Pages

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

5.செயலே சிறந்த பிரச்சாரம்


        1833-ம் ஆண்டு ஆஸ்திரிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இளம்இத்தாலியிலஉறுப்பினரானகண்டுபிடிக்கப்பட்டால்உடனடியாகமரணதண்டனை நிறைவேற்றப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த அளவிற்கு இளம் இத்தாலியின் செயல்பாடு ஆஸ்திரிய நாட்டு ஆட்சிபீடத்தை ஆட்டம்காண செய்தது. இந்த அமைப்பின் செயல்பாடு இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இளம் இத்தாலி என்ற இவ்வமைப்பு உருவாகிய காலத்தில் ஐரோப்பாவை போர்களும்போராட்டங்களும்கலகங்களும்தான்ஆட்சிசெய்துகொண்டிருந்தன. 

    அப்போது இத்தாலி பிரான்சிடமும், ஆஸ்திரியாவிடமும் பலகூறுகளாக  பிளவுபட்டுக்கிடந்தது. 1831-ம் ஆண்டு மார்செயில் என்ற இடத்தில் இளம் இத்தாலி என்ற அமைப்பை ஜோசப்மாசினி (ழுரளளநயீந அயண) என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் ஆரம்பித்தான். மாசினி  ஒரு இளைஞன்  மட்டுமல்ல கவிஞன்,எழுத்தாளன்,எழுச்சிமிகுபேச்சாளன்,அமைப்பாளன்,களம்கண்டபடைநடத்தும் தளபதி என பன்முகத்தன்மை கொண்டவன். 

    1821-முதல் கார்போரி என்ற ரகசிய இயக்கத்துடன் இணைந்து இத்தாலி விடுதலைக்காக போராடினான். அவ்வியக்கத்தில் இருந்தபோது 1830-ல் அவன் கைது செய்யப்பட்டு கடற்கரையின் தனிமை சிறையில்  அடைக்கப்பட்டான். பரந்த வானமும் விரிந்த கடலும் , இரவும்,பகலும் மட்டுமே அவனுடன் உறவாடின. அவனது மூளையோ எதிர்கால இத்தாலியை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இனி கார்போரி இயக்கத்தினை நம்பி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தான் மாசினி. இத்தாலிய இளைஞர்களின் உள்ள குமுறல்களுக்கு உருவம் கொடுக்க நினைத்தான். 

   ஆறு மாதம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு குக்கிராமத்தில்தா வாழவேண்டும் என்று அரசு கட்டளையிட்டதஇத்தாலியின் உருவாக்கத்திற்கும் எதிர்கால கனவிற்கும்  இக்கிராம வாழ்க்கை உதவாது என முடிவிற்கு வந்தான்.வேறுஎங்கும் குடியிருக்க கூடாது என்ற அரசின் எதேச்சதிகார உத்திரவால்  ஸ்விட்சர்லாந்து நாட்டில் குடியேறினான் 

          மாசினியின்  வாழ்விடத்திற்கு வேலி அமைக்கலாம் ஆனால் சிந்தனைக்கும் விடுதலை வேட்கைக்கும் வேலியிட முடியுமா?அந்த நாட்டிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராடிக்கொண்டிருந்தனர். இதற்கு மாசினி உதவி செய்ததால் அங்கிருந்து வெளிறேவேண்டும் என்று உத்தரவிட்டது ஸ்விட்சர்லாந்து அரசு.நாடுகடத்தப்பட்ட அவன் பிரான்சின் மார்செயில் சென்று குடிபுகுந்து அங்குள்ள இத்தாலி இளைஞர்களை திரட்டித்தான் இளம் இத்தாலி என்ற அமைப்பை உருவாக்கி களத்தில் இறக்கினான். 

    1848-ம் ஆண்டு மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிடும்வரை ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டவனாக இளைஞர்களை ஆகர்ஷிக்கக்கூடியவனாக மாசினியும், அவனது இளம்இத்தாலி என்ற இளைஞர் அமைப்பும் இருந்தது. குறிப்பாக அன்றைய நடுத்தரவர்க்க சிந்தனை ஓட்டத்தின் பிரதிநிதியாக மாசினியும் அவனது இளம் இத்தாலி என்ற அமைப்பும் இருந்தன.
   ஒன்றுபட்ட இத்தாலி, அதுவும்  சுதந்திர குடியராக இருக்க வேண்டும் என்பவையே இளம் இத்தாலியின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட இத்தாலி ஒரு புவியியல் மாயை என்று அன்றைய ஆஸ்திரிய அமைச்சர் மெட்டர்னிச் ஏளனம் செய்தான் ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது. இளம் இத்தாலியர்கள் அதை உருவாக்கி காட்டுவார்கள் என்று பதிலடி கொடுத்தான் மாசினி. 

    1833-ம் ஆண்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் இளம்இத்தாலிய அமைப்பு உருவாகி போராட்டக்களத்தில் குதித்தது. அப்போது அச்சங்கத்தில் 60000-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். மாசினியின் கவித்துவம் மிக்க எழுத்தும் , உணர்ச்சிபொங்கும் பேச்சும் எழுச்சியூட்டும் செயலும் எண்ணற்ற இளைஞர்களை ஈர்த்தது. 

ஓ.. இளைஞர்களே,  
 மலைகளுக்குச் செல்லுங்கள்   
ஆலைகளுக்கும் ,
 வயல்வெளிகளுக்கும் 
செல்லுங்கள்   
அவர்களுடன் உணவருந்துங்கள்,  
அவர்களது உரிமைகளைப்பற்றி பேசுங்கள்   
அவர்கள் மீதான, எல்லையற்ற 
அடக்குமுறைகளை 
உணரவையுங்கள். 

என்று இளைஞர்களை ஈர்க்கும் முழக்கங்களை எழுப்பினார். தியாகிகளின் குருதி  நீராய் பெருகி  பெருக்கெடுக்கும்போது,  கருத்துக்கள்,  துரிதமாய் வளர்கிறதுஎன தியாகத்தின் அவசியத்தையும், அதன் வலிமையையும் வலியுறுத்தினார்.

 ஓ.. மக்களே,  
 எழுச்சிகளுக்கு இளைஞர்களை
 தலைமையேற்க செய்யுங்கள்,   
அவர்களது உள்ளங்களில் 
உறைந்து கிடக்கும் சக்தியை
நீங்கள் அறியவில்லை,   
இளைஞர்களின் குரலுக்கு 
மக்களிடையே  மந்திர சக்தி   போன்ற மதிப்பிருக்கிறது

என்று அவன் விடுத்த அறைகூவல் இத்தாலி இளைஞர்களை களத்தில் இறக்கியது.மக்கள் செவிமடுத்தனர்.மன்னன் செய்வதறியாது திகைத்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...