகள் மூலமாக தானாக கருத்துக்கள் பரவிவிடுமென நம்பினர். இதே கருத்துக்கள் 1920ம் ஆண்டுகளுக்கு பிந்தைய இந்திய இளைஞர் அமைப்புகளிலும் காணக்கிடந்தது. இளம் இத்தாலி என்ற இளைஞர் அமைப்பு ஒன்றுபட்ட இத்தாலிக்கு அடித்தளமிட்டது. பல தியாகங்களை செய்தது. 

   வ்வமைப்பின் தாக்கத்தால் 1840-களில் இளம் ஸ்விட்சர்லாந்து , இளம் ஜெர்மனி, இளம் பிரான்சு, இளம் அயர்லாந்து என பல அமைப்புகள் உருவாகி இளம் ஐரோப்பா என்ற அமைப்பாக வடிவமெடுத்தது. இவ்வமைப்பின் தாக்கம் பிற்காலத்தில் இளம் துருக்கியர் அமைப்பு உருவாகிட தூண்டுகோலாக அமைந்தது. இளம் இத்தாலி என்ற அமைப்பின் வேர்களும் , விழுதுகளும் ஐரோப்பாவையும் கடந்து துளிர்க்கஆரம்பித்தது.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

5.செயலே சிறந்த பிரச்சாரம்


        1833-ம் ஆண்டு ஆஸ்திரிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இளம்இத்தாலியிலஉறுப்பினரானகண்டுபிடிக்கப்பட்டால்உடனடியாகமரணதண்டனை நிறைவேற்றப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த அளவிற்கு இளம் இத்தாலியின் செயல்பாடு ஆஸ்திரிய நாட்டு ஆட்சிபீடத்தை ஆட்டம்காண செய்தது. இந்த அமைப்பின் செயல்பாடு இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இளம் இத்தாலி என்ற இவ்வமைப்பு உருவாகிய காலத்தில் ஐரோப்பாவை போர்களும்போராட்டங்களும்கலகங்களும்தான்ஆட்சிசெய்துகொண்டிருந்தன. 

    அப்போது இத்தாலி பிரான்சிடமும், ஆஸ்திரியாவிடமும் பலகூறுகளாக  பிளவுபட்டுக்கிடந்தது. 1831-ம் ஆண்டு மார்செயில் என்ற இடத்தில் இளம் இத்தாலி என்ற அமைப்பை ஜோசப்மாசினி (ழுரளளநயீந அயண) என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் ஆரம்பித்தான். மாசினி  ஒரு இளைஞன்  மட்டுமல்ல கவிஞன்,எழுத்தாளன்,எழுச்சிமிகுபேச்சாளன்,அமைப்பாளன்,களம்கண்டபடைநடத்தும் தளபதி என பன்முகத்தன்மை கொண்டவன். 

    1821-முதல் கார்போரி என்ற ரகசிய இயக்கத்துடன் இணைந்து இத்தாலி விடுதலைக்காக போராடினான். அவ்வியக்கத்தில் இருந்தபோது 1830-ல் அவன் கைது செய்யப்பட்டு கடற்கரையின் தனிமை சிறையில்  அடைக்கப்பட்டான். பரந்த வானமும் விரிந்த கடலும் , இரவும்,பகலும் மட்டுமே அவனுடன் உறவாடின. அவனது மூளையோ எதிர்கால இத்தாலியை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இனி கார்போரி இயக்கத்தினை நம்பி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தான் மாசினி. இத்தாலிய இளைஞர்களின் உள்ள குமுறல்களுக்கு உருவம் கொடுக்க நினைத்தான். 

   ஆறு மாதம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு குக்கிராமத்தில்தா வாழவேண்டும் என்று அரசு கட்டளையிட்டதஇத்தாலியின் உருவாக்கத்திற்கும் எதிர்கால கனவிற்கும்  இக்கிராம வாழ்க்கை உதவாது என முடிவிற்கு வந்தான்.வேறுஎங்கும் குடியிருக்க கூடாது என்ற அரசின் எதேச்சதிகார உத்திரவால்  ஸ்விட்சர்லாந்து நாட்டில் குடியேறினான் 

          மாசினியின்  வாழ்விடத்திற்கு வேலி அமைக்கலாம் ஆனால் சிந்தனைக்கும் விடுதலை வேட்கைக்கும் வேலியிட முடியுமா?அந்த நாட்டிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராடிக்கொண்டிருந்தனர். இதற்கு மாசினி உதவி செய்ததால் அங்கிருந்து வெளிறேவேண்டும் என்று உத்தரவிட்டது ஸ்விட்சர்லாந்து அரசு.நாடுகடத்தப்பட்ட அவன் பிரான்சின் மார்செயில் சென்று குடிபுகுந்து அங்குள்ள இத்தாலி இளைஞர்களை திரட்டித்தான் இளம் இத்தாலி என்ற அமைப்பை உருவாக்கி களத்தில் இறக்கினான். 

    1848-ம் ஆண்டு மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிடும்வரை ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டவனாக இளைஞர்களை ஆகர்ஷிக்கக்கூடியவனாக மாசினியும், அவனது இளம்இத்தாலி என்ற இளைஞர் அமைப்பும் இருந்தது. குறிப்பாக அன்றைய நடுத்தரவர்க்க சிந்தனை ஓட்டத்தின் பிரதிநிதியாக மாசினியும் அவனது இளம் இத்தாலி என்ற அமைப்பும் இருந்தன.
   ஒன்றுபட்ட இத்தாலி, அதுவும்  சுதந்திர குடியராக இருக்க வேண்டும் என்பவையே இளம் இத்தாலியின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட இத்தாலி ஒரு புவியியல் மாயை என்று அன்றைய ஆஸ்திரிய அமைச்சர் மெட்டர்னிச் ஏளனம் செய்தான் ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது. இளம் இத்தாலியர்கள் அதை உருவாக்கி காட்டுவார்கள் என்று பதிலடி கொடுத்தான் மாசினி. 

    1833-ம் ஆண்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் இளம்இத்தாலிய அமைப்பு உருவாகி போராட்டக்களத்தில் குதித்தது. அப்போது அச்சங்கத்தில் 60000-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். மாசினியின் கவித்துவம் மிக்க எழுத்தும் , உணர்ச்சிபொங்கும் பேச்சும் எழுச்சியூட்டும் செயலும் எண்ணற்ற இளைஞர்களை ஈர்த்தது. 

ஓ.. இளைஞர்களே,  
 மலைகளுக்குச் செல்லுங்கள்   
ஆலைகளுக்கும் ,
 வயல்வெளிகளுக்கும் 
செல்லுங்கள்   
அவர்களுடன் உணவருந்துங்கள்,  
அவர்களது உரிமைகளைப்பற்றி பேசுங்கள்   
அவர்கள் மீதான, எல்லையற்ற 
அடக்குமுறைகளை 
உணரவையுங்கள். 

என்று இளைஞர்களை ஈர்க்கும் முழக்கங்களை எழுப்பினார். தியாகிகளின் குருதி  நீராய் பெருகி  பெருக்கெடுக்கும்போது,  கருத்துக்கள்,  துரிதமாய் வளர்கிறதுஎன தியாகத்தின் அவசியத்தையும், அதன் வலிமையையும் வலியுறுத்தினார்.

 ஓ.. மக்களே,  
 எழுச்சிகளுக்கு இளைஞர்களை
 தலைமையேற்க செய்யுங்கள்,   
அவர்களது உள்ளங்களில் 
உறைந்து கிடக்கும் சக்தியை
நீங்கள் அறியவில்லை,   
இளைஞர்களின் குரலுக்கு 
மக்களிடையே  மந்திர சக்தி   போன்ற மதிப்பிருக்கிறது

என்று அவன் விடுத்த அறைகூவல் இத்தாலி இளைஞர்களை களத்தில் இறக்கியது.மக்கள் செவிமடுத்தனர்.மன்னன் செய்வதறியாது திகைத்தான். 

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

4.வார்ட் பர்க் (wartburg) எழுச்சி


                          ஜெர்மனியில் வார்ட் பர்க் (wartburg)என்ற கோட்டை போன்ற பெரும் கட்டிடத்தில் ஆண்டுதோறும் புதுமையை வரவேற்கும் விழா நடைபெறும் . இந்த கட்டிடத்தில் தங்கியிருந்துதான் மார்டின் லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார் எனவே இக்கட்டிடம் அன்றையஜெர்மானிய தேசீயத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

                          1817-ம் ஆண்டு நடைபெற்ற இந்த புதுமைகளை வரவேற்கும் வார்ட்பர்க் விழாவில் ஏராளமான மாணவர்கள் அணிதிரண்டனர்.உணர்ச்சி பிழம்பாக ஒன்றிணைந்த  அம்மாணவர்களிடையே எழுச்சி பொங்கும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் உத்வேகமுற்ற மாணவர்கள் நெப்போலியனின் சட்டத்தையும், ஹேலரின் (ழயடடநச) மீட்டமைப்பு என்ற நூலையும் கோட்சூபூ என்ற கவிஞன் எழுதிய ஜெர்மானிய வரலாறு என்ற நுலையும் தீயிட்டு கொளுத்தினர்.

                          இச்சம்பவம் ஜெர்மனி முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரஞ்புரட்சியின்போது நடைபெற்ற  ஜேகோபியன் அராஜகத்துடன் ஒப்பிட்டு அந்நாட்டு அரசுமாணவர்களையும் இளைஞர்களையும் வேட்டையாட துவங்கியது. அந்நாட்டு அரசு மாணவர்கள் அமைப்பின் மீதும், இளைஞர்களின் ரகசிய குழுக்கள் மீதும் தனது பிடியை இறுக்கியது. பல்கலைகழக வகுப்பறையிலேயே அரசின் ஒற்றர்கள் உட்கார்ந்தனர். ஆசிரியர்களிடம் பாடப்புத்தக பட்டியலையும், மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களையும்,குடியிருப்பு விபரங்களையும் அரசுக்கு அளித்திடவேண்டுமென உத்தரவு போட்டது. 

                     இந்த எழுச்சிகளினிடையே 1819-ம் ஆண்டு அரசு ஆதரவு கவிஞன் கோட்சூபூ என்பவரை காரல்சான்ட் என்ற மாணவன் படுகொலை செய்தான். இதனால் கோபமடைந்த அரசு அனைத்து மாணவர் அமைப்புகளையும் தடைசெய்து சட்டவிரோதம் என்று அறிவித்தது. காரல்சான்ட் (karl sand) கைது செய்யப்பட்டு ஓராண்டு விசாரிக்கப்பட்டான்.

                விசாரணையின்போது எனது விருப்பத்தையும்,எனது புனிதத்தையும்எனது உறுதியையும்அவன் நசுக்கினான். சுத்தமான துய்மையான, சுதந்திரமான இளைஞர் உலகை ஊழல்நிறைந்த அரசு சீரழிக்கிறது. எனவே நான்  இந்த காரியத்தை செய்தேன் நான் சாவதாக இருந்தால் மெச்சத்தகுந்த, உயரிய காரணத்திற்காகத்தான் சாவேன். விரைவான வெற்றி இளமையில் மரணம் என்பதே என் விருப்பம் என்றான். விசாரணைக்கு பிறகு 1820-ம் ஆண்டு பொது இடத்தில் அவனது தலை துண்டிக்கப்பட்டது. அமைப்பு  ரீதியான இயக்கத்தின் முதல் தியாகி காரல்சான்ட் ஆவான்.
                              காரல்சான்ட் தலை துண்டிக்கப்பட்டாலும் இளைஞர் இயக்கம் புதிய துடிப்புடன் எழுந்தது . ஜெர்மனியின் மற்றொரு பல்கலைகழகமான ஜிசன் பல்கலைகழகத்திலிருந்து காரல் ஃபாலன் (kari fallen) என்ற மாணவன் இவ்வியக்கத்திற்கு தலைமையேற்றான். எந்த வழியிலாவது நாம் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்றால் நாம் நிபந்தனையற்ற குழக்களாக மாறவேண்டும் என்றான். பொதுநலத்திற்காக வாழ்வது மட்டுமல்ல சாவதும் பொதுநலத்திற்காகவே  இருக்கவேண்டும் என்று அறைகூவி அழைத்தான். 

                இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தலைவனாக வலம் வந்தான். ஜெர்மனி அரசு கைது செய்ய முயற்சித்தபோது சுவிஸ்நாட்டிற்கு தப்பித்து சென்றான்.அங்கும் அரசின் அடக்குமுறையால் 1821-ல்  அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டான். இந்த மாணவர் சங்கம் 1848-ம் ஆண்டுவரை செயலூக்கத்துடன் தொடர்ச்சியாக பல்வேறு நடைவடிக்கைகளில் ஈடுபட்டது. இதே காலத்தில் அர்மேனிய மாணவர்சங்கம் என்ற கிருஸ்துவ பழமைவாத மாணவர் அமைப்பும் ஜெர்மானிய பல்கலைகழங்களில் பரவலாக செயல்பட்டது.

                          1830-ம் ஆண்டுகளில் இளம் ஜெர்மானியர்கள் என்ற பெயரில் இலக்கியம், பத்திரிகை சுதந்திரம், அறிவுத்துறை ஆகியவற்றில் இளைஞர்கள் தீவிரமாக செயல்பட்டனர். 1770-முதல் 1831 வரை வாழ்ந்த ஹெகல் என்ற தத்துவஞானியை பின்பற்றியவர்கள் இளம் ஹெகலியவாதிகள் என்றழைக்கப்பட்டனர். ஹெகல் இயக்கவியலை விரிவாக்கம் செய்தார். 

                     இது இயக்கவியல் பொருள்முதல்வாதம் தோன்ற அடிப்படையாக அமைந்தது. 22 வயது நிரம்பிய காரல்மார்க்ஸ் உட்பட பலர் இளம் ஹெகலியவாதிகளாக அக்காலத்தில் செயல்பட்டனர். சிலர் ஹெகலின் இயக்கவியல் குறைபாடுகளை முன்னிறுத்தி ஜெர்மனியில் முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளை நிலைநிறுத்த மதத்துடன் இயக்கவியலை பொருத்த முயற்சித்தனர்.

      மார்க்சும், எங்கெல்சும் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினர். மார்க்ஸ் 26வது வயதில் புனித குடும்பம் என்ற நூலையும் , 27வது வயதில் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலையும் எழுதி தனது கருத்துக்களை நிறுவினார். 38 பகுதிகளாக பிரிந்து கிடந்த ஜெர்மனியில் இளைஞர்கள் ஜெர்மனியின் ஒன்றுமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் கலகம் செய்தார்கள். இயக்கங்களாகவும் பரிணமித்தார்கள், எழுச்சியும் பெற்றார்கள்.

3.உலைக்களங்களில் இளம் ஜூவாலைகள்

                  ற்ற நாடுகளைவிட ஜெர்மனியில் இளைஞர்களுக்கும்.அடுத்த தலைமுறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி வருகின்றனர்.இதற்கான காரணத்தை தேடிய சமூக அறிஞர்கள் ஜெர்மானியில் கலகங்களும் எழுச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வந்ததை கண்டுணர்ந்தனர்.இதுதான் இளைஞர்கள் மீது அந்நாடு  தொடர்ந்து கவனம் செலுத்த காரணம் என்ற முடிவுக்கு வந்தனர். 

                    இளைஞர் இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நாடுகளில் ஜெர்மனி, பிரதானமானது. 1770-ம் ஆண்டுகளிலேயே அன்றைய அரசுக்கு எதிராக இளைஞர்கள் மலை ஏறும் போராட்டங்களை துவக்கினர். மலை ஏறியவர்கள் இறங்வில்லை.அவர்களின் போராட்டத்தை ஆதிரித்து நகரங்களில் இயக்கம் நடைபெற்றது. இப்போராட்டங்கள் பல ஆண்டுகள் நீடித்தது. அதைத்தொடர்ந்து 1815- ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் உரிமைகளை உரிய முறையில் பெறாமல் விட்டதற்கு தங்களது முன்னோர்களும்.ஆளுவோர்களும் தான் காரணம் என்று  தாராளவாத இளைஞர் பிவுகளும் , இளம் ஹெகலியவாதிகளும் கடுமையாக சாடினர்.

                  இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினர்.ஜெர்மணி முப்பத்தி எட்டுக்கும்மேற்பட்ட பகுதிகளாக பிரிந்துகிடந்து.பிரெஞ்சு,இத்தாலி ஆஸ்திரிய நாடுகளுக்கு பல பகுதிகள் அடிமையாக இருந்தன. ஏனவே ஒன்றுபட்ட ஜெர்மனி என்ற கோஷம் முன்னுக்கு வந்தது. 1871-ம் ஆண்டுகளில் தான் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானது என்றாலும் இதற்கான போராட்டம் 1815-லேயே துவங்கிவிட்டது. 

                  இப்போராட்டத்தின் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும்  முன்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் இருந்தனர்.ஜெர்மானிய தேசிய உருவாக்கத்தை யொட்டியே இளைஞர் மாணவர்கள்  எழுச்சிகளும் இயக்கங்களும் தோன்றின. 1815-ல் ஜீனா(துநயே) என்ற பல்கலைகழகத்தின்  மாணவர்கள் மாணவர் சங்கம் (ளுவரனநவே ஹளளடிஉயைவடி) என்ற அமைப்பை முதன் முதலாக தொடங்கினர். 

