வியாழன், நவம்பர் 05, 2015
திங்கள், நவம்பர் 02, 2015
சென்னையின் மறுபக்கம்; “பெண்ட கழட்டுவதில்” பெஸ்ட் சென்னை மாநகராட்சி.
சென்னை வாசிகள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை இது. சண்டைவந்து விட்டால் பெண்ட கழட்டி விடுவேன் என்பார்கள். சவடால்விடும்போதும் இந்த வார்த்தை சரளமாக வந்து விழும். அதிமாக வேலைவாங்கி விட்டால் பெண்ட நிமித்தி விட்டான் என்பார்கள். இது அதிகமாக நடக்கிறதோ இல்லையோ? சென்னை மாகராட்சி சாலைகள் பலரின் பெண்ட கழட்டும் பணிகளை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது. இந்த பணியைதான் 93 சதம் பணிகள் முடிந்து விட்டதாக மாநகராட்சி அறிக்கை தம்பட்டம் அடிக்கிறதுபோலும்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பெண் மருத்துவரிடம் சென்றபோது முதுகுதண்டு இடம்மாறி இருப்பதாக கூறினார். நான் தினசரி வேலைக்கு ஆட்டோவில் சென்று வருவதுதான் காரணம் என்றார்.மிகவும் மோசமான சாலைகளாக உள்ளது.அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். அதுவரை எனக்கு எனது முதுகுதண்டு பாதிப்பிற்கு சாலைகள்தான் காரணம் என்று தெரியாது என்கிறார்.
சென்னையில் உள்ள ஒரு நரம்பியல் மருத்துவர் தன்னிடம் முதுகுதண்டு, இடுப்பு வலிக்காக வருகிற இளம்நோயாளிகளிடம் இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறுவதாக தெரிவிக்கிறார்.இதற்கு மிகமோசமான சாலைகள்தான் காரணம். பொதுபோக்குவரத்து இல்லாதபோது இருசக்கரம்தான் வாழ்விற்கு அடிப்படையாக உள்ளது.
ஊனமாக்குவதிலும் உயிர்பறிப்பதிலும் சென்னை மாநகராட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. சென்னையில் நடைபெறும் விபத்துக்ளில் 40 சதம் இருசக்கர வாகம் தொடர்பானது. இதற்கு வேகத்தடை , மேடு பள்ளம், முக்கிய காரணம்.
சென்னையில் உள்ள மருத்துவ மனைகள் தினசரி 100 முதல் 125 பேர்கள்வரை சாலை விபத்தால் தலைக்காயம் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவை அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்பதையும் தெரிவிக்கின்றனர்.
சாலைவிபத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று செல்லும் 55 முதல் 60 சதம் நோயாளிகள் முழுமையாக குணமடைவதில்லை என சென்னை பொதுமருத்துவமனை நரம்பியல் மருத்துவர் கூறுகிறார்.
மரணசாலைகள் போட்டியில் சென்னை சாலைகள் இரண்டாவது இடத்தையும், விபத்தில் முதல் இடத்ததையும் பிடித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய்யம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. தேசிய குற்றவியல் பதிவுத்துறை கணக்குபடி 2012-ல் சென்னையில் 9663 விபத்துக்களும் 1401 மரணங்களும் நிகழ்ந்துள்ளது. 2014--ம் ஆண்டு 9465 விபத்துக்கள் நடைபெற்றுறுள்ளது. சவக்குழிக்கு மாற்றாக சென்னை சாலைகள் உள்ளன.
93 சதம் பணிகள் நிறைவடைந்ததோ இல்லையோ 93 சதம் சாலைகள் வெயில் காலங்களில்கூட காணமுடியாது. மழைகாலங்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை(31.10.2015) பெய்த மழை அடைமழையோ அசாதாரண மழையோ அல்ல அது அற்பமழைதான். ஆனாலும் 93 சதம் சாலைகள் மூழ்கிவிட்டன. அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தேங்கும் மழைநீருக்கு சொற்பமாக பெய்தமழையை திட்டித்தீர்க்கின்றனர். சென்னை வானிலை மைய்யம் இது அற்பமழைதான் என்கிறது. .( Chennai Corporation Blames Rain
Intensity for Flooding; Met Dept Says 'This Was Nothing'. The new IE.1.11.2015)
சென்னை மாநகராட்சி 353.94 கி.மீ நீளமுள்ள 1160 பேருந்து செல்லும் சாலைகளை பராமரிக்கின்றது. 1292.54 கி.மீ சிமென்ட் சாலைகள் உட்பட மொத்தம் 5563.06 கி.மீ நீளமுள்ள உட்புற சாலைகளை பராமரிக்கின்றனர். இவை தவிர புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் 1292.54 கி,மீ.நீளமுள்ள சாலைகளும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
85 சதம் தரமற்ற சாலைகள்தான் தற்போது சிங்கார சென்னையை அலங்கரித்து கொண்டிருக்கிறது. – உலகத்தரம் என ஓயால் பேசிப்பேசி உலகத்தரம் எது? உள்ளுர் தரம் எது? என்று புரியவில்லை. மனிதர்கள் நடப்பதற்கும் வாகனங்கள் செல்லும் தரம் இருந்தாலே போதுமடா சாமி என்றாகிவிட்டது.
சாலைகளின் தரப்பரிசோதனையில் 85 சதம் தரம்மற்றவை என்று வெளிபட்டுள்ளது.(2014.கநb-15 கூடீஐ) 172 மாதிரிகளை சேகரித்து 27 மாதிரிகளை பரிசோதித்த போது 4 மட்டுமே தரமாக இருந்தன. தரமற்ற சாலைகளை மறுபடியும் போடச்சொல்லி தரப்பரிசோதனை செய்த 12 சாலைகளில் 3மட்டுமே தேரியது என்றால் நிர்வாக லட்சணத்தை பாருங்கள்.
தமிழக அரசு 400 கோடி ஒதுக்கி 10000 சாலைகள் போட திட்டமிடப்பட்டது. அனைத்தும் போடவில்லை என்றாலும் போடப்பட்ட சாலைகள் ஒரு மாததில் காணாமல் போய்விட்டதாக பொதுமக்களிடமிருந்து புகார் குவிந்தது.
அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் எடுத்து தரமற்றதாக போடுவதற்கு ஒப்பந்ததாரர்களிடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளது.அதிகாரிகள் கான்ட்ராக்ட் காரர்களை குறைசொல்லுகின்றனர். ஆனால் கான்ட் காரர்கள் கவுன்சிலர்களும் அதிகாரரிகளும் கேட்கின்ற கமிஷ்ன் கொடுத்துவிட்டு மீதிதொகையில் சாலை போடுவதற்கு கட்டுபடியாகவில்லை என்கின்றனர். மொத்ததில் மொட்டையடிக்கப்படுவதும் உயிரிழப்பதும் பொதுமக்கள்தான்.
கரடு முரடு, குண்டும் குழியும்,தீடீர் பள்ளங்கள் என அனைத்தையும் ஓர சேர காணவேண்டுமா? சாதாரண காலங்களில் சிங்கார சென்னையை சுற்றி வாருங்கள். சாக்டைகளும் மழைநீரும் கலந்து ஓடும் காட்சியை காண வேண்டுமா மழை தூரல் போடும் காலத்தில் சென்னையில் காணவாருங்கள
ஏ.பாக்கியம்
வெள்ளி, அக்டோபர் 30, 2015
சென்னையின் மறுபக்கம் “டெங்கு” வெளியே சொன்னால் “டங்கு....வார்...”
மார்தட்டுகிறது சென்னை மாநகராட்சி:
சென்னை மாநகராட்சியின் 93 சதம் வாக்குறுதிகள் நிறைவேறி விட்டதாக பெருமை பீற்றிக்கொள்கிறது மாநகராட்சி. சென்ற ஆட்சியைவிட ஒரு எண்ணை கூட்டியோ அல்லது குறைத்துக்காட்டி சாதனைக்கு சான்றாக்குகிறது.
மாநகராட்சியின் அனைத்து துறைகளும் மக்கள்மீது அக்கறையற்று வணிகமயமாகி வருகிறது. சென்னையில் மர்ம காய்ச்சல் மரணம் துவங்கிவிட்டது. டெங்கு காய்ச்சல் அதிமாகி வருகிறது.
காரணம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தண்ணீரை பிடித்து வைக்கின்றனர். இதில் ஆபத்தான கொசுக்கள் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் பற்றி மாநகராட்சி மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தால் மண்டல சுகாதார அதிகாரிக்கு மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று உத்திரவு,
சென்னையின் அனைத்து தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் டெங்கு காய்ச்சல் கண்டுபிடித்தால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை உத்திரவு. இது உண்மை அறிந்து மக்களை காப்பாற்ற அல்ல. மாறாக எண்ணிக்கை குறைத்து காட்டி சாதனை பெருமை பீற்றிட.
சென்னை மாநகராட்சியில் 3200 மலேரியா ஊழியர்கள் நியமித்திருப்பதாக அறிக்கை விட்டுள்ளனர். 17 லட்சம் வீடுகளுக்கு இவர்களை பங்கிட்டால் 531 வீடுகளுக்கு ஒருவர். ஒரு நாளைக்கு 18 வீடுகள் கொசு மருந்து அடிக்க வேண்டும். இந்த கணக்குபடி பார்த்தால் தெருவெல்லாம் நம் கண்களுக்கு கொசுக்களைவிட அவர்களே தென்படுவர்.
ஒவ்வொரு வட்டத்திற்கும் 5 முதல் 8 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்று பலர் கூறுகின்றனர். இவர்களில் சுமார் 700 பேர்கள் தான் நிரந்தர தொழிலாளர்கள். மற்றவர்கள் ரூ 200 தினக்கூலிக்கு பணியாற்றுபவர்க்ள்.
ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தபட்சம் 210 தெருக்கள் முதல் அதிகபட்சமாக 280 - 300 தெருக்கள் வரை உள்ளது. கண்டிப்பாக இந்த பணியாளர்களை வைத்து இந்த பணியை நடத்த முடியாது.
சுகாதார அலுவலர், ஆய்வாளர், அடிப்படை சுகாதார ஆய்வாளர், பணியாளர் என அனைத்திலும் பணியிடங்கள் போதுமான அளவு நிரப்பப்படவில்லை.
தற்போதைய இந்த பற்றாக்குறை பணியாளர்களே புகை மருந்து அடித்தல், தெளிப்பான், சம்ப், டேங்க், கிணறு போன்றவற்றிற்கு மருந்து அடித்தல், மாடுபிடித்தல் போன்ற பணிகளும் செய்கின்றனர். ஆய்வாளர்கள் பல நேரங்களில் இவர்களை இதர பணிகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
அடையாள அட்டை இல்லாததால் பலவீடுகளில் உள்ளே செல்ல முடியவில்லை.
போதுமான அளவிற்கு மருந்துகள் இல்லை என்றும் குறைபடுகின்றனர். மருந்து கொள்முதல் செய்ய இன்னும் டெண்டர் முடியவில்லை என்பது தனிக்கதை.
சென்னை மாநகராட்சி டெங்கு காய்ச்சலை உத்திரவு போட்டோ, உண்மையை மறைத்தோ ஒழித்துவிட முடியாது.புள்ளி விபர சாதனை முக்கியமில்லை. மக்களின் வேதனையும் உயிரும்தான் முக்கியம்.உண்மை ஒரு நாள் வெளியாகும், உலகம் அதிலே தெளிவாகும்.
சென்னையின் மறுபக்கம்:
ஏ.பாக்கியம்
திங்கள், அக்டோபர் 26, 2015
செல்பி பிரதமரும் பெண்குழந்தைகளும்
@ பாஜக ஆட்சியில் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை. பல்முனைதாக்குதலில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரிதுள்ளது.
2014- ம் ஆண்டு கணக்குபடி
@ குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகமாகி உள்ளது. 2014-ல் பாலியல் தாக்குத்லுக்கு உள்ளானபெண்களில் 39 சதவிகிதம் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
@ 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 547
6 முதல் 12 வயதுக்கு உட்பட்வர்கள் 1491.
12முதல்16 வயதுக்கு உட்பட்வர்கள் 5635.
16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 6862.
@18 வயதுக்கு உட்பட் பெண்களை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் மாநிலத்தில் பாஜக ஆளும் மத்திய பிரதேசம் (2328) முதலிடத்திலும், மகாராஷ்டிரம் 1647 ம், உத்திரபிரதேசம் 1507 ம், டெல்லி 924-ம், ராஜஸ்தான் 797-ம், சத்தீஷ்கர் 797-ம் என முன்னிலையில் உள்ளது.
@ மோடி பெண் குழந்தைகளுடன் செல்பி எடுக்கிறார்.ஆனால் பாஜகவின் 4 மாநிலத்திலும் பெண் குழந்தைகள் வேட்டையாடப்படுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்
அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...
-
அ.பாக்கியம் சீனாவில் கடந்த 75 ஆண்டுகளில் இன சிறுபான்மை மக்கள் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். மிகச்சிறிய இனக்குழுக்கள் உட...
-
தொடர்: 21 முகமது அலி, கானா நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, ஆப்பிரிக்காவைப் பற்றி, வெள்ளையர்கள் சித்தரித்த அனைத்தும் பொய் என்று எப்படி உண...
-
அ.பாக்கியம் சோஷலிச கொள்கையை ஏற்றிருக்கக் கூடிய ஒரு அரசு உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக என்றென்றும் பாடுபடும். திப...

