Pages

வியாழன், ஏப்ரல் 14, 2011

உலக இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்-2 (1815 - 1890)


                                                      2 தோற்றப் பின்னணி   

                       இளைஞர் இயக்கங்கள் உருவாவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன? எந்த இயக்கமும் தோன்றுவதற்கு அக்காலத்தின் சமூகப் பொருளாதார,  அரசியல் காரணிகள் அடிப்படையாக விளங்கும். இளைஞர் இயக்கங்களுக்கும் அதுவிதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளில் தலைமுறை இடைவெளியும்,  தீர்க்கமுடியாத வாழ்வாதார முரண்பாடுகளும் ஏற்பட்டபோது இளைஞர்இயக்கங்கள் உருவாகின. இந்த முரண்பாடுகளின் வழியே சுயஉணர்வு பெற்ற,  குறிப்பிட்ட வயதினர்,  நிகழ்கால சமூக அமைப்பை நிராகரித்து ஒன்று சேர்ந்து மாற்றம் காணும் பாதையைத் தேடியபோது இளைஞர் அமைப்புகள் தோன்றியது. 

          அதுவும் மாற்றங்களின் மகுடமாகத் திகழ்ந்த ஐரோப்பாவில்தான்  இவ்வமைப்புகள் முதன் முதலில் உருவாகத் தொடங்கின. அதற்கான சமூக அரசியல் பின்னணியின் களமாக பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் திகழ்ந்தது. இன்று நம்மால் அறியப்படுகிற,  நன்கு அமைப்பு ரீதியாத் திரட்டப்பட்ட இளைஞர் அமைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் ஐரோப்பாவில்    உருவாகியது.  இதற்கு ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இளைஞர்களுக்கான பிரச்சனைகள் உருவாகின. அப்பிரச் சனைகளுக்கான போராட்டங்கள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கின.
                         பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. மக்கள் தொகை வளர்ச்சி,  சராசரி வாழ்நாள் உயர்வு,  கிராமம்,  நகரம் என இடப்பெயர்வுகள்,  அரசியலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வேகமாகவும் பரவலாகவும் தோன்றின. 1750ல் 12.5 கோடியாக இருந்த மக்கள் தொகை 1800-ல் 20.8 கோடியாக உயர்ந்தது. 1750-ல் சராசரி வாழ்நாள் 30 முதல் 40 வரையிலிருந்து 1800-ல் 55வயதாக உயர்ந்தது. 1750-க்குப் பிறகு மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. பிரெஞ்சு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகியது. 
                  
                ஐரோப்பிய சமூகம் அதிவிரைவாக இக்காலத்தில் நிலப்பிரபுத்துவத்திலிருந்து தொழில்மய சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. கைவினைக்கூடங்கள் வணிக வர்த்தகத்தோடு இணைந்து தொழில் கூடங்களாக மாறியது. கிராமங்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்து நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வுகள் வேகமாக நடந்தேறியது. லாக்,  மான்டஸ்க்யூ,  ரூசோ,  போன்றவர் களின் எழுத்துக்கள் அன்றைய சமூக அபத்தங்களுக்கு சவால் விட்டன. 1776-ம் ஆண்டில் முடிவடைந்த அமெரிக்க விடுதலைப் போராட்டமும்,  1791-ல் வெளியிட்ட பிரெஞ்சு நாட்டின் மனித உரிமைப் பிரகடனமும் (குசநஉ னநஉடநசயவடிஅ டிக வாந சபைவள டிக அய) அரசியல் களத்தில் தேசிய வாதத்திற்கும்,  புரட்சிக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

                              இக்காலத்தில் பிரான்சில் தாராளவாதிகள் (டநநெசயடள) அடிப்படை வாதிகள் (சயனஉயடள) புரட்சியாளர்கள் என அரசியல் அரங்கில் அணிதிரட்சி நடைபெற்றது. பல பக்கங்களிலிருந்தும்  எழுச்சிகள் வீறுகொண்டு எழுந்தன. பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு சளி பிடிக்கும்  என்ற நிலை இருந்தது.
                              
                  வேகமாக மாறிவரும் சமூகத் தளத்திலும்,  அரசியல் தளத்திலும் இளைஞர்கள் தங்களுக்கான இருத்தலையும் எதிர்காலத்தையும்  தேடினர். எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் இளைஞர்களின் தேவைகளையும்,  அபிலாஷைகளையும்,  உணர்வுகளையும்   ஆக்ரோஷமான வடிவங்களில்  வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களையும் கட்டி இழுத்த இளம்வெர்தரின் துயரம்,  (ளடிசசடிற டிக லடிரபே எநசவாநச) என்ற நாவலை ஜெர்மனிய மொழியில் 1774-ம் ஆண்டு கெதே (ழுடிநவா) வெளியிட்டார். 