                     இதுதான் வரலாற்றில் முதல் மாணவர் அமைப்பாககுறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பல்கலைகழகத்தில்தான் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளான கெதே, சில்லர் போன்ற பல அறிஞர்கள் பேராசிரியர்களாக பணியாற்றினர். இந்த மாணவர் சங்கத்தினர் ஜெர்மானிய ஒற்றுமை , ஜனநாயகம், சுதந்திரம் , ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தங்களது போராட்டங்களை நடத்தினர்.     

                 எங்களது சுதந்திரத்தை யாரும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை.     அப்படி அத்துமீறி செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நியாயமானதே   என்று பிரகடனப்படுத்தினார்கள்.

            தங்களது சுதந்திரத்திற்கும், செயளுக்கும் தடையாக இருக்கும் நிகழ்கால சட்டங்களை நிர்மூலமாக்க வேண்டும் என்று நினைத்தனர்.இளைசக்தி ஒன்றல்ல இரண்டல்ல பலஆயிரம் இணைகிறபோது மடைதிறந்த வெள்ளம்போல் இவ்வியக்கம் ஜிசன்,மார்பக், எர்லான்சன், ஹைடல்பர்க், பெர்லின், என எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களுக்கு பாய்ந்தோடியது. 

      அரசின் கொள்கைக்கு எதிராக இம்மாணவர்சங்கங்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது. பொறுக்கமுடியாத அரசு ராஜதுரோக நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்ணாக பல்கலைகழகங்கள் இருக்கிறது என்று அன்றைய அரசு அறிவித்தது. மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

வியாழன், ஏப்ரல் 14, 2011

உலக இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்-2 (1815 - 1890)


                                                      2 தோற்றப் பின்னணி   

                       இளைஞர் இயக்கங்கள் உருவாவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன? எந்த இயக்கமும் தோன்றுவதற்கு அக்காலத்தின் சமூகப் பொருளாதார,  அரசியல் காரணிகள் அடிப்படையாக விளங்கும். இளைஞர் இயக்கங்களுக்கும் அதுவிதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளில் தலைமுறை இடைவெளியும்,  தீர்க்கமுடியாத வாழ்வாதார முரண்பாடுகளும் ஏற்பட்டபோது இளைஞர்இயக்கங்கள் உருவாகின. இந்த முரண்பாடுகளின் வழியே சுயஉணர்வு பெற்ற,  குறிப்பிட்ட வயதினர்,  நிகழ்கால சமூக அமைப்பை நிராகரித்து ஒன்று சேர்ந்து மாற்றம் காணும் பாதையைத் தேடியபோது இளைஞர் அமைப்புகள் தோன்றியது. 

          அதுவும் மாற்றங்களின் மகுடமாகத் திகழ்ந்த ஐரோப்பாவில்தான்  இவ்வமைப்புகள் முதன் முதலில் உருவாகத் தொடங்கின. அதற்கான சமூக அரசியல் பின்னணியின் களமாக பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் திகழ்ந்தது. இன்று நம்மால் அறியப்படுகிற,  நன்கு அமைப்பு ரீதியாத் திரட்டப்பட்ட இளைஞர் அமைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் ஐரோப்பாவில்    உருவாகியது.  இதற்கு ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இளைஞர்களுக்கான பிரச்சனைகள் உருவாகின. அப்பிரச் சனைகளுக்கான போராட்டங்கள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கின.
                         பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. மக்கள் தொகை வளர்ச்சி,  சராசரி வாழ்நாள் உயர்வு,  கிராமம்,  நகரம் என இடப்பெயர்வுகள்,  அரசியலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வேகமாகவும் பரவலாகவும் தோன்றின. 1750ல் 12.5 கோடியாக இருந்த மக்கள் தொகை 1800-ல் 20.8 கோடியாக உயர்ந்தது. 1750-ல் சராசரி வாழ்நாள் 30 முதல் 40 வரையிலிருந்து 1800-ல் 55வயதாக உயர்ந்தது. 1750-க்குப் பிறகு மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. பிரெஞ்சு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகியது. 
                  
                ஐரோப்பிய சமூகம் அதிவிரைவாக இக்காலத்தில் நிலப்பிரபுத்துவத்திலிருந்து தொழில்மய சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. கைவினைக்கூடங்கள் வணிக வர்த்தகத்தோடு இணைந்து தொழில் கூடங்களாக மாறியது. கிராமங்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்து நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வுகள் வேகமாக நடந்தேறியது. லாக்,  மான்டஸ்க்யூ,  ரூசோ,  போன்றவர் களின் எழுத்துக்கள் அன்றைய சமூக அபத்தங்களுக்கு சவால் விட்டன. 1776-ம் ஆண்டில் முடிவடைந்த அமெரிக்க விடுதலைப் போராட்டமும்,  1791-ல் வெளியிட்ட பிரெஞ்சு நாட்டின் மனித உரிமைப் பிரகடனமும் (குசநஉ னநஉடநசயவடிஅ டிக வாந சபைவள டிக அய) அரசியல் களத்தில் தேசிய வாதத்திற்கும்,  புரட்சிக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

                              இக்காலத்தில் பிரான்சில் தாராளவாதிகள் (டநநெசயடள) அடிப்படை வாதிகள் (சயனஉயடள) புரட்சியாளர்கள் என அரசியல் அரங்கில் அணிதிரட்சி நடைபெற்றது. பல பக்கங்களிலிருந்தும்  எழுச்சிகள் வீறுகொண்டு எழுந்தன. பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு சளி பிடிக்கும்  என்ற நிலை இருந்தது.
                              
