எனது வாகனம் காயம் அடைந்த
பாலஸ்தீன மக்களுக்கான நடமாடும் மருத்துவமனையாக மாற வேண்டும் என்று மறைந்த போப்
பிரான்சிஸ் தனது கடைசி விருப்பத்தை எழுதி வைத்துவிட்டு
இறந்துள்ளார். இது தற்போது வெளியாகி உள்ளது. போப் பிரான்சிஸ்
மாற்றங்களோடு பயணித்தார்
என்பதை யாரும் மறுக்க முடியாது
என்னதான் மதம் சார்ந்து
இருந்தாலும் அதற்கு நடைபெறக்கூடிய தேர்தல் என்பது மேலானதாகத்தான் தோன்றுகிறது.
மசோதாக்கலையே கை தூக்கி கதையை முடித்து விடக் கூடிய காலங்கள் இது. ரகசிய
வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ள இடங்களில் கூட சிறிய அமைப்புகள்கூட கைதூக்கி கலாச்சாரத்தில் இருக்கிற சசில
காலத்தில் போப் தேர்தல் கூடுதலாகவே கட்டுப்பாடுகளுடன்
நடப்பதாகத் தான் தெரிகிறது.
ரோமன் கத்தோலிக்க
திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய போப்
தேர்வு 7-ம் தேதி துவங்கி 9-ம்தேதி இரண்டு
நாட்களில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதுதான் மிகக் குறைந்த காலத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. காரணம் நான்கு சுற்று தேர்தல் இரண்டு
நாட்கள் முடிந்துள்ளது. 1503 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்தான்
இதுவரை மிகக் குறைந்த காலத்தில் அதாவது 10 மணி நேரத்தில் போப்பை தேர்ந்தெடுத்த தேர்தல் ஆகும்
மறைந்த
பிரான்சிஸ் இரண்டு நாட்கள் 5 சுற்றுகள், போப் பெனெடிக் நான்கு சுற்றுகள் இரண்டு நாட்கள், புகழ் பெற்ற ஜான் பால் 2 எட்டு சுற்றுகள் மூன்று நாட்கள் என்று தேர்தல்
நடைபெற்று தேர்ந்தெக்கப்பட்டனர்.
தற்பொழுது அமெரிக்காவைச்
சேர்ந்த கார்டினால் பிரான்சிஸ் ராபர்ட் பிரிவோஸ்ட் 267 வது போப்பாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். போப் 14ஆம் லியோ என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
போப் பதினான்காம் லியோவை
தேர்ந்தெடுத்த 133 கார்டினல்களில் 108 பேர் போப் பிரான்சிஸ் அவர்களால் கார்டினால் ஆக்கப்பட்டவர்கள். இந்த முறை 70 நாடுகளை பிரதிநிதித்துவபடுத்தக்கூடிய கார்டினால்கள் பங்கேற்றார்கள். 2013 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போப்பாக தேர்ந்தெடுத்த
பொழுது 48 நாடுகளைச் சேர்ந்த கார்டினல்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது இந்த கார்டினல்கள் பெரும்பாலும் ஐரோப்பாவையும் வட
அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள்.
போப் பிரான்சிஸ்
இதில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினார். ஆசியா ஆப்பிரிக்கா
மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து கார்டினால்களின்
பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினார்.
வாடிகனிலிருந்து வெகு தொலைவில் இருக்கக்கூடிய நாடுகளும்,
கத்தோலிக்கர்களின் சிறிய அளவு பிரதிநிதித்துவம் கொண்ட பகுதிகளில் இருந்தும் கார்டினல்களை கொண்டு வர வேண்டும் என்று
அடிப்படையில் ஹெய்டி, மலேசியா,
மியான்மர், பராகுவே, சிங்கப்பூர் உள்ளிட்ட 15 நாடுகள் இந்த ஆண்டு முதல்
முறையாக போப்பை தேர்ந்தெடுப்பதில் பங்கு பெற்றன. ஓரளவு கார்டினல்கள்
எண்ணிக்கையை ஐரோப்பா
அமெரிக்காவைக் கடந்து விரிவு படுத்திய செயலை போப் பிரான்சிஸ் செய்து முடித்தார்.
மத அமைப்புக்கள் ஏற்கனவே
இருக்கக்கூடிய நிலைமைகளிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சில சீர்திருத்தங்களை
செய்கிற பொழுது அது வரவேற்கக் கூடியதாக இருக்கிறது. அடிப்படை மாற்றத்தை
ஏற்படுத்தவில்லை என்றாலும் சீர்திருத்தங்கள் மாற்றங்களுக்கு உதவி செய்கிறது.