                  அப்போது கெதேவிற்கு வயது 24 மட்டுமே. அகமனதின் வேட்கைக்கும்,  எதார்த்த உலகின் அபத்தங்களுக்கும் நடுவில் தவிக்கும் இளைஞனை இந்நாவல் வெளிப்படுத்தியது.  இளமையின் துடிப்பு,  வாழ்வின் திகைப்பு,  காதலின் பித்து,  தனிமையின் துயரம் என உணர்ச்சி கொப்பளிக்க,  கற்பனை தெறிக்க ஐரோப்பிய இளைஞர்களை இந்நாவல் புயல் போல் புரட்டிப்போட்டது. இதே காலத்தில் பெரும் ஜெர்மானிய கவிஞர் சில்லர் (ளுநாடைடநச) எழுதிய வழிப்பறிக்காரர்கள் (கூந சுடிநெசள) என்ற நாடகம் இளைஞர்களின் கோபக்கனலை தீப்பற்றி எரியச்செய்தது. இந்நாடகத்தில் இரு சகோதரர்கள் எதிரெதிரான சமூகப்பிரிவுகளை கதாபாத்திரங்களாக எதிரொலித்தனர். ஒருவன் பணத்திற்கு அலைந்தான். செல்வச் சுருட்டலை நியாயப்படுத்தினான். மற்றவன் புரட்சிகரமான கருத்துக்களுடன் உடனடித் தீவுக்காக மாணவர்களையும்,  இளைஞர்களையும் செயலிலே இறங்க அறைகூவி அழைத்தான்.
                          நாடகமேடையில் இக்கதாபாத்திரங்களின் உரையாடல் இளைஞர்களின் தேவைகளையும்,  விருப்பங்களின் நியாயங்களையும் கட்டுமீறிய (எடிடநவே நஒயீசநளளடி) உணர்வுகளின் மூலமாக வெளிப்படுத்தியது. நாடக மேடையே ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்தின் அவலங்களை காட்சிப்படுத்தியது. மீட்சிக்கான கருத்துக்களையும் விவாதித்தது.சில்லரின் மற்றொரு நாடகம் வில்லியம் டெல்(றுடைடயைஅ கூநடட) இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது.
                             அரசியல்,  இலக்கியம்,  நாடகம் என பலதுறைகளில் இளமையின் தாக்கம் ஊடுவியது. மொசார்ட்(ஆடிணயசவ) இசைத்துறையில் மதசார்பற்ற இசையைப் பிரபலபடுத்தினான். இசையை அரண்மனைக் குள்ளிருந்தும்,  தேவாலயங்களுக்குள்ளிருந்தும் தெருவிற்கு கொண்டுவந்தான். இசை பற்றிய உயர்வர்க்க பாரம்பரிய விதிகளை ஆட்டம் காணச்செய்தான். தனது 35 வது வயதில் மரணம் அடைவதற்கு முன்பாக 600-க்கும் மேற்பட்ட இசைக் குறிப்புகளைத் தயார்செய்து உலகுக்குஅளித்து சாதனை படைத்தான். இவனே அன்றைய இளைஞர்களை ஆகர்ஷிக்கும்  இளம் நட்சத்திரமாக வலம் வந்தான்.

                சமூகத்தின் சகல துறைகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அனைத்து இளைஞர்களையும் விழிப்படையச் செய்தது. அரசியலில் பழமை வாதத்திற்கு எதிராகவும்,  நிறுவனப்படுத்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு எதிராகவும்,  பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் இளைஞர்கள் போராடினர். பல்கலைக்கழகத்தில் குவிந்த மாணவர்கள் அதிகாரிகளையும்,  காவல்துறையினரையும்,  நகரமக்களையும் எள்ளி நகையாடினர்.  அதிக சுதந்திரம் வேண்டும்.  பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்,  சங்கம் அமைத்துச் செயல்படும் உரிமை வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் நிரம்பினர். வீதிகளே விவாத மேடைகளாகவும். போராட்டக் களமாகவும், எதிர்கால சிந்தனைகளைக் தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது.
                       
                   பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் இப்படிப்பட்ட எழுச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டது.அதற்கு முன்னால் அதிககால இடைவெளியில் ஆங்காங்கே சில இளைஞர் கலகங்கள் நடைபெற்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1297-ம்ஆண்டில் புனித மத்தேயூ திருவிழாவின்போதும்,  1354-ல் மற்றொரு புனிதர் தினத்திலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,  நகர மக்களுக்கும் இடையில் கலவரம் வெடித்தது. வன்முறைத் தாக்குதல்கள்,  சொத்துக்கள் அழிப்பு,  உயிர்ச்சேதங்கள் என கடுமையான சேதாரங்கள்  இக்கலவரத்தில் நடந்தேறியது. 

                                  இக்கலவரத்தை டவுன் மற்றும் கவுன் கலவரம் (கூடிற யனே ழுடிற சடிவள) என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். நீண்ட அங்கி(ழுடிற)அணிந்த உயர்வர்க்க மாணவர்கள்  நகரத்தின் அடிமட்ட உழைப்பாளிகள் இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடே இந்த மோதல். மத்திய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இப்போராட்டங்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக நடந்தது.  பல குழுக்கள் உருவாகி இப்போராட்டங்களை நடத்தியது.  அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அமைப்பு ரீதியான இளைஞர் இயக்கங்கள் உருவாகி சமூக இயக்கங்களாகப் பரிணமித்தன. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1815-ல் வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது,  
                  
                            வரலாற்றில் புதிய  திருப்பத்தை ஏற்படுத்தியது. யுத்த முடிவில் ஏற்பட்ட வியன்னா ஒப்பந்தத்தால்  ஐரோப்பா மீண்டும் ஒருமுறை கூறுபோடப்பட்டது. தனிமனித உரிமை,  தேசப்பற்று,  பொதுமொழி,  கலாச்சாரப் பாரம்பரியம்,  தேசிய அரசு என்ற சிந்தனையும் செயல்வடிவங்களும் மேலோங்கியது. வளர்ந்து வந்த தொழில் முதலாளிகளுக்கு தங்களது லாபவேட்டைக்குப் பெரிய தேசமும்,  தேசீயஅரசும் தேவைப்பட்டது. இதனால் ஒன்றுபட்ட தேசத்திற்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. மறுபுறத்தில் தொழிலாளி வர்க்க அணிதிரட்டலும், அதன் சிந்தாந்தங்களும் அரசியல் களத்தில் செல்வாக்குப் பெறத்துவங்கியது. 1789-ல் பிரஞ்சு தேசிய சட்டமன்றத்தில் கட்சிகள் அமர்ந்திருந்ததை ஒட்டி அவர்களது கொள்கைகள் அடையாளப்படுத்தப்பட்டன. சபாநாயகரின் வலதுபுறம் பழமைவாதிகளும்,  நடுவில் தாராளவாதிகளும்,  இடது புறம் புரட்சியாளர்களும் அமர்ந் திருந்தனர்.
                   
                             பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இவற்றை வைத்தே அரசியல் இயக்கங்கள் வலது இடது என அடையாளப்படுத்தப்பட்டது.  தொழில் முதலாளிகளின் செல்வம் பலமடங்கு இக்காலத்தில் பெருகியது. மறுபுறத்தில் செல்வக் குவிப்பின் விளைவாக  வேலையின்மையும்,  வறுமையும்,  அதிகமாகியது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முறையில் பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகியது. தொழில்மய தீமைகள்,  ஊழல்,  சர்வாதிகாரம்,  வறுமை,  ஆகியன சமூகத்தை ஆட்சிசெய்ய ஆரம்பித்தது. இவற்றை எதிர்த்து கற்பனாவாத சோசலிசத்தை முன்வைத்த செயின்ட் சைமோன்,  பியூரியர்,  ராபர்ட் ஓவன் ஆகியோரின் கருத்துக்ளை  நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். மார்க்ஸ்,  ஏங்கல்ஸ் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் புதிய சிந்தனைப் போக்கையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. இளைஞர்களில் மேல்தட்டுவர்க்க இளைஞர்கள்,  உழைப்பாளிவர்க்க இளைஞர்கள் என இரு பிரிவுகளாக அணிதிரள ஆரம்பித்தனர். 
                  
                        இந்தப் பின்னணியில் 1848-ம் நடைபெற்ற தொழிலாளர்கள் எழுச்சியில் பிரான்சு,  ஜெர்மனி,  இத்தாலி,  அயர்லாந்து,  ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் மாணவர்களும்,  இளைஞர்களும் அதிக அளவில் பங்கெடுத்துக் கொண்டனர். மேற்கண்ட அரசியல் பொருளாதாரப் பின்னணிதான் ஐரோப்பாவில் பல நாடுகளில் இளைஞர் மாணவர் இயக்கங்கள் உருவாகி புதிய எழுச்சியையும்,  தாக்கத்தையும்,  மாற்றத்தையும் ஏற்படுத்தக் காரணமாகின. 

1 கருத்து:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...