                  வேகமாக மாறிவரும் சமூகத் தளத்திலும்,  அரசியல் தளத்திலும் இளைஞர்கள் தங்களுக்கான இருத்தலையும் எதிர்காலத்தையும்  தேடினர். எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் இளைஞர்களின் தேவைகளையும்,  அபிலாஷைகளையும்,  உணர்வுகளையும்   ஆக்ரோஷமான வடிவங்களில்  வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களையும் கட்டி இழுத்த இளம்வெர்தரின் துயரம்,  (ளடிசசடிற டிக லடிரபே எநசவாநச) என்ற நாவலை ஜெர்மனிய மொழியில் 1774-ம் ஆண்டு கெதே (ழுடிநவா) வெளியிட்டார். 

                  அப்போது கெதேவிற்கு வயது 24 மட்டுமே. அகமனதின் வேட்கைக்கும்,  எதார்த்த உலகின் அபத்தங்களுக்கும் நடுவில் தவிக்கும் இளைஞனை இந்நாவல் வெளிப்படுத்தியது.  இளமையின் துடிப்பு,  வாழ்வின் திகைப்பு,  காதலின் பித்து,  தனிமையின் துயரம் என உணர்ச்சி கொப்பளிக்க,  கற்பனை தெறிக்க ஐரோப்பிய இளைஞர்களை இந்நாவல் புயல் போல் புரட்டிப்போட்டது. இதே காலத்தில் பெரும் ஜெர்மானிய கவிஞர் சில்லர் (ளுநாடைடநச) எழுதிய வழிப்பறிக்காரர்கள் (கூந சுடிநெசள) என்ற நாடகம் இளைஞர்களின் கோபக்கனலை தீப்பற்றி எரியச்செய்தது. இந்நாடகத்தில் இரு சகோதரர்கள் எதிரெதிரான சமூகப்பிரிவுகளை கதாபாத்திரங்களாக எதிரொலித்தனர். ஒருவன் பணத்திற்கு அலைந்தான். செல்வச் சுருட்டலை நியாயப்படுத்தினான். மற்றவன் புரட்சிகரமான கருத்துக்களுடன் உடனடித் தீவுக்காக மாணவர்களையும்,  இளைஞர்களையும் செயலிலே இறங்க அறைகூவி அழைத்தான்.
                          நாடகமேடையில் இக்கதாபாத்திரங்களின் உரையாடல் இளைஞர்களின் தேவைகளையும்,  விருப்பங்களின் நியாயங்களையும் கட்டுமீறிய (எடிடநவே நஒயீசநளளடி) உணர்வுகளின் மூலமாக வெளிப்படுத்தியது. நாடக மேடையே ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்தின் அவலங்களை காட்சிப்படுத்தியது. மீட்சிக்கான கருத்துக்களையும் விவாதித்தது.சில்லரின் மற்றொரு நாடகம் வில்லியம் டெல்(றுடைடயைஅ கூநடட) இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது.
                             அரசியல்,  இலக்கியம்,  நாடகம் என பலதுறைகளில் இளமையின் தாக்கம் ஊடுவியது. மொசார்ட்(ஆடிணயசவ) இசைத்துறையில் மதசார்பற்ற இசையைப் பிரபலபடுத்தினான். இசையை அரண்மனைக் குள்ளிருந்தும்,  தேவாலயங்களுக்குள்ளிருந்தும் தெருவிற்கு கொண்டுவந்தான். இசை பற்றிய உயர்வர்க்க பாரம்பரிய விதிகளை ஆட்டம் காணச்செய்தான். தனது 35 வது வயதில் மரணம் அடைவதற்கு முன்பாக 600-க்கும் மேற்பட்ட இசைக் குறிப்புகளைத் தயார்செய்து உலகுக்குஅளித்து சாதனை படைத்தான். இவனே அன்றைய இளைஞர்களை ஆகர்ஷிக்கும்  இளம் நட்சத்திரமாக வலம் வந்தான்.

                சமூகத்தின் சகல துறைகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அனைத்து இளைஞர்களையும் விழிப்படையச் செய்தது. அரசியலில் பழமை வாதத்திற்கு எதிராகவும்,  நிறுவனப்படுத்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு எதிராகவும்,  பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் இளைஞர்கள் போராடினர். பல்கலைக்கழகத்தில் குவிந்த மாணவர்கள் அதிகாரிகளையும்,  காவல்துறையினரையும்,  நகரமக்களையும் எள்ளி நகையாடினர்.  அதிக சுதந்திரம் வேண்டும்.  பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்,  சங்கம் அமைத்துச் செயல்படும் உரிமை வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் நிரம்பினர். வீதிகளே விவாத மேடைகளாகவும். போராட்டக் களமாகவும், எதிர்கால சிந்தனைகளைக் தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது.
                       
                   பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் இப்படிப்பட்ட எழுச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டது.அதற்கு முன்னால் அதிககால இடைவெளியில் ஆங்காங்கே சில இளைஞர் கலகங்கள் நடைபெற்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1297-ம்ஆண்டில் புனித மத்தேயூ திருவிழாவின்போதும்,  1354-ல் மற்றொரு புனிதர் தினத்திலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,  நகர மக்களுக்கும் இடையில் கலவரம் வெடித்தது. வன்முறைத் தாக்குதல்கள்,  சொத்துக்கள் அழிப்பு,  உயிர்ச்சேதங்கள் என கடுமையான சேதாரங்கள்  இக்கலவரத்தில் நடந்தேறியது. 

                                  இக்கலவரத்தை டவுன் மற்றும் கவுன் கலவரம் (கூடிற யனே ழுடிற சடிவள) என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். நீண்ட அங்கி(ழுடிற)அணிந்த உயர்வர்க்க மாணவர்கள்  நகரத்தின் அடிமட்ட உழைப்பாளிகள் இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடே இந்த மோதல். மத்திய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இப்போராட்டங்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக நடந்தது.  பல குழுக்கள் உருவாகி இப்போராட்டங்களை நடத்தியது.  அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அமைப்பு ரீதியான இளைஞர் இயக்கங்கள் உருவாகி சமூக இயக்கங்களாகப் பரிணமித்தன. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1815-ல் வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது,  
                  
                            வரலாற்றில் புதிய  திருப்பத்தை ஏற்படுத்தியது. யுத்த முடிவில் ஏற்பட்ட வியன்னா ஒப்பந்தத்தால்  ஐரோப்பா மீண்டும் ஒருமுறை கூறுபோடப்பட்டது. தனிமனித உரிமை,  தேசப்பற்று,  பொதுமொழி,  கலாச்சாரப் பாரம்பரியம்,  தேசிய அரசு என்ற சிந்தனையும் செயல்வடிவங்களும் மேலோங்கியது. வளர்ந்து வந்த தொழில் முதலாளிகளுக்கு தங்களது லாபவேட்டைக்குப் பெரிய தேசமும்,  தேசீயஅரசும் தேவைப்பட்டது. இதனால் ஒன்றுபட்ட தேசத்திற்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. மறுபுறத்தில் தொழிலாளி வர்க்க அணிதிரட்டலும், அதன் சிந்தாந்தங்களும் அரசியல் களத்தில் செல்வாக்குப் பெறத்துவங்கியது. 1789-ல் பிரஞ்சு தேசிய சட்டமன்றத்தில் கட்சிகள் அமர்ந்திருந்ததை ஒட்டி அவர்களது கொள்கைகள் அடையாளப்படுத்தப்பட்டன. சபாநாயகரின் வலதுபுறம் பழமைவாதிகளும்,  நடுவில் தாராளவாதிகளும்,  இடது புறம் புரட்சியாளர்களும் அமர்ந் திருந்தனர்.
                   
                             பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இவற்றை வைத்தே அரசியல் இயக்கங்கள் வலது இடது என அடையாளப்படுத்தப்பட்டது.  தொழில் முதலாளிகளின் செல்வம் பலமடங்கு இக்காலத்தில் பெருகியது. மறுபுறத்தில் செல்வக் குவிப்பின் விளைவாக  வேலையின்மையும்,  வறுமையும்,  அதிகமாகியது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முறையில் பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகியது. தொழில்மய தீமைகள்,  ஊழல்,  சர்வாதிகாரம்,  வறுமை,  ஆகியன சமூகத்தை ஆட்சிசெய்ய ஆரம்பித்தது. இவற்றை எதிர்த்து கற்பனாவாத சோசலிசத்தை முன்வைத்த செயின்ட் சைமோன்,  பியூரியர்,  ராபர்ட் ஓவன் ஆகியோரின் கருத்துக்ளை  நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். மார்க்ஸ்,  ஏங்கல்ஸ் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் புதிய சிந்தனைப் போக்கையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. இளைஞர்களில் மேல்தட்டுவர்க்க இளைஞர்கள்,  உழைப்பாளிவர்க்க இளைஞர்கள் என இரு பிரிவுகளாக அணிதிரள ஆரம்பித்தனர். 
                  
                        இந்தப் பின்னணியில் 1848-ம் நடைபெற்ற தொழிலாளர்கள் எழுச்சியில் பிரான்சு,  ஜெர்மனி,  இத்தாலி,  அயர்லாந்து,  ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் மாணவர்களும்,  இளைஞர்களும் அதிக அளவில் பங்கெடுத்துக் கொண்டனர். மேற்கண்ட அரசியல் பொருளாதாரப் பின்னணிதான் ஐரோப்பாவில் பல நாடுகளில் இளைஞர் மாணவர் இயக்கங்கள் உருவாகி புதிய எழுச்சியையும்,  தாக்கத்தையும்,  மாற்றத்தையும் ஏற்படுத்தக் காரணமாகின. 

செவ்வாய், மார்ச் 08, 2011

பொதுத்தேர்தல் ! பொதுத்தேர்வு ! பொதுப்புத்தி !

                                                       ஏ.பாக்கியம்
                 என்ன..சார் பரிட்சை நடப்பது கூடவா இந்த தேர்தல் கமிஷனுக்கு தெரியாது? என்ற பொதுஜன பிரஜையின் புலம்பல்  காதில் விழுந்தது. உடனே எனது பொதுபுத்தியில் பொறிதட்டிவிட்டது. எங்கோ, ஏதோ வாசித்தது நினைவுக்கு வந்தது. தேடியபோது ஓராண்டுக்குமுன் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் வலை தளத்தில்  அவர் எழுதியவற்றில் கீழ்க்கண்ட  கருத்துக்கள் தென்பட்டது.
                 
           பரிட்சை நாள் அன்று காலை  அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள்  மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை  எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன.  முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
                 பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும். பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது. பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில்  பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.              
             
                பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள்  ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.
                   
             அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது. ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட  அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.      
           
            தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்சிகளும் தருகிறார்கள்.  மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது
 
          பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.
   
    இவையெல்ம் எங்கு நடக்கிறது தமிழகத்திலா? இந்தியாவிலா? என்று கேட்பவர்களிடம் ஆம் என்று கூறினால்  பலர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பலரின் மூச்சு நின்றுவிட நான் காரணமாக இருக்கப்போவது இல்லை. இவை அனைத்தும் தென்கொரியாவில் கல்லுரி நுழைவுத்தேர்வை ஒட்டி அந்த நாடு கடைபிடிக்கின்ற விதிகளாகும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற பரிட்சையை பற்றிய அக்கரையின் வெளிப்பாடுதான் மேற்கண்ட விதிமுறைகளாகும்.
    
           ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை ஐந்து மாநிலத்தின் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பின் தலைவிதியை தீர்மானிக்ககூடிய தேர்வுகளை 16 லட்சம் மாணவர்கள் எழுதத்தொடங்கிவிட்டனர். மாணவர்களின் எதிர்காலம் பற்றியோ, கல்விப்பற்றியோ தேர்தல் ஆணையத்திற்கு சட்டரீதியாக கவலைப்படவேண்டும் என்ற்  அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிட்சைப்பற்றிய பொதுபுத்தியே   ஆணையத்திற்கு இப்படித்தான் உள்ளது என்று  வெட்டவெளிச்சமாக்கிவிட்டது இந்த அறிவிப்புகள். இந்த பொதுபுத்தி ஒன்றும் தேர்தல் ஆணையத்தின் தனிச்சொத்தல்ல.  தேசத்தை ஆண்ட மற்றும் ஆள்வோரின் பொதுப்புத்தியும் இதுவாகத்தான் உள்ளது.
    
                                  தமிழகத்தில் தற்போது மாணவர்களின் தேர்வை கருதி தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று கேட்காத அரசியல் கட்சிகளே இல்லை. இது வரவேற்கப்படக்கூடிய அக்கரைதான். அதே நேரத்தில் இந்த அக்கரை மற்ற ஆண்டுகளில் தேர்வு நடக்கிறபோதும் எழக்கூடிய இடையூறுகளைப் பற்றியும் இந்த அரசியல் இயக்கங்கள் அக்கரை கொள்ள வேண்டுமென்பதுதான நமது அவா. உலககோப்பை கிரிக்கெட் போட்டியை தேர்வு காலத்தில் நடத்தவேண்டாம் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்தனர். ஆனால் ஆட்சியாளர்களோ இதைக்கண்டுகொள்ளவில்லை.  அரசியல் இயக்கங்களுக்கு அப்படி ஒரு விஷயம் நடப்பதாகவே தெரியவில்லை, அக்கரைப்படவில்லை. 
    
                       ஏற்கனவே நடைபெற்ற ஐ.பி.எல். விளையாட்டுப்போட்டியும்கூட இதே சர்ச்சைகளை சந்தித்தது. இங்கேயும் அந்த  பொதுப்புத்தி செயலற்றுபோனது என்பதைவிட எதிர்பதமாக செயல்பட்டிருக்கலாம். பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லை. கிரிகெட் ரசிகர்களில் கணிசமானவர்களுக்கு வாக்குரிமை உள்ளது, நடத்துவோரிடம் வாக்குகளை வாங்கும் பசை உள்ளது என்ற வகையில் பொதுப்புத்தி நடத்துவோருக்கு ஆதரவாக வேலைசெய்து இருக்கலாம்.  
                 
                     மேற்கண்ட விஷயஙகளையொட்டியே சில சந்தேகங்கள் எழவாய்ப்புள்ளது. தேர்தல் தேதியை மாற்றக்கோருவது மாணவர்களின் மீது இருக்கிற அக்கறை மட்டுமா? அல்லது தயாரிப்புக்கு போதிய அவகாசம் இல்லை என்ற தேர்தல் கவலையா? என்பதுதான் அந்த சந்தேகம். தமிழக முதல்வர் கலைஞர் தேர்தலை தள்ளிவைத்திடவேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் வாக்குகளை வாங்க அளித்து வந்த இலவசத்திட்டம் தடைபட்டுள்ளது என்ற கவலையே மேலோங்கியுள்ளது. இதைக்கூட செய்யவில்லை என்றால் கிடைக்கிறவாக்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறார். 
                                      ஏப்ரல் 13 பீடைதேதி பீடை நாள் என்று ஒரு ஸ்தல பிரமுகர் அதை நிந்தித்த போது நமது பொது புத்திக்கு மேலும் ஒரு பொறிதட்டியது. தள்ளிவை  என்ற கோரிக்க்க்கு பின்னால் ஏன் இதுகூட இருக்க கூடாது என்று. நமது மாநிலத்தின் அரசியல் இயக்கம் அனைத்தும் அத்தன் முற்போக்கானதா? என்ன? நாள்களையும் கோள்களையும் பார்த்துதானே கொள்கை முடிவெடுக்கின்றனர். மஞ்சள் துண்டின் மகிமை பற்றி பேசக்கூடியவர்கள் தானே இவர்கள். எண்கள் மீது நம்பிக்கை மற்றும் வளர்பிறை தேய்பிறை பார்த்து தான் காரியம் முடிக்கும் தன்மைகள் இந்த பெரும் அரசியல் பாசறைகளிடம் காணப்படுவதுதானே. 
                             
                      யேசுநாதரின் கடைசிவிருந்து வெள்ளிக்கிழமை என்பதால் அவர்களுக்கு அது கெட்டநாள். பழங்குடி நார்வே மக்கள் மற்றும் ஜெர்மனி மக்கள் வழிபட்ட தெய்வத்த் அவர்கள் கிறிஸ்த்துவத்தில் இணைந்து விட்டபிறகு அதை  பேயாக கருத்தினர். அந்த பேய் வெள்ளிக்கிழமைதோறும் 13பேர்களுக்குவிருந்து  வைத்து ஒருவரை கொன்றுவிடும் என்ற முடநம்பிக்கையால் இந்த கிழமையையும் இந்த நாளையும் வெறுத்தனர். கிறிஸ்த்துவர்களுக்கு ஞாயிற்றுக்கிழம்போல் யூதர்களுக்கு சனிக்கிழமைபோல் பேய்களுக்கு வெள்ளிக்கிழமை ஓய்வுநாள் என்ற முடநம்பிக்கையும்  உள்ளது.  இப்படியான காரணங்கள் இவர்களுக்கு அப்பாற்பட்டவையா என்ன? இந்த அக்கறை தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகிறது என்றால் இந்த் மூடப்புத்தியும் ஏன் காரணமாக இருக்க கூடாது?
    
               தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் படைத்தது, அதில் தலையிட முடியாது என்பது வெளிப்படைக்கு உண்மைதான். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டி பற்றி வந்த கருத்துக்களுக்கும் அது சுதந்திரமான அமைப்பு, அதில் தலையிட முடியாது என்றே விளக்கம் கொடுக்கப்பட்டதை அனைவரும் அறிவர். இதுகூடவா தெரியாது என்று கேட்ட பொதுஜனத்தின் பொதுப்புத்தி இவர்களுக்கு உறைப்பதைவிட  சூதாட்டவெறியும் கிரிக்கெட் ரசிகனின் பாக்கெட் மனியும் மட்டுமே இந்த சுதந்திர அமைப்பு என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்துகிடக்கிறது
        
                தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று அறிவித்துவிட்ட தேர்தல் ஆணையம், கல்விநிலையம் அருகாமையில் பிரச்சாரம் கூடாது என பல ஆலோசனைகளை வாரி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையத்தின் பொதுப்புத்திக்கு மேலும் சவால் விடுவதாக உள்ளது. தேர்வுக்கு படிப்பவர்கள் வீடுகளிலிருந்துதான் படிப்பார்கள் என்பதும், கூச்சல் நிறைந்த பிரச்சாரங்கள் எங்கே நடக்கும் என்பதையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கும்வரை ஆளும் கட்சியால் பல இடங்களில் நலத்திட்டங்கள் என்று அறிவித்து பொருட்கள் வழங்கப்பட்டன.  இதற்காக தெருவெல்லாம் ஒலிப்பான்கள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது அக்கறைப்படும் ஆள்வோர்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கும்வரை பொதுப்புத்தி வேலை செய்யவில்லை. அவர்களின் காதுகளுக்கும் மாணவர்களின் குரல் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் பெரும்  இயக்கத்தலைவர்களின் பொதுப்புத்தி இப்படி இருந்தால் பொதுஜனங்கன் சிலரின் பொதுப்புத்தியை கேள்விக்கு உள்ளாக்குவது கடினமான விஷயமல்லவா?
    
                   பல இடங்களில் மதம்சார்ந்த விழாக்களும், கேளிக்கை நிகழ்வுகளும், திருமணநிகழ்வுகளும் ஊரெல்லாம் அதிரும் வகையில் ஒலி எழுப்புகின்றனவாக இருக்கிறது. இவர்களிடம் தேர்வு காலங்கள் என்று சொன்னால் தெய்வவிரோதம் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.இங்கே பொதுப்புத்தியை மூட்டை கட்டி வைக்கவேண்டியுள்ளது.
                       
                     பேருந்து பயணங்களில் தனது அலைபேசியில் குத்துப்பாட்டை அலறவிட்டு, ஹெட்போனை பயன்படுத்தாமல் சகபயணிகளின் அமைதியை கெடுப்பதும்,  குட்டிததுக்கம் நுணிப்புல்  வாசிப்பைகூட கெடுத்துவிட், தான்மட்டும் குறட்டைவிட்டு துங்குபவரின்  பொதுபுத்திக்கும்  தேர்வுகாலத்தில் தேர்தல் நடத்துகிற பொதுபுத்திக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?
                                 
                        படிக்கிற மற்றும் தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் என்னதான் ஒலி, சத்தம், கூச்சல் உன்னை சுற்றி இருந்தாலும், உனது கவனம் படிப்பில் இருக்கவேண்டும் என்று ஆசிரியாகள் உரக்க முழங்குவார்கள். சப்தங்களுக்கு இடையே படிக்கும் சிரமம் மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். குடும்பத்தில் கூட அம்மாவிற்கு மகாராணி தொடர் பார்க்காவிட்டால் துக்கம் வராது, அப்பாவிற்கு கிரிகெட் பார்க்கவில்லை என்றார் பொழுதுவிடியாது, பரிட்சை எழுதும் மாணவர்களின் உடன்பிறப்புகளுக்கோ எஸ்எஸ் மியூசிக் மற்றும் இந்திபாடல் அலைவரிசைகளை அலறவிடாமல் ஆர்வம் குறையாது, நாங்கள் எல்லாம் படித்துமுடித்துவிட்டோம், நீ இப்போது படிக்கிறாய்? அதைபோய்ப் பார் என்று கூறும் அளவிற்குதான் பெற்றோரின்  பொதுபுத்தி  உள்ளது.
                         
                           மதிப்பெண்கள் மட்டுமே எதிர்கால இடத்தை நிச்சயிக்கும் என்று சமூகம் மாறிவிட்டது. அல்லது பணம் கொழிக்கவேண்டும். இந்த சூழலில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் பிள்ளைகள் உறவு பாசவலையை கடந்து  சிறைவார்டன், சிறைக்கைதி என்று உறவு ஆட்சிசெய்கிறது. இதற்கிடையில் மாணவர்கள் மன அழுத்தத்துடன், பதட்டத்துடன் படிக்கவேண்டும், சிறுபிழைகள், மறதிகள் என ஒவ்வொரு அசைவும் அவர்களை அவதிக்கு உள்ளாக்குகின்றன. விளைவுகள் விபரீதமாக மாறிவருகின்றது. இதற்கான சூழலை மாற்றவதற்கு நீண்டகாலமாகலாம். ஆனால் மாணவர்களின் தேர்தல் காலத்திற்கான சூழலை கணக்கிலெடுக்க தேவையான  பொதுப்புத்திக்கு  என்ன தேவை? நாட்டை வளர்ப்போம் என்று பேசுவதைவிடுத்து  முடிவெடுப்பவர்களிடம் பொதுபுத்தியை வளர்ப்போம் என்பதேஇன்றுபொருத்தமாகஇருக்கலாம்.                                                                        ஏ.பாக்கியம்                                                                                             

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...