போப் பிரான்சிஸ்
LBGBTQ+ சமூகத்தை சேர்ந்த விசுவாசிகளையும் வரவேற்றது
திருச்சபைக்குள் சலசலப்பு ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல காலநிலை மாற்றம் குறித்த
அவரின் எச்சரிக்கை ஏழை மக்களை கவனத்தில் கொண்டு விடுக்கப்பட்டது. திருச்சபைக்குள்
பெரும் நிதி சீர்திருத்தத்தை தொடங்கி வைத்தார். பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக
கூறப்படும் திருச்சபையின் பாதிரியார்களை, கார்டினல்கள் உட்பட
நடவடிக்கைகளை எடுத்தார். அதுபோன்ற தவறுகளை மறைத்தவர்களையும்
அவர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் மேற்கொண்டார்.
இவையெல்லாம் திருச்சபைக்கு புதியதாக இருந்தது.
பொதுவாக பாலஸ்தீனம் குறித்து
திருச்சபை அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. போப் பிரான்சிஸ் தான்
பயன்படுத்திய அதிகாரப்பூர்வமான போப் மொபைல் என்று அழைக்கக்கூடிய வாகனத்தை
காயமடைந்த, பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கான நடமாடும் மருத்துவமனையாக மாற்ற
வேண்டும் என்று தனது இறுதி ஆசையாக எழுதி வைத்துவிட்டு இறந்தார்.
இவரின் இந்த நடவடிக்கையில்
மூலமாக பொதுமக்களிடையே மட்டுமல்ல ஊடகத்திலும் மிகவும் செல்வாக்கு உடையவராக
மாறினார் அதே நேரத்தில் திருச்சபையின் பழமை வாத குரல்களால் விமர்சிக்கப்பட்டார்.
பத்திரிகைகளின் தரவுகளின் படி
கார்டினல்களில் பெரும்பாலும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டவர்களும், ஆப்பிரிக்க
கார்டினல்கள் பழமைவாதிகளாக இருக்கிறார்கள். தற்போது போப் பிரான்சிஸ்
ஏற்படுத்திய பல சீர்திருத்தங்களை கைவிடவும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்
என்று விரும்புகிறார்கள்.
வாடிகனின்
கோட்பாட்டு அலுவலகத்திற்கு தலைமை தாங்கிய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார்டினல்
மவுரோ பியா சென்சா, போப் பிரான்சிஸ் மூலம் அப்பதிவியிலிருந்து மாற்றப்பட்டார். அவர் இந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக
இருந்தார். போப் பிரான்சிஸ் கொண்டு
வந்த சீர்திருத்தங்களை ஆதரித்த ஊடகங்களும், தேவாலயங்களுக்கு
எதிரான அனைத்து முன்னாள் எதிரிகளும் நாத்திகர்கள் என்று குற்றம் சாட்டினார்.
தற்போதைய தேர்வில் ஆசிய
பிரான்சிஸ் என்று அழைக்கப்படும்
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 67 வயதான கார்டினல் லூயிஸ் அந்தோனியோ டேகல் ஏழைகள் மற்றும் LBGBTQ மக்களின் பராமரிப்பு, விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்ட கத்தோலிக்கர்களுக்கான ஆதரவு போன்ற அம்சங்களில் முற்போக்கானவராக இருந்தார். இவர்
தேர்ந்தெடுக்கப்படவில்லை.
70 வயதான மிதவாத
கொள்கைகளைக் கொண்ட இத்தாலியின் பியாட்ரோ பரோளின் , அங்கேரி
நாட்டைச் சேர்ந்த பழமை வாதியான பீட்டர் எரடோ, எருசலேமின்
பியர் பட்டீஸ்டா ஐயோ போட்டியில்
இருந்தனர். பழமைக்கும் சீர்திருத்தத்திற்கும் இடைப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்க
வேண்டும் என்ற கருத்தின் வெளிப்பாடாக போப் 14ஆம் லியோ
இருக்கலாம்.
போப் தேர்ந்தெடுப்பதில் வெளி
சக்திகளின் செல்வாக்கு இருக்கிறது அதற்கான ஆவணம் சுற்றில் இருக்கிறது என்றும் சி
என் என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இவை பழமைவாத கத்தோலிக்க
பாதிரியார்களால் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன
போப் தேர்தல் மத
சீர்திருத்தங்களுக்கான விவாதத்தின் ஒரு புள்ளியாகவும் மாறி இருக்கிறது.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக