Pages

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

3.உலைக்களங்களில் இளம் ஜூவாலைகள்

                  ற்ற நாடுகளைவிட ஜெர்மனியில் இளைஞர்களுக்கும்.அடுத்த தலைமுறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி வருகின்றனர்.இதற்கான காரணத்தை தேடிய சமூக அறிஞர்கள் ஜெர்மானியில் கலகங்களும் எழுச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வந்ததை கண்டுணர்ந்தனர்.இதுதான் இளைஞர்கள் மீது அந்நாடு  தொடர்ந்து கவனம் செலுத்த காரணம் என்ற முடிவுக்கு வந்தனர். 

                    இளைஞர் இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நாடுகளில் ஜெர்மனி, பிரதானமானது. 1770-ம் ஆண்டுகளிலேயே அன்றைய அரசுக்கு எதிராக இளைஞர்கள் மலை ஏறும் போராட்டங்களை துவக்கினர். மலை ஏறியவர்கள் இறங்வில்லை.அவர்களின் போராட்டத்தை ஆதிரித்து நகரங்களில் இயக்கம் நடைபெற்றது. இப்போராட்டங்கள் பல ஆண்டுகள் நீடித்தது. அதைத்தொடர்ந்து 1815- ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் உரிமைகளை உரிய முறையில் பெறாமல் விட்டதற்கு தங்களது முன்னோர்களும்.ஆளுவோர்களும் தான் காரணம் என்று  தாராளவாத இளைஞர் பிவுகளும் , இளம் ஹெகலியவாதிகளும் கடுமையாக சாடினர்.

                  இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினர்.ஜெர்மணி முப்பத்தி எட்டுக்கும்மேற்பட்ட பகுதிகளாக பிரிந்துகிடந்து.பிரெஞ்சு,இத்தாலி ஆஸ்திரிய நாடுகளுக்கு பல பகுதிகள் அடிமையாக இருந்தன. ஏனவே ஒன்றுபட்ட ஜெர்மனி என்ற கோஷம் முன்னுக்கு வந்தது. 1871-ம் ஆண்டுகளில் தான் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானது என்றாலும் இதற்கான போராட்டம் 1815-லேயே துவங்கிவிட்டது. 

                  இப்போராட்டத்தின் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும்  முன்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் இருந்தனர்.ஜெர்மானிய தேசிய உருவாக்கத்தை யொட்டியே இளைஞர் மாணவர்கள்  எழுச்சிகளும் இயக்கங்களும் தோன்றின. 1815-ல் ஜீனா(துநயே) என்ற பல்கலைகழகத்தின்  மாணவர்கள் மாணவர் சங்கம் (ளுவரனநவே ஹளளடிஉயைவடி) என்ற அமைப்பை முதன் முதலாக தொடங்கினர். 

                     இதுதான் வரலாற்றில் முதல் மாணவர் அமைப்பாககுறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பல்கலைகழகத்தில்தான் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளான கெதே, சில்லர் போன்ற பல அறிஞர்கள் பேராசிரியர்களாக பணியாற்றினர். இந்த மாணவர் சங்கத்தினர் ஜெர்மானிய ஒற்றுமை , ஜனநாயகம், சுதந்திரம் , ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தங்களது போராட்டங்களை நடத்தினர்.     

                 எங்களது சுதந்திரத்தை யாரும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை.     அப்படி அத்துமீறி செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நியாயமானதே   என்று பிரகடனப்படுத்தினார்கள்.

            தங்களது சுதந்திரத்திற்கும், செயளுக்கும் தடையாக இருக்கும் நிகழ்கால சட்டங்களை நிர்மூலமாக்க வேண்டும் என்று நினைத்தனர்.இளைசக்தி ஒன்றல்ல இரண்டல்ல பலஆயிரம் இணைகிறபோது மடைதிறந்த வெள்ளம்போல் இவ்வியக்கம் ஜிசன்,மார்பக், எர்லான்சன், ஹைடல்பர்க், பெர்லின், என எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களுக்கு பாய்ந்தோடியது. 

      அரசின் கொள்கைக்கு எதிராக இம்மாணவர்சங்கங்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது. பொறுக்கமுடியாத அரசு ராஜதுரோக நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்ணாக பல்கலைகழகங்கள் இருக்கிறது என்று அன்றைய அரசு அறிவித்தது. மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...